பட்டி திரும்பிய பசுக்களும் பால் குடித்த நினைவுகளும்....

.

'எழும்படா மேனை

பால்க் கோப்பி குடியடா..'

உலுப்புவாள் அம்மம்மா

குளிரடங்க கிழி சாரம் உடல் மூட

குறண்டிக் கிடப்பேன்.

படுக்கைப் பாயில்

காலைக் கனவுகளைக்

கலைக்க மனதின்றி

அம்மையா கறந்த பால்.

பொன்னென ஜொலிக்கும்

செம்பில்

மடி தடவி

முலை பிசுக்கி

விளிம்பில் நுரை வழிய

கறந்தெடுப்பார்.

கீழ்வானில் தலைநீட்ட

காத்திருப்பான் சூரியன்

அந்நேரம்.



பின்னொருகாலம்

கண்விழித்து முகம் கழுவ

தெருப்படலை முணுமுணுக்கும்

பாற்காரன் மணியொலியில்.

பாற்சட்டி கழுவி வைத்து

அடுப்படியில் காத்திருப்பாள்

என் அம்மா.

இன்று

உடல் வளைத்து இவளெழுந்து

ப்ரிட்ஸ் திறக்க

குளிலுறைந்த

பால் பைக்கறின்

ஐஸ் உருகும்.

சுடுவெயில் மேல்தழுவ

என் குறட்டை

ஊரெழுப்ப சங்கூதும்

அந்நேரம் .

இரு வருடங்களுக்கு முன்

இதே கவிதை எனது முருகானந்தன் கிளிக்குகள் புளக்கில்

எம்.கே.முருகானந்தன்.

No comments: