புன்னகை -- கலா ஜீவகுமார்

.

புன்னகை என்பது மனித வர்க்கத்திற்கு மட்டுமே கிடைத்த ஒரு பெரும் வரப் பிரசாதமாகும்இதை ஏன் மருந்தாகப் பாவிக்க வேண்டும்? சிரித்த முகத்துடன் இருப்பவர்களைக் காணும் பொழுது எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. இதில் பலவகைகள் உண்டு. அரசன் சிரித்தால் ஆணவச் சிரிப்பு அல்லது அகங்காரச் சிரிப்பென்றும் சங்கீத மேதை சிரித்தால் சங்கீத சிரிப்பென்றும் இப்படிப் பலவகையாக குறிப்பிடுவர். ஒரு சிறு புன்னகை அது போதும் , உங்களையும் பிறரையும் மகிழ்விக்க அது போதும். தெரியாதவர்களைக் காணும்போது கூட சிரிக்கலாம் , தப்பில்லை.
சிரிப்பு ஒரு நல்ல மருந்தும் கூட. அன்றன்று நடந்த நல்ல விடயங்களை மட்டும் சிந்தியுங்கள். மீட்டிப்பாருங்கள். தீயன எதுவாயிருந்தாலும் அந்த நிமிடமே மறந்து விடுங்கள். மன்னிக்கும் மனப்பான்மையை அதிகரித்துக்கொள்ளுங்கள். கடவுளிடம் அல்லது நல்ல ஒரு நண்பரிடம் உங்கள் மனச் சுமையை இறக்கி விடுங்கள். உங்களுக்கு தீமை செய்பவருக்கும் முடியுமாயின் நன்மையை செய்யுங்கள். இவற்றை செய்வதால் உங்கள் முகமும் மலர்ந்து விடும் , மனமும் லேசாகி விடும்.

இன்று மூன்றாவது ஆண்டை நிறைவு செய்யும் தமிழ் முரசு ஒரு பக்கம் சாராது நடுநிலைமையில் நின்று  செயற்ப்பட்ட தாலோ என்னவோ புன்னகையுடன் நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதன் சேவை இன்னும் பல ஆண்டுகள் தொடரும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

2 comments:

Ramesh said...

புன்னகையைப் பற்றி எழுதி தமிழ்முரசை வாழ்திய விதம் நன்றாக இருக்கிறது.
புன்னகையும் இலவசம் தமிழ்முரசும் இலவசம் ஜி ஜி ஜி ஜி.....

Anonymous said...

விலைமதிப்பற்ற புன்னகை தந்த கலா ஜீவகுமாருக்கு நன்றிகள்.

தர்மா