ஆஸி.யில் தமிழருவி மணியன் வெளியிட்டுவைத்த 'நீந்திக்கடந்த நெருப்பாறு' நாவல்

.


இறுதிப்போரை மையமாக வைத்து வன்னியின் மூத்தபடைப்பாளி ஒருவரால் எழுதப்பட்ட 'நீந்திக்கடந்த நெருப்பாறு' நாவல் வெளியீட்டு நிகழ்வு அவுஸ்திரேலியாவில் அறுநூறுக்கு மேற்பட்ட மக்கள் முன்னிலையில் சிறப்புற நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் (2-11-2013) சிட்னியில் பொதுச்சுடர் ஏற்றல், அகவணக்கத்துடன் தொடங்கிய குறித்த நிகழ்விற்கு திருவேங்கடம் ஆறுமுகம் தலைமை தாங்கினார். முன்னதாக பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் திருவுருவப்படத்திற்கு இன்பத்தமிழ் ஒலி வானொலிப் பணிப்பாளர் பாலசிங்கம் பிரபாகரன் சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து, மாவீரர் வணக்க நடனம், எழுச்சிநடனம், தமிழ் மொழிப் பெருமை கூறும் பாடல்களைத் தொடர்ந்து வரவேற்புரையினை யோகராஜா நிகழ்தியதை அடுத்து தலைமை உரை இடம்பெற்றது. தொடர்ந்து நீந்திக்கடந்த நெருப்பாறு வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் பதிப்பகத்தின் அறிமுகச் செய்தியினை சுதா தனபாலசிங்கம் சமர்ப்பித்தார். நூலின் ஆய்வுரையினை திரு.நந்தகுமார் நிகழ்த்தினார். வாழ்த்துரையினை கலாநிதி கௌரிபாலன் வழங்கினார்.
'நீந்திக்கடந்த நெருப்பாறு' நூலினை தமிழருவி மணியன் வெளியிட்டு வைக்க முனைவர் பர்வீன் சுல்தானா பெற்றுக்கொண்டார். சிறப்புப் பிரதிகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து ஏற்புரையினை நூல் ஆசிரியர் சார்பில் மெல்பேர்ன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் செல்வ கணேசன் வழங்கினார். தொடர்ந்து அரங்கை அதிரவைக்கும் தமிழரவி மணியனின் 'நம்மை நாமறிவோம்' சிறப்புரை இடம்பெற்றது. முனைவர் பர்வீன் சுல்தானா தலைமையிலான , 'புரிந்து கொண்டவர்கள் பெற்றோரே!, புரிந்து கொண்டவர்கள் பிள்ளைகளே!' தலைப்புகளிலான பட்டிமன்றமும் இடம்பெற்றன. இறுதியாக நன்றியுரையினை வசந்தன் நிகழ்த்தினார். நிகழ்வில் பலநூற்றுக்கணக்கானோர் பங்குகொண்டு சிறப்பித்தனர்



நன்றி :seithy.com


No comments: