தமிழ்சினிமா

ஆல் இன் ஆல் அழகுராஜா – விமர்சனம்

ஆல் இன் ஆல் அழகுராஜா – விமர்சனம்

எப்போதுமே ராஜேஷ் படங்களில் சூப்பரா நாலு சீன், சுமாரா ஜந்து சீன் அதுக்கு பட்டி டிங்கரிங் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக எடுத்து விடுவார். இந்த படத்தையும் அப்படித்தான் எடுத்துள்ளார். ஆனால் பெரும்பாலான காட்சிகளை ரசிக்கத்தான் முடியவில்லை. அதற்காக ஒரேடியாக ஒதுக்கி விட முடியாது. அதற்கு முக்கிய காரணம் எம்.எஸ்.பாஸ்கரும், காஜல் அகர்வாலும் தான்.
போகட்டும் கதை என்ன?
அப்பா பண்ண தப்பு அத சரி செய்யும் பையன் இது தான் கதை. யாருமே இல்லாத டீ கடையில யாருக்குடா டீ ஆத்துற ரேஞ்சுக்கு யாருமே பார்க்காத லோக்கல் கேபிள் சேனலை நடத்தி வருகிறார் நம்ம ஹீரோ கார்த்தி(ராஜா) இவருடைய  கோ-வொர்க்கர் சந்தானம்(கல்யாணம்) இருவரும் சேர்ந்து இந்த AAA TV சேனலை மக்களிடையே பிரபலமாக்கி நம்பர் ஒன் சேனலாக மாற்ற நிறைய ப்ளான் போட்றாங்க அதுக்காக அவங்க அடிக்கிற லூட்டியும் அதனால சந்தானம்  கோட்டா ஸ்ரீனிவாஸிடம் மாட்டிக்கிட்டு முழிக்கிற காட்சிகளில் தியேட்டரில் சிரிப்போ சிரிப்பு… சந்தானமும் கார்த்தியும் படம் முழுவதும் ஒன்றாக டிராவல் செய்கிறார்கள், அட அந்த 80களில் நடக்கும் ஃப்ளாஷ்பேக்கிலும் ஒன்றாக வருவது ஏம்ப்ப்ப்பா இப்படி என்று சொல்ல வைக்கிறது.
சித்ரா தேவி பிரியாவாக காஜல் அகர்வால், இவரை பார்த்த உடனே காதலில் விழுகிறார் கார்த்தி. இந்த காதலை ஏற்க மறுக்கும் அவரை கலாய்த்து கலாய்த்தே காதலை ஒப்புக்கொள்ள வைக்கிறார். முதலில் இந்த காதலை பூ போட்டு வரவேற்கும் கார்த்தியின் அப்பா பிரபு, பின் அந்த காதலை ஆதரிக்காமல் போவதும், அதற்கு காரணம் கேட்ட கார்த்தியிடம் ஒரு மொக்கை ஃப்ளாஷ்பேக் சொல்வதும் படத்தை ரசிக்க விடாமல் செய்கிறது. கரீனா சோப்ரா என்ற பெண் வேடத்தில் கலக்கியிருக்கிறார் சந்தானம்.
படத்தின் இன்னொரு பிளஸ்ஸான எம்எஸ் பாஸ்கர் சாட்டையால் அடித்துக் கொண்டு தெருவில் பிச்சை எடுப்பவர். பரத நாட்டியம் கற்றுக்கொள்ள விரும்பும் காஜலிடம் பெரிய பரத நாட்டிய குரு என்று எம்.எஸ்.பாஸ்கரை கார்த்தி கோர்த்து விடுகிறார். பாஸ்கரும் அவர் சாட்டையை அடிக்கும் போது செய்யும் மேனரிசங்களை பரதநாட்டியம் என்று காஜலுக்கு கற்றுக் கொடுக்கிறார். அந்த காட்சிகளில் திரையங்கமே சிரித்து தெறிக்கிறது. உண்மை தெரிந்து காஜல் காட்டும் எக்ஸ்பிரசன்களும் சூப்பர். இதைத் தவிர நல்ல விஷயம் 80களின் சாயலில் உள்ள பாட்டு. மற்றபடி மோசமான படம்லாம் சொல்ல முடியாது இதுக்குமேல படத்தை பத்தி ஒன்னும் சொல்றதுக்கு இல்ல பாஸ். யாருக்காவது போரடிச்சா ஓசியில டிக்கெட் உஷார் பண்ணிட்டு போய் படத்தை பாருங்க ப்ரோ…
இசை தமன் பாடல்களும், பின்னணி இசையும் சுமாராகவே தோன்றுகிறது எதுவுமே மனதில் நிற்கவில்லை. ஆக இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா, அ(ழு)க்கு ராஜாவாக மாறியது வருத்தத்தை அளிக்கிறது. இயக்குநர் ராஜேஷ் இந்த படத்தில் குடி, புகையை காட்டாததால்தான் என்னவோ ராஜேஷிடம் சரக்கு இல்லை என காது பட கமெண்ட் அடிக்கிறார்கள் கொஞ்சம் முழுச்சிக்கோங்க பிரதர் ஆல் தி பெஸ்ட்…
 நன்றி தமிழ்சினிமா ஆரம்பம் – திரைப்பட விமர்சனம்

ஆரம்பம் – திரைப்பட விமர்சனம்

தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே ரிலீஸ் ஆனதால் இந்த தீபாவளி “தல” தீபாவளிதான் என்று கொண்டாடக் காத்திருந்த அஜித்தின் ரசிகர்களுக்கு நிஜமாகவே தல தீபாவளிதான்…
சென்னையிலிருந்து மும்பைக்கு இண்டர்வியூக்கு வரும் ஆர்யா அதே விமானத்தில் ஆர்யாவின் தோழியான நயன்தாரா இருவரும் மும்பைக்கு வருகின்றனர் இவர்களுடன் சக பயணியாக அஜித்தும் அதே விமானத்தில் வருகிறார். வந்த இடத்தில் நயன்தாராவை சில மர்ம நபர்கள் கடத்த முயல அவர்களிடம் இருந்து நயன்தாராவை காப்பாற்ற முயல்கிறார். ஆனால் இவர்கள் இருவரையும் அந்த மர்ம கும்பல் கடத்தி விடுகிறது. கடத்தியது யார், எதற்காக என்று சிக்கும்போதே எண்ட்ரி ஆகிறார் அஜித். நயன்தாராவை பணயக் கைதியாக வைத்துக்கொண்டு ஆர்யாவிடம் பேரம் பேச, தன் தோழியை காப்பாற்ற வேண்டும் என்று, அஜித் சொல்லும் வேலையை முடித்து தர ஒப்புக்கொள்கிறார். பின் அடுத்தடுத்து நடக்கும்
திருப்பங்களை மிக சுவாரஸ்யமாக காட்டியுள்ளார் விஷ்ணுவர்தன்.
நயன்தாரா அஜித்தின் கூட்டாளிதான் எனத் தெரிந்ததும் அதிர்ச்சிக்குள்ளாகி போலிஸிடம் போக துடிக்கிறார் ஆர்யா. ஆனால் ஆர்யாவின் காதலி டாப்சியையும் நம்பவைத்து தனது பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறார் அஜித். மேலும் அவரை வைத்து ஹேக்கிங்கில் தேர்ந்தவரான ஆர்யாவை மிரட்டி காரியம் சாதித்துக்கொள்கிறார். இதன் மூலம் மும்பையின் முன்னணி டிவி தொலைக்காட்சியின் சாட்லைட் சிக்னலை கட் செய்கிறார் ஆர்யா. அஜித் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என்று குழப்பத்தில் இருக்கும் நமக்கு இடைவெளிக்குப் பின் தான் தெளிவு கிடைக்கிறது.
அதிகார வர்க்கத்தில் மேலோங்கி இருக்கும் சிலர் பணத்துக்காக ஆசைப்பட்டு செய்யும் ஊழலால் தன் உயிர் நண்பனான ராணாவை இழக்கிறார். இதற்கு காரணமாக இருந்தவர்களை கண்டுபிடிக்கும் அவர். அந்த ஊழலே ஹோம் மினிஸ்டரால் தான் நடந்ததது எனத் தெரிந்ததும் கொஞ்சமும் பதப்படாமல் தன் நண்பனின் மரணத்துக்கு காரணமானவர்களை அம்பலப்படுத்துவதோடு பணத்துக்காக பயங்கரவாதத்துக்குத் துணைபோகும் அவர்களின் மற்றொரு திட்டத்தையும் தகர்ப்பதே மீதிக்கதை…
படத்திற்கு பெரிய தூணாக நிற்பவர் அஜித்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒன் மேன் ஆர்மியாக கலக்கியிருக்கிறார். அஜித்துக்கு வசனங்கள் அதிகமாக இல்லையென்றாலும் அவர் வரும் காட்சிகள் ஆக்சன் தான். சாஃப்ட்வேர் இன்ஜினியராக ஆர்யா துறு துறு நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதை திறன்பட செய்திருக்கிறார் ராணா டகுபதி, படத்தில் காமெடி இல்லையென்றாலும் வில்லன் மகேஷ் மஞ்ஜுரேக்கர் கிளைமேக்சில் பேசும் வசனங்கள் நகைச்சுவக்கு உத்திரவாதம் பாஸ்…
யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களில் “ஆரம்பமே” மற்றும் “என் ஃப்யூஸ் போச்சே” பாடல்கள் தவிர மற்றவை மனதில் நிற்கவில்லை. ஆனால் அதற்கு இணையாக பின்னணியில் பலம் சேர்த்திருக்கிறார்.
ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ் பாடல் காட்சியானாலும் சரி, சண்டைக் காட்சியானாலும் சரி அதில் ஒரு பிரம்மாண்டத்தை அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார். மும்பையை அதன் இயல்பு மாறாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒரு ஹாலிவுட் படம்போல ஆரம்பம் முதல் இறுதிவரை பரபரப்பாக நகர்கிறது திரைக்கதை, அஜித்தின் பஞ்ச் டயலாக் “சாவுக்கு பயந்தவன் தான் ஒவ்வொரு நாளும் சாவான், பயப்படதாவன் ஒரு தடவைதான் சாவான்”…
இறுதியில் படத்தை இரண்டாம் பாகம் எடுக்கப்போவது போல காட்சி அமைத்திருக்கிறார்கள், ஒருவேளை அடுத்த பாகத்தையும் எடுக்க ரெடி ஆயிட்டாங்களோ…
ஆக இந்த தீபாவளி தீவிர அஜித் ரசிகர்களுக்கு செம விருந்துதான்….
  நன்றி தமிழ்சினிமா

No comments: