இராணுவத்தினருக்கு எதிராக 12ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டம்
இசைப்ரியா இறுதி நிமிடங்கள்: இலங்கைக்குப் புதிய நெருக்கடி
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பு? மன்மோகன் சிங் யாழ். செல்லும் வகையில் பயணத்திட்டம்?
'பெண்களின் பாதுகாப்புக்கு பதில் கூறுபவர்கள் யார்?" நீதி கேட்டு யாழில் ஆர்ப்பாட்டம்
அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்
இலங்கை விசா தர ஒப்புக்கொண்டமைக்கு நெருக்கடியே காரணம் : மெக்கரே
இராணுவத்தினருக்கு எதிராக 12ஆம் திகதி உண்ணாவிரதப்  போராட்டம்
05/11/2013   மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும் 
இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் வீடழிப்பு நடவடிக்கையினை தடுத்து 
நிறுத்தக் கோரியும்  எதிர்வரும் 12 ஆம் திகதி செய்வாய்க்கிழமை காலை 8 மணி 
தொடக்கம் மாவட்டபுரம் கந்த சுவாமி கோவில் முன்பாக தொடர் உண்ணாவிரதப் 
 போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலி வடக்கு பிரதேச சபைத் 
தவிசாளர் சோ.சுகிர்தன் அறிவித்துள்ளார்.
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பினை மீறியும் வலிகாம் வடக்கில் 
மக்களின் வீடுகள் இராணுவத்தினரால் தொடர்ந்து இடித்தழிக்கப்பட்டு 
வருவதையடுத்தே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது எனவும் 
பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்தார்.நன்றி வீரகேசரி  
இசைப்ரியா இறுதி நிமிடங்கள்: இலங்கைக்குப் புதிய நெருக்கடி
 பல
 எதிர்ப்புகளுக்கு இடையில் நவம்பர் இரண்டாம் வாரத்தில் காமென்வெல்த் 
மாநாட்டை நடத்த விருக்கும் இலங்கைக்கு ஒரு புதிய சிக்கல் 
உருவாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் 31 அன்று வெளியான “நோ பையர் சோன்” 
எனும் ஆவணப் படத்திலிருந்து இசைப்ரியா குறித்த காட்சிகள் ஒட்டுமொத்த 
சர்வதேச கவனத்தையும் மீண்டும் ஒரு முறை இலங்கையின் பக்கம் 
திருப்பியிருக்கிறது.
பல
 எதிர்ப்புகளுக்கு இடையில் நவம்பர் இரண்டாம் வாரத்தில் காமென்வெல்த் 
மாநாட்டை நடத்த விருக்கும் இலங்கைக்கு ஒரு புதிய சிக்கல் 
உருவாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் 31 அன்று வெளியான “நோ பையர் சோன்” 
எனும் ஆவணப் படத்திலிருந்து இசைப்ரியா குறித்த காட்சிகள் ஒட்டுமொத்த 
சர்வதேச கவனத்தையும் மீண்டும் ஒரு முறை இலங்கையின் பக்கம் 
திருப்பியிருக்கிறது.
சில
 மாதங்களுக்கு முன்பு பிரபாகரன் மகன் பாலசந்திரனின் புகைப்படங்கள் 
உருவாக்கிய ஒரு அதிர்வை மீண்டும் உருவாக்கியிருப்பதோடு அல்லாமல் 
இறுதிக்கட்ட போரில் நடந்ததாகச் சொல்லப் படும் மனித உரிமை மீறல்கள் பற்றிய 
வாதங்களை மீண்டும் எழுப்பியிருக்கிறது இசைப்பிரியா குறித்த வீடியோ 
பதிவுகள்.
              
விடுதலைப்புலிகளின்
 தொலைக்காட்சி யில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்த இசைப்ரியா இறந்து 
கிடந்தது போன்ற வீடியோ காட்சிகளை கடந்த 2010-ல் வெளியிட்டது சேனல் 4 
தொலைகாட்சி. நிர்வாணமாக இறந்து கிடந்த இசைப்ரியா பாலியல் பலாத்காரத்துக்கு 
ஆளாகியிருக்கலாம் என்று அப்போது சொல்லப்பட்டது. இப்போது சேனல் 4 
வெளியிட்டிருக்கும் காட்சிகள் இசை ப்ரியாவை இலங்கை ராணுவத்தினர் உயிருடன் 
பிடித்திருப்பதாகக் காட்டு கிறது. அரை நிர்வாணமாக இருக்கும் இசைப்ரியாவின் 
மீது ஒரு வெள்ளைத்துணியைப் போர்த்தி அழைத்துச் செல்லும்போது அவரை 
பிரபாகரனின் மகள் என்று சொல்கிறார்கள் ராணுவத்தினர். அதை இசைப்ரியா 
அழுதுகொண்டே மறுக்கிறார். 28 வயது இசைப்ரியா பாலியல் துன்புறுத்தலுக்கு 
ஆளாக்கப்பட்டு பிறகு கொல்லப் பட்டிருக்கலாம் என்கிற வாதத்துக்கு இந்த 
காட்சிகள் வலுசேர்ப்பதாக உள்ளது.
              
இந்த
 காட்சிகள் ஜோடிக்கப்பட்டவை என்று இலங்கை அரசாங்கம் மறுத்தி ருக்கிறது. 
காமன்வெல்த் மாநாடு நடக்க விருக்கும் வேளையில் இலங்கையை இழிவுபடுத்தும் 
நோக்கத்தில் இந்த காட்சிகள் வெளியிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் இலங்கை 
ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ருவான் வனிகசூரியா. ஆனால் இந்த காட்சிகள் 
இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது.
              ப.சிதம்பரம் வலியுறுத்தல்சமீபத்தில் சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியைச் சந்தித்துவிட்டு சென்ற நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த காட்சிகள் உண்மையானவை போலதான் தெரிகின்றன என்றார். போரில் மனித உரிமை மீறல்கள் புரியப்பட்டதாக சொன்ன சிதம்பரம், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை இலங்கை அரசாங்கம் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்வது குறித்து மத்திய அரசு இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றும் சொன்னார்.
சிதம்பரம் மட்டுமல்ல, மத்திய அமைச்சரவையிலும் காங்கிரஸிலும் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பல தலைவர்கள் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்வது பற்றி மாற்றுக் கருத்துடனேயே இருக்கி றார்கள் என்று சொல்லப்படுகிறது. முழுமையான புறக்கணிப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், இலங்கை மீதான போர் குற்ற புகார்கள் பெருகிவரும் இச்சூழலில் குறிப்பாக இசைப்ரியாவின் வீடியோ காட்சிகளின் பின்னணியில் பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்ள கூடாது என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.
சட்டபேரவையில் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில், காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமரே நேரடியாக கலந்துகொள்வது தமிழகத்தில் காங்கிரஸுக்கு நெருக்கடி யான சூழலை உருவாக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஏற்கெனவே, தமிழகத்தில் சில கட்சிகள் இசைப்ரியாவின் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரத் தொடங்கியிருக்கின்றன.
இலங்கைக்கு நெருக்கடி
அதே
 வேளையில், இசைப்ரியா குறித்த காட்சிகளை வெளியிட தேர்ந் தெடுக்கப்பட்ட 
நேரம் குறித்தும் கேள்வி கள் எழாமல் இல்லை. காமன்வெல்த் மாநாடு நடக்க 
இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த வீடியோவை வெளியிடுவதன் மூலம் 
இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுப்பது நோக்கமாக இருக்கலாம் என்று 
சொல்லப்படுகிறது. அதை “நோ பயர் சோன்” ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லம் 
மக்ரேவும் மறுக்கவில்லை. “நமது (இங்கிலாந்த்) பிரதமருக்கும் இந்தியப் 
பிரதமருக்கு இந்த காட்சிகள் ஒரு அழுத்தத்தை கொடுக்கும். இந்த காட்சிகள் 
எழுப்பும் கேள்விகளைத் தவிர்த்துவிட்டு காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் 
நடத்துவது கடினம்” என்று சொல்லியிருக்கிறார் அவர்.
              
இன்னும்
 சில நாட்களில் நோ பையர் சோன் ஆவணப்படம் சேனல் 4 தொலைகாட்சியில் முழுமையாக 
வெளியிடப்படவிருக்கிறது. காமன்வெல்த் மாநாட்டுக்கு முன்பு இந்த ஆவணப்படம் 
முழுமையாக வெளியிடப்பட்டால் அது இலங்கைக்கு புதிய நெருக்கடியையும் சர்வதேச 
சமூகத்தின் மேலான கவனத்தையும் கோரும் என்று சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமன்வெல்த் மாநாட்டுக்கு முன்பு வெளியாகும் ஆவணப்படத்தை இலங்கை எப்படி எதிர்கொள்ளும், சர்வதேச சமூகம் தரக்கூடிய அழுத்தத்தை எப்படி கையாளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். - (த இந்து) நன்றி தேனீ
இந்த சூழலில் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமன்வெல்த் மாநாட்டுக்கு முன்பு வெளியாகும் ஆவணப்படத்தை இலங்கை எப்படி எதிர்கொள்ளும், சர்வதேச சமூகம் தரக்கூடிய அழுத்தத்தை எப்படி கையாளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். - (த இந்து) நன்றி தேனீ
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பு? மன்மோகன் சிங் யாழ். செல்லும் வகையில் பயணத்திட்டம்?
 06/11/2013     இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் 
மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கும் வகையில் புதிய 
வியூகத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக 
இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 கொழும்புவுக்குச் சென்று மாநாட்டில் பங்கேற்பதுடன், யாழ்ப்பாணத்திற்கும் 
பிரதமர் செல்லும் வகையில் பயணத்திட்டத்தை உருவாக்க வெளியுறவுத்துறை அமைச்சு
 முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன்மூலம் தமிழக மக்களின் 
எதிர்ப்பை சமாளிக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. 
 இலங்கை வடக்கு மாகாண முதல் அமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், இந்திய பிரதமர் 
மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுத்துள்ளதால் இந்த முடிவுக்கு மத்திய அரசு 
வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தமிழர் நலனுக்காக 
மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களை ஆய்வு செய்வதன் மூலம் தமிழக மக்களின் ஆதரவை
 பெற முடியும் என மத்திய அரசு கருதுகிறது. 
 யாழ்ப்பாணத்திற்கு மன்மோகன் சிங் சென்று வருவது தமிழர்களை 
சமாதானப்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் வெளியுறவுத்துறை யோசனை 
தெரிவித்துள்ளது. என்றாலும் இது பற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.
 மன்மோகன்சிங்கின் சுற்றுப் பயண விவரத்தை வெளியுறவுத்துறை தயார் 
செய்தபின்பு இலங்கையிடம் அளிக்கும். அதன் பிறகே இறுதி செய்யப்படும். அதன் 
அடிப்படையில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இந்திய குழுவினருக்கு அங்கு 
பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்கும் இட வசதி போன்றவை செய்யப்படும்.
 காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை செல்லக் 
கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் 
நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. 
தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் சிலரும், இலங்கையில் 
நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளக் 
கூடாது என்று வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி  
'பெண்களின் பாதுகாப்புக்கு பதில் கூறுபவர்கள் யார்?" நீதி கேட்டு யாழில் ஆர்ப்பாட்டம்
06/11/2013 யாழ்.புத்தூர் கிழக்கு மத்திய சனசமூக நிலையத்திற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் இன்று புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் இவ் ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த செவ்வாய்க்கிழமை (29) அதேஇடத்தினைச் சேர்ந்த அமிர்தலிங்கம் மைதிலி (வயது - 27) என்ற பெண்  சடலமாக மீட்கப்பட்டார்.
மேற்படி பெண் திங்கட்கிழமை (28) இரவு தொலைபேசியில் உரையாடியவாறு 
வீட்டிற்கு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் 
காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மேற்படி பெண்ணின் உறவினர்கள் இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தொடர்ந்து மாடு கட்டச் சென்ற ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வயல் 
கிணற்றிலிருந்து மேற்படி பெண் சடலம் மீட்கப்பட்டிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அமைப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட பெண்ணின் தந்தையாரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்துக்கூறுகையில்,
யாழ்.மாவட்டத்தில் கடந்த காலங்களில் 5 பெண்கள் காணமல்போயுள்ளனர். 
இவர்களில் இருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு 
சடலமாக மீட்கப்பட்டதுடன் மேலும் மூவரின் நிலைமை தொடர்பில் இதுவரை எந்த 
தகவலும் இல்லை.
இதற்கு எதிராக பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். குற்றவாளிகள் 
தண்டிக்கப்படுவதன் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லாமல் செய்ய 
முடியும்' என தெரிவித்துள்ளனர்.
அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்
07/11/2013   பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது 
மாநாடு, கொழும்பில் கசினோ சூதாட்டம் மற்றும் தலைநகரிலிருந்து மக்களை 
வெளியேற்றுதல் ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள், 
தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செ ய்த பாரிய ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை மாலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
ய்த பாரிய ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை மாலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. 
 ய்த பாரிய ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை மாலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
ய்த பாரிய ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை மாலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. 
 (pics by : J.Sujeewakumar)












நன்றி வீரகேசரி
இலங்கை விசா தர ஒப்புக்கொண்டமைக்கு நெருக்கடியே காரணம் : மெக்கரே
07/11/2013     பொதுநலவாய நாடுகளின் நெருக்கடியாலேயே இலங்கை தனக்கு விசா தர வெளிப்படையாக 
ஒப்புக்கொண்டிருப்பதாக செனல் - 4 ஆவணப்பட இயக்குநர் கெலம் மெக்கரே 
தெரிவித்தார்.

இலங்கை போர்க்குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக இந்தியா கவலை 
கொண்டிருக்கலாம் என்பதை தான் அறிவதாக மேலும் தெரிவித்த மெக்கரே, இந்திய 
விசாவுக்கு தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருப்பேன் என்றும் இதன்போது 
குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, 
இலங்கை போர்க்குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக இந்தியா கவலை 
கொண்டிருக்கலாம் என்பதை நான் அறிவேன். ஆனால், கடந்த 3 ஆண்டுகாலமாக 
இதுதொடர்பாக நாங்கள் திரட்டியிருக்கும் ஆவணப்படங்களை வெளியிட ஏன் அனுமதிக்க
 மறுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.
இங்கிலாந்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் எனது கடவுச்சீட்டை 
கொடுத்திருந்தேன். விசா விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது என்ற குறிப்புடன் 
திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக பலமுறை இந்திய தூதரகத்தை 
தொடர்பு கொண்டேன். ஆனால், அங்குள்ள அதிகாரிகளிடமிருந்து சரியான பதில் 
கிடைக்கவில்லை. அத்துடன், இதுதொடர்பாக இந்திய தூதரகத்துக்கு மின் 
அஞ்சல்களையும் அனுப்பியிருக்கிறேன். இந்திய உள்துறை அமைச்சகத்துக்கு 2 
கடிதங்களையும் அனுப்பி வைத்திருக்கிறேன்.
நான், ஆவணப்படங்களை வெளியிடுவதை இலங்கை தடுக்க முயற்சித்து வருகிறது. 
ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் கூட ஆவணப்பட 
திரையிடலுக்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்தது. மலேசிய அரசுக்கும் இலங்கை 
அழுத்தம் கொடுத்தது. இதனால், ஆவணப்படத்தை வெளியிட ஏற்பாடு செய்த மனித 
உரிமைகள் ஆர்வலர் லேனா ஹென்ட்ரி கைது செய்யப்பட்டுள்ளார். 
இதேபோல், இந்தியாவுக்கும் இலங்கை அழுத்தம் கொடுக்கக்கூடாது என்று 
விரும்புகிறேன். பொதுநலவாய நாடுகளின் நெருக்கடியால் இலங்கை எனக்கு விசா தர 
வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. தொடர்ந்தும் இந்திய விசாவுக்காக 
முயற்சிகளை மேற்கொள்வோம் என்றார்.நன்றி வீரகேசரி  
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment