யாழ். போதனா வைத்தியசாலை படுகொலை 26வது நினைவு தினம்
தெவிநுவர தாக்குதல் சம்பவம் தொடர்பில் ரணிலின் செயலாளர் உட்பட 6 பேர் கைது
மட்டு.வில் சிறுவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்யும் வீதம் அதிகரிப்பு -டாக்டர் சித்ரா கலமநாதன்
கொழும்பில் ஆரம்பமானது ஹலாலுக்கு எதிரான சேனாவின் பேரணி
புதிய கட்டடத்தில் வட மாகாண சபையின் கன்னி அமர்வு நாளை
விரிவுரையாளர்களின் சேவை 70 வயது வரை நீடிப்பு
--------------------------------------------------------------
யாழ். போதனா வைத்தியசாலை படுகொலை 26வது நினைவு தினம் இன்று(21/10/2013)
யாழ்.
போதனா வைத்தியசாலையில் கடமை நேரத்தில் படுகொலை செய்யப்பட்ட வைத்தியர்கள்,
தாதியர்கள், ஊழியர்களின் நினைவு தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று
(21) அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 1987 ஒக்டோபர் மாதம் 21ம், 22ம்,
திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்து மீறி உள் நுழைந்த
குழுவினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில், வைத்தியசாலை பணியாளர்கள்,
மற்றும் நோயாளிகள் என 68க்கும் மேற்பட்டவர்கள் அன்றைய இரு தினங்களிலும்
படுகொலை செய்யப்பட்டனர். அன்றைய தினம் கடமையில் இருந்தவேளை படுகொலை
செய்யப்பட்ட வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் பணியாளர்கள் 21 பேரின்
நினைவாகவும் ஒவ்வொரு வருடமும் அவர்கள் படுகொலையான கட்டடத்தில் உள்ள
அவர்களின் உருவப்படங்களுக்கு முன்பாக நினைவஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று
வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் அவர்களின் 26 நினைவு நாள்
அனுஸ்டிக்கப்பட்டது. இன்றைய இந்த நிகழ்வில் 21 ஊழியர்களின் உருவப்
படங்களுக்கும் மலர்மாலை அணிவித்து ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி
பசுபதிராஜா, பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா, வைத்தியர்கள்
தாதியர்கள், பணியாளர்கள். மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்
ஆகியோர் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு தமது அஞ்சலியினை செலுத்தினர். நன்றி தேனீ
தெவிநுவர தாக்குதல் சம்பவம் தொடர்பில் ரணிலின் செயலாளர் உட்பட 6 பேர் கைது
22/10/2013 மாத்தறை, தெவிநுவர பிரதேசத்தில்
ஐ.தே.க. வின் இரு குழுவினரிடையே இடம் பெற்ற மோதல் சம்பவத்துடன்
தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐ.தே.க. தலைவர் ரணில்
விக்கிரம சிங்கவின் பிரத்தியேக செயலாளர் சுதத் சந்திர சேகர,
முன்னாள் அமைச்சர் சுரனிமால் ராஜபக் ஷ உள்ளிட்ட அறுவரை மாத்தறை
பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
நேற்றுக்காலை 8.45 மணியளவில் சட்டத்தரணிகள் ஊடாக இவ்விருவரும் பொலிஸில் சரணடைந்ததையடுத்து அவர்களை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்றைய தினம் மாத்தறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகியோருக்கு மேலதிகமாக மேல் மாகாண சபை ஐ.தே.க. உறுப்பினர்களான சந்திர சித்சிறி கஹட்டபிட்டிய, லக் ஷ்மன் ஆனந்த விஜேமான ஆகியோரும் ஐ.தே.க. வின் ரம்புக்கனை தொகுதி அமைப்பாளர் சந்தீத் சமரசிங்க ஆகியோர் அடங்குகின்றனர். இந்நிலையில், நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட அறுவருடன் சேர்த்து கடந்த 05 ஆம் திகதி மாத்தறையில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 53 ஆகும். நன்றி வீரகேசரி
நேற்றுக்காலை 8.45 மணியளவில் சட்டத்தரணிகள் ஊடாக இவ்விருவரும் பொலிஸில் சரணடைந்ததையடுத்து அவர்களை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்றைய தினம் மாத்தறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகியோருக்கு மேலதிகமாக மேல் மாகாண சபை ஐ.தே.க. உறுப்பினர்களான சந்திர சித்சிறி கஹட்டபிட்டிய, லக் ஷ்மன் ஆனந்த விஜேமான ஆகியோரும் ஐ.தே.க. வின் ரம்புக்கனை தொகுதி அமைப்பாளர் சந்தீத் சமரசிங்க ஆகியோர் அடங்குகின்றனர். இந்நிலையில், நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட அறுவருடன் சேர்த்து கடந்த 05 ஆம் திகதி மாத்தறையில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 53 ஆகும். நன்றி வீரகேசரி
மட்டு.வில் சிறுவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்யும் வீதம் அதிகரிப்பு -டாக்டர் சித்ரா கலமநாதன்
22/10/2013 மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள்
தற்கொலைக்கு முயற்சி செய்யும் வீதம் அதிகரித்து காணப்படுவதாக மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலை சிறுவர் உளநல வைத்திய நிபுணர் டாக்டர் சித்ரா கலமநாதன்
தெரிவித்தார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால்
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உளவியல் செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை
ஆரையம்பதி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்ற போது அதில்
கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு
மாவட்டத்தில் தற்கொலை முக்கிய இடம் வகிக்கின்றது. குறிப்பாக 12வயது
சிறுவர்களுக்கு மத்தியில் தற்கொலை அதிகரித்துக் காணப்படுகின்றது.
பிள்ளைகளை
பெற்று வளர்க்கும் தாய்மார்களாகிய நீங்கள் உங்களது குழந்தைகளை நல்ல
முறையில் சமூகத்தில் உளநலமுள்ள சிறுவனாக வளர்க்க வேண்டும்.
நீங்கள்
அது தொடர்பில் எந்நேரமும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பிள்ளைகள்
நல்ல குணமுள்ள பிள்ளைகளாக உருவாவதற்கான முழுமையான பொறுப்பு பெற்றோர்களிடமே
உள்ளது.
இன்று சிறுவர்கள் பாலியல் உள்ளிட்ட பல்வேறு
துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். 17வயதில் சிறுமிகள் கர்ப்பம்
தரித்தவர்களாக மாறுகின்றார்கள்.
எது எவ்வாறிருந்தாலும் சிறுவர்கள் என்போர் 18வயது வரை உள்ள சகல உயிர்களும் சிறுவர்களாகவே கணக்கிடப்படுகிறார்கள்.
தாய்மார்களாகிய நீங்கள் சிறுவர்களின் உரிமைகளை அறிந்து நல்ல சிறுவர்களாக உருவாக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
கொழும்பில் ஆரம்பமானது ஹலாலுக்கு எதிரான சேனாவின் பேரணி
22/10/2013 பொது பலசேனா அமைப்பின் ஏற்பாட்டில் ஹலாலுக்கு எதிரான பேரணி இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பில் ஆரம்பமானது.
கிருலப்பனையில் அமைந்துள்ள பொது பல சேனாவின் தலைமையகத்தில்
அவ்வமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் இப்பேரணி
ஆரம்பமானது.Pics By:J.Sujeewakumar
கொழும்பிலிருந்து கண்டி தலதா மாளிகை வரை செல்லும் இப்பேரணி அங்கு இடம்பெறும் விசேட சமய வழிபாடுகளின் பின்னர் நிறைவடையவுள்ளது.
இது தொடர்பாக கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் பொதுபலசேனா ஹலால் சான்றிதழுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தது.
இதன் பின்னர் இதனை வாபஸ் பெறுவதாகவும் உணவுப் பொருட்களுக்கு
ஹலால் சான்றிதழ் வழங்கப்படமாட்டாதென்றும் முஸ்லிம் அமைப்புக்கள்
உறுதியளித்தன.
ஆனால், அந்த உறுதி மொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டு மீண்டும்
உணவுப் பொருட்களுக்கான ஹலால் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
இது உறுதி மொழியை மீறிய நம்பிக்கை துரோகத்தனமாகும்.
இலங்கை சிங்கள பெளத்த நாடு. இங்கு உணவு வகைகளுக்கு ஹலால்
சான்றிதழ் அவசியமில்லை. எனவே எமது நாட்டிலிருந்து ஹலால் முற்றாக
ஒழிக்கப்பட வேண்டும். அதற்கான போராட்டத்தையே இன்று
ஆரம்பிக்கின்றோம்.
நன்றி வீரகேசரி
புதிய கட்டடத்தில் வட மாகாண சபையின் கன்னி அமர்வு நாளை
24/10/2013 வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு நாளை காலை 9.30 மணிக்கு கைதடியிலுள்ள வடமாகாண சபையின் புதிய கட்டடத்தில் இடம்பெறவுள்ளது.
சுமார் 450 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள மாகாண சபைக் கட்டடத்தில் இந்த முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது.
இதனை சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக வடமாகாண சபை உறுப்பினர்களுடைய சத்தியப்பிரமாண உடன்படிக்கையை உறுதிப்படுத்துதல், உறுப்பினர்களை வழிகாட்டி இருக்கைகளுக்கு அழைத்துச் செல்லுதல், செயலாளர் சபையில் உட்பிரவேசித்தல் மற்றும் செயலாளரின் அறிவித்தல்கள் வெளியிடுதல் போன்றன இடம்பெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து செயலாளர் ஆளுநருடைய பிரகடனத்தை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகயிலும் வாசிக்கவுள்ளார்.
இதன் பின்னர் பேரவைத் தலைவர் தெரிவு இடம்பெறவுள்ளது. வேறு பெயர்கள் பிரேரிக்கப்பட்டால் வாக்களிப்புக்கு தயார்படுத்தல், வாக்குகளை எண்ணுதல் முடிவுகளை தெரியப்படுத்துதல் என்பன இடம்பெறவுள்ளன நன்றி வீரகேசரி

24/10/2013 பல்கலைக்கழகங்களில் சேவையாற்றும் விரிவுரையாளர்களுக்கு 70 வயது வரை
ஒப்பந்த அடிப்படையில் சேவையை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதென
உயர் கல்வி அமைச்சின் செயலாளர் டாக்டர் சுனில் ஜயந்த நவரட்ன தெரிவித்தார்.
இதற்கிணங்க 65 வயதில் ஓய்வு பெறும் விரிவுரையா ளர்கள் மேலதிகமாக 5 வருடங்களுக்கு சேவையாற்ற முடியும். ஓய்வு பெறும் விரிவுரையாளரின் சேவை, குறித்த பல்கலைக்கழகத்திற்கு இன்றியமையாதது எனக் கோரும் பட்சத்தில் மாத்திரமே அவர்களுக்குரிய சேவைக் காலம் நீடிக்கப்படும்.
ஒப்பந்தங்கள் 70 வயது வரை வருடந்தோறும் புதுப்பிக்கப்படுமெனவும் அமைச்சின் செயலாளர் கூறினார். இருப்பினும் விரிவுரையாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றும் காலப்பகுதியில் உபவேந்தர், பீடாதிபதி, பிரிவுத் தலைவர் உள்ளிட்ட எந்தவொரு பதவியையும் வகிக்க முடியாது எனவும் அவர் உறுதியாக தெரிவித்தார்.நன்றி வீரகேசரி

No comments:
Post a Comment