.
இலங்கையில் நீடித்த போர் அநர்த்தங்களினால் பெற்றவர்களை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து உதவிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டம் நிதியத்தின் செயலாளர் திரு. செ. கொர்ணேலியஸ் அவர்களின் தலைமையில் அண்மையில் மெல்பனில் வேர்மண்ட் சவுத் சமூக மண்டபத்தில் நடைபெற்றது.
நிதியத்தின் தொடக்ககால உறுப்பினர் அமரர் மருத்துவர் இராசநாயகம், தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் ஸ்தாபகர் அமரர் கே. கந்தசாமி, கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அமரர் பேராசிரியர் ரவீந்திரநாத் ஆகியோரின் உருவப்படங்களுக்கு விளக்கேற்றியதையடுத்து நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
நிதியத்தின் முன்னாள் தலைவர்கள் மருத்துவகலாநிதி சந்திரானந்த், திருமதி புவனா இராஜரட்ணம், திரு. ராஜ் சிவநாதன், விலங்கு மருத்துவர் நொயல் நடேசன், திரு. சண்முகம் சந்திரன், மருத்துவகலாநிதி திருமதி மதிவதனி சந்திரானந்த் ஆகியோர் விளக்கேற்றியதையடுத்து, போரில் இறந்த மக்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிதிச்செயலாளர் திருமதி வித்தியா ஸ்ரீஸ்கந்தராஜா 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற 23 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டக்குறிப்புகளையும் 2012- 2013 ஆண்டறிக்கை நிதியறிக்கைளையும் சமர்ப்பித்தார்.
கடந்த ஆண்டு இறுதியிலும் இந்த ஆண்டின் தொடக்கத்திலும் வடக்குää கிழக்கு மாகாணங்களில் கல்வி நிதியத்தின் உதவி பெறும் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு தகவல் அமர்வு நிகழ்வுகள் பற்றிய விளக்கத்தினை நிதியத்தின் துணை நிதிச்செயலாளர் திரு. லெ. முருகப10பதி உறுப்பினர்களுக்கு விளக்கினார்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் நிதியத்தின் உதவி பெற்று பல்கலைக்கழகம் பிரவேசித்து பட்டப்படிப்பினை நிறைவு செய்துகொண்ட மாணவர்கள் மற்றும் தொழில்வாய்ப்பு பெற்ற மாணவர்களின் பட்டியலும் சமர்ப்பிக்கப்பட்டது. கிழக்கிலங்கையில் சுநாமி கடற்கோளினால் பாதிக்கப்பட்டு பின்னர் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்வி நிதியத்தின் உதவியுடன் பட்டப்படிப்பை தொடர்ந்த மாணவர்களும் 2009 வன்னியில் நடந்த இறுதிப்போரினையடுத்து அகதிமுகாம்களிலிருந்து வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கு தெரிவாகி கல்வி நிதியத்தின் உதவி பெற்ற மாணவர்களும் தற்பொழுது பட்டதாரிகளாக வெளியேறியிருப்பதாகவும் இக்கூட்டத்தில் சுட்டிக்காண்பிக்கப்பட்டது.
மேலும் பல மாணவர்களுக்கு உதவும் அன்பர்கள் இல்லாத நிலையிலும் கல்வி நிதியமே குறிப்பிட்ட மாணவர்களை பொறுப்பெற்று நிதியுதவி வழங்கி பராமரித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிதியத்திற்கு மேலும் உதவும் அன்பர்களை அவுஸ்திரேலியாவிலும் ஏனைய நாடுகளிலும் தெரிவுசெய்வதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

No comments:
Post a Comment