மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு.பத்மஸ்ரீ பட்டம் தர வலியுறுத்தி..

.

இறக்கும் மனிதர்கள்.. இறவாப் பாடல்கள் என்று அடிக்கடி கூறும் ஒரு மனிதர்!


Music.   Sound,  Voice  =  M.S.V.

நவீன உலகில் இசை உருவாக்கம் என்பது கணிணி சார்ந்த ஒன்றாகிவிட்டது.

அன்றைய காலக்கட்டத்தில்.. எல்லாமே அந்த ஆர்மோனியக் கட்டைக்குள் இருந்துதான்.. அப்படியென்றால் இசைக்கலைஞனின் மூலையிலிருந்துதான்.. முழுக்க.. முழுக்க..

அப்படி.. இசையை கேள்வியறிவின்மூலம் பெற்று.. முன்னணி இசையமைப்பாளரிடம் உதவியாளராய் பணிபுரிந்து.. தனது ஞானத்தால், தெய்வ அருளால், பெரியவர்களின் ஆசியால்.. காலம் கனிந்திட.. கண்ணதாசன் முதலான மாபெரும் கவிஞர்களின் பாடல்களுக்கெல்லாம் உயிர்கொடுத்த இசை வழங்கி.. ஆயிரக்கணக்கில் பாடல்களுக்கு இசையமைத்து நூற்றாண்டு சாதனை படைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு.. இந்திய அரசின் அங்கீகாரம் என்பது பற்பல காரணங்களால் கிட்டாமல் இருக்கிறது.  இதனை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் உணர்ந்திருக்கிறோம்.  நமது உணர்வுகளை ஒன்றுதிரட்டி.. அவருக்காக .. அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் தர வலியுறுத்தி.. கீழ்க்காணும் இணையதளத்தில் உங்கள் பதிவுகளை வழங்கிட வேண்டும் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.


இன்றும் நாம் முணுமுணுக்கும் பாடல்கள் அனேகமாக அவர் இசையமைத்ததாகத்தான் இருக்கும்.  தமிழ்த்திரையிசைக்கு.. தென்னக மொழிகளில் இசைத்துறையில் அவர் ஆற்றிய அரும்பணியை இந்திய அரசாங்கம் கெளரவிப்பதென்பது ஒவ்வொரு தமிழனும் .. ஒவ்வொரு இந்தியனும் பெறுகின்ற கெளரவமாகும்.

உங்கள் பதிவுகள் மட்டுமின்றி.. உங்கள் நட்புவட்டத்திலும் இதற்கான தொடர் பதிவுகள் அமைந்திட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புகலந்த நன்றியுடன்..


காவிரிமைந்தன் (மு.இரவிச்சந்திரன்)
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்

No comments: