உலகச் செய்திகள்

அமெ­ரிக்­காவின் நிதி நெருக்­கடி முழு உல­கிற்­குமே பெரும் அச்­சு­றுத்தல்: உலக வங்கித் தலைவர் எச்­ச­ரிக்கை

மத்திய பிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 109 பக்தர்கள் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்

முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லாஹ் என்ற நாமத்தை பயன்படுத்த முடியாது - மலேசிய நீதிமன்றம்


நைஜீரியாவில் தடுப்பு முகாமில் நூற்றுக்கணக்கானோர் பலி: மன்னிப்புச் சபை



---------------------------------------------------------------------------------------------------------


அமெ­ரிக்­காவின் நிதி நெருக்­கடி முழு உல­கிற்­குமே பெரும் அச்­சு­றுத்தல்: உலக வங்கித் தலைவர் எச்­ச­ரிக்கை

14/10/2013     அமெ­ரிக்­காவின் கடன் பெறு­வது தொடர்­பான நெருக்­கடி கார­ண­மாக அந்­நாட்டு அர­சாங்கம் ஒரு சில தினங்­களில் மிகவும் அபா­ய­க­ர­மான தரு­ண­மொன்றை எதிர்­கொண்­டுள்­ள­தாக உலக வங்கித் தலைவர் ஜிம் யொங் கிம் எச்­ச­ரித்­துள்ளார்.

எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை காலக்­கெடு முடி­வ­டை­வ­தற்கு முன் அர­சாங்க கடன் ­வ­ரை­ய­றையை உயர்த்­து­வ­தற்கு அமெ­ரிக்கப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உடன்­ப­டிக்­கை­யொன்றை எட்ட வேண்டும் என அவர் வலி­யு­றுத்­தினார்.

நிதிச்­சந்­தை­யி­லி­ருந்து கடன் பெறு­வ­தற்­கான இணக்­கப்­பாடு எட்­டப்­ப­டா­விட்டால் அமெ­ரிக்கத் திறை­சே­ரி­யா­னது நிதிப் பற்­றாக்­கு­றை­யுடன் செயற்­பட நேரிடும் எனவும் அத்­த­கைய நிலை முழு உல­கிற்­குமே ஆபத்­தான ஒன்­றாக அமை­யலாம் எனவும் கிம் எச்­ச­ரித்­துள்ளார்.

இவ்­வா­றான நிலை வட்டி வீதங்கள் உய­ரவும் நம்­பிக்கை வீழ்ச்­சி­ய­டை­யவும் வளர்ச்சி மந்­த­ம­டை­யவும் வழி­வ­குக்கும் என அவர் கூறினார்.

அமெ­ரிக்க வாஷிங்டன் நகரில் இடம்­பெற்ற வரு­டாந்தக் கூட்­டத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

இது அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடுகளிலும் அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் பாரிய பொருளாதார ரீதியான அனர்த்தத்துக்கு வித்திடும் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அமெ­ரிக்­காவில் அர­சாங்க நிறு­வ­னங்கள் பகு­தி­யாக மூடப்­ப­டு­வ­தற்கு வழி­வ­குத்த அர­சியல் ஸ்தம்­பித நிலையை எவ்­வாறு முடி­வுக்குக் கொண்டுவரு­வது என்­பது தொடர்­பான பேச்­சு­வார்த்­தைகள் அந்­நாட்டு செனட் சபைக்கு கொண்டுசெல்­லப்­பட்­டுள்­ளன.

மேற்­படி அர­சியல் ஸ்தம்­பிதநிலை குறித்து செனட் சபை­யி­லுள்ள ஜன­நா­யகக் கட்சி மற்றும் குடி­ய­ரசுக் கட்சித் தலை­வர்­க­ளி­டையே கடந்த சில வாரங்­களில் முதல் தட­வை­யாக நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தையில் முன்­னேற்றம் எதுவும் எட்­டப்­ப­ட­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த முதலாம் திகதி வரவு – செலவுத் திட்­ட­மொன்றை குறித்த காலக்­கெ­டு­வுக்குள் அமெ­ரிக்கப் பாரா­ளு­மன்­றத்தின் இரு சபை­களும் நிறை­வேற்றத் தவ­றி­ய­தை­ய­டுத்து அமெ­ரிக்க அர­சாங்க நிறு­வ­னங்கள் பகு­தி­யாக மூடப்­பட்­டன.

அமெ­ரிக்­கா­வா­னது தனது கடன் வரை­ய­றையை அதி­க­ரிக்க வேண்­டி­ய­தற்­கான காலக்­கெ­டுவை எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை எதிர்­நோக்­கி­யுள்­ளது.

அது தொடர்பில் உடன்­ப­டிக்­கை­யொன்று எட்­டப்­ப­டா­விட்டால் அமெரிக்க அர­சாங்கம் தனது செல­வு­களை மேற்­கொள்ள முடி­யாத பாரிய பாதிப்­பொன்றை எதிர்­கொள்ள நேரிடும்.

இது தொடர்பில் ஜன­நா­யகக் கட்சி செனட் சபை உறுப்­பினர் டிக் டுர்பின் விப­ரிக்­கையில், திங்­கட்­கி­ழமை சந்­தைகள் மீளவும் திறக்­கப்­ப­டு­வ­தற்கு முன் கடன் வரை­ய­றையை விரி­வு­ப­டுத்­து­வது தொடர்பில் உட் படிக்­கை­யொன்றை எட்­டு­வதே தமது இலக்­கா­க­வுள்­ள­தாகக் கூறினார்.

செனட்சபையின் பெரும்­பான்மைத் தலை வர் ஹரி ரெயிட்­டுக்கும் செனட் சபையின் குடி­ய­ரசுக் கட்சித் தலைவர் மிட்ச் மக்­கொன்­ன­லுக்­கு­மி­டையே சனிக்­கி­ழமை நேரடி பேச்­சு­வார்த்தை இடம்பெற்­றுள்­ளது.

அமெ­ரிக்க செனட்சபை உறுப்­பி­னர்­க­ளி­டையே இத்­த­கைய நேரடி பேச்­சு­வார்த்தை நடை­பெ­று­வது கடந்த ஜூலை மாதத்­துக்குப் பின்னர் இதுவே முதல் தட­வை­யாகும்.

இந்தப் பேச்­சு­வார்த்­தையைத் தொடர்ந்து ரெயிட் வெள்ளை மாளி­கையில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபா­மா­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.

எதிர்­வரும் ஆண்டு ஜன­வரி 31 ஆம் திகதி வரை கடன் வரை­ய­றையை அதி­க­ரிப்­ப­தற்கு அர­சாங்­கத்­துக்கு அனு­மதியளிக்கும் வகையில் குடி­ய­ரசுக் கட்சி உறுப்­பினர் சூஸன் கொரின்ஸால் முன்­வைக்­கப்­பட்ட திட்­டத்தை அவர் நிரா­க­ரித்­துள்ளார்.

செனட் சபையில் பெரும்­பான்­மையை வகிக்கும் ஜனநாயகக் கட்சி கடன் வரையறையை அதிகரிப்பதற்கான பிரேர ணையொன்றை முன்னெடுப்பதற்கு போதிய ஆதரவைக் கொண்டிருக்கவில்லை.

இதற்கு முன் பாராளுமன்றப் பிரதிநிதி சபைக்கும் வெள்ளை மாளிகைக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருந்தது.

நன்றி வீரகேசரி

 

 

 

 

 

 

மத்திய பிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 109 பக்தர்கள் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்

14/10/2013    நவ­ராத்­திரி தின சிறப்பு பூஜையில் பங்­கேற்க சென்ற போது ஏற்­பட்ட கூட்ட நெரி­சலில் சிக்­கி­யதில் 109 பக்­தர்கள் பரி­தாப கர­மாக உயி­ரி­ழந்­தனர். மேலும், 100க்கும் மேற்­பட்டோர் காய­ம­டைந்­தனர்.
மத்­திய பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்ள இச்­சம்­பவம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­படுத்தியுள்­ளது.

மத்­திய பிர­தேச மாநிலம் தட்­டியா மாவ ட்டத்தின் ரத்­னாகர் பகு­தியில் உள்­ளது மந்துளா தேவி கோயில். இங்கு, நவ­ராத்­திரி பூஜையின் ஒன்­ப­தா­வது நாளான நேற்று சிறப்பு நிகழ்­வுகள் இடம்­பெற்­றன.
இந்த நிகழ்­வு­களில் பங்­கேற்­ப­தற்­காக வழக்கம் போன்று அதி­கா­லையில் இருந்து பக்தர்கள் கோயி­லுக்கு வந்து கொண் டிருந்­தனர்.

கோயி­லுக்கு வரும் வழியில் சிந்து நதியைக் கடப்­ப­தற்கு குறு­க­லான பாலம் ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த இடத்தில் வரும்­போது கூட்ட நெரி­சலை கட்­டுப்­ப­டுத்த பொலிஸார் தடி­யடி நடத்­தி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது.
அப்­போது, பக்­தர்கள் ஒரு­வரை ஒருவர் முந்­திக்­கொண்டு செல்ல முயன்றதில் காலில் மிதி­பட்டும், ஆற்றில் தவறி விழுந்தும்  உயி­ரி­ழந்­த­தாக பொலிஸ் தரப்பு செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

இதனையடுத்து, சம்­ப­வப்­ப­கு­திக்கு விரைந்த மீட்­புப்­ப­டை­யினர், பாதிக்­கப்­பட்­டோரை உட­ன­டி­யாக தட்­டியா மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­தனர்.
சம்பவம் இடம்பெற்ற இடம் தலைநகர் தட்டியாவிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது  

நன்றி வீரகேசரி

 

 

 

முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லாஹ் என்ற நாமத்தை பயன்படுத்த முடியாது - மலேசிய நீதிமன்றம்

14/10/2013   தீர்ப்பு முஸ்லிம் அல்லாதவர்கள் கடவுளைக் குறிக்க அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்த முடியாது என மலேசிய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
 2009 ஆம் ஆண்டு கத்தோலிக்க பத்திரிகையான த. ஹெரால்ட்டின் மலே மொழிப் பதிப்பில் கிறிஸ்தவ கடவுளை குறிக்க மேற்படி சொல்லை பயன்படுத்துவதற்கு அனுமதித்து கீழ் நீதிமன்றமொன்று அளித்த தீர்ப்பை மேற்படி புதிய தீர்ப்பு மாற்றியுள்ளது.
2007 ஆம் ஆண்டு தீர்ப்பையடுத்து இடம்பெற்ற மதக்கலவரங்களின் போது பள்ளிவாசல்களும் தேவாலயங்களும் தாக்கப்பட்டன.
ஆதரவாக அளிக்கப்பட்ட மேற்படி தீர்ப்புக்கு எதிராக அரசாங்கத்தால் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரித்த மலேசிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தைச் சேர்ந்த 3 நீதிபதிகள் முஸ்லிம் அல்லாதவர்கள் தமது கடவுளைக் குறிக்க அல்லாஹ் என்ற சொல்லை பயன்படுத்த முடியாது என்று தீர்ப்பளித்துள்ளார்.

நன்றி வீரகேசரி

 

 

 

 

 

 

 

நைஜீரியாவில் தடுப்பு முகாமில் நூற்றுக்கணக்கானோர் பலி: மன்னிப்புச் சபை

15/10/2013   வட கிழக்கு நைஜீரியாவில் அமைந்துள்ள தடுப்பு முகாமில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
சிறையில் அதிகப்படியானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் சிலர் மூச்சடைத்தும், பட்டினியாலும் உயிரிழந்துள்ளதாக அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பலர் சட்டத்துக்கு முரணான வகையில் கொல்லப்பட்டுள்ளதாக அவ் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இவ்வருட ஆரம்பத்தில் சுமார் 950 பேர் வரை இராணுவக் காவலில் இருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சிரேஷ்ட இராணுவ வீரரொருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இக் குற்றச்சாட்டை நைஜீரிய இராணுவம் மறுத்துள்ளது.
மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலர் பொகோ ஹராம் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என இராணுவம் தெரிவித்துள்ளது.
பொகோ ஹராம் இயக்கம் அண்மையில் கல்லூரியொன்றின் விடுதியில் நடத்திய தாக்குதலில் 50 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி

 

 

 

No comments: