முல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்ற நடவடிக்கை : அன்ரனி ஜெயநாதன்
பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானிய இளவரசர் கலந்து கொள்வது உறுதி
தமிழர்களின் உணர்வை மதித்தே இறுதி முடிவு எடுக்கப்படும்: மன்மோகன்சிங்
பட்டினியில் 43 ஆவது இடத்தில் இலங்கை

14/10/2013 முல்லைத்தீவு, கொக்குளாய் பிரதேசத்தில் அத்துமீறி குடியமர்ந்து
கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்ற
நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண துணை அவைத் தலைவரும் பொறுப்பு நிலை
அமைச்சருமான அன்ரனி ஜெயநாதன் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதிக்குச் சென்ற வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து,கைத்தொழில், வர்த்தகம், வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபையின் துணை அவைத் தலைவரும் புனர்வாழ்வு, இன நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் பொறுப்பு நிலை அமைச்சருமான அன்ரனி ஜெயநாதன் ஆகியோர் இது தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
குறிப்பாக 1984 ஆண்டுக்கு முன்னர் 32 தென்னிலங்கை மீனவ குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் தற்போது 350 தென்னிலங்கை மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அத்துடன் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளைப் பயன்படுத்தி தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் கடல்வளம் அழியும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையைக் கருத்திற்கொண்டு இனிவரும் காலத்தில் இவ்வாறான தொழில் முறைகளைப் பயன்படுத்தல், பதிவு செய்யப்படாத தொழிலாளர்களை வெளியேற்றுதல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

நன்றி வீரகேசரி
பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானிய இளவரசர் கலந்து கொள்வது உறுதி
15/10/2013 பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ்,
இலங்கையில் இடம்பெற உள்ள பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில்
கலந்து கொள்ள உள்வார் என கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய
உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது
இது தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில்
எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாடு
நடைபெறவுள்ள நிலையில் இளவரசர் சார்ள்ஸ் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம்
திகதி முதல் 16ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பதோடு பொதுநலவாய
மாநாட்டின் ஆரம்ப விழா மற்றும் இரவு விருந்திலும் கலந்து கொள்வார்.
இந்த பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் மகாராணியை பிரதிநிதித்துவப்படுத்தி இளவரசர் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
தமிழர்களின் உணர்வை மதித்தே இறுதி முடிவு எடுக்கப்படும்: மன்மோகன்சிங்
15/10/2013 பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கும்
விவகாரத்தில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு
எடுக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர்
மன்மோகன்சிங் உறுதி அளித்துள்ளார்.
இலங்கையில் எதிர்வரும்
நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
இலங்கையில் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வரும் நிலையில் இந்த
மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என தமிழகத்தை சேர்ந்த தி.மு.க.,
அ.தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள்
வலியுறுத்தி வருகின்றனர்.
அதேபோல் கருணாநிதியின் கோரிக்கையை, தி.மு.க.வின் பாராளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இந்த
கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 1 ஆம் திகதி முதல் தியாகு உண்ணாவிரதம்
இருந்து வருவது குறித்தும், பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில்
இந்தியா பங்கேற்பதற்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள்
குறித்தும் அவர் பிரதமரிடம் எடுத்துக் கூறினார்.
இந்நிலையில்,
பிரதமர் மன்மோகன் சிங் இந்த விவகாரம் குறித்து தி.மு.க. தலைவர்
கருணாநிதிக்கு எழுதியுள்ள கட்டிதத்தில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு
மதிப்பளித்து முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
மேலும்,
இந்த விவகாரம் தொடர்பாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் தேசிய
விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, தனது உண்ணாவிரதத்தைக் கைவிட
தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் கருணாநிதியை கேட்டுக்
கொண்டுள்ளார்.
நன்றி வீரகேசரி
பட்டினியில் 43 ஆவது இடத்தில் இலங்கை
16/10/2013 பட்டினியில் ஆபத்தான நிலையில் இலங்கை உள்ளதாக ௨௦௧௩ பட்டினி சுட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா 2012 ஆம் ஆண்டு உலக பட்டினிச் சுட்டியில் 67
ஆம் இடத்திலிருந்து 2013 ஆம் ஆண்டு 63 ஆம் இடத்திற்கு
முன்னேறியுள்ளது. எனினும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 40
வீதமானோர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவ்வறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை. சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு கீழேயே இந்தியா உள்ளது.
உலக பட்டினி சுட்டியில் சீனா, பட்டினி மட்டத்தில் 6 ஆம் இடத்தில்
உள்ளது. இலங்கை 43 ஆவது, பாகிஸ்தான் 57ஆவது,பங்களாதேஷ் 58 ஆவது இடங்களை
பெற்று கடுமையான பட்டினி மட்டத்திலிருப்பதை
வெளிப்படுத்தியுள்ளன.
இந்த சுட்டி 120 அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பட்டினி
மட்டத்தை காட்டுகின்றது. இந்த சுட்டியை தயாரிக்கும் போது மந்த போஷனை
உடையோரின் விகிதாசாரம்இ ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளில் நிறை
குறைந்த பிள்ளைகளின் விகிதாசாரம், ஐந்து வயதுக்கு குறைந்த
பிள்ளைகளின் மரண வீதம் ஆகிய மூன்றும் சம அளவில் கருத்தில்
எடுக்கப்பட்டன.
இதுவரை வெளியிடப்பட்ட பட்டினிச் சுட்டி அறிக்கையின்படிஇ 19 நாடுகள் மிகவும் ஆபத்தான நிலையை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
நன்றி வீரகேசரி
நன்றி வீரகேசரி
பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானிய இளவரசர் கலந்து கொள்வது உறுதி
15/10/2013 பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ்,
இலங்கையில் இடம்பெற உள்ள பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில்
கலந்து கொள்ள உள்வார் என கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய
உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது
இது தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இளவரசர் சார்ள்ஸ் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பதோடு பொதுநலவாய மாநாட்டின் ஆரம்ப விழா மற்றும் இரவு விருந்திலும் கலந்து கொள்வார்.
இந்த பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் மகாராணியை பிரதிநிதித்துவப்படுத்தி இளவரசர் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இளவரசர் சார்ள்ஸ் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பதோடு பொதுநலவாய மாநாட்டின் ஆரம்ப விழா மற்றும் இரவு விருந்திலும் கலந்து கொள்வார்.
இந்த பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் மகாராணியை பிரதிநிதித்துவப்படுத்தி இளவரசர் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
தமிழர்களின் உணர்வை மதித்தே இறுதி முடிவு எடுக்கப்படும்: மன்மோகன்சிங்
15/10/2013 பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கும்
விவகாரத்தில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு
எடுக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர்
மன்மோகன்சிங் உறுதி அளித்துள்ளார்.
இலங்கையில் எதிர்வரும்
நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
இலங்கையில் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வரும் நிலையில் இந்த
மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என தமிழகத்தை சேர்ந்த தி.மு.க.,
அ.தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள்
வலியுறுத்தி வருகின்றனர்.
அதேபோல் கருணாநிதியின் கோரிக்கையை, தி.மு.க.வின் பாராளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இந்த
கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 1 ஆம் திகதி முதல் தியாகு உண்ணாவிரதம்
இருந்து வருவது குறித்தும், பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில்
இந்தியா பங்கேற்பதற்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள்
குறித்தும் அவர் பிரதமரிடம் எடுத்துக் கூறினார்.
இந்நிலையில்,
பிரதமர் மன்மோகன் சிங் இந்த விவகாரம் குறித்து தி.மு.க. தலைவர்
கருணாநிதிக்கு எழுதியுள்ள கட்டிதத்தில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு
மதிப்பளித்து முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
மேலும்,
இந்த விவகாரம் தொடர்பாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் தேசிய
விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, தனது உண்ணாவிரதத்தைக் கைவிட
தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் கருணாநிதியை கேட்டுக்
கொண்டுள்ளார்.
நன்றி வீரகேசரி
பட்டினியில் 43 ஆவது இடத்தில் இலங்கை
No comments:
Post a Comment