இலங்கைச் செய்திகள்


பத்திரிகையாளர் நடராஜா பணத்துக்கும் பொருளுக்கும் துணை போனது கிடையாது: அஸ்வர் எம்.பி. அனுதாபம்


பொதுநலவாய மாநாட்டில் கனேடிய பிரதமர் பங்கேற்க மாட்டார்

வட மாகாண சபைக்கான அமைச்சர்கள் விபரம்

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை

தனியார் பஸ்களில் கப்பம்பெறும் கும்பல்--------------------------------------------------------------------------------------------------------------
பத்திரிகையாளர் நடராஜா பணத்துக்கும் பொருளுக்கும் துணை போனது கிடையாது: அஸ்வர் எம்.பி. அனுதாபம்

08/10/2013   பத்திரிகைத்துறையில் நல்ல அனுபவமும் திறமையும் நிறைந்தவர் அமரர் செல்லையா நடராஜா.அவரது பிரிவு பத்திரிகைத்துறைக்கு பாரிய இழப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் ெதரிவித்தார்.வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் நடராஜாவின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
நான்கு தசாப்தங்களுக்கு மேலாக பத்திரிகைத்துறை மூலம் அவர் ஆற்றிய சேவை மிகவும் பாராட்டுக்குரியது. எவரது மனமும் நோகும் வண்ணம் தனது பேனாவைப் பிடிக்காது அனைவரையும் அரவணைத்துக் கொண்டே சென்றார்.அது மாத்திரமல்ல, இளம் பத்திரிகையாளர்களையும் உருவாக்கி செயற்பட்டார்.


தமிழில் பல பிரயோசனமுள்ள மாணவர்களுக்குத் தேவையான ஆக்கங்களை அச்சிலேற்றிச் செயற்பட்டார். இதனால் அவர் பலருடைய பாராட்டையும் பெற்று கெளரவம் பெற்றார். தான் ஒரு பிரதான பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்ற மமதையில் செயற்படாமல் மிகவும் எளிமையாகவே செயற்பட்டார்.
அவரது எளிமையான மனப்பாங்கு நமக்கெல்லாம், ஓர் உதாரணமாக அமைகின்றது. பணத்துக்கோ, பொருளுக்கோ அவர் ஒருபோதும் விலை போனது கிடையாது. அது மாத்திரமல்ல, அவரது சேவையை பத்திரிகை உலகம் என்றும் மறத்தலாகாது.
இன, மத, மொழி வேறுபாடின்றி சேவை செய்து வந்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்

நன்றி வீரகேசரி

பொதுநலவாய மாநாட்டில் கனேடிய பிரதமர் பங்கேற்க மாட்டார்
07/10/2013     இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாடுகளில் தான் கலந்துகொள்ளப்போவதில்லையென கனேடிய பிரதமர்  ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டே தான் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தனக்கு பதிலாக கனேடிய சர்வதேச மனித உரிமைகளுக்கான வெளிவிவகார அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய் கலந்துகொள்வார் எனவும் கனேடிய பிரதமர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையானது 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டை நடத்துவதற்கு தெரிவு செய்யப்பட்ட போது, அது தனது மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்தவும், நல்லிணக்கத்தை நோக்கிச் செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இவ் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் என கனடா நம்பியதாகவும் ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லையெனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் ஆழ்ந்த கவலை கொள்வதாகவும், சிவில் யுத்தத்தின் போதும் அதன் பின்னருமான மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான தரங்கள் தொடர்பில் இலங்கை பொறுப்பற்று இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுதவிர பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை, அரச தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சிறுபான்மையினர், காணாமல் போதல் போன்ற சம்பவங்கள் தொடர்பிலும் கனேடிய பிரதமர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி வீரகேசரிவட மாகாண சபைக்கான அமைச்சர்கள் விபரம்

08/10/2013    வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக அமைச்சுப் பொறுப்புகளை வழங்குவதில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்பட்ட போதிலும் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்டமைப்பிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் மாகாண அமைச்சுகள் வழங்கப்படவுள்ள உறுப்பினர்களின் விபரம் வருமாறு,
பொ. ஐங்கரநேசன் - விவசாயம், கால்நடை, நன்னீர் மீன்பிடித்துறை
பா. டெனிஸ்வரன் - உள்ளுராட்சி நிர்வாகம்
த. குருகுலராஜா - கல்வியமைச்சு
ப. சத்தியலிங்கம் - சுகாதாரம்

நன்றி வீரகேசரி

 

 

 

 கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை

 


-
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை
(pics by : J. Sujeewakumar)
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

நன்றி வீரகேசரி

 

 

தனியார் பஸ்களில் கப்பம்பெறும் கும்பல்

வட பகுதியிலிருந்து அநுராதபுரம் ஊடாக கொழும்புக்குச் செல்லும் தனியார் பஸ்வண்டிகளில் கப்பம் கோரும் கும்பலொன்று சூட்சுமமான முறையில் செயற்பட்டுவருவதாக முறைப்பாடொன்று கிடைத்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் புதிய பஸ்தரிப்பு நிலையம் மற்றும் பழைய பஸ் தரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் வைத்தே இச்செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் மேலும் கூறினார். இவ்விடயம் குறித்து பொலிஸார் தெரிவிக்கையில் தனியார் பஸ்வண்டிகளில் கப்பம் கோரும் கும்பலொன்று ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோர் முறைப்பாடு செய்துள்ளனர். ஆகவே அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம். கெக்கிராவ நகரில் பஸ் வண்டியில் கப்பம் பெற்ற இருவரை கெக்கிராவ பொலிஸார் கைது செய்துதள்ளனர் எனவும் அநுராதபுரம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 நன்றி தேனீ

No comments: