அவுஸ்திரேலியக் கம்பன் விழா 2013 (சிட்னி: ஒக்ரோபர் 26ம் 27ம் திகதி)

.


அன்பார்ந்த தமிழ் முரசு நண்பர்களே, வணக்கம்,

இவ்வருடம் சிட்னி - மெல்பேர்ண் என இரு மாநிலங்களிலும், கம்பன் விழா சிறப்பாக இடம்பெறவிருக்கின்றது என்பதை மிக்க மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றோம். கம்பன விழாக்களில் கலந்து சிறப்பிப்பதற்காக உலகப் புகழ்பூத்த பேச்சாளர்கள் கடல் கடந்து வருகை தரவுள்ளனர். இவர்களோடு எம் அவுஸ்திரேலியக் கம்பன் கழகப் பேச்சாளர்களும், அவுஸ்திரேலியத் தமிழறிஞர்களும் இணைந்து சிறப்பிக்கவுள்ளனர்.
சிட்னியில் சனி - ஞாயிறு என இம்மாதம் 26ம் 27ம் திகதிகளில், காலையும் மாலையும் என நான்கு அமர்வுகளில் இவ் விழா இடம்பெறவுள்ளது. இவ்வருடத்திற்கான உயர் 'மாருதி' மற்றும் சான்றோர் விருது வழங்கல் சிறப்பாக, விழாவின் முதலாம் நாள் மாலை நிகழ்வில் நடைபெறவுள்ளது.

எம் தமிழ் மக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். திரளென வருகை தந்து விழாவைச் சிறப்பித்தருள்க. விபரங்களை இங்கே இணைக்கப்பட்டுள்ள பிரசுரத்தில் பார்க்க.

தொடர்ந்து எம் கழகத்தின் இயல் - இசை நிகழ்வுகளின் விபரங்களை எடுத்தியம்பும், உங்களையும் எங்களையும் இணைக்கும் தமிழ்முரசு ஆசிரியர்களுக்கு எம் மனமார்ந்த நன்றிகள்!

1. SBS தமிழ் வானொலியில் 13.10.2013 அன்று ஒலிபரப்பப்பட்ட செய்தி:
http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/294513/t/Kamban-Vizha-in-Australia

2. மெல்பேர்ண் கம்பன் விழா விளம்பரம்
https://soundcloud.com/tamilaustralian/kamban-vizha-in-melbourne-on?utm_source=soundcloud&utm_campaign=share&utm_medium=email


நன்றி.  அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர் 
No comments: