உலகச் செய்திகள்

அமெ­ரிக்கா கடனில் மூழ்கும் அபாயம்: ஒபாமா எச்­ச­ரிக்கை

எகிப்தில் மீண்டும் மோதல்கள்: 50 பேர் பலி

 மகளின் மரணத்துக்கு காரணமான சவுதி மதகுருவுக்கு 8 ஆண்டுகள் சிறை

லிபிய பிரதமர் ஆயுததாரிகளால் கடத்தல்

மலாலாவுக்கு ஐரோப்பிய யூனியன் விருது
---------------------------------------------------------------------------------------------------------------

 

அமெ­ரிக்கா கடனில் மூழ்கும் அபாயம்: ஒபாமா எச்­ச­ரிக்கை

04/10/2013   அமெ­ரிக்க குடி­ய­ரசு கட்­சியின் ஒரு பழை­மை­வாத பிரி­வொன்று நாடு கடனில் மூழ்­கு­வதை அனு­ம­திப்­ப­தற்கு விருப்பம் கொண்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி பராக் ஒபாமா எச்­ச­ரித்­துள்ளார்.

அமெ­ரிக்க பாரா­ளு­மன்­றத்தின் இரு சபை­களும் வரவு, செலவுத் திட்­ட­மொன்று தொடர்பில் இணக்கம் காணத்­த­வ­றி­ய­தை­ய­டுத்து அந்­நாட்டு அர­சாங்க நிறு­வ­னங்கள் பகு­தி­யாக மூடப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில், பராக் ஒபாமா பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் நடத்­திய பேச்­சு­வார்த்தை இணக்­கப்­பாடு எட்­டப்­ப­டாத நிலையில் தோல்வியில் முடி­வ­டைந்­தது.

அமெ­ரிக்க நிறு­வ­னங்கள் மூடப்­பட்­டமை குறித்து ஜன­நா­யக கட்­சி­யி­னரும் குடி­ய­ரசுக் கட்­சி­யி­னரும் ஒரு­வ­ரை­யொ­ருவர் குற்­றஞ்­சாட்டி வரு­கின்­றனர்.

மேற்­படி நிறு­வ­னங்கள் மூடப்­பட்­டதால் 700,000 ஊழி­யர்கள் ஊதி­ய­மில்­லாத விடு­மு­றையை எதிர்­கொண்­டுள்­ளனர்.

அத்­துடன் தேசிய பூங்­காக்கள், சுற்­றுலா ஸ்தலங்கள், அர­சாங்க இணை­யத்­த­ளங்கள் அலு­வ­லக கட்­ட­டங்கள் என்­பன மூடப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில், கடன்களின் வரை­ய­றைகள் உயர்த்­தப்­படா விட்டால் இந்த மாதம் 17 ஆம் திகதி அமெ­ரிக்க அர­சாங்கம் கட்­ட­ணங்­களைச் செலுத்­து­வ­தற்கு பண­மின்­றிய நிலையை எதிர்­கொள்ள நேரிடும்.

இந்­நி­லையில், பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் சபையை கட்­டுப்­ப­டுத்தி வரும் குடி­ய­ர­சுக்­கட்­சி­யினர், அர­சாங்கம் தனது செயற்­பா­டு­களை தொடர நிதி­ய­ளிப்­ப­தற்கும் கடன் வரை­ய­றையை அதி­க­ரிப்­ப­தற்கும் பதி­லீ­டாக பராக் ஒபா­மா­வி­ட­மி­ருந்தும் அவ­ரது ஜன­நா­யக கட்­சியைச் சேர்ந்த உறுப்­பி­னர்­க­ளி­ட­மி­ருந்தும் சலு­கை­களை கோரி­யுள்­ளனர்.

அவர்கள் கடந்த ஆண்டு தேர்­தலில் முக்­கிய விவ­கா­ர­மாக அமைந்த சுகா­தார கவ­னிப்பு சீர்­தி­ருத்த சட்­டத்தை தாம­தப்­ப­டுத்த வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர்.

இந்­நி­லையில் பராக் ஒபாமா புதன்­கி­ழமை வோல் வீதி­யி­லுள்ள ஜேபி மோர்­கன் சேஸ், கோல்ட்மான் சக்ஸ், அமெ­ரிக்க வங்கி ஆகி­யன உள்­ள­டங்­க­லான முக்­கிய வங்­கி­களின் தலை­வர்­களைச் சந்­தித்து கடன் வரையறை மற்றும் ஏனைய பொருளாதார பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

அமெரிக்க நிதி சேவைகள் மன்றத்தின் உறுப்பினர்களான வங்கியாளர்கள், கடன் வரையறைகளை உயர்த்த வலியுறுத்தி பாராளுமன்றத்திற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.


நன்றி வீரகேசரி

 

 

 

 

எகிப்தில் மீண்டும் மோதல்கள்: 50 பேர் பலி

07/10/2013    எகிப்தில் இடம்பெற்ற மோதல்களில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஷி மற்றும் பொலிஸாரிடையே மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

கெயிரோவில் 200 இற்கும் அதிகமான முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இம்மோதல்களில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த 1973 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரேபிய - இஸ்ரேல் யுத்தத்தின் 40 ஆவது ஆண்டு நினைவு தினத்தை கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளின் போதே இம்மோதல் இடம்பெற்றுள்ளது.

 நன்றி வீரகேசரி

 

 

 

 

 

மகளின் மரணத்துக்கு காரணமான சவுதி மதகுருவுக்கு 8 ஆண்டுகள் சிறை

09/10/2013   மகளை சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மதகுருவுக்கு சவுதியில் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 600 கசையடிகளும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2012 ஆம் ஒக்டோபர் மாதம் லாமா அல் - காம்டி என்ற குறித்த சிறுமி தந்தையின் கொடூர தாக்குதலுக்குள்ளாகியிருந்தார்.
அவரது மண்டையோடு நொறுங்கியிருந்துடன், மோசமான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

அச்சிறுமி பல முறை வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருந்தாகவும் தகவல் வெளியாகியிருந்த போதிலும் அதனை அவரது தாயார் அச் சந்தர்ப்பத்தில் மறுத்திருந்தார்.
இச்சம்வம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 
சிறுமியின் கொலைக்கு காரணமான அவரது தந்தை சில மாதங்கள் மட்டும்  சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் சிறுமியின் தாய்க்கு அதாவது தனது மனைவிக்கு குருதிப் பணம் செலுத்த இணங்கியமையால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தமையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

எனினும் இதன் பின்னர் அல் - காம்டியை தண்டிக்க வேண்டுமெனவும் லாமாவின் கொலைக்கு நீதி வேண்டுமெனக் கோரியும் சவுதிக்கு அழுத்தம் அதிகரித்தது.
இந்நிலையில் மறுபடியும் விசாரணைக்கு வந்த இவ் வழக்கில் சிறுமியின் மரணத்திற்கு காரணமான தந்தைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 600 கசையடிகளும் வழங்கப்பட்டுள்ளன.

 நன்றி வீரகேசரி

 

 

 

 

லிபிய பிரதமர் ஆயுததாரிகளால் கடத்தல்

10/10/2013 லிபிய பிரதமர் அலி சீடன் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரிபோலியிலுள்ள ஹோட்டலொன்றில் வைத்தே அவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
அவர் எங்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இச்சம்பவம் லிபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நன்றி வீரகேசரி

 

 

 

 

மலாலாவுக்கு ஐரோப்பிய யூனியன் விருது

malala1பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசஃப்ஸாய்க்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உயரிய விருதான "சக்காரோவ் மனித உரிமை விருது' வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் மார்ட்டின் சுல்ஸ் கூறுகையில், "மலாலா யூசஃப்ஸாய் போன்றவர்களின் கையில்தான் இளைஞர்களின் எதிர்காலம் உள்ளது என்பதை உலகிற்கு தெரிவிப்பதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு விருதை வழங்குவதில் ஐரோப்பிய யூனியன் பெருமை அடைகிறது' என்றார். ஒவ்வொரு ஆண்டும் ஆன்ட்ரேய் சக்காரோவ் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. விருதின் மதிப்பு 50,000 யூரோ (ரூ.39,90,519) ஆகும். அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும். இந்த உரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது என்பதை வலியுறுத்தி போராடிய மலாலா கடந்த ஆண்டு தாலிபான்களால் சுடப்பட்டு மீண்டு வந்தார். இதற்கு முன்னதாக சக்காரோவ் விருதினை தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, முன்னாள் ஐ.நா. பொதுச் செயலர் கோபி அன்னன் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி ஆகியோர் பெற்றுள்ளனர்.
நன்றி தேனீ 


 

No comments: