உலகச் செய்திகள்

மீண்டும் அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு: 13 பேர் பலி

மரதன் ஓட்டம் மூலம் 20 மதாங்களில் உலகை சுற்றிய நபர்

இந்தோனேசிய எரிமலை குமுற ஆரம்பிப்பு

அக்னி 5 ஏவுகணை: மறுபடியும் வெற்றிகரமாக பரிசோதனை

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் நிமிர்த்தப்பட்ட இத்தாலிய கப்பல்
---------------------------------------------------------------------------------------------------------
மீண்டும் அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு: 13 பேர் பலி

அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் அமைந்துள்ள கடற்படை தளமொன்றுக்குள் நுழைந்த நபரொருவர் நேற்று காலை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் பொதுமக்கள், பொலிஸார் என 15 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இத்தாக்குதலை மேற்கொண்ட நபரை அமெரிக்க சிறப்பு ஆயுதப்படை பிரிவினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
குறித்த நபரின் பெயர் அரோன் எலக்ஸிஸ் எனவும் அவர்  முன்னாள் கடற்படை வீரர் என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.




அவர் 4 வருடங்கள் கடற்படையில் பணியாற்றியுள்ளதுடன் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று காரணமாக  பதவியிலிருந்து விலக்கப்பட்டமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட போது அவரிடம் 3 வகையான துப்பாக்கிகள் இருந்துள்ளன.
கடற்படையிலிருந்து விலக்கப்பட்டமையே  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆரம்பத்தில் 3 பேர் இணைந்து தாக்குதல் நடத்தியதாக நம்பப்பட்டபோதிலும் ஒருவரே தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அதிகாரிகள் தொடர்ந்தும் தேடல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.


இந்நிலையில் தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தப்போவதாகவும், கொல்லப்பட்டவர்கள் தேசப்பற்றாளர்கள் எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 








மரதன் ஓட்டம் மூலம் 20 மதாங்களில் உலகை சுற்றிய நபர்

15/09/2013  அவுஸ்திரேலியாவின் டொம் டென்னிஸ் (வயது 52) மரதன் ஓட்டத்தின் மூலம் 20 மாதங்களில் உலகை சுற்றி புதிய சாதனையை படைத்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிட்னியில் தனது ஓட்டத்தை ஆரம்பித்த இவர் 26 ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் தொடர்ந்து ஓடி 5 கண்டங்களையும் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

வீதிகள், மலைகள், பாலைவனங்கள், 1000 அடி உயரமுள்ள பனி படர்ந்த மலைச் சிகரங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் ஓடியே பயணம் செய்துள்ளார்.
இதற்காக அவர் 17 சோடி சப்பாத்துகளை பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி

 

 

 

 

 

இந்தோனேசிய எரிமலை குமுற ஆரம்பிப்பு

16/09/2013    இந்­தோ­னே­சி­யாவின் சுமாத்ரா தீவி­லுள்ள சினபங் எரி­மலை ஞாயிற்­றுக்­கி­ழமை குமுறி புகை­யையும் சாம்­ப­லையும் வெளி­யேற்­றி­யுள்­ளது.
இத­னை­ய­டுத்து அந்த எரி­ம­லையைச் சூழ்ந்து 3 கிலோ­மீற்றர் தூரத்­திற்குள் அமைந்­துள்ள கிரா­மங்­களைச் சேர்ந்த சுமார் 3,700 பேர் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.
மேற்­படி எரி­மலை சுமார் 100 வரு­டங்­க­ளுக்குப் பின் இரண்­டா­வது தட­வை­யாக தற்­போது குமு­றி­யுள்­ளது.
இந்த எரி­மலை இதற்கு முன் 2010 ஆம் ஆண்டில் குமுறியது.  நன்றி வீரகேசரி

 

 

 

 

 

 

அக்னி 5 ஏவுகணை: மறுபடியும் வெற்றிகரமாக பரிசோதனை

15/09/2013   இந்தியா, அகர்தலா அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கக் கூடிய வல்லமை படைத்த அக்னி 5 ஏவுகணையை இன்று 2வது முறையாக வெற்றிகரமாக ஏவி பரிசோதித்துள்ளது.
முற்றிலும் இந்தியத் தொலைநுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏவுகணை இது. இந்த ஏவுகணையானது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையும் கூட. கிட்டத்தட்ட 5000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாகக் கூடிய வல்லமை படைத்தது.
அதாவது சீனாவின் பெரும் பகுதியை இந்த ஏவுகணைத் தாக்கக் கூடிய திறன் கொண்டது.
இந்த ஏவுகணை ஏற்கனவே ஒரு முறை ஏவிப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 2வது முறையாக ஏவப்பட்டது. ஒடிஷாவின் வீலர் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
3 நிலைகளைக் கொண்ட இந்த ஏவுகணையானது, இன்று காலை 8.50 மணிக்கு ஏவிப் பரிசோதிக்கப்பட்டது.
தரையிலிருந்து தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடியது அக்னி 5. இதில் ஒரு டன்னுக்கும் மேலான அணு ஆயுதத்தை ஏற்றி அனுப்பி தாக்கலாம். சோதனையின் முடிவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
அதன் இறுதியில் ஏவுகணை சோதனை வெற்றி என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 19ம் திகதி இந்த ஏவுகணை முதல் முறையாக பரிசோதிக்கப்பட்டது.
அப்போது அது வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
  நன்றி வீரகேசரி

 

 

 

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் நிமிர்த்தப்பட்ட இத்தாலிய கப்பல்

costacanஜிக்லியோ(இத்தாலி): இத்தாலி நாட்டு தீவில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், கடலில் மூழ்கிய, "கோஸ்டா கான்கார்டியா' கப்பல் நேற்று, மீட்கப்பட்டது. இத்தாலி நாட்டின் சொகுசு கப்பலான, "கோஸ்டா கான்கார்டியா' கடந்த ஆண்டு, ஜனவரி 13ம் தேதி, ஜிக்லியோ தீவுக்கருகில், பாறைகளில் மோதி, ஒரு பக்கமாக கவிழ்ந்தது. இந்தக் கப்பல், 950 அடி நீளமுள்ளது. விபத்தின் போது, இந்த கப்பலில், 4,000 பயணிகள் இருந்தனர்; இதில், 32 பேர் உயிரிழந்தனர். ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இக்கப்பல், கடலில் சாய்ந்த நிலையிலேயே இருந்தது. ஏறக்குறைய, 1,15 லட்சம் டன், எடையுள்ள, இந்தக் கப்பலை மீட்கும் பணிக்காக, 5,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஏராளமான கிரேன்கள் உதவியுடன், துறைமுக மேடைக்கு, கப்பலை இழுக்கும் பணி நடந்தது. இந்த மீட்புப் பணி, 19 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, நேற்று அதிகாலை, நான்கு மணிக்கு முடிந்தது. "கப்பலை மீட்கும் பணி முடிவடைந்துவிட்டது. கப்பலில் ஏற்பட்டுள்ள பழுதுகள் நீக்கப்பட்ட பின், விரைவில் இந்த தீவிலிருந்து இக்கப்பல் வெளியேற்றப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நன்றி தேனீ 

 

 

No comments: