13 வது வருடமாக நடைபெறவுள்ள Taste Of India 29.09.2013

.


மெல்பேர்னில் வருடந்தோறும் நடைபெறும் Taste Of India  நிகழ்ச்சி இம்முறை 13வது வருடமாகக் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஸ்ரீமதி.சிவகங்கா சகாதேவன் அவர்களின் நெறியாள்கையில் ஒழுங்கமைக்ப்படும் இந்த நிகழ்ச்சியில் பரத்தாலயா அக்கடமி மாணவ, மாணவியரின் வாய்ப்பாடல், வீணை, மிருதங்கம் என பல்வேறு தரப்பட்ட தரம்மிக்க படைப்புக்கள் நடைபெறவுள்ளன.
இம்முறை விஷேசமாக தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள பிரபல பாடகி, நடிகை, படத்தயாரிப்பாளருமான ஸ்ரீமதி.சைலஜா, மற்றும் பல பங்கு பற்றி சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த வருடம் Taste Of India நிகழ்ச்சியில் மேடை நிகழ்ச்சிகள், பரீட்சைப் பட்டறைகள் என 9 நாடகள் நடைபெறவுள்ளன. 
Darebin Arts & Entertainment Centre
Cnr Bell St & St.Georges Rd, Preston
Taste Of India வின் இரண்டாவது பகுதியாக Darebin Arts & Entertainment Centre. Preston ல் குறும் படத்தயாரிப்புகள், சித்திரம் வரைதல், வாய்ப்பாட்டு, வீணை, பியானோ, நடிப்புக்கலை, கதை சொல்லுதல், பேசுத்திறனை வெளிப்படுத்துதல் ஆகிய துறைகளில் பயிற்சிப் பட்டறைகள் தொடர்ந்து திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெறவுள்ளது. 
மூன்றாவது பகுதியாக எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை 29.09.2013 அன்று பின்னேரம் 3மணிக்கு Finale  என்ற FunTaste  நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாக அறிவித்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக COCKTAIL  என்ற தமிழ் நகைச்சுவை நாடகம் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை, தென்னிந்திய, அவுஸ்திரேலியக் கலைஞர்கள் பங்கு பற்றி சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி பற்றிய மேலதிக விபரங்களுக்கு ஸ்ரீமதி.சிவகங்கா சகாதேவன் அவர்களை 94667423 இல் தொடர்பு கொள்ளவும் No comments: