"திரையில் புகுந்த கதைகள்" #100YearsOfIndianCinema --Kana Praba

.



ஆறு வருஷங்களுக்கு முன்னர் நான்"திரையில் புகுந்த கதைகள் என்ற வானொலிப்படைப்பை வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை முன்னர் என் வலைப்பதிவிலும் கொடுத்திருந்தேன். இந்திய சினிமா நூற்றாண்டின் தொடர் சிறப்புப் பகிர்வுகளில் ஒன்றாக அதை மீளவும் பகிர்கின்றேன். மலையாள சினிமா உலகு போல் அதிகப்படியான நாவல் இலக்கியங்களைத் திரையில், தமிழ்ப்படங்கள் தராவிட்டாலும் சிறந்த பல நாவல்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில இதோ:

1. 47 நாட்கள் திரைப்படம்
மூலக்கதை: 47 நாட்கள்
எழுதியவர்: சிவசங்கரி
இயக்கம்: கே.பாலசந்தர்
நடிப்பு: சிரஞ்சீவி, ஜெயப்பிரதா

2. உதிரிப்பூக்கள்
மூலக்கதை: சிற்றன்னை (படத்தில் பல மாற்றம் செய்யப்பட்டது)
எழுதியவர்: புதுமைப்பித்தன்
இயக்கம்: மகேந்திரன்
நடிப்பு: அஸ்வினி, விஜயன்


3. மறுபக்கம்
மூலக்கதை: உச்சிவெய்யில்
எழுதியவர்: இந்திரா பார்த்தசாரதி
இயக்கம்: கே.எஸ்.சேதுமாதவன்
நடிப்பு: சிவகுமார், ஜெயபாரதி

4.கண்சிவந்தால் மண் சிவக்கும்
மூலக்கதை: குருதிப்புனல்
எழுதியவர்: இந்திரா பார்த்தசாரதி
இயக்கம்: ஸ்ரீதர் ராஜன்
நடிப்பு: சிவகுமார், ஜெயபாரதி

5. முள்ளும் மலரும்
மூலக்கதை: முள்ளும் மலரும்
எழுதியவர்: உமாசந்திரன்
இயக்கம்: மகேந்திரன்
நடிப்பு: ரஜினிகாந்த், ஷோபா

6. இருவர் உள்ளம்
மூலக்கதை: பெண்மனம்
எழுதியவர்: லஷ்மி
இயக்கம்: எல்.வி.பிரசாத்
நடிப்பு: சிவாஜி கணேசன், சரோஜா தேவி

7. இதயவீணை
மூலக்கதை: இதயவீணை
எழுதியவர்: மணியன்
இயக்கம்: கிருஷ்ணன், பஞ்சு
நடிப்பு: எம்.ஜி.ஆர், லஷ்மி

8. சொல்லத்தான் நினைக்கிறேன்
மூலக்கதை: இலவு காத்த கிளி
எழுதியவர்: மணியன்
இயக்கம்: கே.பாலசந்தர்
நடிப்பு: சிவகுமார், ஜெயசித்ரா

10. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
மூலக்கதை: கயல்விழி
எழுதியவர்: அகிலன்
இயக்கம்: பா.நீலகண்டன்
நடிப்பு: எம்.ஜி.ஆர், லதா

11.மோகமுள்
மூலக்கதை: மோகமுள்
எழுதியவர்: தி.ஜானகிராமன்
இயக்கம்: ஞான.ராஜசேகரன்
நடிப்பு: அபிஷேக், நெடுமுடி வேணு

12.ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
மூலக்கதை: ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
எழுதியவர்: ஜெயகாந்தன்
இயக்கம்: பீம்சிங்
நடிப்பு: லஷ்மி, நாகேஷ்

13.சில நேரங்களில் சில மனிதர்கள்
மூலக்கதை: சில நேரங்களில் சில மனிதர்கள்
எழுதியவர்: ஜெயகாந்தன்
இயக்கம்: பீம்சிங்
நடிப்பு: லஷ்மி, ஸ்ரீகாந்த்

14.தில்லானா மோகனாம்பாள்
மூலக்கதை: தில்லானா மோகனாம்பாள் (மூலக்கதையின் ஒருபகுதி)
எழுதியவர்: கொத்தமங்கலம் சுப்பு
இயக்கம்: ஏ.பி.நாகராஜன்
நடிப்பு: சிவாஜிகணேசன், பத்மினி

14.சொல்ல மறந்த கதை
மூலக்கதை: தலைகீழ் விகிதங்கள்
எழுதியவர்: நாஞ்சில் நாடான்
இயக்கம்: தங்கர் பச்சான்
நடிப்பு: சேரன், ரதி

14.விக்ரம்
மூலக்கதை: விக்ரம்
எழுதியவர்: சுஜாதா
நடிப்பு: கமல்ஹாசன், அம்பிகா

15.காயத்ரி
மூலக்கதை: காயத்ரி
எழுதியவர்: சுஜாதா
நடிப்பு: ரஜினிகாந்த், ஸ்ரீதேவி

16. கரையெல்லாம் செண்பகப்பூ
மூலக்கதை: கரையெல்லாம் செண்பகப்பூ
எழுதியவர்: சுஜாதா
நடிப்பு: ப்ரதாப், ஸ்ரீபிரியா

சுஜாதாவின் பூக்குட்டி என்ற சிறுவர் படைப்பும் நிலாக்காலம் என்று வந்தது.

இயக்குனர் வசந்த், சா. கந்தசாமியின் "தக்கையின் மீது நான்கு கண்கள்" என்ற சிறுகதையைக் குறும்படமாகவும் அண்மையில் தந்திருந்தார். பாலுமகேந்திராவின் "கதை நேரம்" சின்னத்திரையில் புகுந்த கதைகளாக இருந்தன.

யாருக்காக அழுதான் ஜெயகாந்தனின் கதை
நடிகர் நாகேஷ்

தவிர கல்கியின், தியாகபூமி, பார்த்திபன் கனவு, ஜெயகாந்தனின் ஊருக்கு நூறு பேர் (இயக்கம் லெனின்)போன்ற நாவல்களும் திரைபடங்களாக வந்தவை.

நண்பர் Jeya Prakash (இகாரஸ் பிரகாஷ் பின்னூட்டத்தின் வழி மேலும் சேர்த்தவை)
கண்ணாமூச்சி - ராஜேந்திரகுமார் ( அதே பெயரில்)

அவன் அவள் அது - சிவசங்கரி (ஒரு சிங்கம் முயலாகிறது )

வணக்கத்துக்குரிய காதலியே - ராஜேந்திரகுமார் ( அதே பெயரில் )

கள்வனின் காதலி - கல்கி - (அதே பெயரில்)

புவனா ஒரு கேள்விக்குரி - மகரிஷி ( அதே பெயரில் )

பத்ரகாளி - மகரிஷி - (அதே பெயரில்)

வட்டத்துக்குள் சதுரம் - மகரிஷி - அதே பெயரில்

மெட்டி - ஜே.மகேந்திரன் - அதே பெயரில்

இன்று நீ நாளை நான் - சி.ஏ.பாலன். (நாவல் நினைவிலில்லை)

மோகம் முப்பது வருஷம் - மணியன் - அதே பெயரில்

தில்லானா மோகனாம்பாள் - கொத்தமங்கலம் சுப்பு - அதே பெயரில்

இது எப்படி இருக்கு - சுஜாதா - (அனிதா இளம் மனைவி )

பொய்முகங்கள் - சுஜாதா - ( காகிதச் சங்கிலிகள் )

பெண்ணுக்கு யார் காவல் - சுஜாதா - (ஜன்னல் மலர்)

பாவை விளக்கு - அகிலன் - (அதே பெயரில் )

சுமைதாங்கி - ராகி ரங்கராஜன் - ( குறுநாவல் பெயர் நினைவிலில்லை)

நந்தா என் நிலா - புஷ்பா தங்கதுரை - ( அதே பெயரில் )

ஒரு வீடு இருவாசல் - அனுராதா ரமணன் ( பெயர் நினைவிலில்லை)

No comments: