எனது அப்பா புலிகளின் ஆரம்பகால உறுப்பினர் -- பொப் இசைப் பாடகி மாயா தெரிவித்துள்ளார்.



நான் அப்படித் தான் இருப்பேன் ! மனம் திறந்துள்ளார் பொப் இசைப் பாடகி
மாயா. இலங்கையில் பிறந்த மாதங்கி  அருட்பிரகாசம் பின்னர் அரசியல் தஞ்சம்கோரி பிரித்தானியா வந்தார். ஈழத் தமிழ் பெண்ணான இவர், பின்னர் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பொப் இசைப் பாடகியாக இருக்கிறார். மாதங்கி என்ற பெயரைச் சுருக்கு எம்.ஐ.ஏ என்று மாற்றிக்கொண்டார். மடோனா போன்ற உலகப் புகழ்மிக்க பாடகிகளுடன் இவர் இணைந்து பல இசை நிகழ்வுகளை நடத்தி இருக்கிறார். சமீபத்தில் இவர் மனம் திறந்து பேசியிருக்கிறார். தான் ஒரு பாடகியா இல்லை அரசியல் வாதியா என்று யாரும் முடிவெடுக்க முடியாது. பாடகி அரசியல் பேசக்கூடாது என்று விதிகள் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடப்பது ஒரு இனப்படுகொலையே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை குறித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டு அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ஒருரே பாடகி இவராகத்தான் இருக்க முடியும். புலிகளை தான் ஆதரிக்கிறேன் ! அவர்கள் விடுதலைப் போராட்ட வீரர்கள் என்று இவர் வெளிப்படையாக கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதனால் உலகில் வாழும் பல சிங்களவர்கள், இவருக்கு எதிராகப் போர்கொடி தூக்கியுள்ளார்கள். இவர் இசை நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கு முன்னார் சிங்களவர்கள் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியும் உள்ளார்கள்.   -   ஈழம்ரஞ்சன்

No comments: