ஞானா - (கூப்பிட்டு) அப்பா . . .. அப்பா.......................
அப்பா - என்ன ஞானா என்ன வேணும?
ஞானா - திருவள்ளுவர் ஒரு குறும்புக்காரன் இல்லையாப்பா.
அப்பா - எங்கடை பழந்தமிழ் அறிஞரிலை கல்லெறிபடாதவர் திருவள்ளுவர் ஒருவர்தான். நீ இப்ப அவரையும் வம்புக்கு இழுக்கிறாயே.
ஞானா— ஐயையோ! திருவள்ளுவரை நான் அப்பிடி நினைப்பேனா அப்பா? அவர் சொல்லிய சில கருத்துகள் குறும்பாய் இருக்கு என்றுதான் சொல்லவாறன்.
அப்பா - திருவள்ளுவரிலை குறும்பு காணுவதும் ஒரு புதுமைதான். நீ விசயத்தைச் சொல்லு.
ஞானா - கோயிலுக்குப் போகாதவை வாழ்க்கையைச் சுகமாய் கழிக்க மாட்டினம். என்று சொல்லுறது குறும்பாய் இல்லையா அப்பா?
அப்பா - திருவள்ளுவர் கோயிலைப் பற்றி ஒன்றும் சொல்லேல்லையே ஞானா.
சுந்தரி - (வந்து) திருவள்ளுவர் கோயிலைப் பற்றிச் சொல்லேல்லைத்தான் அப்பா. ஆனால் கடவுளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் எல்லே.
அப்பா - வாரும். . . .வாரும் சுந்தரி. . .உமக்கு எத்தினை நாள் சொல்லியிருக்கிறன். இந்த ஒட்டுக் கேட்கிற பழக்கம் கூடாதெண்டு.
சுந்தரி - தகப்பனும் மகளும் கதைக்கேக்கை, தாய் இடையிலை வாறது ஒட்டுக் கேக்கிறதே அப்பா?
ஞானா - அப்பாவின்ரை குணம் தெரியும்தானே அம்மா. ஒரு கூரைக்குக் கீழ் இருக்கிற நாங்கள் ஒருத்தரோடை ஒருத்தர் கதைக்கிறதைக் கேட்டால் அது ஒட்டுக் கேக்கிறதில்லை.
அப்பா - தாயும் மகளும் தீர்ப்புக்கூறியாச்சு. இனி நான் பேசிப்பலனில்லை.
சுந்தரி - அது சரி ஞானா? திருவள்ளுவர் கோயிலைப் பற்றி எங்கை சொல்லியிருக்கிறார்?
ஞானா - என்னம்மா குறள் தெரியாதே
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார் - என்று சொல்லியிருக்கிறார் எல்லே.
அப்பா - உந்தக் குறளிலை கோயில் எங்கை இருக்கெண்டு கேக்கிறன்.
சுந்தரி - இறைவன் கோயிலிலை இருக்கிறார் தானே?
அப்பா - அது உம்மடை அகராதியிலை . . .அப்ப தூய்மையான உள்ளங்களிலை இறைவன் இருக்கிறான் எண்டது பொய்யே?
சுந்தரி - இறைவன் கோயிலிலும் இருக்கிறான் தூய்மையான
உள்ளங்களிலும் இருக்கிறான்.
ஞானா - இறைவன் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் அப்பா.
அப்பா - ஓமோம் இறைவன் எங்கும் இருப்பார் எண்டு சொல்லிக்கொண்டு எல்லாத்தையும் கும்பிடுங்கோ ஆனால் இறைவன்ரை அடியையும் விட்டிடுங்கோ முடியையும் விட்டிடுங்கோ.
சுந்தரி- கண்ணாலை காணாத இறைவன்ரை அடியை நாங்கள் எப்பிடி அப்பா கதைக்கிறது. கோயிலுக்குப் போய்த்தான் நாங்கள் மனத்தைப் பண்படுத்த வேணும்.
அப்பா - சரியாய்ச் சொன்னீர் கோயிலுக்குப் போய்த்தான் நாங்கள் மனதைப் பண்படுத்த வேணும். ஆனால் செய்யிறமோ?
ஞானா - நீங்கள் பாக்கேல்லையே அப்பா? கோயில்லை எத்தினைபேர் பயபக்தியாய் கும்பிடுகினம் எண்டு?
அப்பா- பாத்தனான் பாத்தனான், அவர் தோப்புக்கரணம் போடுறார் எண்டு தானும் தோப்புக்கரணம் போடுறது. அவர் அருச்சனை செய்யிறார் எண்டு தானும் அருச்சனை செய்யிறது.. . .
சுந்தரி - அது உலக வழக்கம்தானே அப்பா. . .அப்பிடி எண்டாலும் எங்கடை
ஆக்கள் கோயிலுக்குப் போய் எங்கடை கலை கலாச்சாரத்தையாவது பேணுகினம்தானே.
அப்பா - அது உண்மைதான் கோயிலைச் சாட்டி, கிழமைக்கொரு சங்கீதக் கச்சேரி வைக்கினம், மாதத்துக்கு ஒருமுறை நடனக் கச்சேரி வைக்கினம். . .நாங்களும் போய்ப் பாக்கிறம்.
ஞானா - ஆனால் இறைவன்ரை அடியைக் கண்டபாடில்லை. .. . அதைத்தானே சொல்லவாறியள் என்னப்பா.
அப்பா - வேறை என்ன? உந்தக் களியாட்டங்களுக்கும் இறைவன் அடிக்கும் என்ன தொடர்பிருக்கு?
சுந்தரி - கோயில் எண்டால், பலதும் நடக்கத்தானே வேணும். முந்தின காலத்திலை கோயில்கள்தானே சமுதாயத்துக்கு மத்திய நிலையங்கள். கோயில்லைதான் படிப்பு நடந்தது, கோயில்லைதான் காசு மாத்தினது, கோயில்லைதான் கலையள் வளந்தது.
அப்பா - அது அப்ப. . . .அந்தக் காலத்திலை bank இருந்ததே?
TV இருந்ததோ? Radio இருந்ததோ, Hi Fi system இருந்ததோ?
CD இருந்ததோ Tape Recorder இருந்ததோ.
ஞானா - பெரிய hall இருந்ததோ electricity இருந்ததோ எண்டு கேக்கிறயள.;
அப்பா - உதுகள் ஒண்டும் இருக்கேல்லை, பின்னை, கோயிலை மையமா வைச்சு உந்தக் களியாட்டங்களை நடத்திச்சினம் அந்தக்காலத்து ஆக்கள்.
சுந்தரி - உங்கடை கதையிலை அடுப்பிலை வைச்ச கறியையும் மறந்து போனன் .. . .
. .. . சிறு இசை. . .
ஞானா- அம்மா உங்களுக்கு நல்ல பதில் தந்திருப்பா கறி குழப்பிப் போட்டுது
அப்பா - நீயும் உன்ரை அம்மாவும், உறியிலை கறிவைச்ச காலத்திலை நிக்கிறியள்.
உலகம் விஞ்ஞான வெறியிலை இருக்கிற காலம் இது.
சுந்தரி- (வந்து) சரி கோயில்களிலை உந்தக்களியாட்டங்களை
வைக்காமல் விட்டிடுவம் எண்டு வைப்பம். பிறகு கோயில்லை
என்ன செய்யவேணும் எண்டு சொல்லிறியள்.
அப்பா - அப்பிடி வாரும் சுந்தரி வளத்திலை, கோயில்லை செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு. . . .முதலிலை பின்பற்றிற சமயத்தின்ரை அடிப்படைத் தத்துவத்தைச் சனத்துக்குப் புரியவையுங்கோ
ஞானா -எங்கடை சமயம் bible ஐப்போல குர்ரானைப் போலை
ஒருபுத்தகத்திலை உள்ள சமயமே அப்பா
சுந்தரி -நல்லாய்க் கேட்டாய் பிள்ளை ஞானா
அப்பா -எங்கடை சமயத்திலும், எல்லாரும் ஒண்டைத்தான் சொல்லியிருக்கினம். அன்பு வேணும், மன்னிச்சுப் பழகவேணும் எண்டுதான் எல்லாரும் சொல்லியிருக்கினம் ஆனால் செய்யிறமோ? முதலிலை கோயிலிலை அமைதியா இருக்கப் பழகுங்கோ.
ஞானா - ஆகப் பிழை சொல்லக்கூடாது அப்பா, எங்கடை ஆக்கள் இப்ப எவ்வளவோ முன்னேற்றம்
அப்பா - ஓமோம். . .எல்லாற்றை pocketலும், hand bag லும் ஒவ்வொரு
Mobile Phone. கோயில் மணி அடிக்கிறதில் பார்க்க telephone மணிச் சத்தம் பெரிசாய் கேக்கும். ஒரு கொஞ்ச நேரம் உந்தச் சிலுசிலுப்புகளை விட்டிட்டுப் போங்கோ கோயிலுக்குப் பாப்பம்
சுந்தரி - அவசரம், ஆபத்துக்குத் தானே mobile phone ஐக் கொண்டு போறது. ஆது பெரிய சிலுசிலுப்புமில்லை. கிலுகிலுப்புமில்லை
அப்பா - நீங்கள் எதைத்தான் ஏற்றுக்கொள்ளுவியள், அமைதி வேணும், கடவுள் தியானம் வேணுமெண்டு சொல்ல வந்தால் கேட்பியளே! Sari Safari லை போய்ச் சீலையளை வாங்கிறது, கைநிறைய அடுக்குக் காப்புகளை வாங்கிறது, இதுகளை மற்றவைக்குக் காட்டக் கோயிலுக்குப் போறது.
சுந்தரி - சும்மா விசர்க்கதை கதைக்காதையுங்கோ அப்பா, இரண்டொருத்தர் செய்தாப்போலை முழு சமுதாயத்தையும் குற்றம் சாட்டிறது சரியில்லை.
அப்பா - நான் குற்றஞ்சாட்ட வரேல்லை சுந்தரி, கண்ணாலை கண்டதைச்
சொன்னனான். இறைவனடி சேரக் கோயிலுக்குப் போனால் இதுகள் தேவை இல்லை எண்டுதான் சொல்லுறன்.
ஞானா - இறைவன் அடிசேருதல் என்றால் இறந்து போறது என்றுதானே பொருளப்பா? அதுதான் ஆக்கள் இறைவனடி சேராமல் இருக்கினம்.
அப்பா - இதுகளை யோசிச்சுப் போட்டுத்தான் திருவள்ளுவர் குறும்பு செய்திருக்கிறார் எண்டு சொன்னனியே ஞானா? அவர் அந்தக் கருத்திலை சொல்லேல்லை. அப்பிடி எண்டால் ஒருத்தரும் கோயில் பக்கமே தலைவைச்சுப் படுக்கமாட்டினம்.
சுந்தரி - இறைவன் அறத்தின் தந்தை. அன்பின் பிதா .. .அமைதியின் பொலிவு. ஆருளின் ஒளி, இந்தச் சூழலுக்கு மனிதர் போகவேண்டும் என்ற கருத்திலைதான் வள்ளுவர் இறைவன் அடி சேருதலைச் சொல்லியிருக்கிறார்
ஞானா - அன்பாய் நட, அமைதியைக் கடைப்பிடி, பரபரத்துத்
திரியாதே என்று சொல்லுறதுதான் இறைவன் திருவடி அப்பிடித்தானே?
அப்பா - வேறை என்ன, இப்பிடி மனிசர் நடந்தால் போதும், கோயிலுக்கும் போகவேண்டியதுமில்லை, குளத்திலை குளிக்க வேண்டியதுமில்லை.
சுந்தரி - மனத்திலை மாசில்லாமல் இருந்தால் போதும் எல்லா நன்மையும் பெருகும். உலக வாழ்வு சுகமாய் செல்லும்.
அப்பா - சரி சரி. . . முதலிலை பசித்தவனுக்கு புசிக்க வழி செய்யுங்கோ. பிறகு வள்ளுவற்றை குறும்பைப் பாப்பம்.
ஞானா - அப்பாக்குப் பசித்திட்டிது.
சுந்தரி - பசிவந்தால் பத்தும் பறந்திடும். . . .வாருங்கோ
(இசை)
No comments:
Post a Comment