இலங்கைச் செய்திகள்



உயர் பாதுகாப்பு வலயங்களுக்காக எடுக்கப்பட்ட வீடுகளும் மற்றும் காணிகளும் இராணுவத்தினால் சுற்றுலா நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன

உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழக்கை ஒருதலைப்பட்ச விசாரணைக்கு நியமித்தது யாழ் மாவட்ட நீதிமன்றம்

விரக்தியின் விளிம்பில் இலங்கைத் தமிழர்கள்

கட்டம் இடப்பட்ட செய்தி:

ஒரு தலைமுறையே படிப்பறிவை இழந்து விட்டது

சீதைக்கு இலங்கையில் கோயில் : ம.பி அரசின் திட்டம்

வடக்கில் 85 ஆயிரம் பேர் வாக்களிக்க முடியாது: கபே

பொதுபலசேனா போன்று கடும்போக்குவாதிகள் நாமல்ல, நாங்கள் மலையகத்தவர்கள்: சுந்தானந்த தேரர்
=======================================================================
உயர் பாதுகாப்பு வலயங்களுக்காக எடுக்கப்பட்ட வீடுகளும் மற்றும் காணிகளும் இராணுவத்தினால் சுற்றுலா நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன

- டினுக் கொழம்பகே

 நான் அரசியல் உரிமை வேண்டும் என்பதற்காக போராடவில்லை, நிச்சயமாக நான் தனிநாடு கோரவுமில்லை. எனக்கு வேண்டியதெல்லாம் எனது வீட்டுக்கு திரும்பச்செல்லும் ஒரு வாய்ப்பு மற்றும் என்னுடைய பிள்ளைகள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் எல்லோரும் அவர்களுக்கு சொந்தமாக உள்ள ஓரிடத்தில் வாழ்வதை உறுதி செய்வதுமே ஆகும்”

valikamam-1உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு கீழ் வருகின்றன என்று சமாதானம் சொல்லி யாழ் குடாநாட்டில் பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்திய சர்ச்சைக்குரிய விடயம், ஆயிரக்கணக்கா யாழ்ப்பாணவாசிகளை வீடற்றவர்களாக ஆக்கியிருப்பதோடு மற்றும் முக்கியமான விவசாய நிலங்களை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமலும் செய்துள்ளது.

உள்ளுர் வாசிகளுக்கு மறைவாக, வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினை இராணுவம் சுற்றுலா நோக்கங்களுக்காக அபிவிருத்தி செய்துவருகிறது, நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கும்போது அவர்களின் இழப்பில் இதைச் செய்வது மிகவும் துரதிருஷ்டம்.


குடாநாட்டின் வடபகுதி கடற்கரை முன்பாக கிட்டத்தட்ட 25 சதுரமைல்கள் அளவான நிலப்பரப்பினை உள்ளடக்கியது வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயம், முன்பு தங்கள் சொந்தமாக இருந்த வீடுகள் உள்ள இடத்துக்கு சென்றுவர விரும்பும் உள்ளூவாசிகளை இராணுவம் தடுப்பு அரண்போட்டு தடை செய்துள்ளது.

முன்பு அங்கு குடியிருந்தவர்களில் அநேகர் 1990 இலிருந்தே அந்த பிரதேசத்தை விட்டு இடம் பெயர்ந்து விட்டார்கள். எனினும் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் மற்றும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பி;ன்னரும்கூட அரசாங்கத்தினால் தாங்கள் நியாயமாக நடத்தப்படவில்லை என்று இந்த மக்கள் நினைக்கிறார்கள்.

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான மக்கள் குழுவின் செயலாளரான எஸ்.பரமானந்தன்;, உயர் பாதுகாப்பு வலயத்துக்கு சற்று வெளியே உள்ள தனது உண்மையான காணித்துண்டு சில மாதங்களுக்கு முன்புதான் தனக்கு திரும்ப கையளிக்கப்பட்டது எனக்கூறிய அவர் தொடர்;ந்து கூறுகையில்” எனது காணியை திரும்ப பெற்றதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் அது உயர் பாதுகாப்பு வலயத்துக்கு சற்று வெளியே இருப்பதனால் அதனை திருத்தியமைப்பது இன்னமும் கடினானதாகவே உள்ளது. நிர்மாணப் பணிகளை நிறைவேற்றுவது சம்பந்தமாக அங்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன”என்றார்.

எனினும், தனது குடும்பத்தை சேர்;ந்தவர்கள் மற்றும் நண்பர்கள் என்றுValikamam அநேகம் பேர்கள் இன்னமும் தற்காலிக வீடுகளிலேயே வாழ்கிறார்கள் ,ஏனெனில் அவர்களது வீடுகளும் காணிகளும் உயர் பாதுகாப்பு வலயத்துக்கு உள்ளே இருக்கிறது.” இந்த மக்கள் இடம்பெயர்ந்து 20 வருடங்களுக்கு மேலாகிறது. இவர்களில் பலர் தங்கள் வீடுகளுக்கு திரும்பச் செல்வதற்கான ஒரு சிறிய வாய்ப்பைத் தானும் காணமுடியாதவர்களாக உள்ளார்கள். அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்று (எல்.எல்.ஆர்.சி) வெளியிட்ட அறிக்கையில் இந்த காணிகளை திரும்பக் கையளிக்கும்படி கூறியிருந்தது. இருந்தும் அரசாங்கம் தொடர்ந்தும் இந்தப் பரிந்துரைகளை அலட்சியம் செய்துவருகிறது. அவர்களது சொந்த நிருவாகத்தி;ன் பரிந்துரைகளுக்கே செவிசாய்க்காதவர்கள் எங்கள் குரலை கேட்பார்கள் என்பதற்கு சிறிதளவும் வாய்ப்பு இல்லை”என்று சொன்னார்.

இந்த செயலாளர் தனது காணியை திரும்ப பெறும் அதிர்ஷ்டத்தை கொண்டிருந்த அதேவேளை மற்றும் அநேகம் பேருக்கு அந்த அதிர்ஷ்டம் கிட்டவில்லை. கணேஸ் ரகு என்கிற உள்ளுர் மீனவர், தானோ அல்லது தனது குடும்பத்தினரோ தங்கள் சொந்த வீட்டை திரும்பவும் ஒருபோதும் காணப்போவதில்லை என்பதை ஏற்றுக்கொண்டார். தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு நகருவதற்கு முன்பு பல வருடங்களாக இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களிலேயே இவர் வாழ்;ந்தார். ஒரு புதிய வீட்டை வாங்குவதற்கான பணத்தை ரகுவால் ஒருபோதும் சம்பாதிக்க முடியவில்லை.”எனது காணியும் அதிலிருந்த வீடும் மூன்று தலைமுறையாக எங்கள் குடும்பத்தினருக்கு சொந்தமாக இருந்துவந்தது. முதன்முதலாக அது இராணுவத்தால் எடுக்கப்பட்டபோது யுத்தம் முடிவடைந்ததும் அது எங்களுக்கு திரும்பத் தரப்படும் என்று எங்களிடம் சொல்லப்பட்டது. இப்போது யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் கடந்து விட்டபோதும் எங்கள் காணிகள் எங்களிடம் திரும்ப ஒப்படைக்கப் படவில்லை” என குற்றம் சாட்டினார் ரகு.

அவர் தனது வீட்டை கடைசியாகப் பார்த்து இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டது. அந்த வீட்டை நினைவுகூருவதற்கு ரகுவிடம் ஒரு புகைப்படம் மட்டுமே உள்ளது.” நான் பிறந்து வளர்ந்த வீட்டை மறந்துவிடுவேனோ என எனக்கு அச்சமாக உள்ளது. எனது பிள்ளைகளிடம் அவர்களுக்கும் சொந்தமாக ஒரு வீடு இருந்தது அது தவறான முறையில் எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது என்று நினைவு படுத்துவதற்காக நான் இ;ந்த புகைப்படத்தை எனது பிள்ளைகளிடம் காட்டுவேன்” என்றார்.

தங்களது காணிகள் தங்களிடம் திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்று நீதிமன்றில் விண்ணப்பித்துள்ள நூற்றுக்கணக்கானவர்களில் ரகுவும் ஒருவர்.” நான் அரசியல் உரிமை வேண்டும் என்பதற்காக போராடவில்லை, நிச்சயமாக நான் தனிநாடு கோரவுமில்லை. எனக்கு வேண்டியதெல்லாம் எனது வீட்டுக்கு திரும்பச்செல்லும் ஒரு வாய்ப்பு மற்றும் என்னுடைய பிள்ளைகள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் எல்லோரும் அவர்களுக்கு சொந்தமாக உள்ள ஓரிடத்தில் வாழ்வதை உறுதி செய்வதுமே ஆகும்” என்றார் அவர்.

valikamam-3உயர் பாதுகாப்பு வலயங்களுக்குச் சென்று தங்களது வீடுகளைப் பார்வையிட தங்களுக்கு வழிகள் மறுக்கப்படுவதாக அகேமான குடியிருப்பாளர்கள் புகார் தெரிவித்தார்கள். எனினும் புதிதாக திறக்கப்பட்டுள்ள தள்செவன விடுமுறை விடுதி முன்னாள் ஹாபர் வியு ஹோட்டல்) மற்றைய மாவட்டங்களில் உள்ள உள்நாட்டு சுற்றுலா பயணிகள் இந்த பிரதேசத்துக்கு வருகை தருவதை உறுதிப்படுத்துகிறது.

இந்த விடுதிக்கு செல்வதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீதியின் இருமருங்கிலும் இராணுவ குடியிருப்பி;ன் எச்சங்கள் தென்படுகின்றன, அவை இப்போது நிரந்தர குடியிருப்புகளாக மாற்றப்படப்போவதாக தெரிகிறது. விடுதியை அடைந்தபோது இரு பக்கத்திலும் ஏராளமான இராணுவ ஆட்கள் ஏற்கனவே உள்ள கட்டிடத்தை விரிவு படுத்தும் கடின வேலையில் ஈடுபட்டுள்ளதை காணமுடிந்தது. அந்த விடுதி 15 அறைகளை கொண்டிருந்தது, ரூபா 2,000 முதல் 10,000 வரையான ஓரிரவு தங்கலுக்கான வாடகை வீச்சில் அவை அமைந்திருந்தன. உள்ளுர் வாசிகளின் தகவலின்படி அவர்களுக்கு அங்கு ஒரு அறையை பதிவு செய்வது சாத்தியமற்றதாக உள்ளதாம். எனினும் வரவேற்பறையில் விசாரித்தபோது அடுத்த வாரத்திலிரு;துதான் அறைகள் தயாராக இருக்கும் என்பதை அறிய முடிந்தது.

அதை சுற்றியுள்ள பகுதிகளில் அநேக கட்டிடங்கள் சிதைவடைந்தும் மற்றும் சுற்றிலும் புதர்மண்டி கவனிப்பாரற்ற நிலையில் இன்னமும் யுத்த வடுக்களை சுமந்து கொண்டிருந்தன. எனினும் இராணுவம் உயர் பாதுகாப்பு வலயங்களை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கு காவல் நிலையங்கள் மற்றும் இராணுவ வீரர்களுக்கான குடியிருப்புகள் என்பவற்றை அமைத்து கடும் பிரயத்தனம் மேற்கொள்கிறது. குடாநாட்டில் வசிப்பவர்கள் அரசாங்கம் இந்த நிலங்களை பிடித்து வைத்திருப்பதை கடுமையாக விமர்சிக்கிறார்கள். இந்த பிரதேசத்தில் மிகவும் வளமான மண் உள்ளதால் அவை இல்லாமல் தங்கள் சம்பாதிக்கும் திறன் குறைந்துவிட்டதாக தெரிவிக்கிறார்கள். என். தங்கம் எனும் உள்ளுர் வெங்காய விவசாயி விளக்கமளிக்கையில் “யாழ்ப்பாணம் பயிர்ச்செய்கைக்கு கடிமான ஒரு பூமி. எங்கள் பயிர்களுக்கு நீர் வார்க்க எங்களிடம் ஆறுகளோ அல்லது ஏரிகளோ கிடையாது ,எனவே ஆழமான கிணறுகளை தோண்டுவதற்காக நாங்கள் சிரமப்பட வேண்டியுள்ளது. இதில் சாத்தியமாக உள்ள ஒரே விடயம் யாழ்ப்பாணத்தில் உள்ள வளமான செம்மண் மட்டுமே. இப்போது இந்தப் பிரதேசத்தில் உள்ள மிகவும் வளம் நிறைந்த பகுதிகள் யாவற்றையும் இராணுவம் எடுத்துக் கொண்டுவிட்டது. அவர்கள் எங்களது மிகவும் முக்கியமான பெரும்பகுதி வருமானத்துக்கு வேட்டு வைத்து விட்டார்கள்” என அவர் குற்றம் சுமத்தினார்.

இந்த காணிகளை கையகப்படுத்தலுக்கு எதிராக பெரும் எதிர்ப்பு எழுந்துள்ள போதிலும், உள்ளுர் வாசிகளி;ன் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு சிறிதளவும் முயற்சி செய்யப்படவில்லை.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார் 10/07/2013   நன்றி தேனீ  





 
உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழக்கை ஒருதலைப்பட்ச விசாரணைக்கு நியமித்தது யாழ் மாவட்ட நீதிமன்றம்

Devanantha10/07/2013  உதயன் பத்திரிகையின் பிரசுரிப்பாளரும் உரிமையாளருமான நியூ உதயன் பப்பிகேசன்ஸ் (பிறைவேற்) லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக ரூபாய் 500 மில்லியன் மானநட்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பாக ஒருதலைப்பட்ச விசாரணைக்கு உத்தரவிட்டு  யாழ் மாவட்ட நீதிபதி ஆனந்தராஜா அவர்கள் இன்று தீர்ப்பு வழங்கினார்.

உதயன் பத்திரிகையில் தன்னை அவமானப்படுத்தும் வகையில் பிரசுரிக்கப்பட்ட செய்தி தொடர்பாக அப்பிரசுரமானது தனக்கு பெரும் அவமானத்தையும், மனச்சஞ்சலத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உதயன் பத்திரிகை நிறுவனத்திடம் ரூபாய் 500 மில்லியன் நட்டஈடாக பெற்றுத்தருமாறு கோரும் வழக்கொன்றை யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்குத் தொடர்பான நீதிமன்ற அழைப்பாணைக் கட்டளை எதிராளிக் கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் ஏற்கனவே அறிக்கையிடப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கு கடந்த ஜூன் 28 ஆம்; திகதி நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது அன்றையதினம் குடியியல் நடவடிக்கை சட்டக்கோவையின் பிரமாணங்களுக்கு அமைவாக எதிராளிக் கம்பனியானது நீதிமன்றத்தில் சட்டபூர்வமான முறையில்  பிரதிநிதித்துவப்படுத்தப்படாத காரணத்தினைச் சுட்டிக்காட்டி அவ்வழக்கை வழக்காளி சார்பாக ஒருதலைப்பட்ச விசாரணைக்கு நியமிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பாக ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி யு. அப்துல் நஜீம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இக்கோரிக்கைக்கு தனது எதிர்ப்பை தெரிவிப்பதாக அன்றையதினம் உதயன் பத்திரிகைக்கு எதிரான மேலும் இரு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு வந்திருந்த சட்டத்தரணி கணேசராஜா அவர்கள் மாவட்ட நீதிபதி முன்னிலையில் வாதப்பிரதிவாதம் மேற்கொண்டிருந்தார்.

இது தொடர்பான தனது தீர்ப்பை ஜூலை 09 ஆம் திகதி தெரிவிப்பதாக அறிவித்து அன்றையதினம் மாவட்ட நீதிபதி அவர்கள் அவ்வழக்கை ஒத்திவைத்திருந்தார்.

இவ்வழக்கில் தனது தீர்ப்பை இன்று வழங்கிய மாவட்ட நீதிபதி அவர்கள் வழக்காளி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சிரேஸ்ட சட்டத்தரணியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, இவ்வழக்கை அமைச்சர் சார்பாக ஒருதலைப்பட்ச விசாரணைக்கு நியமித்து தீர்ப்பு வழங்கியதுடன், ஒருதலைப்பட்ச விசாரணையை எதிர்வரும் செப்ரெம்பர் 05 ஆந் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இவ்வழக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி யு. அப்துல் நஜீம் சட்டத்தரணி செலஸ்ரீன் ஸ்ரனிஸ்லொஸ் அவர்களின் அனுசரணையுடன் ஆஜராகின்றார்.
இதனிடையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்பாகவும், அவரது கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தொடர்பாகவும் உதயன் பத்திரிகை வெளியிட்ட பல்வேறு அவதூறான செய்திகள், உண்மைக்குப் புறம்பானதுமான செய்திகள் தொடர்பாக குறித்த பத்திரிகைக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பல வழக்குகளை யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.நன்றி தேனீ


 
இலங்கையில் ‘துக்ளக்’ - 12

விரக்தியின் விளிம்பில் இலங்கைத் தமிழர்கள்

கட்டம் இடப்பட்ட செய்தி:

ஒரு தலைமுறையே படிப்பறிவை இழந்து விட்டது

Jaffnacityஇங்கிருக்கும் சிலர் யாழ்ப்பாணத்தை ‘ஒரு புனித நகரம்’ என்பது போல் பார்க்கிறார்கள். யாழ்ப்பாணம் ஒரு அழகான பசுமையான ஊர்தான். ஆனால், அதற்காக அது உலகின் மாதிரி (Model) நகரமல்ல. அங்கும் குடிகாரர்கள் இருக்கிறார்கள். மஞ்சள் பத்திரிகை படிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆளில்லா வீடுகளின் கதவு, ஜன்னல், ஓடுகளைக் களவாடிக் கொண்ட திருடர்கள் இருக்கிறார்கள். மோசடிப் பேர்வழிகள் இருக்கிறார்கள். மலையகத் தமிழர்களை, தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறி ஏளனமாகப் பார்ப்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். யாழ் மக்களுக்குள்ளேயே ஜாதியைப் பார்த்து அணுகும் குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அங்கும் அரசியல்வாதிகள் மோதிக் கொள்கிறார்கள். ஆகவே, தமிழகத்தில் உள்ள ஒரு நகரம் மாதிரி நல்லவர்களும், கெட்டவர்களும் கலந்து வாழும் நகரம்தான் யாழ்ப்பாணமும்.

யாழ் மக்கள் பெரிய படிப்பாளிகள் என்பது கடந்த கால உண்மை. ஆனால், புலிகள் தொடுத்த போர் காரணமாக ஒரு தலைமுறையே படிப் பறிவை இழந்து நிற்கிறது. புத்தகம் தூக்க வேண்டிய இளம் தலைமுறையைத் துப்பாக்கி தூக்க வைத்து விட்டதால், இன்று அமைதி திரும்பியும் கூட, மாணவர்களுக்குப் பாடம் போதிக்க போதுமான ஆசிரியர்கள் யாழ் பகுதியில் இல்லை. குறிப்பாக இங்கிலீஷ் டீச்சருக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகக் குறிப்பிட்டார் யாழ்ப்பாணத்தில் நான் சந்தித்த பேராசிரியை ஒருவர்.

“தமிழர்களில் ஆங்கில ஆசிரியர்களுக்குக் கடும் தட்டுப்பாடு உள்ளது. சிங்களர்களும் தமிழர் பகுதிக்கு வந்து பணிபுரியத் தைரியமில்லாமல் இருக்கிறார்கள். இதனால் அடுத்த தலைமுறையும் ஆங்கிலத்தில் புலமை பெற வாய்ப்பில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது” என்று வருத்தப்பட்டார் அவர்.

‘இலங்கை தமிழர்களுக்காக இங்கு இவ்வளவு உணர்ச்சிவசப்படும் தமிழ் உணர்வாளர்கள் மலேஷியத் தமிழர்கள் ‘ஹிண்ட்ராஃப்’ என்ற அமைப்பு மூலமாக சம உரிமை கேட்டு அங்கு போராடியபோது இந்தளவு கொதிக்கவில்லை. காரணம், ஹிண்ட்ராஃப் அமைப்பு அங்கு தனிநாடு கேட்கவில்லை. அதை விட முக்கியம் அது அஹிம்சை முறையில் போராடியது. மலேஷிய அரசாங்கத்திற்கு எதிராகத் துப்பாக்கி தூக்கவில்லை. தமிழனின் ‘வீரம்’ அங்கு வெளிப்படவில்லை என்பதால் இவர்கள் கொதிக்கவில்லை.

இன்று அதே ஹிண்ட்ராஃப், ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றுள்ளது. அரசால் தேடப்பட்டு, கைது செய்யப்பட்ட வேதமூர்த்தி இன்று அங்கு அமைச்சராகியுள்ளார். இதன் மூலம் தமிழர்களுக்கு முடிந்த அளவு சலுகைகளைப் பெற்றுத் தரமுடியும் என்று ஹிண்ட்ராஃப் நம்புகிறது. இதற்குப் பெயர் ‘சோரம் போவது’ அல்ல. இதுதான் ராஜதந்திரம். பலத்தைக் காட்டிப் பயமுறுத்தினார்கள். அவர்கள் சமரசத்திற்கு வரும்போது, அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஆனால், இங்குள்ள தமிழ் உணர்வாளர்களுக்குச் சமரசம் தேவை இல்லை. தமிழனின் வீரம் என்னாவது! எங்கோ தமிழன் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும். அந்தத் தமிழனின் வீரத்தை இவர்கள் தங்கள் வெற்றியாகக் கொண்டாடிக் கொள்வார்கள். உயிரிழப்பு, உறவுகள் இழப்பு, அங்க இழப்பு, பொருள் இழப்பு... என்று எல்லா இழப்புகளையும் அங்கிருக்கும் தமிழன் அனுபவித்துக் கொள்வான்.

உயிர் என்பது எல்லோருக்கும் எவ்வளவு முக்கியமான விஷயம்? அதைத் தாண்டி, குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு பெற்றோர் ஆசைப்படுவது எவ்வளவு நியாயமானது? இலங்கையிலிருந்து சாரி சாரியாக அகதிகள் வெளியேறியது இதனால்தானே? ‘நாம் உயிர் பிழைக்க வேண்டும், குழந்தைகளைப் புலிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்’ என்ற இரு காரணங்களுக்காகத்தானே அங்கிருந்த மக்கள் அகதிகளாக வெளியேறினார்கள்? இதுதானே இயல்பான விஷயம்? அப்படி தப்பி வந்தவர்கள் எல்லாம் ‘வீரமில்லாத கோழைகள்’ என்று கூட, சில தமிழ் உணர்வாளர்கள் பட்டம் சூட்டக் கூடும். அந்தளவுக்கு இந்த விஷயத்தில் அவர்கள் மதி மயங்கிப் போயிருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் ‘நிரந்தரக் குடிவாசி’ (பி.ஆர்.) ஆவதற்காக, இன்றைக்கும் கூட ஏராளமான தமிழ் இளைஞர்கள் தலைகீழாக நின்று தவம் புரிகிறார்கள். ஆனால், அப்படி பி.ஆர். கிடைத்த பிறகு, இவர்களுக்கு ஒரு மகன் பிறந்து அவன் 18 வயதை நெருங்கினால் போதும்... ‘சிங்கப்பூரே வேணாம்டா சாமி’ என்று அலறியடித்துக் கொண்டு இந்தியாவுக்குத் திரும்பி வந்து விடுவார்கள். (இப்படித் திரும்பி வந்த பல குடும்பங்களை எனக்குத் தெரியும்.) இதற்குக் காரணம், சிங்கப்பூரில் 18 வயது நிரம்பிய ஆண்கள் எல்லோரும் மூன்று வருடங்கள் கண்டிப்பாக ராணுவத்தில் பயிற்சி எடுக்க வேண்டும். இதற்குப் பயந்துதான் நமது தமிழர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வந்து விடுகிறார்கள். இத்தனைக்கும் சிங்கப்பூருக்குப் போர் அபாயம் என்பது துளியும் இல்லை. ஆனாலும், வீரத்தமிழன், மறத்தமிழன் என்று பட்டம் சூட்டிக் கொள்ளும் தமிழ்க் கூட்டம், மகனை மூன்று வருட ராணுவப் பயிற்சிக்கு அனுப்பப் பயந்து ஊர் திரும்பி விடுகிறது. இதுதான் யதார்த்தம். இதுதான் குழந்தைகள் மீது பாசமுள்ள பல பெற்றோரின் மனோநிலையாக இருக்கும். இதில் தவறு காண முடியாது.

இதே மனநிலைதான் ஈழத்தில் உள்ள பெற்றோருக்கும் இருந்திருக்கும். ‘தனி நாடே வேண்டாம்டா சாமி.... என் பிள்ளைகளை என்னிடம் கொடுத்து விடு’ என்றுதான் புலிகளின் காலில் விழுந்து ஆயிரக்கணக்கான பெற்றோர் அழுது கெஞ்சியிருக்கிறார்கள். இன்றும்கூட, அங்குள்ள பெருவாரியான தமிழர்கள் ‘இழந்தது போதும்’ என்ற விரக்தியில்தான், ‘தனி நாடெல்லாம் வேண்டாம்’ என்று கூறுகிறார்கள். ஆனால், ஓய்வு நேரத்தில் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடும் ஒரு சிலர்தான் ‘ஈழத்தை அடைந்தே தீருவோம். மாவீரன் திரும்பி வருவார்’ என்று கிளறி விடுகிறார்கள். இவர்கள் தூண்டிவிட, தூண்டி விட ரணகளமாவது என்னவோ இலங்கையிலுள்ள அப்பாவித் தமிழர்கள்தான்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த போராட்டங்களைப் பற்றிப் பேசும்போது, இலங்கையின் முக்கிய தமிழ்ப் புள்ளிகள் சிலரே, ‘2009, 2010, 2011, 2012-ல் எல்லாம் தமிழக மாணவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? வேறு வேலையில் மும்முரமாக இருந்தார்களோ? அல்லது நான்கு ஆண்டுகள் தூங்கி விட்டு இன்றைக்குத்தான் தமிழகம் முழிக்கிறதா?’ என்று கிண்டலாகவே கமென்ட் செய்தனர். காரணம், இங்கு நடக்கும் போராட்டங்களைக் காலங்கடந்து, தேவையற்ற நேரத்தில் நடத்தப்படும் போராட்டமாகவே அங்குள்ளவர்கள் பார்க்கிறார்கள்.

இலங்கையில் சிங்களருக்கு இணையாக தமிழரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான், தமிழகத்தில் உள்ள அத்தனை தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும். பிறகெப்படி தமிழக மக்களிடையே தமிழ் உணர்வாளர்கள் (?), தமிழ்த் துரோகிகள் (?) என்ற பாகுபாடு உருவாக்கப்படுகிறது. கீழ்க்கண்ட மூன்று கேள்விகளுக்கான பதில்களில்தான் அந்த முரண்பாடு எழுகிறது.

1. தமிழருக்குத் தேவை சம உரிமையா? தனி நாடா?
2. ராணுவத்துடன் கடும் போர் என்று வந்த பிறகு, அப்பாவித் தமிழர்களைப் புலிகள், தங்களின் அரணாகப் பிடித்து வைத்துக் கொண்டது சரியா, இல்லையா?
3. இத்தனை அப்பாவி உயிர்கள் பறிபோனதற்காகப் பதறும் அதே நேரம், ராஜீவ் காந்தி, அவருடன் 25 பேர், அமிர்தலிங்கம், பத்மனாபா, சிறீ சபாரத்தினம் உள்ளிட்ட புலிகள் நடத்திய ஏராளமான தலைவர்களின் படுபாதகக் கொலைகள், அப்பாவி சிங்கள மக்களின் கொலைகள், போர்ப் பகுதியிலிருந்து தப்பிப் போக நினைத்த அப்பாவித் தமிழர்களின் கொலைகள் குறித்தும் இம்மியளவாவது பதற வேண்டுமா, வேண்டாமா?

இந்த மூன்று கேள்விக்கான பதில்களில்தான் தமிழ் உணர்வாளர்களும் (?), தமிழ்த் துரோகிகளும் (?) அடையாளம் காணப்படுகிறார்கள்.

1. இவ்வளவு ஆயுதங்கள், இவ்வளவு உயிரிழப்புகளைச் சந்தித்த போராட்டம், சம உரிமைக்கான போராட்டமாக அமைந்திருந்தால், எப்போதோ ஜெயித்திருக்கும். விடுதலைப் புலிகளின் பலத்தைப் பார்த்துப் பயந்து, அழிவுகளைப் பார்த்து மிரண்டு, இலங்கை அரசுகள் பலமுறை பேச்சுவார்த்தைக்கு வந்தன. அப்படி வாய்ப்புகள் வந்த போதெல்லாம் தமிழருக்கு வேண்டிய உரிமைகளைக் கேட்டு வெற்றி பெறாமல், தனி நாடு ஒன்றையே திரும்பத் திரும்பக் கேட்டு புலிகள் தோற்றுப் போனார்கள். இன்று சம உரிமையைக் கேட்டுக் கெஞ்ச வேண்டிய நிலைக்கு அங்குள்ள தமிழர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலைக்குக் காரணம் புலிகளா, இல்லையா என்ற கேள்விக்கான பதிலில்தான் தமிழக மக்களுக்குள் முரண்பாடு எழுகிறது.

2. புலிகள் தங்களைப் போர்க் களத்திலிருந்து வெளியேற விடவில்லை என்பதை, நாங்கள் சந்தித்த பெரும்பாலான வன்னிப் பகுதி மக்கள் எங்களிடம் உறுதி செய்தனர். இறுதிக்கட்டப் போரின் போது, புலிகள் தங்களுடன் வைத்திருக்கும் தமிழ் மக்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரி, யாழ்ப்பாணத்தில் பல ஆயிரம் தமிழர்கள் போராட்டமே நடத்தியிருக்கிறார்கள். ‘நாங்கள் அழிந்தாலும் அப்பாவி மக்களோடுதான் அழிவோம்’ என்று பிடிவாதம் பிடித்தனர் புலிகள். அதனால்தான் உயிரிழப்பு அதிகமானது. ராணுவத் தாக்குதல்களுக்குப் பயந்து மக்கள் போர்க்களத்தை விட்டு வெளியேறத் துடிக்கின்றனர். ஆனால், புலிகள் அவர்களை மறிக்கின்றனர். ‘உங்களுக்காகத்தான் போராடுகிறோம். நீங்கள் எங்களோடுதான் இருக்க வேண்டும்’ என்று மிரட்டுகின்றனர். பொதுமக்களோ, ‘எங்களுக்குத் தனி நாடே வேண்டாம். உயிரோடு இருந்தாலே போதும். எங்களை விடு’ என்று கதறுகின்றனர். அந்தத் தருணத்திலாவது அரசியல் தீர்வை நோக்கி புலிகள் நகர்ந்திருக்க வேண்டாமா? என்ற கேள்விக்கான பதிலில்தான் முரண்பாடு எழுகிறது.

இது நியாயமான கேள்விதான் என்று நினைத்தால், அவர்கள் தமிழ்த் துரோகிகள். ‘ராணுவம் ஏன் தாக்குதல் நடத்தியது? ராணுவம் ஏன் புலிகளை ஒடுக்க நினைத்தது?’ என்று கீறல் விழுந்த ஓட்டை ரிக்கார்ட் மாதிரி கேள்வி எழுப்பினால் அவர்கள் தமிழ் உணர்வாளர்கள். நான் ஒரு புலி ஆதரவாளரிடம் கேட்டேன். “இலங்கை கிரிக்கெட் வீரர்களை சென்னையில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று கோருகிறீர்களே? அதில் முத்தையா முரளிதரன் என்ற தமிழனும் பாதிக்கப்படுகிறாரே.... அது தமிழர்களே தமிழருக்குச் செய்யும் துரோகமில்லையா? இங்கு சாமி கும்பிட வரும் சிங்களர்களை மொத்தமாகத் தாக்குகிறார்களே.... அதில் ஓரிரு தமிழர்களும் இருந்தால் அவர்களுக்கும் அடி விழாதா?” அதற்கு அவர் சொன்னார்: “மொத்த சிங்களனும் அழிவான் என்றால் அதற்குச் சில தமிழர்கள் பலியானால் தப்பில்லை.” என்ன ஒரு பதில்? இவர்களுக்கென்றால் ஒரு நியாயம்! இதையே இலங்கை ராணுவம் ‘மொத்த புலிகளும் அழியணும். அதற்குக் கொஞ்சம் சிவிலியன்கள் செத்தாலும் பரவாயில்லை’ என்று நினைக்காதா?

3. ராணுவம் செய்த கொலைகள் எல்லாம் அநியாயம் என்று சொல்லும்போது, புலிகள் செய்த கொலைகள் எல்லாம் நியாயம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்? அப்பாவி சிங்கள மக்களைக் கொன்ற புலிகள், தமிழ் முஸ்லிம்களைக் கொன்ற புலிகள், சக தமிழ்த் தலைவர்கள் அத்தனை பேரையும் கொன்று குவித்த புலிகள், கடைசி நேரம் போர்ப் பகுதியிலிருந்து ராணுவத்திடம் சரணடையச் சென்ற தனது ஈழ மக்களையே மனித வெடிகுண்டை அனுப்பி வெடித்துச் சிதறச் செய்த புலிகளை ‘வீரர்கள்’ என்று கொண்டாடுவதா, இல்லை கொடுங்கோலர்கள் என்று கூறுவதா? என்ற கேள்விக்கான பதிலில்தான் முரண்பாடு எழுகிறது.

இந்த மூன்று கேள்விகளுக்கான பதிலில்தான் ‘தமிழ் உணர்வாளன்’ அல்லது ‘தமிழ்த் துரோகி’ என்ற பட்டத்தை நிர்ணயம் செய்கிறது என்றால், துக்ளக் ஆசிரியரோடு சேர்ந்து தமிழ்த் துரோகி பட்டத்தை ஏற்றுக் கொள்ள நான் உட்பட தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் தயாராகவே இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

இலங்கை அரசாங்கம் முன்பு என்னென்னவோ அக்கிரமங்களை இழைத்திருக்கட்டும். அதை மட்டும் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டு, இன்று எஞ்சியுள்ள மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவதில் அர்த்தமில்லை. இன்றைக்கு அந்த அரசாங்கம் என்ன செய்கிறது? முன்னாள் புலிகளை ராணுவத்தில் சேர்த்துக் கொள்கிறது. துப்பாக்கி சுடுவதில் நிபுணர்களாக உள்ள புலிகளை, ஆசிய மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் துப்பாக்கிச் சுடும் போட்டிக்குத் தயார் செய்து வருகிறது. ராஜபக்ஷவின் ஆளும் கட்சி என்ன செய்கிறது? புலிப் படையின் பிரபல முன்னாள் பெண் தளபதியான தமிழினியைத் தனது கட்சி வேட்பாளராக யாழ்ப்பாணத்தில் நிறுத்த முன் வந்துள்ளது. இதுதான் கால மாற்றம்! உடனே இதற்கு உடன்படும் தமிழர்கள், முன்னாள் புலிகளையெல்லாம் ‘துரோகிகள்’ என்று கூறிப் பழி போடாமல், அங்கு நடப்பது நல்லதாகவே நடக்கட்டும் என்று வாழ்த்துவதுதான் நியாயம்.

காலங்கள் மாறும். முஸ்லிம் பயங்கரவாதத்தை எதிர் கொண்ட இந்தியா, ஒரு அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கிய மாதிரி, தனி நாடு கேட்டுப் பிரதமரைச் சுட்டுக் கொன்ற சீக்கிய சமூகத்தை ஒதுக்காமல், இன்று அந்தச் சமூகத்திலேயே ஒருவரை இந்தியா, பிரதமர் ஆக்கிய மாதிரி, இலங்கையிலும் தரமான, தன்னலமற்ற, எல்லோரையும் வசீகரிக்கிற ஒரு தமிழ்த் தலைவர் உருவானால், சிங்கப்பூர் போல இலங்கையிலும் ஒரு தமிழர் அதிபர் பதவியேற்கும் நாள் வந்தாலும் வரலாம். அதற்கு அவர்களின் அரசியல் சாசனத்தில் தடையில்லை. அது போன்ற ஒரு பாஸிட்டிவ் சிந்தனையோடு ‘வீரம் என்ற பெயரில் நடத்தும் பயங்கரவாதம் முக்கியமில்லை; தமிழ் மக்களின் வாழ்வு முக்கியம்’ என்று முடிவெடுப்பதுதான் உண்மையான மனித நேயம்.

– எஸ்.ஜே. இதயா
    10/07/2013  நன்றி தேனீ






சீதைக்கு இலங்கையில் கோயில் : ம.பி அரசின் திட்டம்

 10 ஜூலை, 2013

இலங்கையில் நுவரெலியா அருகே ராமாயண நாயகி சீதைக்கு ராமன் அக்கினி பரீட்சை செய்த்தாகக் கூறப்படும் இடம் இருப்பதாகவும், அந்த இடத்தில் சீதைக்கு ஒரு கோவில் கட்ட மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்து, இலங்கை அரசின் அனுமதியைப் பெற்றிருப்பதாகவும் செய்திகள் வந்தன.
இந்தக் கோவிலுக்கான திட்ட வரைபடம் கூட தயாராகிவிட்டதாக இன்று பத்திரிகை செய்தி ஒன்று கூறுகிறது
இதற்கான அனுமதி வழங்கப்பட்டுவிட்டதா என்று தெளிவாகத் தெரியாத நிலையில், இது போன்ற ராமாயணத்துடன் தொடர்புள்ளதாகக் கூறப்படும் இலங்கையின் சில இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்த இலங்கையின் சுற்றுலாத்துறை சில ஆண்டுகளுக்கு முன்னர் சில நடவடிக்கைகளை எடுத்தது.

கலைச்செல்வம் பேட்டி

இந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவிருந்த , இலங்கை உல்லாசப் பயணத்துறையின் ஓய்வு பெற்ற பணிப்பாளர் நாயகம் ஸ்ரீநிவாசன் கலைச்செல்வம் தமிழோசையிடம் கருத்து தெரிவிக்கையில், இது போன்ற ராமாயணத்துடன் தொடர்புள்ளதாகக் கருதப்படும் பல இடங்கள் இலங்கை அரசின் சுற்றுலாத்துறையால், இந்தியாவில் பிரபலப்படுத்த முயற்சிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்டன. இதன் பலனாக இந்தியாவிலிருந்து இந்த இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது என்றார்.
ராவணன் சிவபெருமானை வழிபட்டதாகக் கருதப்படும் திருகோனேஸ்வரன் கோயில், சீதை சிறை வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படும் இடம், ஹனுமான் சஞ்சீவி பர்வதத்திலிருந்து, போரில் காயம் பட்ட லக்ஷமணனைக் காப்பாற்ற மூலிகைகளை கொண்டு வந்தபோது , இலங்கையின் ஐந்து இடங்களில் அந்த மூலிகைச் செடிகள் சிந்தியதாகக் கருதப்படும் இடங்கள் ஆகியவை இது போல சுற்றுலாத்துறையால் பிரபலப்படுத்தப்பட்டன என்றார் அவர்.

பேராசிரியர் பத்மநாதன் பேட்டி

இலங்கை அரசு ராமகாதையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இடங்களை இவ்வாறு சுற்றுலாப் பயணிகளைக் கவர பயன்படுத்தும் நிலையில், இலங்கையில் ராமர் மற்றும் சீதை வழிபாடு குறித்து சமூகத்தில் இருக்கும் நிலை குறித்து இலங்கையின் யாழ்ப்பாண மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களில் வரலாற்றுத்துறையின் பேராசிரியராகப் பணியாற்றியவரும். தற்போது கிழக்குப் பல்கலைகழகத்தில் வரலாற்றுத்துறையை நிறுவிக்கொண்டிருப்பவருமான, பேராசிரியர் பத்மநாதன், குறிப்பிடுகையில், பொதுவாக இலங்கையில் ராமர் சீதை வழிபாடு என்பது தமிழர்கள் மத்தியில் வரலாற்று ரீதியில் பெரிய அளவில் இல்லை. பொளத்த சமூகத்திலும் இது இல்லை என்றார்.  நன்றி  BBC  தமிழ்




வடக்கில் 85 ஆயிரம் பேர் வாக்களிக்க முடியாது: கபே

11/07/2013  வடமாகாணத்தில் 85 ஆயிரம் பேருக்கு வாக்களிக்க முடியாது. தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அவர்களிடத்தில் இல்லை என்று  கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமைகள் நிலையமும் கபே அமைப்பும் இணைந்து நேற்று வியாழக்கிழமை நடத்திய தேர்தல் தொடர்பான பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடிய போதே இவ்வாறு கூறினார்.

இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியளித்துள்ளது.

வடமாகாண சபை தேர்தல் திடீரென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் வரமாட்டார்கள். அவர்கள் வராத பட்சத்தில் அந்த பணியினை கபே அமைப்பு நிறைவேற்றும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

சுயாதீனமானதும், நீதியானதுமான தேர்தல் நடைபெறுவதற்காக இந்த பகுதியில் தேர்தல் கண்காணிப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண மக்கள் எதிர்நோக்கம் பிரச்சினை என்னவென்றால் வடமாகாண சபை தேர்தல் நடத்துவதுதான், சுயாதீனமான தேர்தலை நடத்துவதற்கு ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் கபே அமைப்பு வலியுறுத்தி வந்துள்ளது.

வடக்கு மக்களின் குரலை கேட்பதற்கு சர்தோஷம். வடமாகாண தேர்தல் நடத்தக்கூடாது என்று தெற்கிலும் போராட்டங்கள் நடாத்தப்பட்டன. வடக்கில் இருக்கும் மக்களில் வாக்களிக்க முடியாதவர்களும் வாக்களிப்பதற்கு கபே பல்வேறு அழுத்தங்களை செய்து வந்துள்ளது.

வடமாகாண சபை தேர்தலின் பிரதான சவால் என்னவென மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.  வடக்கிலுள்ள 85 ஆயிரம் பேரிடம் தகுதியான அடையாள அட்டைகளோ வாக்களிக்கும் ஆவணங்களோ இல்லை. இந்நிலையில், அவர்கள் வாக்களிக்கும் தகுதியை இழந்துள்ளார்கள்.

தேர்தல் என்பது யாருக்கு? தேர்தல் என்பது வாக்களிப்பது என்பது மட்டுமல்ல. தேர்தல் ஏற்பட்ட சூழல் எவ்வாறு இருக்கின்றது என்பது தான் முக்கியமானதாகும். ஏனைய பிரதேசங்;களில் எவ்வாறு மக்கள் சுதந்திரமாக வாக்களித்தார்களோ அவ்வாறான சூழல் வடக்கிலும் ஏற்படுத்தவேண்டும்.

யாழ். மக்கள் யுத்தத்தினால் பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ளார்கள். அந்த அனுபவங்கள் நிறுத்தப்படவேண்டும். தேர்தல் என்பது மக்கள் தமது தெரிவை சுதந்திரமாக எடுத்துச் சொல்வதேயாகும். இந்நிலையில், தேர்தலில் சம்பந்தப்பட்டவர்கள், போட்டியிடுபவர்கள் என்ன நோக்கத்துடன், தேர்தலில் குதிக்கின்றார்கள் என்பது பற்றிய சவால்கள் மக்களுக்கு தெரியவில்லை என்றார்.

சர்தேச கண்காணிப்பின்றி நல்ல முறையில் தேர்தல் நடைபெறுமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளிக்கையில், தேர்தல்களின் போது பல்வேறு தரப்பினர் பல்வேறு பிரச்சினைகளை முகம்கொடுத்துவருகின்றனர்.
இந்த பிரச்சினைகளிற்கு முகம் கொடுப்பதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும். சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு மக்கள் தமது குரலை வெளிப்படுத்த வேண்டுமென்றும் அவர் கூறினார்.

இதன் போது, தேர்தல் காலங்களில் முறைகேடுகள் இடம்பெறுகின்றன. அந்த முறைகேட்டில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும், அச்சுறுத்தல்களில் இருந்தும் மக்கள் பாதுகாக்கப்படுவார்களா? அவ்வாறான முறைப்பாடுகளின் போது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா என மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது.

பல்வேறு தேர்தல்களின் போது, அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கபே அமைப்பினால் எமது செயற்பாட்டினை திருப்தியாக முன்னெடுத்து வந்துள்ளோம்.

சமூகத்திற்கு சுயாதீன ஊடகம் தேவைப்படுகின்றது. வடக்கில் தேர்தல் ஒரு தூர நோக்கு என அரசியல் வாதிகள் நினைத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் கூட கபே அமைப்பு வடக்கில் தோதலை நடாத்த வேண்டுமென்று மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. மக்களுக்கு சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு,  யார்,  எந்த நோக்கத்திற்கு தேர்தலை குழப்புகின்றார்கள் என்பதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை,தெற்கில் எவ்வாறு மக்கள் சுதந்திரமாக வாக்களித்தார்களோ அந்த நிலையில், யாழ். மற்றும் வடக்கு மாகாணத்திற்கு அமைய வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றதாகவும் அவர் கூறினார்.
தகவல்: தமிழ்மிரர்    நன்றி தேனீ  








பொதுபலசேனா போன்று கடும்போக்குவாதிகள் நாமல்ல, நாங்கள் மலையகத்தவர்கள்: சுந்தானந்த தேரர்

dimpul12/07/2013   பொதுபலசேனா போன்ற கடும் போக்கு எம்மில் கிடையாது. நாம் மலையகத்தவர்கள். அதன் காரணமாகவே நாம் ஒரு முஸ்லிமையும் உடன் அழைத்து வந்துள்ளோம். மலை நாட்டைச் சேர்ந்த நாம் ஒருதாய் மக்களாக வாழ்கிறோம். 30 வருட சோகத்தை விட்டும் மீண்டுள்ள இவ் வேளை சிலர் அதனைக் குழப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என திம்புல் கும்புரேவி சுந்தானந்த ஹிமி தேரர் தெரிவித்தார்.

கலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த அமைப்பு ஒன்று இன்று கண்டியிலுள்ள இந்திய உதவித் தூதுவராலயத்திற்கு விஜயம் செய்து புத்தகயாவில் மகாபோதி தாக்கப்பட்டமை தொடர்பாக தமது கண்டனத்தை தெரிவித்தது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே திம்புல் கும்புரேவி சுந்தானந்த ஹிமி தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்ததாவது-உலகில் பௌத்தர்கள் எங்கு வாழ்தாலும் அவர்களது ஆரம்ப இடம் இந்தியாவாகும். அந்த அடிப்படையில் நான் இலங்கையில் வாழ்ந்தாலும் பௌத்தன் என்ற வகையில் எனது பூர்வீகம் இந்தியாவாகும். எனவே எனது நாட்டை நான் தரிசிக்க வேண்டும்.

அதே போல் உலக பௌத்தர்கள் அனைவரும் தரிசிக்க வேண்டும். எதிர்வரும் ஆகஸ்ட் 4ம் திகதிமுதல் 19ம் திகதி வரை நான் புத்தகயாவை தரிசிக்க உள்ளேன். எனவே எனக்கும் எனது குழுவிற்கும் இந்திய அரசு பூரண பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் எமக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளையும் நிறைவு செய்துதர வேண்டும். இந்தியா என்றால் அது பௌத்தர்களுக்கு தடை செய்யப்பட்ட நாடு. அங்கு இலங்கை பௌத்த துறவிகள் விசேடமாகச் செல்லக் கூடாது என்ற கருத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

எனவே புத்தகயாவிற்கு நான் சென்று அங்கிருந்து உலக பௌத்த மக்களுக்கு ஒரு பிரகடணத்தை செய்யவுள்ளேன்.

அதாவது அச்சமின்றி பௌத்தர்கள் இந்தியாவிற்கு வரலாம் என்ற செய்தியை வழங்க உள்ளேன். எனவே எனக்கும் எனது குழுவிற்கும் இலங்கையிலுள்ள இந்தியத் தூதுவராலயத்தினுடாக தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

பொதுபலசேனா போன்ற கடும் போக்கு எம்மில் கிடையாது. நாம் மலையகத்தவர்கள் (உடரட்ட). அதன் காரணமாகவே நாம் ஒரு முஸ்லிமையும் உடன் அழைத்து வந்துள்ளோம். மலை நாட்டைச் சேர்ந்த நாம் ஒருதாய் மக்களாக வாழ்கிறோம். 30 வருட சோகத்தை விட்டும் மீண்டுள்ள இவ் வேளை சிலர் அதனைக் குழப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

நாம் அப்படியானவர்கள் அல்ல. நாம் தொடர்ந்து சகோதர வாஞ்சையோடு வாழ்வதற்காக ஒரு நல்ல செய்தியை இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவர வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

இதன்போது இந்திய உதவித் தூதுவர் சார்பாக இரண்டாம் செயலாளர் வினோத் பாஸி மகஜர் ஒன்றையும் பெற்றுக் கொண்டுபதில் அளித்தார்.

நடந்த சம்பவம் குறித்து நாம் கவலையடைகிறோம். இது இந்தியாவுடன் தொடர்புடையதல்ல. ஏதோ ஒருபயங்கரவாத அமைப்பின் வேலையாகும். அதனை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க இந்திய அரசு முன் வந்துள்ளது.

தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அது புத்தகயா விற்கு மட்டுமல்ல. இந்தியாவிலுள்ள சகல மத ஸ்தலங்களுக்குமாகும். குறிப்பாக இந்து மதவழி பாட்டுத்தலங்களுக்குக் கூட பாதுகாப்பு வழங்கவுள்ளோம் என்றார்.

அதன் போது இடையில் குறிக்கிட்டதேரர் அப்படியாயின் ஏற்கனவே புலனாய்வுத் துறை இது பற்றித் தெரிந்திருந்தும் ஏன் பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனக் கேட்டார். அதன்போது இரண்டாம் செயலாளர் தெரிவித்ததாவது-

புத்தகயா நிர்வாகம் எவ்வித பாதுகாப்பும் பற்றி இந்திய அரசுடனோ அல்லது பீகார் மாநிலத்து அரசுடனோ எதுவும் கோரவில்லை. அப்படிகோரி இருந்தால் நாம் அதனைச் செய்திருப்போம். அத்துடன் ஊடகங்கள் தெரிவிக்கும் கருத்துப் படியாரையும் பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்ட ஒருதாக்குதலாக இது இல்லை. அதேநேரம் ஒரு எச்சரிக்கையை விடுக்கும் விதமாகவே தாக்குதல் இருந்துள்ளதால் யாரும் பீதி கொள்ளத் தேவையில்லை என்றார்.
நன்றி தேனீ 
 

No comments: