வெனிசூலாவில் தஞ்சமடைகிறார் ஸ்னோடென்
புத்தகயா தொடர் குண்டுவெடிப்பு: கனேடிய அரசாங்கம் கண்டனம்
புத்தகாயா குண்டுவெடிப்பு: தகவல் கொடுத்தல் இலட்சாதிபதியாகலாம்!
தீவிரவாதிகளின் பிள்ளைகளுக்கும் கல்வி வேண்டும்: ஐ.நா. இளைஞர் அமர்வில் மலாலா உருக்கம்========================================================================
வெனிசூலாவில் தஞ்சமடைகிறார் ஸ்னோடென்
அமெரிக்காவின்
ரகசிய உளவு வேலைகளை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடென் வெனிசூலாவில்
தஞ்சமடைய இருக்கிறார். அவர் ரஷியாவின் சிரிமெத்யோவ் விமான நிலையத்தில் ஜூன்
23-ம் தேதி முதல் பதுங்கியுள்ளார். இந்நிலையில், அரசியல் அடைக்கலம் தரத்
தயாராக இருப்பதாக வெனிசூலா விடுத்த அழைப்பை ஸ்னோடென் ஏற்றுக் கொண்டார் என்ற
தகவலை ரஷியா வெளியுறவு விவகாரங்களுக்கான குழு தெரிவித்துள்ளது. முன்னதாக
ஸ்னோடன், கியூபாவில் தஞ்சமடைவார் என்று செய்தி வெளியானது. எனினும் ஸ்னோடெனை
எவ்வாறு வெனிசூலா தொடர்பு கொண்டது என்ற தகவலும், அவர்களது அழைப்பை எப்படி
ஸ்னோடென் ஏற்றுக் கொண்டார் என்பது குறித்த விவரங்கள் தெரியவரவில்லை.
ஸ்னோடெனுக்கு எந்த நாடும் அடைக்கலம் தரக் கூடாது என்று அமெரிக்கா
கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.நன்றி தேனீ
புத்தகயா தொடர் குண்டுவெடிப்பு: கனேடிய அரசாங்கம் கண்டனம்
11 யூலை 2013
கனடா இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
பௌத்த மதத்தின் முக்கிய தலம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத
தாக்குதல் தொடர்பில் வருத்தமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் மத சுதந்திரம் தொடர்பான தூதுவர் என்றூவ் பென்னட் மற்றும் இந்தியாவுக்கான தற்காலிக உயர்ஸ்தானிகர் ஜிம் நிக்கேல் ஆகியோர் இந்த அறிக்கையை கூட்டாக வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட்டு, தாக்குதல்தாரிகளை சட்டத்துக்கு முன்னால் நிறுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வின்
10/07/2013 புத்தகயாவில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தகவல்
தெரிவிப்பவர்களுக்கு 10 இலட்ச ரூபாய் ( இந்திய நாணயம்) சன்மானம்
வழங்கப்படும் என அந்நாட்டு தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.
கனடாவின் மத சுதந்திரம் தொடர்பான தூதுவர் என்றூவ் பென்னட் மற்றும் இந்தியாவுக்கான தற்காலிக உயர்ஸ்தானிகர் ஜிம் நிக்கேல் ஆகியோர் இந்த அறிக்கையை கூட்டாக வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட்டு, தாக்குதல்தாரிகளை சட்டத்துக்கு முன்னால் நிறுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வின்
புத்தகாயா குண்டுவெடிப்பு: தகவல் கொடுத்தல் இலட்சாதிபதியாகலாம்!
10/07/2013 புத்தகயாவில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தகவல்
தெரிவிப்பவர்களுக்கு 10 இலட்ச ரூபாய் ( இந்திய நாணயம்) சன்மானம்
வழங்கப்படும் என அந்நாட்டு தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.
பீகார் மாநிலம், பாட்னா அருகில் உள்ள புத்தகயா மகாபோதி கோயிலில் கடந்த 7ஆம் தேதி அதிகாலையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.
இதில் 5 புத்த துறவிகள் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் உலகம்
முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கிய இச் சம்பவம் பற்றி தேசிய புலனாய்வு
அமைப்பு (என்.ஐ.ஏ) விசாரணை நடத்தி வருகிறது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இந்தியன் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தகவல் கொடுப்போரின் பெயர்கள் இரகசியமாக வைக்கப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
தீவிரவாதிகளின் பிள்ளைகளுக்கும் கல்வி வேண்டும்: ஐ.நா. இளைஞர் அமர்வில் மலாலா உருக்கம்
பாகிஸ்தானின்
குழந்தைப் போராளியான மலாலா யூசுப்சாய், பெண் கல்விக்கு ஆதரவாக குரல்
கொடுத்தால் தலிபான்களின் தாக்குதலுக்கு ஆனார். மரணப் படுக்கையில் இருந்து
மறுபிறவி எடுத்துள்ள அவர் இங்கிலாந்தில் தங்கியிருக்கிறார்.
அவரது 16-வது பிறந்தநாள் ‘மலாலா தினமாக’ உலகம் முழுவதும் வரும் நேற்றும் இன்றும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஐ.நா. சார்பில் நியூயார்க்கில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இளைஞர் அமர்வில் மலாலா உரையாற்றினார். அவர் பேசியதாவது:- என் மீது அன்பு வைத்து நான் விரைவாக குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் பிரார்த்தனைகள் என்னை வலுப்படுத்தியுள்ளது. மலாலா தினம் எனது நாள் அல்ல. தங்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு பெண்ணின், ஒவ்வொரு சிறுவனின், ஒவ்வொரு சிறுமியின் நாளாகும். தீவிரவாதிகளால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களால் தாக்கப்பட்டதில் நானும் ஒருத்தி. இன்று நான் எனக்காக பேசவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்காக பேசுகிறேன். அவர்களின் தோட்டாக்கள் நம் வாயை அடைக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. மாறாக ஆயிரக்கணக்கான குரல்கள் ஒலித்தன. நம்பிக்கையின்மை இறந்து, வலிமையும் தைரியமும் பிறந்தது. நான் அதே மலாலாவாகத் தான் இருக்கிறேன். எனது நோக்கங்கள், நம்பிக்கை, கனவு எல்லாம் ஒன்றுதான். நான் எந்த தனி நபருக்கும் எதிராக பேசவில்லை. தலிபான்களுக்கு எதிராக தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்திலும் பேசவில்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்க உரிமை உள்ளது என்றுதான் பேச வந்திருக்கிறேன். என்னைத் தாக்கிய தலிபான்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகளின் மகன்களுக்கும், மகள்களுக்கும் கல்வி வேண்டும். இந்த இரக்க உணர்வை முகமது நபிகள், இயேசு கிறிஸ்து, புத்தர், மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா மற்றும் முகமது அலி ஜின்னாவிடம் இருந்து படித்திருக்கிறேன். மகாத்மா காந்தி, அன்னை தெரசா மற்றும் எனது தாய் தந்தையிடம் கற்றுக்கொண்டதும் இதுதான். அமைதி மற்றும் மற்றவர்களை நேசிக்கவேண்டும் என்று எனது ஆன்மா சொல்கிறது. கத்தியைவிட பேனா வலிமையானது என்பார்கள். அது உண்மைதான். அனைத்து அரசுகளும் இலவச மற்றும் கட்டாய கல்வியை உறுதி செய்ய வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான போராடுவதுடன் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும். அனைத்து சமுதாயத்தினரும் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும். சாதி, சமயம், பிரிவு, நிறம் அல்லது பாலினம் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதை நிராகரிக்க வேண்டும். பெண்கள் அமைதியாகவும் சமத்துவத்துடனும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். அமைதி மற்றும் கல்விக்கான நமது பயணம் தொடரும். வறுமை மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். இதற்கு கல்வி மட்டும்தான் ஒரே தீர்வு. இவ்வாறு அவர் பேசினார். |
|
நன்றி தேனீ |
No comments:
Post a Comment