skip to main |
skip to sidebar
13/06/2013 அவுஸ்திரேலியாவுக்கு
அப்பால் கடந்த வாரம் மூழ்கிய படகில் இலங்கையர் எவரும் காணப்படவில்லை என்று
அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து கிடைத்த அறிக்கை தெரிவிப்பதாக
வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
படகு ஒன்று கடந்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு அப்பால் கவிழ்ந்த சம்பவம்
தொடர்பில் இலங்கை அரசாங்கம், அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து முழுமையான
அறிக்கை ஒன்றை கேட்டிருந்தது.
அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், அவுஸ்திரேலிய சுங்க
மற்றும் கரையோர பாதுகாப்புப் பிரிவினருடன் தொடர்பில் இருப்பதாகவும்
வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
இருப்பினும் குறித்த படகில் இலங்கையர் எவராவது இருந்தனர் என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதி செய்யவில்லை.