.
செல்லுலோயிட்- மலையாள திரைப்பட தந்தை
- ஜெ.சி டானியேல் என்ற தமிழர்!

- ஜெ.சி டானியேல் என்ற தமிழர்!

2012 கேரளா அரசின் ஒன்றல்ல இரண்டல்ல ஏழு திரைப்பட விருதுகளை தட்டி சென்ற படம் செல்லுலோயிட். சினிமாவால் பணம், நிம்மதி இழந்து தன் கடைசி நாட்களில் மருத்தவம் பார்க்க கூட வழியற்று உற்றோர், உறவினரால் மற்றும் சமூகத்தால் புறம்தள்ளப்பட்டு 1975 ல் அனாதமாக இறந்த மருத்துவரான ஒரு தமிழனின் உண்மை கதையே இது. அவர் தான் மலையாள திரையுலகின் தந்தையான ஒரு தமிழர்! மேலும் புலைய ஜாதியில் பிறந்து ஒரு மலையாளப் பெண் கலையின் மேல் கொண்ட விருப்பத்தால் சினிமாவில் மேல் ஜாதி பெண்ணாக நடித்தார் என்று விரட்டியடிக்கப்பட்டு; பின்பு தமிழகத்தில் தலைமறைவாக ஒரு தமிழச்சியாக வாழ்ந்து மரித்த ரோசி என்ற பெண்ணின் கதையும் சொல்லும் படம் இது!
ஜீவநாயகம் சிரில் டானியேல் கிருஸ்தவ பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை லண்டனில் சென்று கல்வி கற்று வந்தவர். டானியேலுக்கு களரிபயிற்று என்ற கலை

முதலில் இப்படத்தில் நடிக்க ஆங்கில நடிகையை தேற்வு செய்கின்றார். ஆனால் ஆங்கில நடிகையின் அகம்பாவ நடவடிக்கைகளை கண்டு மனம் கசந்த டானியேல் கேரளாவில்

திருச்சியில் பணியாற்றும் வேளையில் தமிழக நடிகர் பி.யூ சின்னப்பாவின் அறிமுகம் கிடைக்க மறுபடியும் சினிமா ஆசையுடம் திரையுலகம் நோக்கி செல்கின்றார். இந்த முறை சின்னப்பா கோஷ்டிகளால் ஏமாற்றப்பட்டு இருந்து சொச்ச கொஞ்சம் பணவும் இழந்து தனிமையிலும் மன உளச்சலிலும் வீழ்ந்து விடுகிறார்.
பக்கவாதம், பார்வைக்குறைபாடு என பல இன்னலுக்கு உள்ளாகி கொடும் வறுமையில் தன் மருத்துவ செலவுக்கு கூட வழியற்று கேரள அரசிடம் ஓய்வூதியம் கேட்டு நிற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றார். அக்காலயளவில் அரசு பணியில் மாவட்ட ஆட்சி தலைவராக இருந்தவரும் பிரபல மலையாள எழுத்தாளருமான மலையாற்றூர் ராமகிருஷ்ணன் இவர் தமிழர் மட்டுமல்ல தமிழகத்தில் வசித்ததால் தமிழக அரசை அணுக பரிந்துரைக்கின்றார். மேலும் படம் எடுத்தார் என்ற சாற்றுக்குறிய படச்சுருளை(செல்லுலோய்ட்) சமர்ப்பிக்க கட்டளையிடுகின்றார். ஆனால் இப்படச்சுருள் தன் இளம் வயது மகன் ஹாரி நாடாரால் அழிக்கப்பட்டது இவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீரத்திற்க்கு பெரிதும் தடையாகின்றது. மட்டுமல்ல ஜெ.சி டானியேல் தான் முதல் மலையாளப்படம் எடுத்தார் என்ற அங்கீகாரம் மறுக்கப்பட்டு மாடேன் தியேட்டர் உரிமையாளர் டி ஆர்.சுந்தரம் தயாரிப்பில் வந்த 'பாலன்' என்ற பேசும் படமே முதல் மலையாளப் படம் என்ற அங்கீகாரம் பெற்றிருந்தது. இப்படியாக பிராமண அரசு அதிகாரியான மலையாற்றூர் ராமகிருஷ்ணன், கேரளா முதல்வராக இருந்த கெ.கருணாகரன் போன்றோரில் காழ்ப்புணர்ச்சியால் உதவிகளும் பெறாது தீராத மனத் துயருடன் 1975ல் உலக வாழ்கைக்கு விடைகொடுக்கின்றார். இவருடைய காதல் மனைவி ஜானட் தன் கணவரின் எல்லா செயலுக்கு ஆசைகளுக்கும் பக்கபலமாக இருந்ததுடன் இவருடைய கடைசி நாட்களில் மிகவும் கருதலாக நோக்கினார் என்று இவருடைய பேத்திகள் சான்றுபகிர்கின்றனர்.விவாதம்!

இப்படியாக ஒரு பெரும் கலைஞர் ஜாதி, மொழி, அரசியல் காழ்புணர்ச்சியால் அவமதிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டு வாழ்ந்து மறைந்ததை சொல்லும் படமே இது. திரைப்பட பத்திரிக்கையாளரான சேலங்காட் கோபாலகிருஷ்ணனின் 'டானியல் வாழ்கை சரிதம்' மற்றும் வினு அபிராஹாமின் ‘நஷ்ட நாயகி’ என்ற புத்தகவும் ஆதாரமாக கொண்டு இப்படம் உருவாக்கியுள்ளனர். கேரளா அரசின் ஏழு விருதுகள் கிடைத்திருந்தாலும் கேரளா காங்கிரஸ் அரசியல்வாதிகளையும், மலையாற்றூர் ராமகிருஷ்ணன் ரசிகர்களையும் கோபம் கொள்ள வைத்த படம் இது. பல விவாதங்கள் எழுந்தாலும் உயிருள்ள போது ஒடுக்கப்பட்ட ஒரு கலைஞனின் வாழ்கை ஒரு சரிதமாக பதியப்படுவதும் அவரை கொண்டாட நினைத்த மலையாள இயக்குனர் கமலுக்கும் டானியேலாக நடித்திருக்கும் பிருத்விக்கும் வாழ்த்துக்கள். இசை எம்.ஜெயசந்திரன் இயக்கத்தில் வந்துள்ளது.


இப்படியாக சமூகத்தில் பெரும் பிம்பங்களாக இருந்து மறைந்தவர்களின் மறுபக்கத்தையும் விரல் நீட்டியுள்ளது. இதே போன்ற படங்கள் தமிழிலும் உருவாகவேண்டும் அவயை ரசிகர்கள் அரசியலால் எதிர்க்காது அதே போல் ரசிக்கவும் ஏற்கவும் முன்வர வேண்டும். 1992 துவங்கி கேரளா கலை- மற்றும் கலாச்சாரத்துறை ஜெ.சி டானியேல் பெயரில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை கொடுத்து வருகின்றது என்பது குறிப்பிடதக்கது.
நன்றி:nakkheeran.in