புகலிடக் கோரிக்கையாளர்களின் உடல்களை அப்படியே விட்டது அரசு – பாலா விக்னேஸ்வரன் கண்டனம்

.
கிறிஸ்மஸ் தீவுக்க அருகில் கடந்த வாரம் 55 புகலிடக்கோரிக்கையாளர்களுடன் சென்ற படகு கவிழ்ந்ததாக ஊகிக்கப்பட்டது. இதனை தேடும் பணியில் வான் மற்றும் கடல் மார்க்கமாக தேடிக் கண்டுப்பிடிக்கும் முகமாக மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்துள்ளது.
இதன் போது சடலங்களை மீட்காது விட்ட செயலுக்கு அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் நிறைவேற்று அதிகாரி பாலா விக்னேஸ்வரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Fullscreen capture 12062013 100038 PM
இவ் சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கையில் மேற்படி சமுத்திரப் பரப்பில் உயிர்காப்பு மேலங்கிகளுடன் பதின்மூன்று சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அவையை மீட்காது உயிர் பிழைத்தோரைத் தேடும் பணியில் தாங்கள் கண்ணும் கருத்துமாக இருப்பதாக கூறினார்.
இது குறித்து பிரதமர் கிலாட் நிருபர்களிடம் தெரிவிக்கையில்;-
எம்மால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் மிகவும் கடினமானதொன்றாக இருப்பினும் அது செயற்பாட்டு ரீதியானதொன்றே எனவும் எல்லைப் புற காவல் படையினரின் தெளிவுறுத்தலின் பிரகாரம் அவர்கள எப்போதும் மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கே முன்னுரிமையளிப்பது வழக்கமெனவும் எல்லைப்புற காவல்படையினர் எந்தப் பணியிலும் எதற்காக முதன்மை பெருகின்றதென்பதை அனைவரும் புரிந்து கொள்வார்களென தான் நினைப்பதாகவும் குறிப்பிட்டார்.


அரசின் இத்தகைய நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள அவுஸ்திரேலிய தமிழ் சமூகத்தினர் இந்து சமுத்திரத்தில் உள்ள கிறிஸ்மஸ் தீவின் கடற்பரப்பில் அவுஸ்திரேலியர்களின் சடலங்கள் இவ்வாறு காணப்பட்டிருந்தால் அது கோபமூட்டுவதாகவே அமைந்திருக்கும் என சுட்டிக்காட்டினர். அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் நிறைவேற்று அதிகாரி பாலா விக்னேஸ்வரன் இது குறித்து ஏபிசி வானொலிச் சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியின் போது இவ்வாறு பாதிக்கப்பட்டோர் அவுஸ்திரேலியர்களாக இருந்தால் நான் கோபமடைவேன் என்பதே நிச்சயமெனவும் அவுஸ்திரேலியாவில் உள்ள அனைவரும் மிகவும் ஏமாற்றமடைவோரெனவும் இதே போன்ற சம்பவத்தில் அவுஸ்திரேலியர்களை நாம் இவ்வாறு நடத்தியிருப்போமென தான் நினைக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இத்தகைய விமர்சனம் குறித்து பிரதமர் கிலாட்டிடம் வினவப்பட்ட போது மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அவுஸ்திரேலியா எப்போதும் முன்னுரிமையளிக்குமெனப் பதிலளித்த அவர் கடைசியாக நிகழ்ந்த படகு கவிழ்ந்தமை குறித்து விபரிக்கையில் கணிசமான உயிரிழப்புக்கள் கொண்ட இன்னுமொரு அச்சமூட்டும் துன்பகரமான சம்பவமொன்றை தாங்கள் பார்த்துள்ளதாகவும் ஆபத்துமிக்க கடற்பயணத்தில் உங்களினதும் உங்கள் பிள்ளைகளினதும் உயிர்களை வீணாக இழக்க வேண்டாமென்ற செய்தியை தாங்கள் மிகவும் தெளிவான முறையில் விடுத்திருந்ததாகவும் இச் சம்பவத்தின் போது ஏற்பட்ட மனித உயிரிழப்புக்கள் ஒவ்வொருவரினதும் இதயங்களை நொறுக்கித் தள்ளுவதாகவும் தெரிவித்தார்.
-செய்தி ஆசிரியர்

Nantri: tamilaustralian