வீட்டுக்கு எதிரான பந்தயம்
-தயான் ஜயதிலகா
13வது
திருத்தத்தை பாதுகாக்கத் தவறியதில் ரி.என்.ஏக்கு உள்ள பங்கும்
குறைவானதல்ல, அதற்கு கட்டுப்படாமல் இருந்ததுடன், அதற்கு அப்பால்
செல்லக்கூடிய வகையில் சந்திரிகா குமாரதுங்க கொண்டுவந்த சிக்கலான
முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மறுத்தது, மற்றும் பெரும்பாலும் அதைத்தாண்டிய
சொல்லாட்சியின் பக்கம் நகர்ந்தது (சாத்தியமான அரசியல் புரட்சி பற்றிய
குற்றச்சாட்டுகளுக்கு நம்பகத்தன்மை வழங்கியது) போன்றவை அது இழைத்துள்ள
தவறுகளாகும்.
சிங்களவர்கள்
மற்றும் தமிழர்கள் என்ற வகையில், அல்லது இன்னமும் துல்லியமாகச்
சொல்வதானால் சிங்கள மற்றும் தமிழ் தேசியவாதிகள் ஆகியோர்கள் டெல்பி கோவில்
கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்களான “அளவுக்கதிகமாக
எதுவுமில்லை” என்கிற வாசகங்களுக்கான நல்ல காரணங்கள் உள்ளன என்பதை இறுதியில்
கற்றுக்கொள்வார்கள், அதேவேளை புத்தர் தனது நடுப்பாதை தத்துவங்களிலும்
மற்றும் தங்க மனிதரான அறிஞர் அரிஸ்டாட்டிலும் இதை வலியுறுத்தியுள்ளார்கள்.
பொதுநலவாய
உச்சிமாநாட்டுக்கு ஆறு மாதங்களுக்கு குறைவான காலம் உள்ளதுக்கு முன்பே
அரசாங்கம் சில நசுக்கல் முயற்சிகளில் இறங்கியிருந்தது. முதலாவது 13வது
திருத்தத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவது, மற்றது ஊடகங்களை அடக்கி
வைப்பது என்பதாகும்.
பொதுநலவாய
நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு நடைபெறும்போது தண்டனை விலக்குடன்
மேற்கொள்ளப்படும் இந்த நகர்வுகள் பொதுநலவாயத்தில் ஒரு பலகீனத்தை
எதிரொலிக்கலாம், இது ஆசியான் நாடுகளால் தங்கள் ஆட்சி நடைமுறைகளில்
மாற்றங்களை செய்ய இயலவில்லை என்கிற கடின முரண்பாட்டை ஏற்படுத்துவதுடன்
மியான்மாருக்கு தலைமைப்பதவியை ஒப்படைப்பதற்கான விலையை
செலுத்தக்கூடியதாகவும் இருக்கிறது என்றாகிவிடும்.
அதன்
கருத்து பொதுநலவாயம் கொழும்பு அல்லது அம்பாந்தோட்டையை புறக்கணிக்க
வேண்டும் என்பதில்லை. பொதுநலவாயத்தின் தரங்கள் மற்றும் விதிமுறைகள் என்பன
இணக்கப்பாடு மற்றும் நம்பகத்தன்மை கொண்டனவாகவும் ஸ்ரீலங்கா உச்சிமாநாட்டின்
தலைமைப் பணிப் பொறுப்பினை ஏற்று நிர்வகிப்பதற்கு முன்னதாகவே
சரிபார்க்கப்படவும் வேண்டும். இதில் விசேடமாக ஊடகங்களின் சுதந்திரம், மதச்
சிறுபான்மையினரை உபசரித்தல், யுத்தத்தின் பின்னான அரசியல் நல்லிணக்கம்,
ஜனநாயக ஆட்சிமுறை மற்றும் சட்ட ஆட்சி என்பனவற்றை பின்பற்றுதல் என்பன
அடங்கும்.
எதிர்கட்சிகள்,
மாறுபட்ட கருத்துள்ள புத்திஜீவிகள் 13ம் திருத்தத்தின்மீது
மேற்கொள்ளப்படும் நகர்வுகளின் பரிமாணத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
மாகாணங்கள் இணைய முடியாதபடி ஒழுங்கு படுத்துதல், எனது கருத்தின்படி
குறைகாணமுடியாத ஒன்றாகவே உள்ளது, ஏனெனில் உச்ச நீதிமன்றம் மாகாணங்களை
பிரித்ததோடு, அரசியலமைப்பு திருத்தம் நடைமுறைக்கு ஏற்றபடி மட்டுமல்லாது
சட்டத்திற்கு உட்பட்ட ஓரளவு அரசியல் அந்தஸ்தினை அதற்கு வழங்கியுள்ளது.
எப்படியாயினும்
வடக்கு மற்றும் கிழக்கினை இணைப்பது 1986ன் நடுப்பகுதியில் நடைபெற்ற
அரசியல் கட்சிகளின் மாநாட்டின் (ஐதேக மற்றும் ஜனநாயக இடதுசாரி) முற்போக்கான
கருத்தொருமிப்பின் ஒரு பகுதியாக இருக்கவில்லை, மற்றும் 13வது
திருத்தத்தின் பிரதான ஆதரவாளர்களாக இருந்தவர்களாலும், முக்கியமாக ஜே.ஆர்.
ஜெயவர்தனா மற்றும் விஜய குமாரதுங்க என்பவர்களால் அது விமர்சனத்துக்கு
உள்ளாகியது.
இதில்
ஆபத்தானது என்னவென்றால் புதிய சட்ட விதிப்படி, மாகாணசபைகளுக்கு பரவலாக்கப்
பட்டுள்ள அல்லது பகிரப்பட்டுள்ள அதிகாரம் மற்றும் நடவடிக்கைகளில்
தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு சட்டவாக்கத்துக்கும் எல்லா சபைகளும்
இசைவு தெரிவிக்கவேண்டும் என்பதற்கு மாறாக பெரும்பான்மையான சபைகள் ஆதரவு
தெரிவித்தால் போதுமானது என்றுள்ளதுதான்.
இது
பழைய பனிப்போர் காலத்தில் வந்த சொற்றொடர் போல, சூழ்ச்சியான தந்திரங்கள்
மூலம் அதிகாரப்பரவலாக்கத்தை விலக்கி விடுவதாகும், இது குறிப்பிடுவது
திட்டமிட்ட முறையில் ஜனநாயக அதிகாரத்தை கூறு போடுவதை - அதாவது ஒரே அடியில்
வெட்டுவதற்கு மாறாக ஆயிரம் வெட்டுக்ளை ஏற்படுத்தி அதைச் சாகடிப்பதை.
மிகவும்
முக்கியமாக அது தனிப்பட்ட முறையில் தமிழர்களை மட்டும் பாதிக்காது, ஐ.தே.க,
ஸ்ரீ.ல.சு.க, அல்லது ஜேவிபி ஆகிய எந்தவொரு ஜனநாயக எதிர்க்கட்சியும்,
எதிர்காலத்தில்; எப்போதாவது ஒரு மாகாணசபை நிருவாகத்துக்கு தெரிவு
செய்யப்பட்டால் அதற்கு இந்த சட்டமூலம் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும்,
அதேவேளை தற்சமயம் பெரும்பாலான மாகாணசபைகள் தற்போது ஆட்சியிலுள்ள
அரசாங்கத்தின் நிருவாகத்திலேயே உள்ளன.
உண்மையில்
ஊடகங்களுக்கும் மற்றும் மாகாணசபைகளுக்கும் எதிரான இந்த நகர்வுகள் ஐ.தே.க
மற்றும் ரி.என்.ஏ விட்ட தவறுகள் காரணமாகவே மேற்கொள்ளப்படுவதற்கு
சாத்தியமாகியுள்ளன. மிகவும் மோசமான காலங்களிலும் மற்றும் சிறிமாவோ
பண்டாரநாயக்க, மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்தனா போன்றோரின் கடினமான
நிருவாகங்களுக்கும் எதிராக அந்த நாளில் இருந்த பாராளுமன்ற எதிர்க்கட்சிகள்
வெறும் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை களத்தில் கொண்டிருந்த சமயத்தில்கூட,
ஜே.ஆர். பிரேமதாஸ, மற்றும் அனுர பண்டாரநாயக்கா போன்றவர்களின் தலைமையின்
கீழ் சுறுசுறுப்பான பல்வேறுவகையான எதிர்ப்புகளை மேற்கொண்டிருந்தன.
ஆட்சியின்
தேரோட்டத்தை தடுப்பதில் அவர்கள் தோல்வியுற்றிருந்தாலும்கூட அப்போதிருந்த
மோசமான அரசாங்கங்களுக்கு எதிராக அவர்கள் ஒருபோதும் மௌனமாக இருந்ததில்லை,
மற்றும் உயர் அரசியல் மற்றும் சமூக விலையை கொடுக்க தவறியதுமில்லை. ஐ.தே.க
பாராளுமன்ற அங்கத்தவர்கள் தங்களது தற்போதைய தலைவரை தக்க வைத்துக் கொண்டு ,
அவரது தலைமையின்கீழ் இருப்பதையே தேர்ந்தெடுத்துள்ளார்கள்,
தற்போதைய
ஆட்சியினர் ஊடகங்களையும் மற்றும் அதிகாரப் பரவலாக்கத்தையும் கொலை செய்ய
மேற்கொள்ளும் முயற்சியில் அரசியல் ரீதியாகவும் மற்றும் தர்க்கரீதியாகவும்
இவர்களுக்கும் பங்குண்டு. ஐதேக தலைவருடைய திறமையும் உணர்ச்சியும் மிக்க
தந்தையார், பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிராக அச்சுறுத்தலை
எதிர்கொண்டபோது, உலகளாவிய வலைப்பின்னல்களுக்கு உட்படாமல் ஊடகங்கள் பலம்
குன்றியிருந்த காலத்தில்கூட, மின்னல் வேகத்தில் திறமையாக பிரச்சாரம்
மேற்கொண்டு சூழ்ச்சிகளை முறியடித்தார்.
13வது
திருத்தத்தை பாதுகாக்கத் தவறியதில் ரி.என்.ஏக்கு உள்ள பங்கும்
குறைவானதல்ல, அதற்கு கட்டுப்படாமல் இருந்ததுடன், அதற்கு அப்பால்
செல்லக்கூடிய வகையில் சந்திரிகா குமாரதுங்க கொண்டுவந்த சிக்கலான
முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மறுத்தது, மற்றும் பெரும்பாலும் அதைத்தாண்டிய
சொல்லாட்சியின் பக்கம் நகர்ந்தது (சாத்தியமான அரசியல் புரட்சி பற்றிய
குற்றச்சாட்டுகளுக்கு நம்பகத்தன்மை வழங்கியது) போன்றவை அது இழைத்துள்ள
தவறுகளாகும்.
தமிழ்
தேசியவாதம் முன்னால் உள்ள வேளையில் சாதாரணமாக அதிலிருந்து வெளியேற
ரி.என்.ஏ உட்பட யாராலும் முடியாது. அது தொடர்ந்து எல்.ரீ.ரீ.ஈ மீது பந்தயம்
வைக்கும்போது அது வீட்டுக்கு எதிராகவும் பந்தயம் வைத்து தோற்றுப்போனது.
அதற்காக அது செலுத்தவேண்டிய விலைதான் தற்பொழுது நடைபெறும் அதிகாரப்
பரவலாக்கத்தின் மீதான குறைப்பு.
இதே
உண்மைதான் வடக்கில் உள்ள இராணுவ பிரசன்னம் பற்றிய கேள்விக்கான பதிலிலும்
உள்ளது. அதேவேளை எங்கள் இராணுவத்தின் பங்களிப்பு மற்றும் இராணுவ தடத்தின்
குறைப்பு என்பனவற்றிற்கு ஒரு மீள்மதிப்பாய்வு தேவை என்பதையும் நான்
நிச்சயமாக வலியுறுத்துகிறேன்,
எனது
வரலாறு மற்றும் உளவியல் யதார்த்த உணர்வுகள் முன்னைய காலங்களையும், அதற்கு
முற்திய காலங்களிலும் ஒரு இராணுவம் நீண்ட காலமாக கடுமையாகப் போரிட்டு ஒரு
பிரதேசத்துக்கு விடுதலை அளிப்பதற்காக அல்லது அதைக் கைப்பற்றுவதற்காக
அளவுக்கதிகமாக இரத்தம் சிந்தியதும் எனது நினைவுக்கு வருகிறது,
அது
தனது இரத்தத்தையும் எலும்புகளையும் அந்த மண்ணுக்கு உரமாக்கியுள்ளபோது,
குறைந்த பட்சம் அசலாக அங்கு வாழந்த மக்களில் பெரும்பகுதியினர் எதிரிகளுக்கு
ஆதரவு வழங்கியோ அல்லது அவர்களை தீவிரமாகவோ எதிர்க்காதபோது, தாங்கள்
கைப்பற்றிய பிரதேசத்தின்மீது சட்டப+ர்வமான ஒரு தார்மீக உரிமை தங்களுக்கு
இருப்பதாக அது கருதுகிறது.
ஒருவர்
எழுச்சியை ஒரு விளையாட்டாக விளையாடக்கூடாது என மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ்
எச்சரித்துள்ளனர். உண்மையில் புலிகளும் அவர்களது பலமான ஆதரவு வலையமைப்பும்
ஒரு விளையாட்டை நடத்தவில்லை, ஆனால் அதில் தெளிவாக இருப்பது, தோல்வியின்
விலை மிக அதிகம், மற்றும் நீங்கள் ஆரம்பித்த புள்ளிக்கு கீழே உங்கள் பாதையை
நீங்கள் சுருட்டிக் கொள்ளலாம். ஆகவே 75 விகிதமான மக்கள் தொகையை
இழுக்கக்கூடிய பலமுள்ள ஒரு எதிரியுடன் போராடி வெற்றி பெறலாம் என ஒருபோதும்
நம்பிக்கை கொள்ளலாகாது.
அப்படிச
செய்யும் ஒருவர்மீது உங்கள் பந்தயம் முழுவதையும் பணயம் வைக்கவும்கூடாது,
எப்படியோ தமிழ் தேசியம் அதனைச் செய்துவிட்டது. எப்போதும் அப்படியான ஒன்றின்
கீழிருந்து வெளியேற வேண்டும் மற்றும் அப்படியான வெறிபிடித்த
சாகசக்காரர்களுக்கும் மற்றும் உங்களுக்கும் இடையே ஒரு தூரத்தை கடைப்பிடிக்க
வேண்டும், இதைத்தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள்
முன்னணி என்பன ஒரு முன்னணிக் கண்டனவடிவில் இப்போதும் செய்யவேண்டிய தேவையாக
உள்ளது.
ரி.என்.ஏ
ஆனது எல்.எல்.ஆர்.சி அறிக்கையின் சகல விடயங்களைப்பற்றியும் ஆராயும்,
100க்கும் அதிகமான பக்கங்களை கொண்ட ஆவணத்தின் 70க்கும் மேற்பட்ட
பக்கங்களில் அதைப்பற்றி விமர்சிக்கும் ஒரு எழுத்தாளராக இருக்குமாயின்
நிச்சயமாக அதன் சொந்த அரசியல் கட்சியின் அநேக தலைவர்களை புலிகள் கொலை
செய்ததைப்பற்றி எழுதுவதற்கு மேலும் சில பக்கங்களை அதனால் ஒதுக்கியிருக்க
முடியும்.
இதன்படி
ரி.என்.ஏ யினால் தனக்கு முன்னால் மேஜைமேல் வைக்கப்பட்ட தீர்வுகளில் தான்
உறுதிப்படுத்தவும் மற்றும் ஆதரவு தெரிவிக்கவும் தவறிய திட்டங்களுக்கு
திரும்பவும் செல்லமுடியும் என எதிர்பார்க்க முடியாது. புலிகளின்
பயங்கரவாதத்தின்போது அவர்களை கண்டிக்கத் தவறிய அவர்களின் அலட்சியத்தையும்
அதுவும் இப்போதுகூட புலிகளின் பயங்கரவாதத்தை கண்டிக்கத் தவறும் அவர்களின்
போக்கையும் நாட்டின் ஏனைய பகுதியினர் ஒதுக்கித் தள்ளி விடுவார்கள் என
ரி.என்.ஏயினால் எதிர்பார்க்கவும் முடியாது,
அல்லாமலும்
போர் இப்போது முடிந்துவிட்டது என்பதன் அடிப்படையில் போருக்கு முன்பிருந்த
நிலைக்கு வடக்கு திரும்பும் என அவர்களால் எதிர்பார்க்க முடியுமா, ஏனெனில்
ஒரு யுத்தமானது ஒருவரின் இழப்பைத் தவிர,அநேகமாக வேறு எதனாலும் செய்யமுடியாத
அளவிற்கு விடயங்களை முற்றாக மாற்றி அமைக்கும். ஒருபக்கம் தோல்வி
அடைந்ததும,; அதாவது 1987ல்(ஒப்பந்தம்), 1990 (பிரேமதாஸாவுடனான
பேச்சுக்கள்), 1995(சி.பி.கே) அல்லது 2005ல் யுத்தம் செய்வது
நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். தமிழ் தேசியவாதிகள் அதற்கு ஆதரவு
தெரிவித்தார்கள் அல்லது அந்தப் பக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
தமிழ்
தேசியவாதம் மற்றும் சர்வதேச சமூகம் என்பன கௌதமாலா மற்றும் ஆர்ஜன்ரீனா
என்பனவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும், அங்கு றியொஸ் மொண்ட்
மற்றும் ஜோர்ஜ் விடேலா என்பவர்கள் ஆயுள்பரியந்தம் சிறை வைக்கப்பட்டார்கள்.
நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உண்மையில் அணுகத்தக்கவையே, ஆனால்
உள்நாட்டு நடவடிக்கைகள் மற்றும் இயக்கவியல் என்பனவற்றின் விளைவுகளை
பொறுத்து மாத்திரமே அது நடைபெறலாம், அதற்கு பல தசாப்தங்கள் எடுக்கும்
,மற்றும்ஆயுதப்படைகள் ஒரு நிறுவனமாக அமைவதற்கு சமூகத்தின் ஒப்புதலை
சம்பாதிக்க வேண்டும்.
ஆட்சிக்கு
எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதற்கு சரியான பகுப்பாய்வு அவசியப்படுகிறது.
ஆட்சியின் கண்களுக்கு உள்ளுர் மற்றும் உலகளாவிய அளவில் இடம்பெறும்
விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் என்பன இசைவான சதிவலையின் ஒரு அங்கமாகவே
பார்க்கப்படும். ஆட்சி பற்றிய விமர்சனங்களுக்கு, இந்த முறை ராஜபக்ஸக்களால்
அந்த நிறுவனங்கள் வேறுபாடுகள்; மற்றும் இணக்கமான அரசியல் சதி முயற்சிகள்
என்பனவற்றுக்கு சற்றும் குறைவற்றதாகவே நோக்கப்படும்.
ஒரு
சதி முயற்சிக் கொள்கை மற்றொன்றுக்கு தகுதியானதாகிறது, மற்றும் ஒரு வகையான
அரசியல் அறிவுப்பிறழ்ச்சி மற்றொன்றின் பிரதிவிம்பமாகிறது. இரு
முகாம்களிலும் முரண்பாடுகளின் அங்கீகாரத்துக்கு குறைவு நிலவுகிறது.
யதார்த்தத்தை பகுப்பாய்வு செய்யும் இயங்கியல் பகுப்பாய்வு முற்றாகக்
காணப்படவில்லை. அதேவேளை காள் கௌற்ஸ்க்கி ஒருங்கிணைந்த தீவிர
ஏகாதிபத்தியம் பற்றி பேசுகிறார், லெனின் பற்றிப் பேசும்போது. உள்ளக
ஏகாதிபத்திய முரண்பாடுகளை ஆழமாக புரிந்து கொள்ளக்கூடியதாகவும் மற்றும்
அதன்படி மாற்றங்களை வகுக்ககூடியதாகவும் உள்ளது. இதேபோல நிக்கொஸ்
பவுலன்ட்டாஸ் வெளித்தோற்றத்தில் ஒற்றை மற்றும் சர்வாதிகார அமைப்புகளை தடை
செய்யக்கூடியதான, ஆழத்திலுள்ள முரண்பாடுகள் மற்றும் கோஷ்டி மோதல்கள்,
கொள்கை வேறுபாடுகள் என்பனவற்றை இதனூடாகக் காண்கிறார்.
அரசாங்கங்கள்
மற்றும் ஆட்சிகள் தாங்கள் முன்னணி நிலைகளால் தாக்குதலுக்கு உள்ளாகும்
கோட்டை கொத்தளங்களைவிட போட்டியிடத்தக்க நிலப்பகுதியாக இருக்கவேண்டும்
என்று அவர் வலியுறுத்துகிறார். மற்றெந்த புத்திஜீவிகளைக் காட்டிலும் அவரது
பணி போர்த்துக்கல், ஸ்பெயின், மற்றும் கிறீசிலிருந்து பிலிப்பைன்ஸ் வரை,
சோவியத் ஒன்றியத்திலிருந்து இந்தோனசியவரையும் மற்றும் அநேக லத்தீன்
அமெரிக்க நாடுகளிலும் இருந்த அசைந்து கொடுக்காத சர்வாதிகார அமைப்புகளை
திறந்துவிட அல்லது ஒதுக்கித் தள்ளக்கூடிய பாரிய ஜனநாயக அலைகளை
கணிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் அறிவார்ந்த உதவி புரிந்தது.
செய்யப்படும்
அல்லது செய்ய முயற்சிக்கும் வழிகளினால் ஸ்ரீலங்காவின் ஆட்சி
சுத்திகரிக்கப்படப் போவதில்லை. அமெரிக்காவை தளமாக கொண்ட ஒரு பரப்புரைக்
குழவினால் அமைதிக்கான தமிழர்கள் என்கிற தலைப்பில் ஸ்ரீலங்கா பற்றி மிகவும்
கடினமாக எழுதப்பட்ட கட்டுரை ஒன்று சிஎன்என் னின் பரீத் சக்கிரியாவின்
வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் புதிய
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சூசன் றைஸ் வரப்போகிறார், அதேவேளை தாராண்மைவாத
தலையீடுகளுக்காக சிலுவைப்போர் நடத்தும் சமந்தா பவர் ஸ்ரீலங்கா மீது போதிய
அக்கறை எடுத்து ஒரு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ள இவர்தான்
ஐநா பாதுகாப்புச் சபையில் அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமனம்
பெறப்போகிறார். அடுத்த வருடம் இந்தியாவில் பொதுத்தேர்தல்கள் நடைபெற உள்ளன.
தமிழ் தேசியவாதிகள் செய்ததைபோல, சிங்கள தேசியவாதிகளும் வீட்டுக்கு எதிராக
பந்தயம் வைக்கிறார்கள், அது வெள்ளை மாளிகையா அல்லது ராஷ்டிரபதிபவனா என்பது
தெரியவில்லை.
வெளியக
யதார்த்தங்கள் ஒடுங்கும் வரைக்கும் உள்ளக முரண்பாடுகள், முறிவுப்
புள்ளிகள் உருகும் வரைக்கும் அளவுக்கு மீறி உறுதியாக்கப்பட்டவையாகவே
தோன்றும் எனினும் விளையாட்டின் முடிவில் பிரச்சினையானது, ஒரு தேர்தல்
நிறுவனத்திலேயே தங்கியுள்ளது . அப்போது கடைசி வரி “ அது ஒரு முட்டாள்தனமான
தேர்தல்” என்றுதான் இருக்கும்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
நன்றி தேனீ
கொள்ளுப்பிட்டி பூமாரி அம்மன் ஆலயத்தை அகற்றும் உத்தரவு அதிர்ச்சியளிக்கின்றது -டி.எம். சுவாமிநாதன் எம்.பி.
14/06/2013 கொள்ளுப்பிட்டி ஸ்ரீ
பூமாரி அம்மன் ஆலயத்தை உடனடியாக அப்புறப்படுத்துமாறு நகர அபிவிருத்தி
அதிகார சபை உத்தரவிட்டமை பேரதிர்ச்சி தரும் விடயமாகும் என்று கொழும்பு
பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் முகாமைத்துவ தர்ம கர்த்தாவும் எம்.பி.யுமான
டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஓர்
ஆலயம் அமைக்கப்படுவதற்கு முன்னர் அத்திபாரம் இடப்படும். இதற்கு
பிள்ளையார், வைரவர் வழிபாடு செய்யப்படுகிறது. ஆலயம் அமைக்கப்பட்டதன்
பின்னர் சிவாகம முறைக்கமைய விக்கிரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு
மஹாகும்பாபிஷேகம் நடைபெற்று பூசைகள் ஆரம்பமாகின்றன.
பூசைகள்
நடைபெறும் ஆலயங்களில் திருத்தங்கள் அல்லது வேறு காரணங்களுக்காக ஆலயத்தில்
மாற்றங்கள் செய்யப்படுவதாயின் ஆகம முறைக்கு அமைய விக்கிரங்கள் பாலஸ்தாபனம்
செய்யப்பட்ட பால ஆலயத்தில் (சிறு ஆலயம்) வைக்கப்பட்டு பூசைகள் செய்வதே
முறையானது. நாம் விரும்பும் வேளையில் உடனே விக்கிரகத்தை எடுப்பது தேவ
குற்றம் தேவ சாபம் ஏற்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
கொழும்பு,
கொள்ளுப்பிட்டி தர்மாலோக மாவத்தையில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக பூசை
நடைபெற்று வரும் தொழிலாளர்களுக்கே அமைக்கப்பட்ட தேனி பூமாரி அம்மன் ஆலயத்தை
உடனே அப்புறப்படுத்த நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டுள்ளமையைக்
கேள்வியுற்று அதிர்ச்சியும் கவலையும் கொண்டேன்.
நகர அபிவிருத்தி
அதிகார சபையில் உள்ளவர்கள் எம்மைப் போல் மனிதர்கள் அவர்களுக்கும்
வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. அந்த வழிபாட்டுத் தலங்களை உடனே எடு எனக் கூற
முடியுமா? கடவுள் இல்லையா? இந்துக்கோவில் என்பதால் உடனே எடு எனக் கூறுவது
இந்து தர்மத்திற்கு முரணானது. ஏனைய மதங்களுக்கும் அப்படியே நகர அபிவிருத்தி
புணர்நிர்மானம் எம் எல்லோருக்கும் தேவையே நாம் எல்லோருமே கொழும்பு நகர
வாசிகளே. ஆனால் வணக்கத் தலங்கள் உடனே அப்புறப்படுத்து எனக் கூற முடியாது.
1930 ஆம் ஆண்டு முதல் பூஜிக்கப்பட்ட புனித பூமி காலா காலத்திற்கு அமைய
மாற்றங்கள் ஏற்படலாம். அதற்கும் விதி பிரமாணங்கள் உண்டு. எனவே ஓர் இடத்தில்
இருந்து இன்னோர் இடத்துக்கு அப்புறப்படுத்தப்படுவதாயின் சிவாகம முறைக்கமைய
கீழ்வரும் முறைகளை அனுசரிக்க வேண்டும்.
1.புதிய ஆலயம் அமைக்க உகந்த உரிய இடத்தை தெரிவு செய்ய வேண்டும்.
2.அதிலே ஆலய அமைப்பு முறைகளுக்கு அமைய ஆலயம் அமைக்கப்பட வேண்டும்.
3.தற்பொழுது உள்ள ஆலயம் பாலஸ்தாபனஞ் செய்யப்பட்டு பாலஸ்தாபன கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும்.
4.புதிய
ஆலயம் அமைக்கப்பட்ட பின்னர் பால விக்கிரங்கள் ஆகம முறைகளுக்கு அமைய
பிரதிஷ்டை செய்யப்பட்டு மஹாகும்பாபிஷேகம் செய்து வழிபடுவதே சிவாகம
முறையாகும்.
இஃது எல்லா ஆலயங்களுக்கும் பொருத்தமானது நினைத்த உடனே
இந்த பொம்மை (விக்கிரம்) எடுக்கப்படல் வேண்டும் என எந்த மனிதனாலும் கூற
முடியாது. நாம் தேவ ஆசியை வேண்டி வழிபடுபவர்கள் எமது பரம்பரை வளர வேண்டுமென
வழிபாடுகளை மேற்கொண்டு வருபவர்கள் எமக்குத் தேவசாபம் வேண்டவே வேண்டாம்
எல்லோரும் வாழ வேண்டும் நாட்டு மக்கள் அனைவரும் அருள் பெற்ற நல்ல வாழ்வை
பெற வேண்டும் என்பதையே நாம் கூறுகின்றோம்.
கொழும்பு ஸ்ரீ
பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய முகாமைத் தர்மகர்த்தாவும் நாட்டுச்
சுதந்திரத்திற்குத் தம்மையே அர்ப்பணித்த சேர்.பொன்னம்பலம் இராமநாதன் சேர்.
பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் உறவினரும் ஆகிய நான் கொள்ளுப்பிட்டி ஸ்ரீ
பூமாரி அம்மன் ஆலயம் உரிய முறையில் அமைக்கப்படல் வேண்டும் என அறிவுரை
கூறுகின்றேன்.
கிளிநொச்சி-இரணைமடு விமான ஓடுதளம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு
16/06/2013 கிளிநொச்சியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரணைமடு விமான ஒடுதளத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இரணைமடுப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இவ் விமான ஓடுதளம் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
மாங்குளம்,
அம்பகாமம் ஓலுமடு ஊடாக அல்லது கிளிநொச்சி, வட்டக்கச்சி, இராமநாதபுரம் ஆகிய
இடங்களின் ஊடாக இரண்டு வழிகளிலும் விமானங்கள் தரையிறங்கக் கூடிய வகையில்
இவ்வோடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள்
மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் உடனிருந்தனர்.
நன்றி வீரகேசரி