நாம் பெற்ற பிள்ளைகளைக் காப்போம்

.


தமிழர்களாகிய நாம் நம் கலாச்சாரத்தைப் பின் பற்றி, அதை நமக்கு பின் வரும் நம் சந்ததியருக்கு விட்டுச் செல்வது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடிமக்களாகிய நாம், நம் பாரம்பரியத்தையும், தெய்வ வழிபாட்டையும் தொடர்ந்து செய்வது நம் வருங்காலச் சந்ததியினரையும் அதன் வழி கொண்டு செல்ல பேருதவியாக இருக்கும். நம்மில் பலர் நம் பெற்றோர்கள் சொல்லிக்கொடுத்த படி நம்முடைய தெய்வ வழிபாட்டை, வீட்டில் பூசைகள் செய்வதன் மூலமும், கோயிலுக்குச் சென்று வணங்குவதன் மூலமும், பல விழாக்கள் கொண்டாடுவதன் மூலமாகவும் பின்பற்றி வருகிறோம்.  நம்மில் சிலருக்கு இந்த வழிபாடெல்லாம் எதற்கு என்று ஒரு தேக்கம் வரும் நிலையில் அதை சரியாக கடைபிடிக்காமல் விட்டுவிடுகிறோம். இது நம்முடைய இயலாமையைக் காட்டுவது மட்டுமல்லாமல், நம் பிள்ளைகள் பின்பற்றுவதற்கும் ஒரு முட்டுக்கட்டையாக உள்ளது.
சரி, இப்படி தெய்வ வழிபாடு இல்லாமல் விட்டுவிட்டால் என்ன பெரிய தீங்கு விளையுமா என்ற கேள்வி எழலாம். நாம் ஏன் தெய்வ வழிபாடு செய்கிறோம் என்பதை புரிந்து கொள்ளாதன் விளைவுதான் இப்படி நம்மில் ஒரு தோய்வு நிலை ஏற்படக் காரணமாகும்.


எல்லா தெய்வ வழிபாடும், தர்மத்தை நிலை நாட்டுவது பற்றியும், மன அமைதி பெற்று நாம் எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்வது என்பது பற்றியும் மிகத் தெளிவாக வழிகாட்டும். இப்படி நாம் மன அமைதி பெற்று மகிழ்ச்சியாக வாழ யாராவது விருப்பம் இல்லாமல் இருப்பார்களா? மனிதனாகப் பிறந்த நாம் அனைவருமே மகிழ்ச்சியைக்காணத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த மகிழ்ச்சி நமக்கு எவ்வாறு கிட்டும் என்பதை நம் பாரம்பரியம்மிக்க சமயம் மற்றும் இலக்கிய நூல்கள் தெளிவாக கூறுகிறது என்பதாக பல அறிஞர்கள் கூறுகிறார்கள். இதையெல்லாம் நாம் புரிந்துகொள்ள நமக்கென்று ஒரு கலாச்சார மையம் ஒன்றிருந்து அதில் பல அறிஞர்களை வரவழைத்து நம் பண்பாட்டின், நம் சமயத்தின், நம் கலாச்சாரத்தின் மதிப்பை நம் வருங்கால சந்ததியருக்கு புரியவைப்பது நம் கடமையாகும். நம் தாயகத்திலேயே நாம் இருந்தோம் என்றால் இது பற்றி மிகப்பெரிய முயற்சி எடுக்கவேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், நாம் வாழும் ஆஸ்த்திரேலியாவில் மேலை நாட்டு பழக்கவழக்கங்களை மட்டுமே நம் பிள்ளைகள் வெகு விரைவாக ஏற்க நேரிடும் என்பதை நம் கருத்தில்கொள்ள வேண்டும். பின் நம் பிள்ளைகள் நாம் நினைத்தபடி இல்லையே என்று வருத்தப்பட நேரிடும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு நமக்கென்று ஒரு நல் வழிமுறை அமைத்துகொண்டு, நம் பிள்ளைகளுக்கு நல் வழி காட்ட நாம் அனைவரும் சேர்ந்து முயற்சியில் ஈடுபடவேண்டும்.

இப்படி ஒரு முயற்சிதான், ஆஸ்த்திரேலியாவில், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள கோல்ட்கோஸ்ட் (Gold Coast) என்ற நகரில் அமையவிருக்கும் கலாச்சார மையமும் அதைச் சார்ந்த முருகப்பெருமான் ஆலயமும் ஆகும்.  

தமிழர்களின் இதயத்தில் எல்லாம் குடிகொண்டு, ஆறுபடை வீடுகளைக் கொண்ட நம் முருகப்பெருமானை நாம் வணங்கி கொண்டாடி மகிழ நமக்கு ஒரு பெரும் வாய்ப்பும் இதன் மூலம் கிட்ட உள்ளது.

முருகப்பெருமானுக்கு திருக்கோயில்கள் பல கட்டி பூசைகள் பல செய்து கொண்டாடினால் அதில் உள்ள ஆனந்தம் அளவிடற்கரியது.

பிரிஸ்பேன் நகரில் தமிழர்களின் மக்கள் தொகை வளர்ந்து வந்தாலும், மற்ற மாநிலங்களிலும் உள்ள அன்புத் தமிழ் மக்களால் இந்த முயற்சிக்கு ஆதரவு கொடுத்தால்தான் நம் வருங்காலச் சந்ததியனருக்கு வழிகாட்ட கலாச்சார மையமும், கந்தனாக, கார்திகேயனாக, குகனாக, ஆறுமுகனாக, குமரனாக, சுப்பிரமணியனாக, வடிவேலனாக, சண்முகனாக, தண்டாயுதபாணியாக, அழகனாக இன்னும் பலவாகவும் போற்றி வழிபடும் நம் முருகப்பெருமானுக்கு ஒரு ஆலயமும்  கட்டமுடியும்.

எந்த ஒரு முயற்சியும் நிறைவேற பொருள் உதவி மிக அவசியம் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்வோம். உங்கள் ஆதரவையும், அள்ளித்தரும் பண்பையும் முருகப்பெருமானுக்காவும், கலாச்சாரமையம் தோன்றுவதற்காகவும் நீங்கள் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் விவரங்களை  http://GoldCoastHindu.org/ என்ற வலையகத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.  பொருள் உதவியை மிக எளிதாக வங்கிக் கணக்கு பண மாற்றம் (Bank Account Transfer) அல்லது கடன் அட்டை (Credit Card) மூலம் செய்யும் வசதியும் உள்ளது.

நம் வாழ் நாளில் நாம் எவ்வளவோ செலவுகள் செய்கிறோம். நம் வருங்காலச் சந்ததியருக்கும் நல் வழிகாட்டும் வகையாக அன்பர்கள் தங்கள் அன்பு நன்கொடையை கீழ் காணும் வங்கிக் கணக்கில் பண மாற்றம் செய்ய வசதி உள்ளது.

Account Name    :  The GCHCA Building Donation Account
BSB                     : 064-474   
Account No. :       1048 8900
Website              : http://culture.goldcoasthindu.org/donations/

அனைவரும் பங்குகொள்வோம், அளவிடற்கரிய ஆனந்தம் கொள்வோம்.

                                இரா. மனுநீதி சோழன்