வானமுதமே வாழ்க வளர்க!! -மெல்பேர்ண் மணி

.
வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் அளப்பரியää அற்புதமான ஏழு ஆண்டு காலப் பணியைப் பாராட்டி வாழ்த்தி வரையப்பட்ட
வாழ்த்துப் பா.
வானமுதமே வாழ்க வளர்க!!

வானுயர ஓங்கு புகழ் படைத்த
தேன் கலந்த தமி;ழ்அமுதமதை வளர்த்திட
வான அமுதம் மெல்பேர்ன் நகர்தனில்
தோன்றிற்றே உதய சு10ரியன் போல்

குழந்தைகள் தத்தம் திறமைகளை வெளிப்படுத்தும்
அழகுறு அரங்கமாம் வானமுதமெனும் வானொலி
உருண்டு புரண்டு தவழ்ந்து எழுந்து
குறுநடை கொண்டு நடந்தது பாரீர்!!

ஏழு வயதான குழந்தை வானமுதம்
கேளுங்கள் நான் ஆற்றிய சேவைகளை எனவே
நெஞ்சு நிமிர்த்தி இறுமாப்புக் கொண்டு
கொஞ்சிக் குலவுகிறது குழவிகள் தம்முடன்கட்டுரை  கவிதை கதை நாடகமென
சிட்டுக்களின் ஆக்கங்கள் வானமுதத்தில் கேட்டு
பெற்றோர் உளநிறைவுடன் வாழ்த்தி நிற்கின்றார்
மற்றோரும் வாயார ஆசி நல்கின்றார்
கற்றோரின் இலக்கிய அரங்குகள் மிகவே
சுற்றம் புடைசு10ழக் கேட்டுக் களித்து
பயன்மிகப் பெறுகின்றார் பாருளோர் ஏத்தவே
நயமுறு பேட்டிகளும் எடுத்ததுமே சிறப்புறும்

 வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும் குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோன் உயர்வான் "  - என்றார் ஒளவையார்
இங்கே வானமுத முயர நாடு சிறக்கும்

திக்கெட்டும் புகழ் பரப்பி
முக்காலமும் இசையுடன்
சொக்க வைக்கும் வானமுதம்
நீடு வாழ்க ! வளர்க! வாழியவே!

அமுதம் ஈந்து அழியாச் சிறப்புடன்
தமிழும் சமயமும் வளர்ந்து மேலும்
உமிழும் உணவுடன் கலந்து நன்றே
வாழ்க! வாழ்க! வாழ்க! வாழியவே!!!