படப்பிடிப்பு ஞானம் ஆர்ட்ஸ்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFDGdmTSSarxlBtHqmPmNFIOKeCx16QP_Hqw1DxAH_IXPyTH5ElFc9GFUhNs-Mpgp_SsuIAI1Ifg-m3J8TiOMCOSpihb0nLw-AOFgnMtApeVdYPs2tLrz7Ys61Eqf_6B233sq42YUujYVm/s640/DSC08951.JPG)
யாழ் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட தினத்தை நினைவு கூர்வதற்காக சிட்னி தமிழ் அறிவகம் நடாத்திய கொடிதினம் 2013 சென்ற சனிக்கிழமை யூன் மாதம் 1ம் திகதி ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலையில் மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு முடிவடைந்தது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw8XNuxRpjdVsUW3wcQ1suKqpJCvRsBiNDCvMlpn7fbfmWiTaDUoX2z0LuGwQKwRnLIJBEKxfDCDOpVCBlxpGgRpw4xMLsX1KulQDhvRPKWZ53RSOnjisikmnwXbaqPaSDhI-vEa1IuXPk/s640/DSC08956.JPG)
இவ்விழாவை திரு திருமதி பாலா பாலேந்திரா அவர்களால் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்தி வைத்தார்கள். ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்களால் தமிழ் மொழி வாழ்த்தும் தேசிய கீதமும் பாடப்பட்டன. ஒரு நிமிட மௌன அஞ்சலியை தொடர்ந்து சிட்னி தமிழ் அறிவகத்தின் தலைவர் திரு ஸ்ரீகணேஸ்வரன் வரவேற்புரையை நடாத்தினார்.
திரு சிதம்பரம் துரை சிறீனவாசனின் வயலின் இசை எல்லோரையும் மகிழ்வித்தது. இசையமுதத்தை தொடர்ந்து, தமிழர் உலகிற்கு வழங்கிய கொடைகள் என்ற தலைப்பில் திரு ம தனபாலசிங்கம் சிறப்புரை நடாத்தினார்
கொடிவிற்பனை நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுது சிற்றுண்டி, கோப்பி, தேநீர் முதலியன இலவசமாக எல்லோருக்கும் வழங்கப்பட்டது
மாவை நித்தியானந்தனின் சிறுவர் நாடக நூல்கள் வெளியீடு திரு திருநந்தகுமார், (அதிபர், ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாதுமை கோணேஸ்வரன், சரண்யா தியாகராஜா, கவிஜா விக்னேஸ்வரன் ஆகியோர் நூல்களை மிகச்சிறப்பாக அறிமுகம் செய்து உரையாற்றினார்கள்.
ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்கள், தர்சனா ஸ்ரீசந்திரபோஸ், டேனிக்கா ,ரவீந்திரராஜா, கிருஸ்ணஹம்சி ஏகாம்பரம், டினோஷிகா அற்புதராஜர், சஜிந்தா ,ரவீந்திரன், ஆருதி குமணன் ஆகியோர்க்ளால் “தமிழ்ப் பண்பாடு – ஒரு பார்வை” என்ற சுவாரசியமான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
இறுதியாக வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்கள், சாரங்கன் சிவறஞ்சன், வித்யா ரமணன் மதிசுதனன், சாம்பவி சிவகுமார், சிவாஞ்சலி இரத்தினசீலன், மிதுனா முருகையன், சக்தியா ஜெயரஞ்சன், அனீட்டா வைத்தீஸ்வரன், வைஷ்ணவி ஜெயகுமார் மற்றும் கவிதா போல் ஆகியோரால் “பாரதி கண்ட கனவு நனவாகக் கண்டோம்” என்ற கருத்தரங்கம் மிக சிறப்பாக நடாத்தப்பட்டது.
நிகழ்ச்சிகளை செல்வி தர்சனா ஸ்ரீசந்திரபோஸ் தொகுத்து வழங்கினார்
இக்கொடிதினம் இரவு 10 மணியளவில் செயலாளர் திரு ந கருணாகரனின் நன்றியுரையோடு முடிவடைந்தது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvYA2EUEVXSP-Nv7mRT_8McXdV7Unk0zG5DHHZ3WUS8clN3KRpTEU5sKNK3Wmj2e_K0vjcrBAZemKsO04E2a2O7bEty2-BrOleAqbwjP06cxmISi4QiXxGe-fiNboGMDKt9j0AlqVbqWcN/s640/DSC09001.JPG)