வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு 59 “கொக்கு”


ஞானா:        இண்டைக்கு என்ரை அப்பாவை ஒரு மடக்கு மடக்காமல் விடுறேல்லை. இப்பிடியே அவரை         வெண்டுகொண்டு போக விட்டால், அவருக்கும் தலைக் கனப்புப் பிடிச்சிடும். தன்னை விட்ட        ஆள் இல்லை எண்ட நினைப்பு வந்திடும.

சுந்தரி:        ஆருக்கு என்ன நினைப்பு வந்திடும் ஞானா?

ஞானா:   
    வாருங்கோ அம்மா…..எங்கடை அப்பாவைப் பற்றித்தான் நினைச்சனான் அம்மா. அவர் எந்த        நாளும் அதை இதைச் சொல்லி எங்களை மட்டம்தட்டிப் போடிறார். இப்பிடியே விட்டால்             ஆளுக்குத் தன்னை விட்ட ஆளில்லை எண்ட நினைப்பு வந்திடும் எண்டுதான் யோசிக்கிறன்.

சுந்தரி: 
       நீ ஏன் ஞானா அவரை அப்பிடி நினைக்கிறாய் அவர் நல்ல மனிசன். தனக்குத் தெரிஞ்சதைச்        சொல்லிறார்.

ஞானா:        நீங்கள் விடுவியளே. கல்லெண்டாலும் கணவன் புல்லெண்டாலும் புருஷன் எண்டு நிக்கிற            கூட்டந்தானே நீங்கள். இண்டைக்கு விடுறனோ பாருங்கோ…….


சுநதரி: 
       உன்ரை அப்பாவுக்கு நூறு வயசு. …….அங்கை வாறார் கேக்க வேண்டிய கேள்வியைக்             கேளன் பாப்பம்.

அப்பா:   
    என்ன அம்மாமார் என்ன கேள்வி, ஆரைக் கேக்கப் போறியள்.?
ஞானா:        உங்களைத்தான் அப்பா:  திருவள்ளுவர் திருக்குறளிலை கொக்கைப் பற்றி எழுதியிருக்கி            றாரோ?

அப்பா:  
      இதென்ன ஞானா….எவ்வளவோ பொருள்களைப் பற்றி எழுதக் கிடக்கத் திருவள்ளுவர் ஏன்        கொக்கைப் பற்றி எழுதவேணும்.

ஞானா:   
    சும்மா மழுப்பாதையுங்கோ அப்பா. ஏலாட்டி ஏலாது எண்டு சொல்லுங்கோ. அது மட்டும்            இல்லை. திருவள்ளுவரைப் போலை ஒளவையாரும் கொக்கைப் பற்றிப் பாடியிருக்கிறாரோ            எண்டதையும் சொல்ல வேணும். சொல்ல முடியாட்டில் நீங்கள் தோல்விதான்.       

அப்பா:   
    ஞானா எனக்குச் சொல்ல முடியாவிட்டால் நீ சொல்லுவியே பிள்ளை.

ஞானா:        பாத்தியளே பாத்தியளே கதையை மாத்திறமாதிரியை. நான் மணவி அந்தஸ்திலை             இருக்கிறநான். நீங்கள் தானே குரு. குருத்தானே சொல்ல வேணும்.

அப்பா:
        சொன்னால் என்ன தருவாய் ஞானா? …..சச்சச்சா…ஒண்டும் வேண்டாம் திருவள்ளுவர்             கொக்கைப் பற்றிப் பாடிய குறளை நான் சொல்லிறன். அதுக்குப் பிறகு உன்ரை அம்மாவை        ஒளவையார் கொக்கைப் பற்றி எங்கை பாடியிருக்கிறார் எண்டு சொல்லச் சொல்லு.             திருக்குறளிலை 49வது அறதிகாரம் காலமறிதல் அதிலைவந்து 490வது குறளிலை சொல்லி            இருக்கிறார் கொக்கைப் பற்றி. குறள் வேணுமே:       
            கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்                                    குத்தொக்க சீர்த்த விடத்து.
        அதாவது கூம்பும் பருவத்து கொக்கு ஒக்க….மற்று சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க.

ஞானா:        அப்பிடி எண்டால் என்ன கருத்தப்பா?

அப்பா:        பிள்ளை ஞானா இதைவந்து காலம் அறிதல் எண்ட அதிகாரத்திலை சொல்லியிருக்கிறார்.            அதாவது தக்க காலங் கருதி, ஒடுங்கியிருக்க வேண்டியபோது கொக்கைப் போல அசைவி;ல்        லாமல் அடங்கி அமைதியாக இருக்க வேணும். சரியான காலம் வந்தபோது அந்தக்             கொக்கின் கொத்துப் போல உடனே செய்துவிடவேணும்.                       

சுந்தரி:        அருமையான கருத்துத்தான் அப்பா. ஆத்திலையோ, குளத்திலையோ கொக்கு அப்பிடியே            வாடிப்போய் ஒற்றைக் காலிலை தூங்கிக் கொண்டு நிக்கும். நல்ல பெரிய மீன் வாறதைப்            பாத்து அப்பிடியே டபக் கெண்டு கொத்திப் பிடிச்சுப்போடும்;;.         
        
அப்பா:     விட்டிடாதையும் சுந்தரி. அதுபோலை ஆக்களும் நல்ல வசதியான நேரத்திலை தங்கடை             அலுவல்களை டக்கு பக்கெண்டு செய்ய வேணும் எண்டு திருவள்ளுவர் கொக்கை உதாரணம்        காட்டிக் குறள் செய்திருக்கிறார்.  இப்ப இவள் பிள்ளை ஞானா கேக்கிறாள் ஒளவையாரும்         உப்பிடி கொக்கை உதாரணங்காட்டிப் பாடியிருக்கிறாரோ எண்டு. அதுக்கு நீர்தான் பதில்            சொல்ல வேணும்.                   

சுந்தரி:        ஏன் உங்களுக்குத் தெரியாதே அப்பா. ஒளவையாற்றை பாடல் உதைப் போலை கொக்கைப்        பற்றிச் சொல்லிற பாட்டெண்டு இருக்கு. ஆனால் எந்த நூலிலை எண்டுதான் எனக்கு ஞாபகம்        வருகுது இல்லை.

அப்பா:        அப்ப கேள்விகேட்ட ஞானாவுக்குத் தெரியும்தானே. நான் தோல்வியை ஒப்புக்கொள்ளிறன்.         ஞானா சொல்லட்டும்.

ஞானா:   
    அப்பா எனக்கும் அம்மாவைப் போலை ஒரு ஞாபகம்தான் எந்த நூல் எந்தப் பாட்டு எண்டு            தெரியாதப்பா.
அப்பா:     பிள்ளை ஞானா! விடைதெரியாமல் குறும்பு விடக்கூடாது. எனக்கும் தெரியாது போங்கோ.

சுந்தரி: 
       அப்பா இந்தநாளையில் பிள்ளையள் உப்பிடித்தான். அவையளுக்குக் கேள்வி கேக்கத்தான்        தெரியும் பதில் தெரியாது. நீங்கள் கோவிக்காமல் சொல்லுங்கே.

அப்பா:        சுந்தரி, இப்பத்தே மேட்டிமையளைப் பாத்திட்டுக் கொஞ்சம் அடக்கமாய் இருப்பம் எண்டால்        இவையள் நினைக்கிறது எங்களுக்கு ஒண்டும் தெரியாது எண்டு.
                அடக்கு முடையார் அறிவிலரென் றெண்ணிக்                                    கடக்கக் கருதவும் வேண்டா --- மடைத்தலையில்                                ஓடுமீ னோடி உறுமீன் வருமளவும்                                        வாடி யிருக்குமாங் கொக்கு.
        ஒளவையாற்றை மூதுரைப் பாட்டிலை கொக்கு இருக்கிறதைப் பாத்தியே
 ஞானா. அடக்கமாய்        இருக்கிற கொக்குக்கு நல்ல பெரிய மீன் கிடைக்கும் எண்டு ஒளவையார் அடக்கத்தின்             பெருமையைச் சொன்னார். ஆனால் வள்ளுவர் நல்ல நேரம்பாத்து விரைவாய் அலுவலைச்         செய் எண்டு கொக்கை உதாரணம் காட்டினார். எங்கடை புலவர்மார் கொக்கையும் விட்டு            வைக்கேல்லை எண்டதை மறவாதை.
ஞானா:     அப்பா இண்டைக்கு உங்களுக்குத்தான் வெற்றி அப்பா.
                            (இசை)

No comments: