வடகொரியா தாக்கினால் உடனடியாக பதிலடி!: தென்கொரியா எச்சரிக்கை
குவைத்தில் 3 பேருக்கு மரணதண்டனை!: 6 வருடங்களின் பின்னர் ஆரம்பம்
01/04/2013 வடகொரியா தாக்கினால் உடனடியாக திருப்பித் தாக்குவோம் என தென்கொரியா கடுந்தொனியில் எச்சரித்துள்ளமையானது கொரிய தீபகற்பத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி வீரகேசரி
02/04/2013 குவைத்தில் குற்றவாளிகள் மூவருக்கு நேற்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென்கொரியா மீது வடகொரியா கடந்த சில தினங்களுக்கு முன்னர் போர்ப் பிரகடனம் செய்திருந்தது. இதனையடுத்து கொரிய தீபகற்பத்தை மீண்டும் போர் மேகம் சூழ்ந்தது.
அமெரிக்க படைகளும் தென்கொரிய படைகளுடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தமையினால் போர் ஏற்படும் பட்சத்தில் அது பாரிய அழிவுகளுக்கு வித்திடும் என அஞ்சப்படுகின்றது.
அதுமட்டுமன்றி அமெரிக்க போர் விமானங்களும் தென்கொரியாவுடனான போர்ப் பயிற்சிகளுக்கென அனுப்பப்பட்டுள்ளமையானது பிராந்தியத்தின் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில் வடகொரியா தாக்கினால் உடனடியாக பதிலடி வழங்கப்படுமென தென்கொரிய ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
மேலும் வடகொரிய தலைமையானது அணு ஆயுதமானது தமது நாட்டின் சொத்து மற்றும் தேசத்தின் வாழ்க்கை என வர்ணித்திருந்ததுடன் எத்தனை பில்லியன் டொலர்கள் விலைக்கும் அதனை விற்பனை செய்யப்போவதில்லை என தெரிவித்திருந்தது.
போர் ஆரம்பிக்கும் பட்சத்தில் ஆசியாவில் உள்ள அமெரிக்க இலக்குகள், தென்கொரியா, அமெரிக்கா மற்றும் அதன் இராணுவத்தளங்களான குஹாம், ஹவாய் மீதும் வடகொரியா தாக்குதல்களை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி
குவைத்தில் 3 பேருக்கு மரணதண்டனை!: 6 வருடங்களின் பின்னர் ஆரம்பம்
02/04/2013 குவைத்தில் குற்றவாளிகள் மூவருக்கு நேற்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொலைக்குற்றவாளிகள் மூவருக்கே இவ்வாறு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் அனைவரும் வெவ்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
குவைத்தில் சுமார் 6 ஆண்டுகளின் பின்னர் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இறுதியாக 2007 ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானியரொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
கடந்த 1964 ஆம் ஆண்டு முதல் சுமார் 72 பேருக்கு அந்நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்று தூக்கிலிடப்பட்டோரில் சவுதி நாட்டவர் எனவும் மற்றைய ஒருவர் பாகிஸ்தான் நாட்டவர் எனவும் தெரிவிக்கப்படுவதுடன் 3 ஆம் நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படவில்லை.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment