இலக்கிய ஆளுமைகளுடன் சந்திப்புஅவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளியும் ஊடகவியலாளரும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அமைப்பாளருமான  லெ.முருகபூபதி கடந்த வாரம் தமிழ்நாடு- நாமக்கல்லில் பிரபல நாவலாசிரியர்  கு. சின்னப்பபாரதியையும் கோவையில் பிரபல மாக்சீய இலக்கிய விமர்சகர் கோவை ஞானி மற்றும் யுகமாயினி ஆசிரியர் சித்தன் ஆகியோரையும் சந்தித்து உரையாடினார்.
புகலிட இலக்கியம்,  தற்கால இலக்கிய செல்நெறி,  மொழிபெயர்ப்பு முயற்சிகள்,  படைப்பிலக்கியவாதிகளிடையே ஏற்படுத்தப்படவேண்டிய சர்வதேச தொடர்பு பற்றி இச்சந்திப்புகளில் கலந்துரையாடப்பட்டது.

No comments: