உலகச் செய்திகள்

பிரேசிலில் இரவு களியாட்ட விடுதியில் தீ: 200 பேர் பலி

பிரேசில் களியாட்ட விடுதியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு!

மும்பைத் தாக்குதல்: ஹெட்லிக்கு 35 வருட சிறை

எகிப்தில் மீண்டும் கலவரம்!

சிரியாவில் தொடரும் மோதல்: 79 சடலங்கள் ஆற்றில் கண்டுபிடிப்பு

பிரேசிலில் இரவு களியாட்ட விடுதியில் தீ: 200 பேர் பலி




பிரேசிலிலுள்ள இரவு களியாட்ட விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 200 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் இதில் காயமடைந்துள்ளனர்.
அந்நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள சாண்டா மரியா நகரில் அமைந்துள்ள விடுதியொன்றிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 159 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின் போது சுமார் 2000 பேர் வரை அங்கிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  நன்றி வீரகேசரி  







பிரேசில் களியாட்ட விடுதியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு!

By Kavinthan Shanmugarajah
2013-01-28

பிரேசிலில்  களியாட்ட விடுதியொன்றில் உரிழந்தோரின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.
http://www.virakesari.lk/image_article/brazilfire1.jpg
நேற்று இடம்பெற்ற இச்சம்பவமானது பிரேசில் நாட்டில் இடம்பெற்ற மிகமோசமானதாகக் கருதப்படுகின்றது.
விபத்துக்கான காரணம் உறுதியாக தெரியவராத போதிலும்  விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாண வேடிக்கை நிகழ்வே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
http://www.virakesari.lk/image_article/brazilw=fire2.jpg
தீ விபத்து ஏற்பட்டவுடன் பலர் அங்கிருந்து ஓட முயற்சித்த போதும் அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் அவர்களை வெளியே விட வில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
http://www.virakesari.lk/image_article/brazilfire3.jpg
மேலும் பலர் வெளியே செல்லும் வழிக்கான குறியீட்டையும், கழிவறைகளுக்கான குறியீட்டையும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.  வெளியே செல்வதற்கு பதிலாக கழிவறைக்குள் சென்றுள்ளனர். இதனால் சுமார் 50 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தின் போது சுமார் 2000 பேர் விடுதியில் இருந்துள்ளனர். அவர்களில் அநேகமானோர் மாணவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
http://www.virakesari.lk/image_article/brazilfire4.jpg
கூட்டத்தில் சிக்கியும், மூச்சுத் திணறியுமே பலர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த களியாட்ட விடுதி சட்டவிரோதமாக இயங்கியதொன்றெனவும் அங்கு சரியான பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படவில்லையெனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



http://www.virakesari.lk/image_article/brazilfire5.jpg

நன்றி வீரகேசரி  

 

 

 மும்பைத் தாக்குதல்: ஹெட்லிக்கு 35 வருட சிறை

By General
2013-01-25

இந்தியாவின் மும்பையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லிக்கு அமெரிக்க நீதிமன்றம் 35 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சிகாகோவில் உள்ள நீதிமன்றம் இந்த தீர்ப்பை நேற்று அளித்தது. 2008ம் ஆண்டு மும்பையி்ல் 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுவி பெரும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டனர்.
இவர்களை ஏவி விட்டவர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர் ஹெட்லி. மேலும் தாக்குதலுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து பல இடங்களை உளவு பார்த்தும் சென்றுள்ளார்.
அமெரிக்காவில் வைத்துக் கைது செய்யப்பட்ட இவரை அமெரிக்க அதிகாரிகள் நீதிமன்றத்தில் நிறுத்தி வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் நேற்று தண்டனை அளிக்கப்பட்டது. தீர்ப்பை அறிவித்த மாவட்ட நீதிபதி ஹாரி லீன்வெப்பர் கூறுகையில், நான் மாறி விட்டேன் என்று ஹெட்லி கூறியுள்ளார். ஆனால் அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
அமெரிக்க வாழ்க்கை முறைக்கு அவர் மாறி விட்டதாக நான் நம்பவில்லை. எனவே அவர் செய்த தவறுக்கு தண்டனை அவசியமாகிறது என்றார். இந்த தாக்குதல் சம்பவத்தில் 166 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களில் 6 அமெரிக்கர்களும் அடங்குகின்றனர்.  தற்போது  52 வயதாகும் ஹெட்லிக்கு குறைந்தது 50 வருட தண்டனையாவது கிடைக்கும் என அமெரிக்க அதிகாரிகள் நம்பியிருந்தனர்.
அதேசமயம் அவருக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. முன்னதாக அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும் அவர் விசாரணைக்கு ஒத்துழைத்ததாலும், குற்றத்தை ஒப்புக் கொண்டதாலும் அதிலிருந்து அவர் தப்பி விட்டார்.
ஹெல்டி தனது சிறைக்காலத்தை அமெரிக்காவிலேயேதான் கழிப்பார் என்றும் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட மாட்டார் என்றும் அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.      நன்றி வீரகேசரி 

 

 

 எகிப்தில் மீண்டும் கலவரம்!

By General
2013-01-26

எகிப்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கலவரம் ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதியாக இருந்த ஹோஸ்னி முபாரக்கை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து முபாரக் பதவி விலகினார். தற்போது தேர்தல் மூலம் முகமது முர்சி புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் தணக்கு அதிகாரம் குவியும் வண்ணம் புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், கலவரம் நடந்த 2-ம் ஆண்டு நிறைவு நேற்று முன்தினம் கடை பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, எற்கனவே போராட்டம் நடந்த கெய்ரோ தக்ரீக் மைதானத்தில் ஏராளமானவர்கள் திரண்டனர். அப்போது தற்போதைய ஜனாதிபதிக்கு முர்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தக்ரீக் மைதானம் அருகேயுள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றனர். இதனால் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை போலீசார் கலைத்தனர். இச்சம்பவத்தில் ஒருவர் பலியானார்.
இதையடுத்து கலவரம் தீவிரம் அடைந்தது. வெள்ளிக்கிழமையான நேற்று தொழுகை முடிந்ததும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கெய்ரோ நகரின் தக்ரீர் மைதானத்தில் திரண்டனர்.
முர்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதே போன்று அலெச்சாண்ட்ரியா, சூயஷ் உள்ளிட்ட பல நகரங்களின் தெருக்களில் போராட்டம் நடந்தது.
போராட்டக்காரர்களை அடக்க போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் மீது கல்வீச்சு நடந்தது. 2 அரசு கட்டிடங்களுக்கு தீவைக்கப்பட்டது.
ஜனாதிபதியின்  கூட்டணி கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ கட்சி அலுவலகமும் தீவைத்து எரிக்கப்பட்டது. எனவே, கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் 5 பேர் பலியாகினர். 280 பேர் காயம் அடைந்தனர்.
போராட்டக்கரர்கள் நடத்திய கல்வீச்சு உள்ளிட்ட தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். 55 பேர் காயம் அடைந்தனர்.  நன்றி வீரகேசரி 

 

 

 

 

 சிரியாவில் தொடரும் மோதல்: 79 சடலங்கள் ஆற்றில் கண்டுபிடிப்பு

By General
2013-01-30

சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2 வருடங்களாக போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
அதில் ஈடுபட்ட சுமார் 60 ஆயிரம் பேர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படும் புரட்சி படைக்கு அமெரிக்கா இராணுவம் உதவி செய்து வருகிறது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்று வருகின்றது.

எல்லைப் புறத்தில் உள்ள முக்கிய நகரங்கள் புரட்சி படை வசம் உள்ளன. எனவே அவற்றை மீட்க இராணுவம் போராடி வருகிறது. இந்த நிலையில் அலெப்போ நகரில் உள்ள கியூவிக் ஆற்றில் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப் பட்டவர்கள் பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது அங்கிருந்து 79 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் பெரும் பாலானவர்கள் இளைஞர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களின் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தன. எனவே புரட்சியாளர்களால் கடத்தி செல்லப்பட்ட அரசு ஆதரவாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதாக இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் இதை மறுத்துள்ள புரட்சி படை இராணுவம் தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.    நன்றி வீரகேசரி

 

No comments: