இலங்கைச் செய்திகள்




வடக்கில் காணிகள் சுவீகரிக்கப்படும்: ருவான் வணிகசூரிய

பாலச்சந்திரன் புகைப்பட எதிரொலி: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் மீது தாக்குதல்!

மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பாலச்சந்திரனின் விவகாரம் கொண்டு வரப்படும்

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை


வடக்கில் காணிகள் சுவீகரிக்கப்படும்: ருவான் வணி
இராணுவ முகாம்கள் நாட்டுக்கு அவசியம் என்பதால் முகாம்கள் அமைந்துள்ள காணிகள் கையகப்படுத்தப்படும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். 



இதேவேளை, வடக்கில் பலாலி இராணுவத் தளமும் ஏனைய இராணுவ முகாம்களும் அமைந்திருக்கும் காணிகளை இராணுவத் தேவைகளுக்காக கையகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பலாலி விமானநிலையம், காங்கேசன்துறை துறைமுகம் போன்ற மையங்களை விஸ்தரித்து அபிவிருத்தி செய்யும் தேவைகளுக்காகவும் அரசாங்கம் குறித்த காணிகளை கையேற்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அபிவிருத்திப் பணிகளுக்காக மக்களின் காணிகளை சுவீகரிக்க வேண்டியது அவசியம் என்றும் காணிகளை இழக்கும் மக்களுக்கு இழப்பீடும் மாற்றிடங்களும் வழங்கப்படும்.

இதேவேளை, 2009ஆம் ஆண்டில் வடக்கில் இராணுவம் நிலைகொண்டிருந்த சுமார் 4500 ஹெக்டேர் பரப்புக் காணி இப்போது 2000 ஹெக்டேராக குறைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினரின் எண்ணிக்கையும் 15 ஆயிரமாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 



பாலச்சந்திரன் புகைப்பட எதிரொலி: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் மீது தாக்குதல்!

By General
2013-02-20 18:42:58

விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலைசெய்யப்பட்ட புகைப்படங்களை செனல் 4 வெளியிட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கொடூரக் கொலைக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் மீது இன்று அதிகாலை 2.30 மணி அளவில் மர்மநபர்கள் கல் வீசித் தாக்கியுள்ளனர். இதில் அலுவலக கண்ணாடி சேதமடைந்ததுள்ளது.
இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என எயார்லைன்ஸ் அலுவகத்தினர் தெரிவித்துள்ளனர்.  

நன்றி வீரகேசரி





மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பாலச்சந்திரனின் விவகாரம் கொண்டு வரப்படும்

By General
2013-02-20 16:29:00
இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச்சட்டங்கள் மீறல்கள் குறித்து, தொடர்ந்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும், ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்த பிரபாகரனின் 12வயது மகன் விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படையினரால் உயிருடன் பிடித்து வைத்துக் கொல்லப்பட்டதாக வெளியான ஒளிப்படங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்கா, இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச்சட்டங்கள் மீறல்கள் குறித்து, ஆழ்ந்த கவலையடைந்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச்சட்டங்கள் மீறல்கள் குறித்து, தொடர்ந்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும், ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
போரின் முடிவில், அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதமாபிமான சட்ட மீறல்களின் ஈடுபட்ட எல்லாத் தரப்பினரையும் முழுமையாக பொறுப்புக்கூறுவதற்கு ஆதரவளித்தோம்.
நீண்டகாலப் பிரச்சினையாக உள்ள நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரங்களுக்குத் தீர்வுகாண இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடுமையான கவலை தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நாம் இது தொடர்பாக, சொந்தமாக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். 

நன்றி வீரகேசரி


பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
By Hafeez
2013-02-21 12:25:43


பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்கு அதிகளவிலான பிரச்சினைகள் இருப்பதாகவும் அவற்றை நிவர்த்தி செய்ய பல்கலைக்கழக நிர்வவாகம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்கலைக்கழக உள்வாரி மாணவர்களில் சுமார் 50 சதவீதத்தினர் விடுதி வசதிகள் இன்றி தனியார் விடுதிகளில் தங்குவதாகவும் இதனால் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவருவதாகவும் அவர்களுக்கு விடுதி வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாய பீடத்தைப் பொறுத்தவரை இரண்டு பாட நெறிகள் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான காலத்தை குறைத்துள்ளதாகவும் மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


நன்றி வீரகேசரி





தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை
By Priyarasa
2013-02-21 12:54:36

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நாளுக்கு நாள் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற போதிலும் வைத்தியர்கள் மற்றும் ஊழியாகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேசத்தில் உள்ள பல பகுதிகளிலும் மக்கள் மீள் குடியேற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில் கடந்தாண்டை விட இந்தாண்டு தை மாதத்தில் இரண்டு மடங்கான நோயாளர்கள் வருகை தந்துள்ளதை வைத்தியசாலையின் பதிவேடுகள் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது.
சராசரியாக மாதம் ஒன்றுக்கு சுமார் ஒன்பதாயிரத்து நூறுக்கும் மேற்பட்ட நோயாளர்கள் வெளி நோயாளர்களாகவும் உள்ளக நோயாளர்களாகவும் சிகிச்சை பெறுகின்றார்கள்.
தற்போது வைத்தியசாலையின் இரத்த வங்கி உட்பட மற்றும் கண்சிகிச்சை நிலையம் பல் வைத்திய நிலையம் என்பனவும் இயங்குகின்ற நிலையில் வைத்தியர்களின் பற்றாக்குறை அதிகம் காணப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி வீரகேசரி



No comments: