உலகச் செய்திகள்


 தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய குர்திஷ் இனப் பெண்கள் சுட்டுக் கொலை

கோடிக்கணக்கான இந்துக்கள் குவிந்த கும்பமேளா!: உலகில் அதிகமானோர் குவிந்த நிகழ்வாகவும் பதிவு

பஞ்சாபில் பெண்ணொருவர் 7 பேரால் வல்லுறவு: இந்தியாவை உலுக்கிய மற்றுமொரு சம்பவம்

அக்ரம், ரமீஸ் ராஜாவை பாக்.இற்கு திருப்பி அனுப்ப கோரிக்கை

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய குர்திஷ் இனப் பெண்கள் சுட்டுக் கொலை
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தங்களின் ஆதரவை வழங்கி வந்த குர்திஷ் இனப் பெண்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாரிஸில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அதிகமுள்ள லாச்சப்பல் பகுதிக்கு மிகவும் அருகிலுள்ள கார் டு நோர்ட் தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள குர்திஷ் கல்வி வளாகம் ஒன்றில் நேற்றுக்காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. படுகொலை செய்யப்பட்ட பெண்கள் மூவரும், தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவானவர்கள் என்றும் தமிழர்களால் நடத்தப்படும் போராட்டங்களிலும் பங்கேற்று, தமது ஆதரவுக் குரல்களையும் பதிவு செய்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.   நன்றி தேனீ




கோடிக்கணக்கான இந்துக்கள் குவிந்த கும்பமேளா!: உலகில் அதிகமானோர் குவிந்த நிகழ்வாகவும் பதிவு


இந்தியாவில் இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் மகா கும்பமேளாவில் நேற்று தொடங்கியது.
இம்முறையும் இதில் கோடிக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் கோடிக்கணக்கானோர் தொடர்ச்சியாக அங்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா அலகாபாத்தில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளா கொண்டாடப்படுகின்றது.

மகா கும்பமேளாவே உலகில் அதிகளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவாகத் திகழ்கின்றது.

இத்திருவிழாவானது எதிர்வரும் மார்ச் மாதம் வரை 55 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

மகா சங்கராந்தி தினத்தில் தொடங்கும் இந்நிகழ்வு, மகாசிவராத்திரியையொட்டி நிறைவுபெறும்.

கங்கை, யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி கலக்கும் என்று நம்பப்படுகிற அலகாபாத்தின் திரிவேணி சங்கமத்தில் இந்த ஆண்டின் மகா கும்பமேளா கோலாகலமாக தொடங்கியுள்ளது.

இத் திருவிழாவில் நிர்வாண சாமியார்கள் நதியில் நீராடுவது முக்கிய அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இதேவேளை முன்னைய மகா கும்பமேளாக்களை விட இம்முறை அதிகமானோர் கலந்துகொண்டுள்ளனர். இதன் மூலம் உலகில் அதிகமானோர் குவியும் நிகழ்வாகவும் இது பதிவாகியுள்ளது.  நன்றி வீரகேசரி 






பஞ்சாபில் பெண்ணொருவர் 7 பேரால் வல்லுறவு: இந்தியாவை உலுக்கிய மற்றுமொரு சம்பவம்
By General
2013-01-13

இந்தியாவின், டெல்லியில் இடம்பெற்ற வல்லுறவு சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பே பஞ்சாபில் திருமணமான இளம்பெண்ணை பஸ் சாரதி, நடத்துனர் உள்பட 7 பேர் சேர்ந்து வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள ஜகத்பூர் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை 29 வயது இளம்பெண் ஒருவர் குக்லாவில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு பஸ்ஸில் சென்றார்.
சாரதி தாலர் சிங் அப்பெண்ணை குக்லா நிறுத்தத்தில் இறக்கிவிடவில்லை. இதையடுத்து பேருந்தை நிறுத்துமாறு அப்பெண் நடத்துனர் ரவியை கெஞ்சியும் பலனில்லை.
வேறு ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திய தாலர் சிங், ரவியுடன் சேர்ந்து அப்பெண்ணை மோட்டார் சைக்கிளில் வைத்து குர்தாஸ்பூர் அருகே உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு தாலர் சிங் மற்றும் ரவியுடன் சேர்ந்து மேலும் 5 பேர் அப்பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர்.
பின்னர் அவரை நேற்று காலை குக்லா அருகே விட்டுச் சென்றனர். இதையடுத்து அப்பெண் இந்த சம்பவம் குறித்து கனுவான் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வல்லுறவு வழக்குப் பதிவு செய்த பொலிஸா தாலர் சிங், ரவி, ஜஸ்விந்தர் சிங், ஜக்ப்ரீத் சிங், சத்வந்த் சிங் உள்பட 6 பேரை நேற்று கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர். திருமணமான இளம்பெண் ஒருவர் 7 பேரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நன்றி வீரகேசரி 

 

 

 அக்ரம், ரமீஸ் ராஜாவை பாக்.இற்கு திருப்பி அனுப்ப கோரிக்கை

By V.Priyatharshan
2013-01-17 22:24:38
 

ஹொக்கி வீரர்களைப் போல கிரிக்கெட் வர்ணனையாளர்களான வசிம் அக்ரம் மற்றும் ரமீஸ் ராஜாவை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பின், சமீபத்தில் தான் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் தொடரில் மோதின. இது முடிந்த சில நாட்களில், எல்லைப் பகுதியில் இரு இந்திய இராணுவ வீரர்கள், பாகிஸ்தான் படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, இரு நாட்டு உறவு மீண்டும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. ஹொக்கி லீக் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனால், 9 ஹொக்கி வீரர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இப்போது, அக்ரம், ரமீஸ் ராஜாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர்கள், தற்போது வர்ணனையாளர்களாக உள்ளனர். இவர்களையும் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.       நன்றி வீரகேசரி

 


No comments: