இலங்கைச் செய்திகள்

.
பத்து லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும்

நான் குற்றமற்றவர் - சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் சிறுதுளியும் உண்மை இல்லை


ரிசானாவுக்காக கண்ணீர் சிந்தும் இவ்வேளையில், இதேபோன்ற கொடுந் துன்பங்களை எதிர்கொள்ள நாம் இன்னும் ஆயிரக்கணக்கான ரிசானாக்களை தொடர்ந்து அனுப்ப போகிறோமா?

                                        காமினி வீரக்கோன்

இராணுவத்திலிருந்து 71458 பேர் தப்பியோட்டம்

மஞ்சள், சிவப்பு, பச்சை மழைக்கான காரணம் தெரியுமா?

மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்

யாழ். தேவி புகையிரதச் சேவை செப்டெம்பர் மாதம் யாழ்ப்பாணத்தை சென்றடையும்: மகாலிங்கம்

இப்போது ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு போராளியாக காட்சிதரும் ஷிராணி பண்டாரநாயக்காவின் கண்ணியமும் கௌரவமும் புதிய சட்ட மற்றும் அரசியல் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம்.
 -  என்.சத்தியமூர்த்தி






பத்து லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும்


 
தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டது சம்பந்தமாக தகவல் தருபவர்களுக்கு பத்து லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என சுவரொட்டிகள் யாழ். மாவட்டத்தின் பல பாகங்களிலும் பொலிசாரினால் ஒட்டப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பலாலி வீதி காப்பற் போடும் பணியில் ஈடுபட்ட தென்னிலங்கை இளைஞர் ஒருவர் நந்தாவில் தோட்டவெளியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தக் கொலையைத் தொடர்ந்து கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவினர் புன்னாலைக்கட்டுவனில் ஒரு இளம் குடும்பத்தினரை கடத்திச் சென்று விசாரணைகளை மேற் கொண்டதுடன் அவர்களுடைய தந்தையையும், சகோதரனையும் கைது செய்து விசாரணைகளையும் மேற் கொண்டார்கள்.

இந்நிலையில் திருநெல்வேலிப் பகுதயில் உள்ள சுமார் ஏழு பேரை விசாரணை செய்த நிலையில் தற்போது கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் பற்றிய விபரங்களை தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்ற சுவரொட்டிகளை பொலிஸார் யாழ். மாவட்டத்தில் ஒட்டியுள்ளார்கள்.

நன்றி வீரகேசரி  

 

 

நான் குற்றமற்றவர் - சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் சிறுதுளியும் உண்மை இல்லை
shirani-3நான் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 43வது பிரதம நீதியரசராவேன். பிரதம நீதியரசர் என்ற வகையில் நான் நீதியரசர்கள் நீதிபதிகள் சட்டத்தரணிகள் மற்றும் குடிமக்கள் யாவருக்கும் செய்யவேண்டிய கடமையும் தளம்பாத கடப்பாடும் எனக்கு இருக்கின்றது.

அநியாயமான முறையில் அவதூறு செய்யப்பட்டு பழி சுமத்தப்பட்டவராக எதுவித ஏதுக்களும் இன்றி உதறி எறியப்பட்டவளாக நான் இன்று உங்கள் முன்னிலையில் நிற்கிறேன். கடந்த சில வாரங்களாக என் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடும் நடவடிக்கைக்கு இந்த குடியரசின் ஒரு பிரதம நீதியரசர் மட்டுமல்ல எந்தவொரு குடிமகனும் உள்ளாக்கப்பட்டிருக்ககூடாது. எனது 54 வயது நிரம்பிய வாழ்க்கைக்காலத்தில் 32 வருடகாலத்தில் எனது தாய் நாட்டிற்கு பல்வேறுபட்ட பரிமாணங்களில் பல்தரப்பட்ட நிலைகளில் செய்த சேவைக்கு துரதிஸ்டவசமான முறையில் கிடைத்திருக்கும் அநியாயமான சன்மானம் இது.

பாராளுமன்ற தெரிவுக்குழு மூலம் எதேச்சதிகாரமாகவும் தன்னிச்சையாகவும் குற்றவாளியாக்கப்பட்டாலும் நான் சட்டரீதியானமுறைகள் மூலம் அதனை முகங்கொடுத்துள்ளேன் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. நான் நம்பிக்கை வைத்திருக்கின்ற இயற்கை நீதிக்கோட்பாடு மற்றும் சட்டரீதியான நடவடிக்கை முறைகள் தொடர்பில் நம்பிக்கை கொண்டு ஆரம்பம் முதல் அதனை நிலைநிறுத்தி உயர் நீதிமன்றங்களிலும் உறுதி செய்தேன். கௌரவ சபாநாயகர் அவர்கள் அரசியலமைப்பை வியாக்கியானம் செய்வதற்கு தனிமையானதும் புறநீங்கலானதுமான நியாயாதிக்கம் உயர்நீதிமன்றத்திற்கு உண்டு என்பதை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் உயர்நீதிமன்றத்தின் கடந்த வியாக்கியானத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழுவும் அதன் நடவடிக்கை முறைகள் யாவும் சட்டவிரோதமானது எனவும் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானம் உறுதிகேள் எழுத்தாணை மூலம் ரத்துச் செய்யப்பட்டு செல்லுபடியற்றதாக்கப்பட்டது. ஆகவே பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானம் எதுவித வலுவோ அதிகாரமோ அற்றதும் சட்டரீதியான நியாயாதிக்கமின்றி மேற்கொள்ளப்பட்டதென்ற அடிப்படையில் செல்லுபடியற்ற ரத்துச் செய்யப்பட்ட தீர்மானமாகும்.

இந்த சூழ்நிலையில் ஓர் ஜனநாயக நாடான எனது நாடு – இலங்கை சட்ட ஆட்சியை திறவுகோளாகக் கொண்டு உரிமைகளை நிலைநிறுத்துகின்ற ஓர் தேசம் அதில் நான் தான் இன்னும் சட்டரீதியாக நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசர்.

பிரதம நீதியரசர் என்ற பதவி மட்டுமல்ல நீதித்துறையின் சுதந்திரத்திற்கே பங்கம் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது சட்ட ஆட்சி இயற்கை நீதி நீதித்துறை சுதந்திரம் என்பன தூக்கியெறிப்பட்டிருக்கின்றன. மட்டுமன்றி காட்டுமிராண்டித்தனமாக சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளன.

கொடுக்கப்பட்ட அழுத்தங்களுக்கு ஈடுகொடுத்து நான் சுகந்திரமான நீதித்துறைக்காகவே பாடுபட்டதால் தான் இன்று பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த நாட்டின் மக்களே அதியுயர் சக்தி அரசியலமைப்புச்சட்டம் சட்ட ஆட்சியையே அங்கீகரித்துள்ளது. சட்டத்தின் ஆட்சி மேலோங்கி நிலைநிறுத்தப்பட்டிருந்தால் இவ்வாறான அநீதியான முறையில் நான் தண்டிக்கப்பட்டிருக்கமாட்டேன். எனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்குப்புறம்பான படுபொய்கள் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் அனைத்திலிருந்தும் நான் குற்றமற்றவர் மட்டுமன்றி என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் ஒரு சிறுதுளி உண்மைகூட இல்லை. மேற்கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களில் எதும் உண்மை தென்பட்டிருந்தால் நான் ஒரு கணம் கூட இந்த மகிமைமிகு பிரதம நீதியரசர் பதவியில் நீடித்திருந்திருக்கமாட்டேன். ஒரு குற்றமற்றவர்; என்பதனால் இந்த நாட்டின் பிரதம நீதியரசராகவும் ஒரு பிரஜையாகவும் ஒரு சாதாரண மனிதபிறவியாகவும்இ நான் இன்று உங்கள் முன்னிலையில் நிற்கமுடிகிறது.

நான் எனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அல்லது அலுவலக அறையில் தொடர்ந்திருப்பேனானால் வன்முறைகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் இப்பொழுது தென்படுவதனால் சட்டத்தரணிகள் மற்றும் விசுவாசமான சாதராணபிரஜைகள் உட்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதால் நான் எனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலும் அலுவலக அறையில்; இருந்து வெளியேறும் நிலைக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன்.

இந்த நாட்டின் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு கடந்த பதினாறு வருடங்களாக உயர் நீதிமன்றத்தில் கடமையாற்றினேன் நான் எப்பொழுதும் உண்மையாகவும் பயபக்தியுடனும் செயற்பட்டதோடு தனிமனித சுதந்திர வாழ்க்கையை நிலைநிறுத்துவதையும் சிறுவர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் கல்வியை பாதுகாப்பதற்கும் என்சக்திக்கு எட்டியமட்டில் செயற்பட்டுள்ளேன். அவற்றைச் சாதிக்கவே நான் என்றும் பாடுபட்டேன்.

மேலும் உயர்ந்த மகத்தான நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும் என்னுடன் நின்ற உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை இப்பொழுது தெரிவித்துக்கொள்கின்றேன் இன்று எனக்கு நீதி கிடைக்காவிட்டாலும் நான்செய்ததையும் நானும் எனது நம்பிக்கையைப் பகிர்ந்தவர்களும் எதற்காகப் பாடுபட்டோமோ அதனைக் காலமும் இயற்கையும் சரியென ஒரு நாள் உணர்த்தும்.

உங்களுக்கு தெரியும் அநேகமானவர்கள் இந்தப்பதவிக்கு வருவார்கள் போவர்கள்; ஆனால் இந்தப் பதவியை தற்போது யார் வகிப்பது என்பது அல்ல முக்கியம் தொடர்ந்தும் நீதித்துறை சுதந்திரம் நிலைநிறுத்தப்படவேண்டியதே முக்கியம்.

நன்றி
கலாநிதி ஷிராணி ஏ. பண்டாரநாயக்கா
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 43வது பிரதம நீதியரசர்
15.01.2013. நன்றி தேனீ 

 

 

 

 

 

 

 

ரிசானாவுக்காக கண்ணீர் சிந்தும் இவ்வேளையில், இதேபோன்ற கொடுந் துன்பங்களை எதிர்கொள்ள நாம் இன்னும் ஆயிரக்கணக்கான ரிசானாக்களை தொடர்ந்து அனுப்ப போகிறோமா?
                                        காமினி வீரக்கோன்
Rizana_Nafeek-1அப்பாவி ஸ்ரீலங்காப் பெண்ணான ரிசானா நபீக்கின் தலையை துண்டித்ததற்காக சவுதி அரேபியர்களுக்கு எதிராக எழுந்துள்ள கோபத்தையும் ஆத்திரத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும், ஆனால் இந்த துயரத்துக்கான பொறுப்பு சவுதிக்கு மட்டும்தானா?
ஒவ்வொரு நாடும் அதற்குரிய விசித்திரமான நீதிமுறைகள் மற்றும் தண்டனை சட்டங்களைக் கொண்டுள்ளன, அவைகளை அவர்கள் தங்கள் சொந்தப் பிரஜைகளுக்காக கூடத் தளர்த்திக் கொள்ளாதபோது அதை அவர்கள் வெளிநாட்டவர்களுக்காக – குறைந்தது வறிய நாடுகளில் இருந்து வேலைக்கு வந்துள்ள பரிதாபகாரமான ஏழை வேலையாட்களுக்காவது -  தளர்த்துவார்கள் என எதிர்பார்க்க முடியாது.
ஸ்ரீலங்கா , அதேபோல தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், தங்கள் பிரஜைகள், தலைமுறைகளாக தங்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் வறுமையின் பிடியிலிருந்து தங்களை கைதூக்கி விடுவதற்காக அந்நியச் செலவணியில் கணக்கிடும்போது மிகவும் துச்சமான தொகையான ஒரு சம்பளத்தை தேடி செல்லும்போது எதிர்நோக்கும் ஆபத்துகளைப் பற்றி நன்கு அறிவார்கள். தாங்கள் பெறும் கணிசமான இலாபத்துக்காக இந்த அதிகாரிகள் 21ம் நூற்றாண்டின் ஒரு அடிமைத்தனமான செயலுக்கு துணையாக இருக்கிறார்கள்
டொலரின் அழைப்பு
பிரகாசமான தீவு என்கிற பெயரும், இப்போது ஆசியாவின் அதிசயம் என்கிற பெரும் கூட இருந்தாலும், டொலர் சைகை காட்டி அழைக்கும்போது, அவர்களின் பிரஜைகளுக்கு இந்த முறையின்கீழே அடைக்கலம் தேடிச்செல்லுவதற்கு எழும் சலனத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியாமலிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. (தற்பொழுது கிடைக்க கூடியதாக உள்ள புள்ளி விபரங்களின்படி) 2010 ல் புலம்பெயர்ந்த ஸ்ரீலங்கா தொழிலாளர்கள் நாட்டுக்கு கொண்டு வந்த அந்நியச் செலவாணி 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்த தொழிலாளர் சக்தியின் பெருமளவிலானவர்கள் பாலைவன மண்ணில் வீட்டுப் பணிப்பெண்களாக அடிமைத்தொழில் செய்துவரும் ரிசானக்களைப் போன்றவர்களே.
நாட்டின் அந்நியச் செலவாணி வருமானத்தில் 33 விகிதத்தையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 விகிதத்தையும் இது உள்ளடக்குகிறது. 1970 களின் பிற்பகுதியில் மத்திய கிழக்கு நாடுகளின் தொழிலாளர் சந்தை திறந்து விடப்பட்டதிலிருந்து இதுதான் நிலமையாக உள்ளது.
rizana's -houseசிங்கங்களின் ஓட்டப் பந்தயத்தில் கிளம்பும் தோரணைகள் மற்றும் உறுமல்களைப்போல், அதிலுள்ள சிக்கல்களையும் சிரமங்களையும் பொருட்படுத்தாமல்  நாங்கள மத்தியகிழக்கு பாலைவனங்களிலிருந்து அந்த தங்கப் புதையலை சேகரிப்பதற்காக எங்கள் பெண்களை கணிசமானளவு அடிமைத்தொழில் புரிவதற்காக தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருக்கிறோம்.
பொதுவாக இந்த பணத்தில் எவ்வளவு தொகை இந்த நாட்டில் உள்ள வறியவர்களுக்கு பயன்பட்டுள்ளது?  ஆம், இந்த தொழிலாளர்கள் வருடக்கணக்காக வெற்றிகரமாக உழைத்ததின் பின்னர் நாடு திரும்பியதும் தங்கள் குடும்பத்தினருக்காக செங்கல்லும் சலவைக் கல்லும் பயன்படுத்தி ஒரு நவீன வீட்டைக் கட்டுவார்கள், அந்த இளம் பெண் ரிசானாவும் இந்த நோக்கத்துக்காகத்தான் போனாள். மூதூரிலுள்ள கிடுகளால் வேயப்பட்ட அவளது எளிய வீட்டின் புகைப்படங்கள் அவளது குடும்பத்தினருக்கு ஒரு கௌரவமான வதிவிடத்தை வழங்குவதற்கு அவளுக்கிருந்த ஆவலை பேசுகின்றன.
கிட்டத்தட்ட 1.7 மில்லியன் புலம்பெயர் ஸ்ரீலங்கா தொழிலாளர்கள் வெளி நாடுகளில் இருந்து பணம் அனுப்பி வருவதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த நாடு வறுமையிலிருந்து  வெளியேற வேண்டுமானால், நாட்டிலுள்ள இயலுமான மக்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளையும், வயதானவர்களையும் கவனிப்பாரில்லாது விட்டுவிட்டு வெளிநாடு சென்று தங்கள் எதிர்காலத்தை வெளிநாடுகளிலிருந்துதான் தேட வேண்டுமா?
அடிமைத்தனம் மற்றம் வறுமை ஒழிப்பு
வறுமை ஒழிப்பு என்கிற குறிச்சொல், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் அலங்காரமான கூட்ட அறைகளில் நடக்கும் கருத்தரங்குகளில் இருந்துதான் கிராமத்து பசுமைகளின் பொது மேடைகளுக்கு வருகிறது. ஒரு மூன்று தசாப்தகாலமாக அத்தகைய பிரச்சார விளம்பரங்களை, ஜனாதிபதி பிரேமதாஸவின் கிராம எழுச்சி, சந்திரிகா குமாரதுங்கவின் சமூர்த்தி, மற்றும் ராஜபக்ஸவின் சமீபத்தைய ஆரவாரமான திவி நகும, என்பனவற்றின் ஊடாக நாங்கள் கேட்டு வருகிறோம். எனவே உண்மையில் நடைபெற்று வரும் ஒரேயொரு வறுமை ஒழிப்பு மத்திய கிழக்கு வேலை வாய்ப்பு மூலமே நடைபெற்று வருகிறது. வறுமை ஒழிப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் பெரும்பகுதி பிரச்சார வெடிகளுக்கும் மற்றும் அரசியல் அலைச்சல்காரர்களின் நிதி வளர்ச்சிக்குமே பயன்பட்டு வருவதை பொதுமக்கள் கண்கூடாக கண்டு வருகிறார்கள். அதிக எதிர்பார்ப்புகளை மலர வைத்திருக்கும் திவி நகுமவினை பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
அதேவேளை பதவியில் இருக்கும் எந்த அரசாங்கமும் வறுமை ஒழிப்பிற்காக, மத்திய கிழக்கு வேலைவாய்பினை தவிர்த்து வேறு பாதைகளை பற்றி சிந்திக்க வேண்டும், ஸ்ரீலங்காவாசிகளை அங்கு வேலைகளுக்கு அனுப்புவதை பற்றி அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது. ராஜபக்ஸவின் அரசாங்கம் ஒரு பிடியில் அகப்பட்டுள்ளது. அதனால் வெறுமே மத்திய கிழக்கு வருமானத்தை விட்டுவிட முடியாது, ஆனால் நமது புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்புக்கான ஒரு பதிலை கண்டு பிடிக்க வேண்டும். இதுவரை மேற்கொண்ட சகல முயற்சிகளும், குறிப்பாக சவுதி அரேபியாவிடம் மேற்கொண்டவைகள்  யாவும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே உள்ளன. றிசானாவின் மன்னிப்புக்காக தூதுவர்கள், முன்னணி முஸ்லிம் அரசியல்வாதிகள், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு பொறுப்பான அமைச்சரின் தலைமையில் மேற்கொண்ட தூதுக்குழுக்கள், மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் மேற்கொள்ளப்பட்ட மேன் முறையீடுகள் யாவும் தோல்வியடைந்து விட்டன. தூதரக தொடர்புகள் மட்டுமே சாத்தியமான ஒரே வழி ஆனால் நாங்கள் ஒரு கல்லில் தலையை மோதிக் கொள்வதுபோல உதாசீனப் படுத்தப்பட்டு விட்டோம்.
ஏ.சி.எஸ். ஹமீதின் காலம் தொட்டே முஸ்லிம்களை  தூதுவர்களாக இந்த முஸ்லிம் நாடுகளுக்கு அனுப்புவது, வெளிநாட்டு அமைச்சகத்தின்  உத்தியாக இருந்தபோதும் அதனால் எந்த பயனும் கிட்டவில்லை .றிசானாவின் மரணதண்டனைக்குப் பிறகு தற்போதைய தூதுவரையும் கொழும்புக்கு திருப்பி அழைத்தாகிவிட்டது, ஆனால் எட்டு வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டு வருந்தி, இறுதியில் தலை துண்டிக்கப்பட்ட அந்த ஏழை சிறுமியை காப்பாற்ற ஜனாதிபதியின் வேண்டுகோள் உட்பட முக்கியமானதும் பிரபலமானதுமான  அனைவரினதும் முறையீடுகளும் தோல்வி கண்டிருக்கும், இந்தக் கட்டத்தில் இந்தச் சோகத்திற்காக அவரை பலிகடாவாக ஆக்குவது மோசமாrizana-2ன செயல்.
இதே நிலையிலுள்ள ஏனைய தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் கூட்டுச்சேர்ந்து ஒரு உத்தியை  திட்டுமிட்டு உருவாக்கும் வாய்ப்பு உள்ளது, ஆனால் அது இந்த புலம் பெயர் நாடுகளின் தொழிலாளர்களை தாங்கள் வரவழைப்பது, இந்த ஏழை நாடுகளுக்கு தாங்கள் ஏதோ உதவி செய்வதாக எண்ணும் சக்திமிக்க டொலர் தை;திருக்கும் சேக்குகளின் கோபத்தை தூண்டிவிடும்.
மகிந்த சிந்தனை போன்றவற்றில் உள்ள தலைவர்களின்  சிந்தனைகளில்  புலம்பெயர் தொழிலாளர்களின் கொள்கைகளில் அதை ஒரு செலவாணி உழைக்கும் தொழிலாக கருதாமல் ஒரு மனிதாபிமான அணுகுமுறைக் கண்ணோட்டத்தில் கவனத்தில் கொள்ளும் வகையில் மாற்றம் செய்வதற்கான வெளிப்பாடுகள் தெரிகின்றன. அனால் இவையாவும் கடினமான யதார்த்தமாகிய பிரதான வளந்தரும் அந்நியச் செலவாணி ஈட்டுதலை அபாயத்திற்கு உட்படுத்துவதால், அவை எதிர்காலத்துக்கு ஏற்ற வளமான பார்வைகளாக மட்;டுமே இருக்கும். பிரதான வளந்தரும் அந்நியச் செலவாணியை அபாயத்திற்கு உள்ளாக்காமல் தடுப்பதா, அதேவேளை ஸ்ரீலங்கா புத்திரிகளின் உயிரற்ற உடல்கள் மற்றும் சிலர் உயிரோடு சித்திரவதைகளை அனுபவித்ததுக்கான சான்றுகளோடு விமானமூலம் நாடு திரும்புவது போன்ற சம்பவங்களை பார்த்துக் கொண்டிருப்பதா என்பதில் எதை தேர்வு செய்வது என்பது அரசாங்கத்தின் கடினமான தேர்வாக இருக்கும்.
ரிசானாவின் விதியை எண்ணி எங்களது இரத்தம் கொதிக்கும் அதேவேளை, இதேபோன்ற கொடுந் துன்பங்களை எதிர்கொள்ள நாம் இன்னும் ஆயிரக்கணக்கான ரிசானாக்களை தொடர்ந்து அனுப்ப போகிறோமா?
மடமைகளைச் செய்து கொண்டு அதேநேரம் அதன் விளைவுகளைக் கண்டிக்கும் ஸ்ரீலங்காவின் இரட்டைச் சிந்தனைதான் இதற்கான பதிலா?
முதலைகள்
 வியாழக்கிழமை டெய்லி நியூஸ், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (ஐ.யு.சி.என்.) ஸ்ரீலங்காவில் இந்த வருடம் மே மாதம் நடைபெறவுள்ள உலக முதலைகள் மாநாட்டுக்கான அனுசரணையை வழங்கியுள்ளதாக ஒரு செய்தியை தாங்கி வெளிவந்திருந்தது. இந்த நிகழ்வுக்கான இடமாக ஏன் ஸ்ரீலங்கா தேர்வு செய்யப்பட்டது? ஒருவேளை முதலைக் கண்ணீர் வடிப்பதில் நாங்கள் சர்வதேசப் புகழ் பெற்றிருக்கிறோம் என்பதினால் போலும்.
(நன்றி: சண்டே லீடர்)
தேனீ மொழிபெயர்ப்பு; எஸ்.குமார்
 நன்றி தேனீ


 

 






 

இராணுவத்திலிருந்து 71458 பேர் தப்பியோட்டம்

இராணுவத்தை விட்டு கடந்த ஆண்டில் 71ஆயிரத்து 458 பேர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2012ம் ஆண்டின் முதல் காலாண்டில் பணிக்குத் திரும்பத் தவறிய படையினரின் எண்ணிக்கையே 71ஆயிரத்து 458 பேராகும். இவர்களில் 33ஆயிரத்து 532 பேர் இராணுவ நடைமுறைகளின் கீழ், இராணுவத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தை விட்டுத் தப்பியோடியுள்ளபடையினரைத் தேடிப்பிடித்துக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.ன்றி தேனீ

 

 

 மஞ்சள், சிவப்பு, பச்சை மழைக்கான காரணம் தெரியுமா?

By General
2013-01-17

நாட்டில் பல பாகங்களில் அண்மைகாலமாக பெய்து வரும் மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் கறுப்பு மழை வீழ்ச்சிகளுக்கு தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் இரசாயனப் புகையே காரணம் என விஞ்ஞானி அனுர சி.பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டில் பெய்த மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் கறுப்பு மழை தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் விஞ்ஞானி அனுர சி.பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.


தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் இரசாயனப் புகைகள், நுண்ணுயிர்களுடன் கலந்து வாயுமண்டலத்தைச் சென்றடைவதாலேயே இந்த மழை பெய்கின்றது. இதனாலேயே நிறங்களில் மழை பெய்கின்றது. இதற்கும் எரி நட்சத்திர மழைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

இதேவேளை இதற்கு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், "அசிட்' மழையும் பெய்ய சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நன்றி வீரகேசரி 

 

 

மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்
By General
2013-01-17

பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு மஹர நீதவான் நீதிமன்றுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள களனி பிரதேச சபை உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித மடவலவின் கொலை சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள் ஐந்து பேர் தற்போது மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நீதிமன்றுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள களனி பிரதேச சபை உறுப்பினர்கள் அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு பதாதைகளை ஏந்தியுள்ளனர்.
    நன்றி வீரகேசரி 

  

 யாழ். தேவி புகையிரதச் சேவை செப்டெம்பர் மாதம் யாழ்ப்பாணத்தை சென்றடையும்: மகாலிங்கம்

By General
2013-01-17 10:08:51

 
யாழ். தேவி புகையிரதச் சேவையானது இவ்வருடம் செப்டெம்பர் மாதம் யாழ்ப்பாணம் வரை சென்றடையும் என இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் வி.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப் பாதை அமைக்கும் பணிகளை இந்தியாவின் “இர்க்கோன்” என்ற நிறுவனமே தற்போது மேற்கொண்டு வருகின்றது. எனவே இவ்வருடம் யாழ்.தேவியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியும் என்றார்.

யாழ்ப்பாணத்திலுள்ள துணைத்தூதரகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.நன்றி வீரகேசரி 

 

 

 

 

 

 

இப்போது ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு போராளியாக காட்சிதரும் ஷிராணி பண்டாரநாயக்காவின் கண்ணியமும் கௌரவமும் புதிய சட்ட மற்றும் அரசியல் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம்.
 -  என்.சத்தியமூர்த்தி
shirani-5பாராளுமன்றத்தில் குற்றப் பிரேரணை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப் பட்டதன் தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, நாட்டின் பிரதம நீதியரசரான ஷிராணி பண்டாரநாயக்காவை பதவி நீக்கம் செய்துள்ளார்.
கடந்த வார முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானம், இந்த விடயத்தில் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு, நான்கு சிறப்பு பிரதிநிதிகளிடம் அவர்களின் கருத்தை அறிவதற்காக இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் என்கிற ஜனாதிபதியின் முந்திய அறிவிப்பு வெறும் பொய்யான வார்த்தைகள் என்பதை நிரூபணமாக்கியுள்ளது. ஆனால் அப்போதும் பாராளுமன்ற தீhமானத்தின் பிணைப்பு இயல்பை அரசியல் அமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான சிறிய விடயத்தையாவது அவர்களால் செய்யக்கூடியதாக இருந்திருக்கும்.
பிரதம நீதியரசர் மீதான குற்றப் பிரேரணை கொண்டு வரப்பட்ட ஆரம்பம் முதலே,அதன் முடிவின் ஒவ்வொரு திருப்பமும் மற்றும் அது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஜனாதிபதி ராஜபக்ஸ மற்றும் அவரது அரசியல் ஆலோசகர்களின் கைகளிலேயே தங்கியிருந்தது, என்பது வெகு தெளிவாகவே தெரிந்தது. ஆளும்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - பொதுசன ஐக்கிய கூட்டு முன்னணி, என்பனவற்றைச் சேர்ந்த 117 பாராளுமன்ற அங்கத்தவர்களால் முன்மொழியப்பட்ட பாராளுமன்ற தீர்மானத்தில் ஷிராணி பண்டாரநாயக்கா மீதான குற்றப் பிரேரணைக்கு 14 காரணங்கள் கூறப்பட்டிருந்தன, மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழு மூன்று குற்றங்களை மட்டுமே உறுதி செய்துவிட்டு எனையவற்றை தொட்டுப் பார்க்கவோ அல்லது விசாரணை செய்யவோ முயற்சிக்காமல் விட்டுவிட்டது.
எதிர்கட்சிகள் பிளவு பட்டிருந்த அதேசமயம் பாராளுமன்றத்தின் மீயுயர் தன்மை என்கிற மிகப் பெரிய பிரச்சினையில் அரசாங்கத்துடன் ஒன்றுபட்டு நின்று ,இந்த விடயத்தின் செயல்முறைக் குறைவு சம்பந்தமான எந்தவித கருவூல வாதங்களுக்கும் இடமில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக பாரம்பரிய ஜனநாயகத்தின் மூன்று சொத்துக்களில் மூன்றாவதான நீதித்துறை, பாராளுமன்ற நிலையியல் கட்டளைகள், பாராளுமன்ற விசாரணை மூலமாக ஒரு முன் குற்றவியல் பிரேரணையை மேற்கொள்வதற்கு போதுமானவை அல்ல என்று தீர்ப்பு வழங்கியதன் பின்னரும், அவர்களின் கைகளைப் பலப்படுத்தப் பட்டன. இந்த நோக்கத்துக்காக ஒரு தனிச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்தது.
நீதிமன்றக் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது குற்றப் பிரேரணை நடவடிக்கைகளில்; தீர்ப்பினை வழங்கும் நீதித்துறையே இத்தகைய அரசியற் பிரச்சினைகளுக்கான இறுதியான நடுவர் என்பது. பாரம்பரியமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைப்படி தற்போதைய தீர்ப்பு நீண்ட கால பின்விளைவுகளை ஏற்படுத்தும். 17வது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கி, 18வது அரசியலமைப்பு திருத்தத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய பின்னர், பல கட்சிகளை கொண்ட அரசியலமைப்பு சபை ஒன்று அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமனம் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. குற்றப் பிரேரணை வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, குறிப்பிட்ட சட்ட நிலைகள் மற்றும் நீதித்துறை தீர்ப்புகள் என்பனவற்றை தொலைநோக்கு கண்ணோட்டத்தில் ஒரு மறுபார்வை பார்க்கவேண்டியதாக உள்ளது.
18 ஏ மற்றும் 17 ஏ என்பனவற்றுக்கு இடையில் வேறுபட்ட கோணங்களாக இருந்தாலும்கூட, அரசியல் ரீதியாக குற்றப் பிரேரணை, ஆளும் கூட்டணி அதேபோல எதிர்கட்சிகள் என்பனவற்றில் பிளவுகளை எற்படுத்தியுள்ளது. பாரம்பரிய இடதுசாரிகளான இரண்டு மூத்த அமைச்சர்கள் டியு குணசேகரா மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் பிரதானமாக இந்த தீர்மானத்துக்கு வாக்களிக்காமல் நடுநிலை வகித்த அதேவேளை, அவர்களுடன் கைகோர்த்து நிற்கும் தோழர்களான வாசுதேவ நாணயக்காரவும் மற்றும் ஒருவரும் அதற்கு ஆதரவாக அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களித்துள்ளார்கள். தேசிய பட்டியல் பாரளுமன்ற உறுப்பினரும் மற்றும் ஆளும் கூட்டணியில் உள்ள ஸ்ரீ.ல.சு.க தலைவருமான ராஜிவ விஜயசேகராவும் நடுநிலை வகித்துள்ளார். எதிர் கட்சிகளும் கருத்துக்கள் மற்றும் தந்திரோபாயங்கள் என்கிற நிலையில் பிளவுபட்டு நின்றன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, நீண்ட காலமாக அரசாங்கத்துடன் சேர்ந்துள்ள அதன் அங்கத்தவர்கள் உட்பட கட்சியில் உள்ள கிளர்ச்சியாளர்களர்கள், ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிவரும் என்று சொல்லி வருகிறது.Mohan Peris
முதலில். பிரதம நீதியரசர் பதவி உட்பட அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கான பெயர்களை பரிந்துரை செய்யும் அதிகாரம், முன்னர் இருந்தது போல சுயாதீன அரசியலமைப்பு சபைக்கு அல்லாது, 18வது திருத்தப்படி வித்தியாசமாக பாராளுமன்ற பேரவை ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனினும் சுயாதீன அரசியலமைப்பு சபைக்கு உள்ளது போலல்லாது, தற்போதைய அமைப்பு முறைக்கு நிறைவேற்று ஜனாதிபதியின் தெரிவை கட்டாயமாக ஏற்றுக்கொள்ளும் அனுமதி வழங்கப்படவில்லை அதன் கருத்து புதிய பிரதம நீதியரசரின் நியமனம் உச்ச நீதிமன்றத்தில் சவால் விடுக்கும் சாத்தியத்தை கொண்டிருக்கவில்லை என்பதாகும். எனினும் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதம நீதியரசர் தான் கடைசிநாள் மட்டும் வகித்து வந்த தனது பதவிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றப் பிரேரணையை எதிர்த்து  நீதித்துறையின் முன்னால் நீதி கோரும் தனி உரிமையை கொண்டுள்ளார். நிலையியல் கட்டளைகளுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பும் அவரிடம் உள்ளது. அரசாங்கத்தின் முயற்சிகள் உணர்த்தப்படும் அடிப்படையில், இந்த நடவடிக்கைகள் காரணமாக, தனது கண்ணியம் மற்றும் கௌரவம் என்பனவற்றை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலைக்கு தான் தள்ளப்பட்டதாக அரசாங்கத்துக்கு எதிராக அவரால் சவால்விட முடியும்,இந்த குற்றப் பிரேரணைக்கு எதிராக அவர் சவால்விட மாட்டார் என்று எதைக் கொண்டும் இன்னும் தீர்மானம் செய்துவிட முடியாது.
ஸ்ரீலங்கா என்கிற தேசத்தை பொறுத்த மட்டில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பின்தாங்கிய இந்த குற்றப் பிரேரணை சம்பந்தமான நிறைவேற்றுக் கட்டளையை எதிர்க்கும் எந்த சவாலும், நீதித்துறைக்குள்ளும் மற்றும் அதனாலும் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும். இந்த விடயம் வெறும் செயல்முறை தன்மையாக மட்டும் இருந்தாலும்கூட, நிலையில் கட்டளைகளின் வழியில் அரசாங்கம் சிக்கிக்கொள்ளும்போது, தனக்கு மேலுள்ள உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்தின்படி செயலாற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம், வாக்குறுதி வழங்கிய பின்னர்,அரசாங்கத்திடம் பாராளுமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டு, குற்றப் பிரேரணை சம்பந்தமான புதிய சட்டங்களை நிறைவேற்றி அதிலிருந்து விடுபட அரசாங்கத்தால் இன்னமும் இயலுமானதாக இருக்கும்.
பிரதம நீதியரசர் பண்டாரநாயக்கா இன்னமும் ஒரு தசாப்தத்துக்கு மேலான காலம் சேவையாற்றக்கூடிய தகுதியை கொண்டிருப்பதால், குற்றவியல் தண்டனையை ஒரு புதிய வடிவத்தின் கீழ் நிறைவேற்றியிருக்க முடியும். தற்போது ஜனநாயகத்தின் பாதுகாவலர் அல்லது அதற்காக போராடுபவராக காட்சி தரும் பிரதம நீதியரசரின் கண்ணியம், மற்றும் கௌரவம் என்பன அரசியலமைப்பின்படி பின்தாங்கும் சட்ட மற்றும் அரசியல் ரீதியான புதிய தாக்குதலின் கீழ் அகப்படலாம். குறிப்பாக அரசியல் எதிராளிகள் இப்போது அவருடன் நீதித்துறை சுதந்திரத்துக்கு மேலாக பாராளுமன்ற மீயுயர் தன்மை பற்றிய விடயம் சம்பந்தமாக வாதாடி வருவதால், அதன்பின்னர் அவரது நிலை தற்காத்துக் கொள்ள முடியாத ஒரு நிலையை எட்டிவிடும்.
பிரதம நீதியரசரை வெளியேற்றுவதில் உறுதியாக உள்ள அரசாங்கம்எப்படியாயினும் இது அப்படியான ஒரு நிலையை எட்டி விடாது. பிரதம நீதியரசரின் குற்றப் பிரேரணையில், புதிய விதி எதனையும் பின்பற்றப் போவதில்லை என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. உத்தியோகபூர்வ ஆதாரங்களை மேற்கோள்காட்டி வெளிவந்துள்ள ஸ்ரீலங்கா ஊடகங்களின் செய்திகள், வரும் ஏப்ரல் மாதம்வரை பண்டாரநாயக்கா அம்மையாருக்கு கால அவகாசம் வழங்க அரசாங்கம் தயாராக இல்லை, வெள்ளி மாலை பாராளுமன்றத்தில்; குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதுமே பதவியை இராஜினாமா செய்யும்படி அவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றன. எனினும் அறிக்கைகளின்படி ஜனாதிபதி பிரதம நீதியரசர் பண்டாரநாயக்காவின் இராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தார், அப்படி நடந்தால் குற்றவியல் கட்டளையில் கையெழுத்திட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. இராஜினாமா செய்யும் பட்சத்தில் பண்டாரநாயக்காவால் குறைந்தது தனது ஓய்வூதிய நலன்களை பாதுகாக்க முடிந்திருக்கும், குற்றவியல் தண்டனையின் பின் அது முடியாது. குற்றவியல் தண்டனையின் பின் ஷிராணி பண்டாரநாயக்காவால் ஸ்ரீலங்காவில் ஒரு சட்டத்தரணியாக கடமையாற்ற முடியுமா என்கிற ஒரு கேள்வியும் எழுகிறது. தற்சமயம் பெரும்பான்மையான  சட்டத்தரணிகள் மற்றும் நீதித்துறையில் சகல மட்டங்களில் உள்ளவர்களும் அவருக்கு பின்னால் உள்ளனர், ஆனால் ஆகக்கூடி அவர் அலுவலகத்தை விட்டு வெளியேறியவுடன் நிலமை மாறக்கூடும். அங்கு ஒரு புதிய பிரதம நீதியரசர் வரும்போது விடயங்கள் நிச்சயமாக ஒரு புதிய திருப்பத்தை அடையக்கூடும். எனினும் ஒரு பகுதி சட்டத்தரணிகள் மற்றும் அரசியல்வாதிகள் தாங்கள் புதிய பிரதம நீதியரசரை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளார்கள், ஆனால் அவர்களது எண்ணிக்கை பெரிதாக தென்படவில்லை.
பிரதம நீதியரசரின் சவால்
தற்போது தனக்கு சாதகமாகவுள்ள உயர் நீதிமன்றம் மற்றும் மேன்மறையீட்டு நீதி மன்றங்களின் தீர்ப்புகளின் அடிப்படையில் குற்றவியல் தண்டனையை எதிர்த்து, ஷிராணி பண்டாரநாயக்கா நீதித்துறையை அணுகுவாரானால் நிலமை மோசமான ஒரு வழிக்கு திரும்பக்கூடும். இது மேலும் பல விளைவுகளையும் கூட ஏற்படுத்தலாம். நீதித்துறையால் நிறைவேற்று அதிகாரமுள்ளவரையும் சட்டவாக்க அதிகாரமுள்ளவர்களையும் நீதிமன்ற அவமதிப்பு செய்த குற்றத்துக்கு வலிந்து இழுக்கலாம். ஷிராணி பண்டாரநாயக்காவின் பின்னாலுள்ள நீதித்துறையை சேர்ந்தவர்கள், சட்டத்தரணிகள், அரசியற்கட்சிகள்,மற்றும் சமூக அமைப்புகள் என்பனவற்றின் அங்கத்தவர்களின் உரிமைகளை மீறல் செய்ததாக பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு எதிராகவும் பிரச்சினை திரும்பலாம்.
குற்றப் பிரேரணை தொடர்பான பாராளுமன்ற விவாதத்துக்கு முன்பும் அதன் பின்னரும் அரசாங்க அங்கத்தவர்கள், நீதித்துறையின் ஒரு பகுதியினர்,; அரசியல் எதிராளிகள்,மற்றும் சாத்தியமுள்ள வெளிச் சக்திகள் ஆகியன ஒன்றுசேர்ந்து ஸ்ரீலங்காவின் உறுதிப்பாட்டை சீர்குலைக்கவும் மற்றும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும் கூட்டுச் சதி செய்கிறார்கள் என குற்றம் சாட்டி வந்துள்ளார்கள். யுத்தத்துக்கு பின்பு நடந்த 2010 ஜனாதிபதி தேர்தலின் போதும் இதே குற்றச்சாட்டுகளை, ஆனால் நீதித்துறையை அதில் சோக்காமல் முன்வைத்திருந்தார்கள். பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியபடி அப்போதைய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியான, ஈழப்போர் - 4 ன் இராணுவ கதாநாயகன், சரத் பொன்சேகா, தனது பதவியை துறந்து போரின் அரசியல் கதாநாயகன் ஜனாதிபதி ராஜபக்ஸவுக்கு எதிராக தேர்தல் களமிறங்கினார்.
அதன்பின் பொன்சேகாவின் விடயத்தில் என்ன நடந்தது என்று சரித்திரம் பேசும். அது இரண்டு இராணுவ நீதிமன்ற விசாரணைகளின் மூலம் தங்களின் முன்னாள் இராணுவ தளபதி குற்றவியல் குற்றங்களுக்கான குற்றவாளியாக காணப்பட்ட ஒரு இழிவான  பாடத்தையும் உள்ளடக்கியதாகவும் இருந்தது. அந்த நேரம் இராணுவ நீதிமன்ற நடைமுறைகளை நீதித்துறை சரியெனவும் ஏற்றுக் கொண்டது. தற்போது சிறையிலிருந்து வெளிவந்திருக்கும் பொன்சேகா, ஜனநாயக தேசிய முன்னணிக்கு தலைமை தாங்குகிறார், அவர் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு தனது கட்சி மூலம் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். எனினும் ஷிராணி பண்டாரநாயக்கா  தன்னுடைய போராட்டத்தில் அரசியல்வாதிகளை ஈடுபடுத்துவதை தூர ஒதுக்கி வைத்துள்ளார்.
ராஜபக்ஸவின் தலைமைத்துவம், இந்த குற்றப் பிரேரணை மூலமாக தங்கள் கண்களுக்கு  சங்கடம் தரும்; நடவடிக்கையில் தானே வலியச்சென்று விழாது என்று சர்வதேச சமூகம் நம்புமானால், அது அப்படியல்ல. பொன்சேகா விடயத்திலும் அவரது 2010 தேர்தல்  தோல்விக்குப் பின்னர் சட்டப் பிரச்சினைகள் அவரைச் சூழ்ந்து கொண்டபொழுதும், அவர்கள் இதேபோன்ற முறையீடுகளைச் செய்தார்கள். இருந்தபோதும் மேற்கு தொடர்ந்தும் ஸ்ரீலங்காவுடன் தொடாந்தும் வியாபாரங்களில் ஈடுபட்டு வருகிறது. அதே போலத்தான் சீனாவும், ஈழப் போர் - 4 முடிவடைந்ததும் பொன்சேகா அந்த நாட்டுக்குத்தான் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
உலகின் பனிப்போர் காலத்தின் பின்னர் பெரிய சக்திகளின் இராஜதந்திர வரையறைகளை கொழும்பு நன்கு புரிந்து கொண்டதுபோலத் தெரிகிறது, மற்றும் தனது அரசியல் இலாபத்துக்காக எப்படி சுரண்டல் நடத்துவது என்பதையும் அது தெரிந்து வைத்துள்ளது. கடந்த வருடம் மே மாதம் ஜெனிவாவின் ஐநா மனித உரிமைகள் பேரவையில் வாஷிங்டனின் கௌரவ பிரச்சினை காரணமாக, பொறுப்புக் கூறல் விடயங்கள் சம்பந்தமாக உரத்த தொனியில் எழுப்பபட்ட அமெரிக்காவின் தீhமானமும் அப்படிப்பட்டதுதான். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் மனித உரிமைகள் பதிவு சம்பந்தமாக கடந்த நவம்பரில் நடந்த மீளாய்வினை ஒப்பிட்டு நோக்கும்போது அது ஒரு பழகிப்போன விவகாரமாகத்தான் உள்ளது.
வரப்போகும் மார்ச்சிலும் ஐநா மனித உரிமைகள் பேரவை, அரசாங்கம் நியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சம்பந்தமாக கடந்த மார்ச் முதல்; இடம்பெற்ற நடவடிக்கைகள் ஏதாவது இருப்பின் அதுபற்றிய ஸ்ரீலங்காவின் தேர்ச்சி அறிக்கை சம்பந்தமாக கலந்தாய்வு செய்ய எதிர்பார்த்துள்ளது. எனினும் உலகளாவிய நடவடிக்கைகளின் வரையறைகளை நன்கு அறிந்துள்ள ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு கால நீட்டிப்புக் காரணம் சற்று ஆறுதலை அளிக்கலாம். பிரதம நீதியரசர் மீதான குற்றப் பிரேரணையும் மற்றொரு மனித உரிமை மீறல் சம்பவமாக  பரந்த அளவில் இதில் பார்க்கப்படக் கூடும்,ஆனால் சர்வதேச சமூகம் போர்க்காலத்தில் நடைபெற்ற குற்றங்கள் பற்றி மனித உரிமைகள் முன்னணியினருடன் அதிகம் கவனிக்கப்பட வேண்டி உள்ளதால், இது போருடன் தொடர்பு பட்டது அல்லது போர் நடவடிக்கையில் இழைத்த குற்றமாக இல்லாதபடியால் அதைப்பற்றி  பெரிது படுத்தாமல் விட்டுவிடலாம்.
எங்கு பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு?
இப்போது அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் விளைவு என்னவென்றால் பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டை ஸ்ரீலங்காவில் நடத்துவது பற்றி அதன் உறுப்பு நாடுகள் முடிவெடுக்க வேண்டிய விடயம்தான். பொதுநலவாய நாடுகளின் தலைமை நாடாக உள்ள ஐக்கிய இராச்சியம் இந்த குற்றப் பிரேரணை சம்பந்தமாக தனது கவலையை வெளியிட்டுள்ளது, அதே போலத்தான் அமெரிக்காவும், அது இதில் அங்கத்துவம் வகிக்காத போதும் சர்வதேச விவகாரங்களில் அதற்குள்ள செல்வாக்கினை ஒருபோதும் குறைவாக மதிப்பிட முடியாது.
பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் ஒரு முன்னணி நாடாக உள்ள கனடா, பிரதம நீதியரசர் விவகாரத்துக்கு முன்னரே, இனப்பிரச்சினை, யுத்தம் மற்றும் வன்முறை, மற்றும் பொறுப்புக் கூறலை அடிப்படையாக கொண்ட விடயங்கள் சம்பந்தமாக பிரச்சினையை கிளப்ப போவதாக ஏற்கனவே அச்சுறுத்தி வருகிறது.
அவுஸ்திரேலியாவை பொறுத்த மட்டில் எப்படியாயினும் குற்றப் பிரேரணைக்கு பின்னரும் அது மாநாட்டில் கொழும்புக்கு பின்துணை வழங்கும்.முன்னைய இரு நாடுகளிலும் தேர்தலை பொறுத்தமட்டில் கணிசமானளவு புலம்பெயர் ஸ்ரீலங்கா தமிழர்களைக் கொண்ட தேர்தல் தொகுதிகள் உள்ளன. அவுஸ்திரேலியாவும், ஸ்ரீலங்கா தமிழர்கள் மனிதக் கடத்தல் மூலமாக நாட்டுக்குள் ஊடுருவுவதை தடுப்பதற்கு கொழும்பின் ஒத்துழைப்பை நாடுகிறது.
இதன் பின்னணி எப்படியிருந்தாலும், பிரதம நீதியரசரின் குற்றப் பிரேரணையின் விளைவுகள் காரணமாக ஸ்ரீலங்கா இனப்பிரச்சினை சம்பந்தமாக கலந்துரையாடுவதையோ அந்த நடவடிக்கை சம்பந்தமாக விவாதிப்பதையோ நிறுத்தி வைத்துள்ளது, இந்த விடயத்தில்தான் சமீபத்தைய வருடங்களில் பாராளுமன்ற தெரிவுக்குழு சம்பந்தமாக முதல்முறையாக பேசப்பட்டது. அதே போலத்தான் சர்வதேச சமூகமும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவது பற்றிய விடயங்களை திரும்பவும் வற்புறுத்தாது, அரசாங்கம் வழங்கியுள்ள கால எல்லையை அப்படியே ஏற்றுக் கொண்டதைப்போல தெரிகிறது. இதற்கிடையில் குற்றப் பிரேரணையுடன் தொடர்புடைய சாத்தியமான ஒரு நீதித்துறையின் தலையீடு காரணமாக இந்த இறுதிக் கட்டத்தில் பெருகி வரக்கூடிய எந்தவிதமான அரசியலமைப்பு  நெருக்கடிகளினாலும் முன்னோடியற்ற உள்நாட்டு பின்விளைவுகளுக்கு இன்னமும் இடம் உண்டு.அதனால்தான் அதை தடுப்பதில் அரசு முனைப்பாக உள்ளது. முதலில் பொதுநலவாய நாடுகளின உச்சி மாநாடு, மிகுதி அதை பின்தொடர்ந்து செல்லவுள்ளது.
(இந்த கட்டுரை எழுத்தாளர்,ஒப்சேவர் ரிசேர்ச் பவுண்டேசனின் ஒரு மூத்த உறுப்பினர்)
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார் நன்றி தேனீ 

No comments: