ஆஸ்திரேலிய தலை நகரின் அழகில் மயங்க ஆசையா? -


 .
எழுத்துருவாக்கம்: செ.நிரூபன்

இப்போதே பறந்து வாருங்கள்!

ஆஸ்திரேலியாக் கண்டத்தின் தலை நகராக விளங்கும் இடம் தான் கான்பரா எனும் அழகிய நகராகும். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா (மெல்பேண்) மாநிலத்திற்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கும் (சிட்னி) இடையில் இந்த அழகிய நகரம் அமைந்துள்ளது.1908ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் தலை நகரமாக இந்த கன்பரா நகரம் பிரகடனப்படுத்தப்பட்டது. மெல்பேணிலிருந்து 640km தொலைவிலும், சிட்னியிலிருந்து 280km தொலைவிலும் இந் நகரம் அமைந்திருக்கிறது. சுருங்க கூறின் ஓர் நாட்டின் அரசியல், வெளிவிவகாரா விடயங்களிற்கென்று தனியாக அமைக்கப்பட்ட, வடிவமைக்கப்பட்ட நகராக இந்த கன்பரா விளங்குகின்றது. 
கன்பரா மாநிலத்தில் அதிகளவில் உலக நாடுகளின் தூதரகங்களும், அரசியல் தலமை அலுவலகங்களும், தலமைச் செயலகங்களும் அமைந்திருக்கின்றன. மக்கள் தொகை அண்ணளவாக மூன்றரை இலட்சமாகும். கன்பரா நகரமானது ஆஸ்திரேலியாவின் ஏனைய நகரங்களை விடச் சிறப்பாகவும், விசேட கட்டட வேலைப்பாடுகளுடனும் அமைக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்க அரசியல் தலமைப் பீடமான வாஷிங்டன் டீசியினைப் போன்று கன்பரா நகரும் அதி உயர் தொழில் நுட்ப டிசைன் வேலைப்பாடுகளுடன் அமெரிக்க கட்டட கலை நிபுணர் Walter Burley Griffin அவர்களின் மேற்பார்வையின் கீழ் கட்டி முடிக்கப்பட்டது.


கன்பரா நகரமானது ஆஸ்திரேலியாவின் ஏனைய நகரங்களைப் போல் அல்லாது மென்மையான, குளிரான காலநிலை கொண்டதாக விளங்குகின்றது. இங்கே உங்கள் கண்ணைக் கவர்ந்திழுக்கும் அம்சங்களாக பின் வரும் விடயங்கள் விளங்குகின்றன,
*Parliament House Of Australia (ஆஸ்திரேலிய பாராளுமன்றம்)
*High Court Of Australia (தலமை நீதிமன்றம்)
*Black Mountain Tower.(கன்பரா நகரை முழுமையாக ரசிக்க கூடிய உயர்ந்த கோபுரம்)

*Discovery Drive - Space Communication Complex (பூமியிலிருந்து விண்ணில் நடப்பவற்றை ஆராயும் ஆராய்ச்சி மையம்)
*Australian National Gallery (ஆஸ்திரேலியாவின் தேசிய காட்சிப் பீடம்)
*Australian Institute of Sport
* Australian Botanic Garden
*Australian War memorial Place / Anzac Pared
*Balloon Aloft
*Blundells Cottage
*Australian Art Space
*Australian National Museum
*Gold Greek Village
*Australian National Park
*National Archives of Australia
*Australian National Film And Archives
*National Library of Australia
*National Zoo And Aquarium
*Royal Australian Mint
*Old Parliament House
*Australian Government Funded Media Centre (SBS & ABC Corporation)


இதனை விட இன்னும் பல சுவாரஸ்யமான இடங்கள் இருக்குங்க. கன்பரா போகும் போது கண்டிப்பாக இந்த இடங்களைப் பார்க்க மறந்திடாதீங்க. இந்த இடங்களைப் பற்றியும், இவ் இடங்களின் சிறப்புக்களைப் பற்றியும் படங்களுடன் உங்களுக்கு ஒவ்வோர் பதிவுகள் வாயிலாகவும் பகிர்கிறேன்.

ஆஸ்திரேலியாவின் பூர்விக இனங்களுள் ஒன்றான Ngabri இன மக்களின் பேச்சு மொழியில் பொதுவாக ஒன்று கூடும் இடத்தினை Kambera என அழைப்பார்கள். இந்தச் சொல்லில் இருந்து மருவியது தான் கன்பரா எனும் சொல்லாகும். கம்பீராவை கன்பரா ஆக ஆஸ்திரேலியர்கள் தேர்ந்தெடுத்து தம் தலை நகரத்திற்குச் சூட்டியுள்ளார்கள். 
கன்பரா நகரத்தினை Black Mountain Tower / Telstra Tower இல் இருந்து 360 பாகை வியூவில் பார்க்க முடியுமுங்க. அப்படிப் பார்க்கும் போது கன்பரா நகர் எப்படித் தெரியும் என்பதற்கு சான்றாக கீழே உள்ள படங்களை இணைத்திருக்கிறேன்.2 comments:

Ramesh said...

கன்பராவில இவ்வளவு விசயம் ஒளிஞ்சு கிடக்கெண்டு நினைக்க ஆச்சரியமாய் இருக்கின்றது. நன்றி நிருபன் படங்கள் அந்தமாரி தூள் கிளப்புது. பூப்புனித நீராட்டு விழாவிற்கு புக் பண்ணலாமோ? கி கி கி...

ரமேஸ்

புரட்சி இணைய வானொலி said...

RameshJanuary 21, 2013 10:03 PM
கன்பராவில இவ்வளவு விசயம் ஒளிஞ்சு கிடக்கெண்டு நினைக்க ஆச்சரியமாய் இருக்கின்றது. நன்றி நிருபன் படங்கள் அந்தமாரி தூள் கிளப்புது. பூப்புனித நீராட்டு விழாவிற்கு புக் பண்ணலாமோ? கி கி கி...

ரமேஸ்//

மதிப்பிற்குரிய நண்பருக்கு, நன்றி, இன்னும் அதிக விடயங்கள் இருக்கிறது. வரும் வாரங்களில் எழுதுகிறேன்.
புக் பண்ணிடலாம் தான். Appointment கிடைக்கனுமே?