கிழக்கு மாகாணத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பணிகள்



இலங்கையில் நீடித்த போரில் பெற்றவர்களை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு  அவுஸ்திரேலியாவிலிருந்து உதவிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வும் தகவல் அமர்வும் மாணவர் ஒன்று கூடலும் அண்மையில் திருகோணமலை, செங்கலடி, கல்முனை ஆகிய பிரதேசங்களில் நடைபெற்றன.
கடந்த பலவருட காலமாக அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் திருகோணமலையில் நிலாவெளியில் இயங்கும் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் கிழக்கு பல்கலைக்கழகத்திலும் பல மாணவர்களுக்கு உதவிவருகிறது.



திருகோணமலையில் நிலாவெளியில் கடந்த தைப்பொங்கல் தினமன்று நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் பணிமனையில் திருகோணமலை மாவட்ட தலைவர் திரு. ரவீந்திரகுமார் தலைமையில் நடந்த மாணவர் நிதிக்கொடுப்பனவு மற்றும் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் நிதியத்தின் ஸ்தாபகரும் நடப்பாண்டின் துணை நிதிச்செயலாளருமான திரு. லெ.முருகப10பதி உரையாற்றினார்.


செல்வி. நளினி வரவேற்புரை நிகழ்த்தினார். செல்வி சிந்துஜாவின்  வரவேற்பு நடனத்துடன் மாணவர் தகவல் அமர்வு ஆரம்பமானது. திருமதி ராதிகா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.


கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவும் தகவல் அமர்வும் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் ஸ்தாபகர் திரு. த. கணேஷ் தலைமையில் செங்கலடி புனித அந்தோனியார் தேவாலய சமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலத்தில் மாணவர் தகவல் அமர்வு வித்தியாலய அதிபர் திருமதி சிவமணி நற்குணசிங்கம் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. குறிப்பிட்ட நிகழ்வுகளில் சில காட்சிகளை படங்களில் காணலாம்.








No comments: