27- குறளில் குறும்பு – மாடு, பசு மாடு

.
வானொலி மாமா நா மகேசன் எழுதிய குட்டி நாடகம்


ஞானா அப்பா.....மாடு எண்ட சொல்லுக்குக் கருத்து என்ன அப்பா?

அப்பா ஏன் ஞானா? உனக்கு மாட்டுக்குப் பொருள் தெரியாமல் என்னை
                         வந்து கேட்டு வம்புக்கு இழுக்கிறியே.......குழுமாடு மாதிரி.

ஞானா        பாத்தியளே! பாத்தியளே! மாடு எண்டால் எத்தினையோ பொருள்
                      இருக்குது. அதிலை ஒரு பொருளை நீங்களே சொல்லிப்போட்டியள்.
                      நாலுகாலுள்ள  மிருகம் மாடு எண்டு. ஆனால் சொஞ்சம்
                       இன்சொல்லாய்ச் சொல்லியிருக்கலாம். பசு மாடு  எண்டு.

அப்பா உன்தரவளியோடை மௌன மொழியிலை பேசியிருக்க வேணும்.
                      எனக்கும் நாக்கைஅடக்கத் தெரியேல்லை.

ஞானா கோவியாதையுங்கோ அப்பா......மாடு எண்;ட சொல்லுக்கு வேறை
                     என்ன பொருள்கள் இருக்கப்பா?

அப்பா திருக்குறள் புத்தகம் வாங்கியந்த வைச்சது போதும். இனி ஒரு தமிழ்
                        அகராதி....அகராதி எண்டால் என்னெண்டு தெரியுமே dictionary
                        அதுதான் ஒண்டு வாங்கியந்து தரவேணும் உனக்கு.

ஞானா அப்பா நான் பகிடிக்குக் கேக்கேல்லை. விளக்கத்துக்குத்தான்
                          கேக்கிறன் சொல்லுங்கோ அப்பா.



சுந்தரி என்னப்பா......அவள் பிள்ளை என்னவோ கேக்கிறாள் நீங்கள்
                      சொல்லுறியள் இல்லை என்ன சங்கதி எண்டு சொல்லுக்கோ நான்
                      சொல்லிறன்.

அப்பா நல்ல நேரத்திலை வந்தீர் சுந்தரி. நீரும் உம்மடை மகளும் கதைச்சுத்
                     தெளியுங்கோ என்னை விட்டிடுங்கோ.

ஞானா அம்மா நீங்கள் சொல்லுங்கோ அம்மா.....மாடு எண்ட சொல்லக்கு
                       எத்தினை பல பொருள் இருக்குது எண்டு.

சுந்தரி மாட்டுக்கு வந்து நாலுகால்மாடு, செல்வம், இடம், இரத்தினம்,
                        பொன் எண்டு பல பொருள் இருக்கெண்டு எப்பவோ படிச்ச ஞாபகம்

அப்பா அடி சக்கை; எண்டானாம். சுந்தரி நீரும் ஒரு தமிழ்ப் பண்டிதை தான்.
                      எங்க வீட்டிலை இப்ப தமிழ் தாண்டவம் ஆடுது.

ஞானா அம்மா இந்த ஆம்பிளையளுக்குத் தாங்கள் தான் பெரிய
                      அறிவாளியள் எண்ட நினைப்பு. பெம்பிளையளின்ரை கைவண்ணம்
                       இவையளுக்கு விளங்தாது.

அப்பா பிள்ளை ஞானா உங்கடை கைவண்ணம் எங்களுக்கு நல்லய்த்
               தெரியும். (பாடி) சோறு பச்சடி, துவரம்பருப்புக் கறி குழும்பு.......இப்ப
                அந்தக் கைவண்ணத்தையும் எங்களிட்டை மெதுவாய்க்
                  கையளிக்கப்பாக்கிறயள்.

ஞானா அப்பா சும்மா வீண்கதையை விட்டிட்டு இப்ப “மாடல்ல மற்றை யவை”
                 எண்ட விஷயத்துக்கு வாருங்கோ.

சுந்தரி அதென்ன பிள்ளை...மாடல்ல மற்றை யவை எண்டது. புது
                     விஷமாயிருக்கு!

அப்பா சுந்தரி....உம்மடை மகள் மாட்டிலை தொடங்கி எங்கை
                      கொண்டுவந்து மாட்டியிருக்கறாள் பாத்தீரே.

சுந்தரி எனக்கு ஒண்டும் விளங்கேல்லை அப்பா.

அப்பா சொல்லிறன் கேளும் சுந்தரி. கேடில் விழுச்செல்வம் கல்வி
                        ஒருவற்கு மாடல்ல மற்றை யவை.


                       ஏண்ட திருக்குறளிலை கொண்டுவந்து விட்டிருக்கிறாள். உமக்கு
                     விளங்கேல்லையே?

சந்தரி இப்ப விளங்குதப்பா. உது கல்வி என்ட அதிகாரத்திலை உள்ள குறள்
                    எல்லே.

-2-
ஞானா அம்மா! அப்பா,  உங்கள் இரண்டு பேரையும் பாக்க எனக்கு நல்ல
                         பெருமையாய் இருக்கு. அந்த நாளையில் தமிழ்ப் படிப்பு
                       சிலையிலை எழுதின மாதிரித்தான்  இருக்கு.

அப்பா ஞானா....சும்மா எங்களுக்கு அபிசேகம் பண்ணாமல் நீ உன்ரை
                      மாட்டு யாவாரத்தைச் சொல்லு.

ஞானா அப்பா, இப்ப நீங்கள் சொன்ன உந்தக் குறளின்ரை கருத்தைப்
                        பாருங்கோ.ஒருவருக்கு அழியாத செல்வம் கல்வி. மற்றச்
                       செல்வங்கள் எல்லாம் செல்வங்கள் அல்ல என்டு சொல்லுமாப்
                     போலை எல்லே இருக்கு.

அப்பா ஞனா நீ வடிவாய்க் கருத்தைப் புத்தகத்திலை பாக்கேல்லை
                        போலக்கிடக்கு. குறள் என்ன......

கேடில் விழுச் செல்வம் கல்வி ஓருவற்கு
மாடல்ல மறறை யவை.

இதிலை கேடில் விழுச் செல்வம் கல்வி என்டதைக் கவனிக்க வேணும். கேடில் விழுச் செல்வம் எண்டால்அழியாத சிறந்த செல்வம். அப்பிடி எண்டால் ஒருவனிட்டை இருக்கிற கல்விச் செல்வத்தை எந்த விதத்தாலும் அழிக்க முடியாது. அது எப்போதும் அவனிடத்திலேயே இருக்கம். ஆனால் மற்றச் செல்வங்களை கள்ளர் திருடலாம். பிறர் அபகரிக்கலாம். இயற்கையினாலேயே அழிக்கப்படலாம். மற்றச் செல்வங்கள் எப்போதும் ஒருவனிடத்தில் இருப்பவை அல்ல. அதைத்தான் திருவள்ளுவப் பெருந்தகை மாடல்ல மற்றை யவை என்டு சொன்னார்.
அதாவது மற்றச் செல்வங்கள் ஒரு இடத்திலும் தங்கி நிற்பவை அல்ல எண்டு சொல்லியிருக்கிறார்.

ஞானா    அப்பிடி எண்டால் அப்பா மாடு எண்டதுக்கு இடம் எண்ட பொருள்    
                       வரும். அதாவது மாடல்ல மற்றை யவை என்டதுக்கு மற்றச்
                     செல்வங்கள் ஒரு இடத்திலும் தங்குவதல்ல எண்ட பொருள் வரும்.
                     மற்றச் செல்வங்கள் செல்வங்கள் அல்ல எண்ட பொருள் வராது.
                    இப்ப விளங்குது அப்பா.

சுந்தரி ஞானா உதிலை இன்னும் ஒரு நுட்பம் இருக்கு. நான் சொல்லட்டே
                       அப்பா

அப்பா சொல்லும் சுந்தரி சொல்லும் உமக்குத் தெரியாத தமிழே.

சுந்தரி பிள்ளை ஞானா மற்றச் செல்வங்கள் குடுக்கக் குடுக்க
                      குறைஞ்சுபோம்.ஆனால் கல்விச்செல்வமோ பிறருக்குக் குடுக்கக்
                     குடுக்க இன்னும் வளந்து கொண்டு போகும்.

அப்பா சரியாச் சொன்னீர் சுந்தரி. அதுதான் நான் இவள் பிள்ளை
                   ஞானாவுக்குச் சொன்னனான் சனிக்கிழமையளிலை தமிழ்ப்பள்ளிக்
                    கூடங்களுக்குப் போய் பிள்ளையளுக்குத் தமிழ் சொல்லிக் குடுக்கச்
                   சொல்லி. இவள் கேக்கிறாள் இல்லை.

ஞான அப்பா இன்னும் இரண்டு வருடம் போகட்டும். என்ரை தமிழ்
                     நல்லாய்த் திருந்தினாப் பிறகு போறன்.

அப்பா வடலி வளத்துக் கள்ளுக் குடிச்ச கதைதான். போகட்டும் விடு
                         பிள்ளை.

(இசை)


No comments: