உலகச் செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கொரிய யுத்த சூன்ய வலயத்திற்கு விஜயம்

ஈரானிடம் மசகு எண்ணெய் இறக்குமதி செய்யும் 12 நாடுகள் மீது பொருளாதாரத் தடை?


சீனாவும், அமெரிக்காவும் ஒரே நிலைப்பாட்டில்!


வரலாற்று சந்திப்பு



அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கொரிய யுத்த சூன்ய வலயத்திற்கு விஜயம்
26/3/2012

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தென் கொரியாவையும் வட கொரியாவையும் வேறாகப் பிரிக்கும் சர்ச்சைக்குரிய இராணுவ சூன்ய வலயத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

வட கொரியாவின் ஏவுகணைத் திட்டம் தொடர்பில் பதற்றநிலை அதிகரித்துள்ள நிலையிலேயே அவரது இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. வட கொரியா எறிகணைகளை ஏவும் பரிசோதனை நடவடிக்கையாகவே எதிர்வரும் மாதம் ஏவுகணையொன்றை ஏவ முயற்சிப்பதாக அமெரிக்கா சந்தேகம் கொண்டுள்ளது.

விண்வெளிக்கு தனது செய்மதியொன்றை அனுப்பும் முயற்சியின் அங்கமாகவே இந்த ஏவுகணை ஏவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடகொரியா வலியுறுத்தி வருகிறது.

இன்று திங்கட்கிழமை சியோலில் நடைபெறும் அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பராக் ஒபாமா கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த இருநாள் உச்சி மாநாட்டில் உலகெங்குமுள்ள 50க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

குற்றச் செயலில் ஈடுபடும் குழுக்களோ அன்றி போராளிக் குழுக்களோ அணு ஆயுதங்களை உடைமையாகப் பெற்றுக்கொள்வதைத் தடுப்பதே இந்த உச்சிமாநாட்டின் பிரதான இலக்காகும்.

வடகொரியாவின் அணுசக்தி விவகாரம் மேற்படி உச்சி மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தில் இடம்பெறாத போதும் வட கொரியா இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பராக் ஒபாமா இந்த உச்சி மாநாட்டின் போது வடகொரியா மற்றும் ஈரானின் அணுசக்தி நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பில் சீன மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுடன் கலந்துரையாடுவார் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராணுவ சூன்ய பிரதேசத்துக்கு விஜயம் செய்த பராக் ஒபாமா அங்கு துப்பாக்கி துளைக்காத கண்ணாடியின் பின்னால் நின்றவாறு வட கொரியாவை தொலைநோக்கி மூலம் அவதானித்தார்.

4 கிலோ மீற்றர் அகலமான மேற்படி இராணுவ சூன்ய வலயம் 1953ஆம் ஆண்டு கொரியப் போரையடுத்து கொரிய தீபகற்பத்தைப் பிரிக்கும் பிராந்தியமாக மாறியது.

அதேசமயம் வடகொரியத் தலைவர் கிம் யொங் இல் மாரடைப்பால் மரணமானதையொட்டி அனுஷ்டிக்கப்பட்ட 100 நாள் துக்க தினம் நிறைவடைவதையொட்டி வட கொரியத் தலை நகரில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடி அஞ்சலி செலுத்தினர்.

நன்றி  வீரகேசரி










ஈரானிடம் மசகு எண்ணெய் இறக்குமதி செய்யும் 12 நாடுகள் மீது பொருளாதாரத் தடை? _


கவின்     27/3/2012

ஈரானிடம் மசகு எண்ணெய் இறக்குமதி செய்து வரும் 12 நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அணு ஆயுதம் தயாரித்து வருவதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் புகார் தெரிவித்து வருகின்றன. இதனால் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்யும் நாடுகள் அந்நடவடிக்கையை படிப்படியாக குறைக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது.

எனினும் சில நாடுகள் அமெரிக்காவின் வேண்டுகோளையும் மீறி இறக்குமதி நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் ஈரானிமிடருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா , சீனா உள்ளிட்ட 12 நாடுகள் மீது வரும் ஜூன் மாதத்திற்குள் பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தி தொடர்பாளர் விக்டோரியா நியூலன்ட் வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளார்.

ஈரானின் யுரேனிய செறிவாக்கல் நடவடிக்கையானது நீண்டகாலமாக மேற்குலக நாடுகளுகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றுவருகின்றது.

எனினும் தமது மின்சாரம் மற்றும் மருத்துவ தேவைகளுக்காகவே யுரேனிய செறிவாக்கல் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக ஈரான் தெரிவிக்கின்றது.

இதற்கு தமது எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன ஈரானின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவை மட்டுமன்றி சர்வதேச நிறுவனங்கள் ஈரானில் முதலிடுவதையும், நிதி நிறுவனங்கள் எவ்வித தொடர்புகளையும் பேணாத வண்ணம் ஈரானை முடக்கியுள்ளது.

இதன் அடுத்த கட்டமாகவே அமெரிக்கா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் 12 நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கும் திட்டத்தை வகுத்துள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நன்றி  வீரகேசரி

சீனாவும், அமெரிக்காவும் ஒரே நிலைப்பாட்டில்!


27/3/2012

வடகொரியா மற்றும் ஈரானின் அணுசக்தி நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக தீர்வு காண்பதில் அமெரிக்காவும், சீனாவும் ஒரே நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சீன ஜனாதிபதி ஹு ஜிந்தாவோவிற்கு தெரிவித்துள்ளார்.

சியோலில் நடைபெறும் 53 உலக நாடுகள் பங்குகொள்ளும் அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் சந்தித்துக்கொண்ட போதே ஒபாமா இக்கருத்தை தெரிவித்துள்ளர்.

இரு நாடுகளும் அணு ஆயுதங்களின் பெருக்கத்தை தடுத்தல் மற்றும் அணு ஆயுதங்களைக் களைதல் தொடர்பிலான சர்வதேச விதிமுறைகளை உறுதிப்படுத்தல் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதாகவும் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பானது முக்கியமானதெனவும் ஒபாமா குறிப்பிட்டுள்ள்ளார்.

இதேவேளை வட கொரியாவின் அணு நிகழ்ச்சிச் திட்டங்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்குமாறு சீனாவை ஒபாமா கடந்த ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியிருந்தார். மேலும் வட கொரியா தனது ஏவுகணைத் திட்டத்தை தொடருமானால் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுமெனவும் ஒபாமா எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி  வீரகேசரி


வரலாற்று சந்திப்பு

Thursday, 29 March 2012


கியூபாவுக்கு விஜயம் மேற்கொண்டு இருக்கும் பாபரசர் 16ஆவது ஆசிர்வாதப்பர் முன்னாள் கியூபா தலைவர் பிடேல் காஸ்ட்ரோவை சந்தித்தார். வரலாற்று ரீதியான இச் சந்திப்பு 30 நிமிடங்கள் வரை நடைபெற்றது.

fidel_castro_











 













fidel_castro_2





















fidel_castro_3





















fidel_castro_4































fidel_castro_5

























நன்றி தினக்குரல்

No comments: