.
நவராத்திரி அக்டோபர் 16ம் திகதி செவ்வாய் கிழமை முதல் அக்டோபர் 24ம் திகதி புதன் கிழமை வரை இடம் பெறுகின்றது . விஜயதசமி அக்டோபர் 24ம் திகதி புதன் கிழமை இடம் பெறுகின்றது .
நவம் என்றால் ஒன்பது என்று ஒரு பொருள் உண்டு. சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் புரட்டாசி மாதம் வளர் பிறை பிரதமை முதல் 9 நாள் நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.......
மகாகவி பாரதி சக்தியை பற்றி இப்படி பாடுகிறான்
மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்!
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே!
ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே.
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே!
ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே.
சக்தி என்று அவன் கூறும்போது முப்பெரும் தேவியரையும் சேர்த்தே கூறுகின்றான் .
மகாகவி பாரதி சரஸ்வதியைப் பற்றி இப்படி பாடுகிறான்
வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே
மகாகவி பாரதி லச்மியைப் பற்றி பாடும்போது இப்படி பாடுகிறான்
பொன்னரசி நாரணனார் தேவி, புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள், ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள், ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே
அவன் பார்வதியைப் பற்றி ப பாடும்போது இப்படி பாடுகிறான்
மலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள்
உலையிலே யூதி உலகக் கனல் வளர்ப்பாள்
நிலையில் உயர்த்திடுவாள், நேரே அவள் பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே
உலையிலே யூதி உலகக் கனல் வளர்ப்பாள்
நிலையில் உயர்த்திடுவாள், நேரே அவள் பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே
No comments:
Post a Comment