ஜெயகாந்தனுடன் ஒரு நேர்காணல்


பொய் காரணங்களை சொல்லியோ அல்லது இது சமூகப் பிரச்சினை எனச்கூறி மற்றவரின் சுதந்திரத்தில் நீங்கள் தலையிட முடியாது.
பரிசுபெற்ற தமிழ் எழுத்தாளர் ஜேகே எனப்படும் ஜெயகாந்தனுடன் ஒரு நேர்காணல்
-   எஸ்.துரைராஜ்
jeyakanthanஆறு தசாப்தங்களுக்கு மேலான தனது இலக்கியப் பணியில் ஜேகே என்று நண்பர்களாலும் மற்றும் தோழர்களாலும் அழைக்கப்படும் தனபாண்டியன் ஜெயகாந்தன்,சமூக அநீதிகளுக்கும் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிராக தனது பேனாவை திறம்படக் கையாண்டதுக்காக பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.
ஒரு ஈடற்ற பேச்சாளர்,திரைப்படத் தயாரிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்,திறமையான பத்திரிகையாளர்,மிகச் சிறந்த எழுத்தாளர் என்று இருந்தபோதும், செயற்பாட்டுக்கு அஞ்சாதவராக இருந்தார், உலக மட்டத்தில் ஜனநாயகத்தை நேசிப்பவர்கள், சமாதானம், சமத்துவம் என்பனவற்றை முன்னேற்றுவதற்காக உழைப்பவர்களுடன் கைகோர்த்துக்கொள்ள அவர் ஒருபோதும் தயங்கியதில்லை.
அது அரசியலோ அல்லது கலாச்சாரமோ எந்த அரங்கமானாலும் அவர் தனது கருத்துக்களை மிகவும் நேர்மையுடனும் மற்றும் இணையற்ற தீரத்துடனும் வெளிப்படுத்தினார்.பரிசுகளும் பாராட்டுகளும் அவரை தேடி வந்தன.அவற்றிடையே ஜனாதிபதி விருது,சாகித்ய அகாதமி விருது,மற்றும் நட்புறவுகள்,சோவியத் தேச நேரு விருது,ரஷ்ய கூட்டமைப்பின் நட்புறவு ஆணை மற்றும் பத்மபூஷண் என்பனவும் அடங்கும்.


1934ல் தென்ஆர்காடு மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பம் கிராமத்தில் பிறந்த ஜெயகாந்தன், தனது தாயார் மற்றும் தாய்வழி மாமன்மார், அவருள் தேசப்பற்றினை ஊட்டி வளர்த்த ஒரு ஆரோக்கியமான சூழலிலேயே வளர்ந்தார்.ஐந்தாம் வகுப்புடன் பாடசாலைக்கு செல்வதை நிறுத்திக்கொண்ட அவர்,1946ல் தனது பிறந்த ஊரை விட்டு வெளியேறி சென்னையிலுள்ள பிளவு படாத கம்யுனிஸ்ட் கட்சி காரியாலயத்துக்கு வந்து சேர்ந்தார்.
உண்மையில் அதுதான் அவரது பல்கலைக்கழகமாக மாறியது,உலக இலக்கியம், கலாச்சாரம், அரசியல், பொருளாதாரம்,மற்றும் ஊடகவியல் போன்ற பல்வேறு துறைகளின் அறிவையும் அவர் அங்கு பெற்றுக் கொண்டார்.அவரது கம்யுனிச வாழ்க்கையின்போது, தங்களது இலக்;கியச் சேவைக்காக பாராட்டுக்களை பெற்றிருந்த கம்யுனிஸ்ட் பிரமுகர்களான பி.ஜீவானந்தம்,ஆர்.கே. கண்ணன்,எஸ். இராமகிருஸ்ணன், போன்றவர்களுடனான அவரது கூட்டு,இலக்கிய உலகத்தினுள் அவரது நுண்ணறிவு செழிப்படைய உதவியது.
கம்யுனிசத்தின் இளம் அங்கத்தவரான ஜெயகாந்தன் ஒரு முழுமையான எழுத்தாளராக வெளிப்பட ஏழு ஆண்டுகள் மட்டுமே பிடித்தன.அவரது முதலாவது சிறுகதை 1953ல் வெளியானது. அந்தக் கணத்திலிருந்து அவர் ஒருபோதும்  பின் திரும்பிப் பார்க்காத அளவுக்கு எழுதிக் குவித்தார்.வரையறைக்கு உட்டபட்ட சமூகத்தினரின் வாழ்க்கையையும் அவர்களது போராட்டங்களையும் அவர் தனது கதைகளினூடாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார்.அதற்குப் பின்னான குறுகிய காலத்தில் பிரபலமான தமிழ் வார இதழ்கள்,ஏற்கனவே தனது இலக்கிய தொடுவானத்தை ஏனைய எழுத்தாளர்களால் வெளிக்காட்டாமல்; விடுபட்ட மத்திய தர வகுப்பினர்,மற்றும் மேல்சாதிக்காரர்களின் அநேக பிரச்pனைகளை விரிவாகத் தொட்டு எழுதுவதற்கு இந்த எழுத்தாளருக்கு களம் அமைத்துக் கொடுப்பதற்கு ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டன.
மனித உறவுகளை கையாண்டு அவர் எழுதிய பிரபலமான முத்தொகுப்பு,அக்கினி பிரவேசம், சில நேரங்களில் சில மனிதர்கள்,மற்றும் கங்கை எங்கே போகிறாள் என்பனவாகும். ஊருக்கு நூறு பேர்,கை விலங்கு,போன்றவைகளில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் சிறை வாழ்க்கை பற்றிய ஆசிரியரின் செயல் திறன் மிக்க கையாள்கை தென்படுகின்றன.
கதைகள் அல்லாத பகுதிகளில்,ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்,ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்,மற்றும் யோசிக்கும் வேளையில், போன்ற அவரது எழுத்துப் பணிகள் பரந்தளவு பாராட்டுக்களை வென்றுள்ளன. 1964ல் அவரது முன்னோடிகளில் சிலரைப் போல இந்த பிரசித்தி பெற்ற எழுத்தாளரும் திரையுலகத்துள் பிரவேசித்தார்,அங்கு அவர் திரைக்கதை எழுத்தாளர்,இயக்குனர் போன்ற பல்வேறு பாத்திரங்களையும் ஏற்றார்.உன்னைப்போல் ஒருவன் என்கிற அவரது முதல் படம் சிறந்த படத்துக்கான ஜனாதிபதியின் சான்றிதழைப் பெற்றது.
அவர் எழுதிய 200க்கு மேற்பட் சிறுகதைகள்,45 நாவல்கள்,மற்றும் குறு நாவல்கள்,20 கட்டுரைத் தொகுப்புகள், மற்றும் திரைக்கதை எழுதிய 10 திரைப்படங்கள் என்பன அவரது படைப்பாக்கத்துக்கும் மற்றும் சித்தாந்த செயல்பாடுகளுக்;கும் சான்று பகர்கின்றன. எழுதுவதன் மூலம் எதிர்த்து போராடுவது மட்டுமன்றி ஒரு சமூக ஆன்மீக அணுகுமுறையின் தேவையை வலியுறுத்தும் அவர்,அந்த அணுகுமுறை மார்க்கியசத்துடன் இணக்கமானதாக இல்லை என்றும் வாதிடுகிறார். புரண்ட்லைன் பத்திரிகைக்கான பிரத்தியேக நேர்காணலில்,இந்த வருடம் ஏப்ரல் 24ல் 78வது அகவை அடைந்துள்ள ஜெயகாந்தன் பல்வேறு வகையான பிரச்சினைகளைப்பற்றி பேசுகிறார். அதிலிருந்து சில பகுதிகள்:
  • நாட்டின் முற்போக்கு இலக்கிய இயக்கத்தில், நீங்கள் ஒரு முக்கிய அங்கமாக உள்ளீர்கள். இந்த இயக்கத்துக்கு ஒரு எதிர்காலம் உள்ளதா? இலக்கிய உலகில் அது ஒரு முக்கிய பங்கினை வகிக்குமா?
முற்போக்கு என்கிற சொல் அதிகரித்துவரும் ஒரு அரசியல் தூண்டுதலை பெற்றுள்ளது. எனவே முற்போக்கு இலக்கியத்தின் எதிர்காலம் முற்போக்கு அரசியல் சக்திகளின் செல்வாக்கை பொறுத்தே உள்ளது. சமீப காலம் வரை யதார்த்தம் மற்றும் சோசலிச யதார்த்தம்  என்பனவற்றை உறுதிப்படுத்திய எழுத்தாளர்களும் மற்றும் கலைஞர்களும் நவீனத்துவம் மற்றும் மாய யதார்த்தம் என்பனவற்றை நோக்கி திரும்ப ஆரம்பித்துள்ளார்கள்.
  • முற்போக்கு இலக்கியத்தை பொறுத்தவரை இந்தப் போக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

முதல் குறிப்பிட்ட இரண்டு வகைகளையும்( யதார்த்தம் மற்றும் சோசலிச யதார்த்தம்) அவர்கள் கைவிடாதவரை,இந்த புதிய போக்குகள் முற்போக்கு இலக்கியத்திற்கு எந்தவித தீவிரமான பாதிப்பினையும் ஏற்படுத்தாது.முந்தைய போக்குகளையும் அவர்கள் ஆதரவு வழங்கி ஊக்குவித்தால் நன்றாக இருக்கும்.
  • ஸ்ரீலங்காவில் உள்நாட்டு யுத்தம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. அந்த நாட்டு தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்கும் விடயத்தில் ஒரு தமிழ் எழுத்தாளர் என்ற வகையில் இந்திய அரசாங்கத்துக்கு நீங்கள் வழங்கும் ஆலோசனை என்ன?
இது அவர்களது உள்நாட்டுப் பிரச்சினை,அது உள்நாட்டிலேயே தீர்க்கப்பட வேண்டும்.மூன்றாம் தரப்பினரது தலையீடு,விசேடமாக இந்தியாவினது,அதற்கு உதவக்கூடும்.இந்தியாவில் செய்யப் பட்ட வழியில்,இந்தப் பிரச்சினை அப்படியே ஸ்ரீலங்காவில் கையாளப்பட வேண்டும். ஆனால் இது ஒரு காலங்கடந்த ஆலோசனை. மரண தண்டனை பற்றிய உங்கள் கருத்துக்கள் நன்கு பிரசித்தமானவை.இந்த விடயம் பற்றிய விவாதம் மீண்டும் எழுந்துள்ளது,மனித உரிமைகள் குழுக்கள் மரண தண்டனையை நீக்க வேண்டுமென்று அழைப்பு விடுக்கையில்கூட, சில குறிப்பிட்டவர்கள் இது மற்றவாகளுக்கு ஒரு எச்சரிகையாக இருக்கும் என்பதன் அடிப்படையில் அது தொடர்வதற்கு சாதகமான கருத்துள்ளவாகளாக உள்ளனர்.
ஏற்கனவே மரணதண்டனை பற்றிய எனது கருத்துக்களை நான் வெளிப்படுத்தியுள்ளேன். மரணம் ஒரு தண்டனை அல்ல,எனவே மரண தண்டனை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்கிற எனது நிலையில் எந்த மாற்றமும் கிடையாது.தண்டனை குற்றச் செயல்களை குறைக்க உதவாது.
  • தனிப்பட்ட வகையில் புரட்சிக் கவிஞர் சுப்பிரமணிய பாரதி,மற்றும் ஒரு வரலாற்று இயக்கமான ரஸ்யாவில் நடந்த அக்டோபர் பெரிய புரட்சி என்பன உங்களுக்கு ஒரு உத்வேகமளிக்கும் சக்தியாக இருந்தன,என்று பல நிகழ்வுகளில் நீங்கள் வெளிப்படுத்தி உள்ளீர்கள். புரட்சி சகாப்தம் உருவான நூற்றாண்டை கொண்டாட இன்னும் ஐந்து வருடங்களே பாக்கி உள்ளன. ஒரு எழுத்தாளர் என்ற வகையில் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை தயவு செய்து நினைவு கூருங்கள்.
அது மானிடத்தின் கண்களை திறந்தது. அதன் வெளிச்சத்தில் பல மாற்றங்கள் இடம்பெற்றன. எப்படியாயினும் இந்த நடவடிக்கையில் எந்தவித பின்னடைவும் இருந்தது என்கிற கேள்விக்கே இடமில்லை.எங்கள் விடயங்களில் தேவையான மாற்றங்களைச் செய்து தவறுகளை திருத்திக் கொள்வதில் எந்தப் பிழையும் கிடையாது.உண்மையில் இதுதான் நிச்சயம் அவசியமானது. சோவியத் ஒன்றியத்தில் உண்மையில் இதுதான் நடைபெற்றது.இது ஒரு பின் சறுக்கல் இல்லை.அக்டோபர் புரட்சி மூலம் உத்வேகம் பெற்றவர்கள்கூட,இந்த நிகழ்வுகளில் இருந்து தேவையான பாடங்களை படித்திருப்பார்கள் என நான் நம்புகிறேன்.
  • உங்களை போன்ற முற்போக்கு எழுத்தாளர்களுக்கும் மற்றும் கலைஞர்களுக்கும் வழிகாட்டும் இலட்சியமாகவிருந்த சோவியத் ஒன்றியம் சிதைந்துவிட்டது. சோசலிச முகாம் தகர்ந்து விட்டது. அது சோசலிசத்தின் தோல்வியை அடையாளப் படுத்துகிறதா அல்லது அது சோசலிசத்துக்கு ஒரு தற்காலிகப் பின்னடைவா?
இது ஒரு பின்னடைவுகூட இல்லை. நாங்கள் சரியான பாடங்களை பெற்றுக் கொள்வோமானால்,இந்த மாற்றங்கள் அவசியமானவைகளாகவே கருதப்படும்.
  • நீங்கள் ஒரு சிறுபிள்ளையாக இருக்கும் போதே கம்யுனிச இயக்கத்தில் இணைந்து விட்டீர்கள். தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் உலக மற்றும் தேசிய மட்டத்தில்,இந்தியாவில் கம்யுனிச கட்சிகளின் வாய்ப்புகளை நீங்கள் எப்படி மதிப்பீடு செய்வீர்கள்?
கம்யுனிச இயக்கங்களுக்கு கம்யுனிசக் கட்சி மட்டும்தான் அடிப்படை என கருதிய நாட்கள் போய்விட்டன.இப்போது கம்யுனிசம் என்கிற சொல்லின் அர்த்தம் அநேக அரசியற் கட்சிகளின் செயல்பாட்டுக்கு ஒரு ஆழமான தாக்கத்தை கொடுத்துள்ளன. கம்யுனிச இயக்கத்திற்கு இது ஒரு பெரிய சாதனை. கம்யுனிசம் மற்றும் சோசலிசம் என்பவைகளின் வரைவிலக்கணம் மற்றும் கரு என்பன கட்சியின் எல்லைகளை கடந்து ஒரு சித்தாந்த வடிவத்தை எடுத்துள்ள ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆண் மற்றும் பெண் சார்;புநிலை, மற்றும் பாலியல்  தாக்குதல்கள் என்பனவற்றை கண்டிக்க உங்கள் பேனா ஒருபோதும் தயங்கியதில்லை.பெண்களும் சிறுவர்களும் நாடுகள் மற்றும் சாதிகள் இடையே ,மற்றும் நாட்டுக்குள்ளேயே நடக்கும் இனமோதல்களினாலும் விரிவடையும் ஆயுத மோதல்களின் பாரத்தை தாங்கவேண்டியவர்களாக இருப்பது உறுத்தலான ஒரு யதார்த்தம் இல்லையா? எனினும் அத்தகைய அட்டூழியங்களை எதிர்த்து எழுப்ப படும் குரல்களும் இந்த நாட்களில் வலுவடைந்திருப்பது ஒரு ஆறுதலான அம்சம் ......
எப்போதாவது ஒரு மாற்றம் உருவாகும்போது,இத்தகைய அட்டூழியங்கள் பாலின பேதமின்றி மக்கள்மீது நடத்தப்படுகின்றன. என்ன இன்று நாங்கள் அதன் வளர்ச்சிக்கும் மற்றும் தொடர்ச்சிக்கும் சாட்சியாக இருக்கிறோம்.
  • அன்னா ஹாசரே தலைமையேற்றது உட்பட்ட சமூக ஆர்வலர்கள் குழுக்கள்,ஊழலுக்கு எதிரான எதிர்க்கிளர்ச்சி பதாகைகளை உயர்த்தி உள்ளனர். நாட்டை பாழாக்கும் ஒரு பிரதான தேசிய பிரச்சினை இந்த ஊழல்தான் என்று நீங்கள் நினைக்கவில்லையா?
ஊழலற்ற ஒரு சமூகம் கம்யுனிசத்தை போல முன்னேற்றமான ஒரு கனவு.சகல சமூகங்களிடையேயும் ஊழல் எப்போதும் நிலவி வருகிறது. அரசியல்வாதிகள் நடத்தும் சுரண்டல்தான் மிகப்பெரிய ஊழல். அன்னா ஹாசரேயின் முயற்சியையும் அந்த வெளிச்சத்தில்தான் பார்க்க வேண்டும். ஊழலை எதிர்ப்பவர்கள் எல்லாக் கட்சியிலும் இருக்கிறார்கள்.
ஆனால் அனைத்து சமூகங்களினதும் தனிப்பட்ட உடமைகளின் அடிப்படையில் ஊழல் தனது தலையை நுழைப்பது இயற்கை.சுதந்திர இந்தியாவில் சொத்துக்களின் உரிமை அடிப்படை உரிமையாக சேர்க்கப்பட வேண்டும்.ஆகவே ஊழல் என்பது இங்கே வாழ்க்கையின் ஒரு காரணியாக மாறியுள்ளது.ஒரு சமூகம் சொத்துக்களின் தனி உரிமையை இரத்துச் செய்வதால் மட்டுமே ஊழலை வேரோடு களைய முடியும்.
  • நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் மட்டுமல்லாது புகழ்பெற்ற ஊடகவியலாளரும் கூட. ஊடகத் துறையில் நீங்கள் பெற்ற அனுபவம் உங்கள் இலக்கிய எழுத்துக்களில் ஏற்படுத்திய தாக்கம், மற்றும் இதற்கு நோமாறாக எழுத்துக்கள் ஊடகத்துறையில் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன?
தயவுசெய்து உங்கள் மதிப்பீட்டை மாற்றிக் கொள்ளுங்கள்,நான் ஒரு வெற்றிகரமான ஊடகவியலாளன்.வெற்றிகரமான ஊடகவியலாளன் என்பதன் அர்த்தத்தை அறிந்து கொள்ளும்வரை, என்னால் உங்கள் மதிப்பீட்டை ஏற்க முடியாது.ஆனால் நீங்கள் பல்வேறு இதழ்களிலும் ஆசிரியராக இருந்து விட்டுக்கொடுக்காத போராட்டத்தை முன்னெடுத்துள்ளீர்கள்......அது ஒரு சமூகம், அங்கு விட்டுக்கொடுப்பு வெற்றியுடன் சமமாகிறது,விட்டுக்கொடுக்காத ஊடகவியலாளனால் வெற்றி பெற முடியாது.
  • தமிழ் நாட்டில் சில பிரிவினர் மும்மொழிக் கொள்கையை தொடர்ந்தும் எதிர்த்து வருகின்றனரே. இதைப்பற்றி நீங்கள் கருத்துக் கூற விரும்புகிறீர்களா?
இதை எதிர்ப்பது அரசியல் விளையாட்டுக்காக வேண்டியே. இந்தக் கொள்கையை எதிர்ப்பவர்கள்கூட தங்கள் சொந்த வாழ்வில் இதை ஏற்றுக் கொண்டுள்ளனர். மொத்தத்தில் விலக்கவேண்டிய மொழியை வெறுப்பது நல்லது. கல்வி ஏன் மூன்று மொழிகளில் மட்டுமே தேவைப்படுகிறது? கல்வி பல மொழிகளில் இருக்கவேண்டியது அவசியம் என்று நான்கூட நினைப்பதுண்டு.இணையம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக கவலைகள் அதிகரித்துள்ளன.சமூக ஊடக முறைகேட்டை கட்டுப்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சிலர் ஆதரிக்கிறார்கள்......தவறுகளை சகித்துக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் மனித சமூகம் எந்த கண்டுபிடிப்பினதும் தவறான முனைகளைத்தான் பயன்படுத்த ஆரம்பிக்கும்.ஆனால் இறுதியில் எது அவசியமோ, எது பயனுள்ளதோ மற்றும் மானிட முன்னேற்றத்துக்கு எது உதவுமோ அது உயிர்வாழும். காலம் செல்லும்போது மக்கள் இந்த தொழில்நுட்பத்தின் எதிர்மறையான குணங்களை கைவிட்டு விடுவார்கள் என நம்புவோமாகுக.
காதலர் தினம் மற்றும் பிறந்த நாள் கொண்டாட்டம் போன்றவை சில பிரதான நகரங்களில் நடக்கும்போது அதில் பங்கு கொள்வோர்மீது ஒழுக்கநெறி கண்காணிப்பு சம்பவங்கள் மற்றும் இளைஞர்களை தாக்குதல் போன்றவை இடம்பெறுகின்றனவே....
பொய் காரணங்களை சொல்லியோ அல்லது இது சமூகப் பிரச்சினை எனச்கூறி மற்றவரின் சுதந்திரத்தில் நீங்கள் தலையிட முடியாது. சய மரியாதையுள்ள மக்களுக்கு அத்தகைய நடத்தையில் நாட்டமிருக்காது.
  • தீர்க்கப்படாத பிராந்திய பிரச்சனைகள் காரணமாக இந்தியாவின் சிதைவு உடனடியாக நடக்கும் என சில குழுக்கள் எச்சரிக்கை எழுப்புகின்றன. அத்தகைய பயத்துக்கு ஏதாவது அடிப்படை உள்ளதா?
இதை பிராந்திய விடயத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. பிராந்திய விடயமாக கருதுவதைக் காட்டிலும் தேசிய விடயமாகப் கருதினால் இத்தகைய சர்ச்சைகளை தவிர்க்க முடியும். எந்தக் காரணியாலும் இந்தியாவை துண்டாட முடியாது. அத்தகைய பயப் பிராந்தியை உருவாக்குவது அரசியல் அல்லாது வேறில்லை.
  • ஒரு முற்போக்கு எழுத்தாளர் வரலாற்று நாவல்களை எழுதும்போது, அவருடைய அணுகுமுறை என்னவாக இருக்க வேண்டும்?
அந்த எழுத்தாளரிடம் விரிவான கண்ணோட்டம் இருக்க வேண்டும்.தற்சமயம் நிலவும் சமூக, அரசியல்,மற்றும் பொருளாதார நிலைகளை பற்றிய ஒரு முழுமையான புரிந்துணர்வு அவரிடம் இருக்கவேண்டும்.
சகல காரணிகளையும் அவர் ஒரு சீரான வழியில் மதிப்பிட வேண்டும். ஒரு காட்சியை மட்டும் தெரிந்தெடுக்கும் பண்பு தவறானது. ஒரு யதார்த்தமான அணுகுமுறை அவசியமாகிறது.இதற்கு ஆரோக்கியமான இலக்கிய விமர்சனமும் மற்றும் கருத்துப் பரிமாற்றமும் தேவைப்படுகிறது.
ஒரு எழுத்தாளர் ஒரு ஒற்றை பிரச்சினையையும் தொடும்போதும்,அவரது தொழில் முயற்சியில் துணிந்து இறங்கவேண்டியது அவசியம். ஆனால் அப்போது அவர் ஏனைய சமூகப் பிரச்சினைகளையும் அதனுடன் தொடர்பு படுத்துதல் வேண்டும்.இதைத்தான் நாங்கள் சமூக – ஆன்மீக அணுகுமுறை என அழைக்கிறோம்.
நீங்கள் உங்கள் பணியை தனிப்பட்ட ஓராளில் இருந்து ஆரம்பிக்கலாம்,ஆனால் ஒரு எழுத்தாளர் என்கிற வகையில்  பெரிய சமூக யதார்த்தத்தின் ஒரு பகுதியாக நீங்கள் அதனை காண முடியும்.

நன்றி: புரண்ட்லைன்
தேனீ மொழிபெயர்ப்பு எஸ்.குமார் 
நன்றி : தேனீ 

No comments: