பெண்களின் பிறப்புறுப்புகள் தொடர்பில் உதவியாளருக்கு எழுத்து வடிவ செய்தியை அனுப்பிய ஆஸி சபாநாயகர் பதவி விலகல்

.
                 பெண்களின் பிறப்புறுப்புகள் தொடர்பில் மிகவும் ஆபாசமான எழுத்து வடிவ செய்திகளை தனது முன்னாள் 
உதவியாளருக்கு அனுப்பி வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளான அவுஸ்திரேலிய பாராளுமன்ற சபாநாயகர் பீற்றர் சிலிப்பர் செவ்வாய்க்கிழமை பதவி விலகியுள்ளார்.

62 வயதான பீற்றர் சிலிப்பர் பெண்களின் உடலியல் தொடர்பில் தனது மோசமான கண்ணோட்டத்தை மேற்படி எழுத்து வடிவ செய்திகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தனது முன்னாள் உதவியாளரான ஜேம்ஸ் அஷ்பிக்கு அனுப்பி வைத்த மேற்படி ஆபாச எழுத்து வடிவ செய்திகள் அம்பலமானதையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.மேற்படி எழுத்து வடிவ செய்திகளை எனக்கும் அஷ்பிக்கும் இடையிலான தனிப்பட்ட கருத்துப் பரிமாற்றமாக கருதியே தான் அனுப்பியிருந்ததாக பீற்றர் சிலிப்பர் தெரிவித்தார்.

ஆனால், என்னுடைய தனிப்பட்ட சொந்த வகிபாகத்தை விட பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் என்ற வகிபாகம் மிகவும் முக்கியமானது என்பதால் நான் பதவி விலகுகிறேன் என்று அவர் கூறினார்.

பீற்றர் சிலிப்பர் பாலியல் ரீதியில் தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக ஜேம்ஸ் அஷ்பி தாக்கல் செய்த வழக்கு தொடர்பான விசாரணைகள் கடந்த வாரம் இடம்பெற்றபோதே பீற்றர் சிலிப்பரின் பெண்களின் பிறப்புறுப்புகள் தொடர்பான ஆபாசமான விமர்சனங்களை உள்ளடக்கிய எழுத்துவடிவ செய்திகள் அம்பலமாகியுள்ளன.  நன்றி வீரகேசரி 

No comments: