ஒஸ்லோவில் இலங்கைத் தாய்மாரின் சாகும்வரை
உண்ணாவிரதத்திற்கு வெற்றி : டொம் தேவாலயத்தின் உத்தரவாதத்தையடுத்து
உண்ணாவிரதம் கைவிடப்பட்டது
அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள் தம்மிடம் உள்ளதாக வடகொரியா எச்சரிக்கை
இஸ்ரேலுக்குள் பிரவேசித்த ஆளற்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
சீனாவில் பாரிய மண் சரிவு: 18 மாணவர்கள் புதையுண்டனர்
வெனிசூலா ஜனாதிபதித் தேர்தலில் ஹூகோ சாவிஸ் வெற்றி
தலிபான்களுக்கு எதிராகக் குரல்கொடுத்த 14 வயதான சிறுமி மீது துப்பாக்கிச் சூடு
நைஜீரியாவில் படையினரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 30 பொதுமக்கள் பலி
ஒஸ்லோவில் இலங்கைத் தாய்மாரின் சாகும்வரை உண்ணாவிரதத்திற்கு வெற்றி : டொம் தேவாலயத்தின் உத்தரவாதத்தையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது
நோர்வேயின்
சிறுவர் காப்பகத்தின் நடவடிக்கைகளை கண்டித்தும் அதனிடமிருந்து தமது
பிள்ளைகளை விடுவித்துக்கொள்ளும் வகையிலும் இலங்கைத் தாய்மாரினால் ஒஸ்லோவில்
மேற்கொள்ளப்பட்டுவந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் 10ஆவது நாளான
இன்றுடன் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒஸ்லோவில் அமைந்துள்ள டொம் தேவாலயத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வந்த ரஜித்தா ஆனந்தராசா மற்றும் டிலாந்தினி எரிக் ஜோசப் ஆகியோருக்கு டொம் தேவாலய நிர்வாகம் எழுத்து மூலமான உத்தரவாதம் அளிக்கப்பட்டதையடுத்தே இந்த உண்ணாவிரப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்திருப்பதாக மேற்படி இரு தாய்மாரும் தெரிவித்தனர்.
உண்ணாவிரதம் இருந்து வந்த தாய்மாரிடம் பேச்சுக்களை நடத்திய டொம் தேவாலய நிர்வாகம் தாம் இவ்விடயம் தொடர்பில் நோர்வே அரசினதும் சிறுவர் நல அமைச்சினதும் அதேநேரம் சிறுவர் நல காப்பகத்தினதும் கவனத்திற்கு கொண்டுவருவதாக உறுதியளித்ததுடன் எழுத்து மூல உத்தரவாதமும் கொடுத்துள்ளது.
இதேவேளை உண்ணாவிரதம் நடைபெற்ற தேவாலயத்திற்கு வருகை தந்த இலங்கை தூதுவர் மேற்படி தாய்மாருடனும் ஆலய நிர்வாகத்துடனும் பேச்சு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தமது பிள்ளைகளை மீட்டுக்கொள்ளவதற்காக சாகும்வரை மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் தேவாலய நிர்வாகத்தின் உத்தரவாதத்தின் மூலம் வெற்றியடைந்திருப்பதாக சம்பந்தப்பட்டோர் நோர்வேயிலிருந்து தெரிவித்தனர்.
இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.15 மணியளவில் இந்த உண்ணாவிரப் போராட்டம் வெற்றியுடன் கைவிடப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள் தம்மிடம் உள்ளதாக வடகொரியா எச்சரிக்கை
தலிபான்களுக்கு எதிராகக் குரல்கொடுத்த 14 வயதான சிறுமி மீது துப்பாக்கிச் சூடு
அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள் தம்மிடம் உள்ளதாக வடகொரியா எச்சரிக்கை
இஸ்ரேலுக்குள் பிரவேசித்த ஆளற்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
சீனாவில் பாரிய மண் சரிவு: 18 மாணவர்கள் புதையுண்டனர்
வெனிசூலா ஜனாதிபதித் தேர்தலில் ஹூகோ சாவிஸ் வெற்றி
தலிபான்களுக்கு எதிராகக் குரல்கொடுத்த 14 வயதான சிறுமி மீது துப்பாக்கிச் சூடு
நைஜீரியாவில் படையினரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 30 பொதுமக்கள் பலி
ஒஸ்லோவில் இலங்கைத் தாய்மாரின் சாகும்வரை உண்ணாவிரதத்திற்கு வெற்றி : டொம் தேவாலயத்தின் உத்தரவாதத்தையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது
By
J.Stephan 2012-10-10 |
ஒஸ்லோவில் அமைந்துள்ள டொம் தேவாலயத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வந்த ரஜித்தா ஆனந்தராசா மற்றும் டிலாந்தினி எரிக் ஜோசப் ஆகியோருக்கு டொம் தேவாலய நிர்வாகம் எழுத்து மூலமான உத்தரவாதம் அளிக்கப்பட்டதையடுத்தே இந்த உண்ணாவிரப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்திருப்பதாக மேற்படி இரு தாய்மாரும் தெரிவித்தனர்.
உண்ணாவிரதம் இருந்து வந்த தாய்மாரிடம் பேச்சுக்களை நடத்திய டொம் தேவாலய நிர்வாகம் தாம் இவ்விடயம் தொடர்பில் நோர்வே அரசினதும் சிறுவர் நல அமைச்சினதும் அதேநேரம் சிறுவர் நல காப்பகத்தினதும் கவனத்திற்கு கொண்டுவருவதாக உறுதியளித்ததுடன் எழுத்து மூல உத்தரவாதமும் கொடுத்துள்ளது.
இதேவேளை உண்ணாவிரதம் நடைபெற்ற தேவாலயத்திற்கு வருகை தந்த இலங்கை தூதுவர் மேற்படி தாய்மாருடனும் ஆலய நிர்வாகத்துடனும் பேச்சு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தமது பிள்ளைகளை மீட்டுக்கொள்ளவதற்காக சாகும்வரை மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் தேவாலய நிர்வாகத்தின் உத்தரவாதத்தின் மூலம் வெற்றியடைந்திருப்பதாக சம்பந்தப்பட்டோர் நோர்வேயிலிருந்து தெரிவித்தனர்.
இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.15 மணியளவில் இந்த உண்ணாவிரப் போராட்டம் வெற்றியுடன் கைவிடப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள் தம்மிடம் உள்ளதாக வடகொரியா எச்சரிக்கை
By
General 2012-10-09 |
அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதி வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள் தம்மிடம் உள்ளதாக வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கொரியாவானது தனது ஏவுகணைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அமெரிக்காவுடன் உடன்படிக்கையொன்று எட்டப்பட்டுள்ளதாக அறிவித்து இரு நாட்களிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் மற்றும் குவாமிலுள்ள அமெரிக்கத் தளங்களையும் அமெரிக்க பிரதான நிலப் பகுதிகளையும் தமது ஏவுகணைகள் சென்று தாக்கக் கூடியவை என வட கொரியாவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது ஏவுகணைகள் சென்று தாக்கும் தூர அளவை மும்மடங்காக்கப் போவதாக தென் கொரியா ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இஸ்ரேலுக்குள் பிரவேசித்த ஆளற்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
இஸ்ரேலிய விமானப் படையினர் தமது நாட்டின் தென் பகுதிக்குள் பிரவேசித்த சிறிய ஆளற்ற விமானமொன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்தது.
மேற்படி ஆளற்ற விமானம் நெகெவ் பாலைவனத்தின் வடக்கே தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விமானம் ௭ங்கிருந்து வந்தது ௭ன்பது தொடர்பில் அறியப்படவில்லை.
மேற்படி விமானம் மேற்கு பகுதியிலிருந்து பறந்து வந்துள்ளதாக நம்புவதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விமானம் உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதா அல்லது தாக்குதல் நடவடிக்கையொன்றுக்காக அனுப்பப்பட்டதா ௭ன அறியப்படவில்லை ௭ன அவர்கள் கூறினர்.
௭னினும் மேற்படி விமானத்தில் வெடிபொருட்கள் ௭துவும் இருக்கவில்லை ௭ன இராணுவ பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி இஸ்ரேலிய வானொலி செய்தி வெளியிட்டுள்ளது. நன்றி வீரகேசரி
சீனாவில் பாரிய மண் சரிவு: 18 மாணவர்கள் புதையுண்டனர்
தென் மேற்கு சீனாவில் வியாழக்கிழமை இடம்பெற்ற மண்சரிவில் குறைந்தது ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் 18 பேர் புதையுண்டுள்ளனர்.
மேற்படி பிராந்தியத்தில் கடந்த மாதம் பலமான பூமியதிர்ச்சிகள் தாக்கியமை குறிப்பிடத்தக்கது.
யுனான் மாகாணத்திலுள்ள ஸென்ஹி கிராமத்தில் ஏற்பட்ட மண் சரிவில் பாடசாலை வகுப்பறையொன்றும் இரு பண்ணை வீடுகளும் புதையுண்டுள்ளன.
யுபங்டாய் ஆரம்பப் பாடசாலை வகுப்பறையே இவ்வாறு புதையுண்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி யுனான் மாகாணத்தை தாக்கிய 5.6 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சிகளில் சிக்கி 81 பேர் பலியானதுடன் 820 பேர் காயமடைந்திருந்தனர். அத்துடன் 201,000 பேர் வீடு வாசல்களை விட்டு இடம்பெயர நேர்ந்தது.

கடந்த செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி யுனான் மாகாணத்தை தாக்கிய 5.6 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சிகளில் சிக்கி 81 பேர் பலியானதுடன் 820 பேர் காயமடைந்திருந்தனர். அத்துடன் 201,000 பேர் வீடு வாசல்களை விட்டு இடம்பெயர நேர்ந்தது. நன்றி வீரகேசரி

General 2012-10-08 |

General 2012-10-05 09:21:13 |

General 2012-10-05 |
தென் மேற்கு சீனாவில் வியாழக்கிழமை இடம்பெற்ற மண்சரிவில் குறைந்தது ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் 18 பேர் புதையுண்டுள்ளனர்.
மேற்படி பிராந்தியத்தில் கடந்த மாதம் பலமான பூமியதிர்ச்சிகள் தாக்கியமை குறிப்பிடத்தக்கது.
யுனான் மாகாணத்திலுள்ள ஸென்ஹி கிராமத்தில் ஏற்பட்ட மண் சரிவில் பாடசாலை வகுப்பறையொன்றும் இரு பண்ணை வீடுகளும் புதையுண்டுள்ளன.
யுபங்டாய் ஆரம்பப் பாடசாலை வகுப்பறையே இவ்வாறு புதையுண்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி யுனான் மாகாணத்தை தாக்கிய 5.6 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சிகளில் சிக்கி 81 பேர் பலியானதுடன் 820 பேர் காயமடைந்திருந்தனர். அத்துடன் 201,000 பேர் வீடு வாசல்களை விட்டு இடம்பெயர நேர்ந்தது. நன்றி வீரகேசரி
வெனிசூலா ஜனாதிபதித் தேர்தலில் ஹூகோ சாவிஸ் வெற்றி
By
Kavinthan Shanmugarajah 2012-10-08 |
வெனிசூலா நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஹூகோ சாவிஸ் வெற்றிபெற்றுள்ளார்.
இத்தேர்தலில் சாவிஸ் 54.42 % வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சாவிஸை
எதிர்த்துப் போட்டியிட்டவரும் வெற்றி பெறுவார் எனப் பலராலும்
எதிர்பார்க்கப்பட்ட ஹென்ரிக் கெப்ரிலஸ் 44.97% வாக்குகளை மட்டுமே பெற்று 9%
தோல்வியடைந்துள்ளார்.
சாவிஸை
விட வயது குறைந்தவரான ஹென்ரிக் கெப்ரிலஸ் வெனிசூலாவை வர்த்தகத்துக்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்கும் அமெரிக்க ஆதரவு நாடாக மாற்றுவார் என
எதிர்பார்க்கப்பட்டது.
வெனிசுலாவை 1999 ஆம் ஆண்டு முதல் ஆண்டு வரும் சாவிஸின் பதவிக்காலம் இவ்வெற்றியின் மூலம் இன்னும் 6 வருடங்களால் அதிகரிக்கவுள்ளது.
இவ் வெற்றியை அடுத்து சாவிஸின் ஆதரவாளர்கள் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்முறை தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 80 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர்.
இலத்தீன் அமெரிக்காவில் நீண்டகாலமாக அமெரிக்க எதிர்ப்புக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் நாடாக வெனிசூலா திகழ்வதற்கு சாவிஸே காரணமாகும்.
இத்தேர்தல்
வெற்றியின் மூலம் அவர் தனது தேசியமயமாக்கல் மற்றும் இடது சாரிக் கொள்கை
கொண்ட அமெரிக்க விரோத இலத்தீன் அமெரிக்க நாடுகளுடனான உறவை மேலும்
பலப்படுத்தும் முயற்சியில் சாவிஸ் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மையில்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சாவிஸ் பின்னர் அதில் இருந்து முற்றாகக்
குணமடைந்ததாக அறிவித்து இத்தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
தலிபான்களுக்கு எதிராகக் குரல்கொடுத்த 14 வயதான சிறுமி மீது துப்பாக்கிச் சூடு
By
Kavinthan Shanmugarajah 2012-10-10 |
பாகிஸ்தானில் தலிபான்களின்
கடும்போக்குக்கு எதிராகக் குரல்கொடுத்ததன் விளைவாக அண்மையில் சுடப்பட்ட 14
வயதான மலாலா யூசுப்சாய் என்ற சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மலாலா யூசுப்சாய் சுவட் பள்ளத்தாக்கில் தலிபான்களின் கடும்போக்கு
மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பில் பி.பி.சி ஊடாக வெளியுலகுக்கு
தெரியப்படுத்தி வந்தார்.
அவர் வசித்து வந்த பகுதியில் பெண்களுக்கான கல்வியுரிமை தலிபான்களால்
மறுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து லாலா குரல்கொடுத்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மலாலா யூசுப்சாய் பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது தலிபான்களால் சுடப்பட்டார்.
அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் குண்டுகள் பாய்ந்ததுடன் அவர் உடனடியாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தனது சொந்த இடமான மின்கோராவிலிருந்து பெஸாராவருக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து வரப்பட்டார்.
ஆரம்பத்தில் அவரது நிலைமை மோசமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும்
தற்போது அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்
அவரது தலையில் இருந்த குண்டும் அகற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலுக்குப் பல மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புத்
தெரிவித்துள்ளதுடன் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியும் தனது
கண்டனத்தினை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை இத்தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள தலிபான் அமைப்பு மலாலா
யூசுப்சாய் போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அதற்காகவே அவரைச்
சுட்டதாகவும் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
நைஜீரியாவில் படையினரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 30 பொதுமக்கள் பலி
நைஜீரியாவின் மெய்டுகுரியின் வட கிழக்கே அந்நாட்டுப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது அப்பிராந்தியத்திலுள்ள கட்டடங்களுக்கும் படையினர் தீ வைத்துள்ளனர்.
இராணுவத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் ஒன்றில் இரு படை வீரர்கள் காயமடைந்ததையடுத்தே படையினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
௭னினும் தாம் பொதுமக்கள் ௭வரையும் சுட்டுக் கொல்லவில்லை ௭ன இராணுவ செய்தி தொடர்பாளர் லெப்.கேணல் சாகிர் மூஸா தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வடகிழக்கு நகரான டமதுருவில் படையினர் நடத்திய பிறிதொரு தாக்குதலில் 30 போகோ ஹராம் போராளி குழு உறுப்பினர்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது நன்றி வீரகேசரி
By
General 2012-10-10 |

No comments:
Post a Comment