இலங்கைச் செய்திகள்


யாழில் 9 மாதங்களில் 19 கொலை 32 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள்

முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்க நடவடிக்கை 

 கடைசிவரை போராடவேண்டும் ௭ன பிரபாகரன் தீர்மானித்தமை வரலாற்றுத்தவறு: ௭ரிக்சொல்ஹெய்ம்

 கொழும்பில் சட்டத்தரணிகள் சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்

ஏனைய துறைகளைப் போல் நீதித்துறையையும் அடக்கியாள அரசு முயற்சிக்கின்றது: சட்டத்தரணி ரத்தினவேல்

வடக்கின் 252 கி.மீ. தண்டவாளத்தை இந்தியா புனரமைக்கிறது

யாழில் 9 மாதங்களில் 19 கொலை 32 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள்
By General
2012-10-09
 
யாழ்.குடாநாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 19 கொலைச் சம்பவங்களும் 32 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். 

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் யாழ். மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விசேட உரையாற்றும் போது இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் குடாநாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் பாரிய குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

2011 ஆம் ஆண்டில் 21 கொலைச் சம்பவங்கள் யாழில் நடைபெற்றுள்ளது. இம்முறை அது குறைவடைந்து 19 ஆக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு யாழில் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் கடந்த வருடத்தை விட இவ்வருடம் அதிகரித்துச் சென்றுள்ளது. 2012 இந்த வருடத்தில் 32 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


அதில் காதல் விவகாரம் தொடர்பாக 21 பேர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். உறவினர்களினால் 3 பேர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். 8 பேர் யாழ் மாவட்டத்தைச் சேராத வெளி மாவட்டத்தவர்களினால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் 27 பேர் சிறுமியர்கள் எனவும் 16 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான குற்றச்சம்பவத்தைத் தவிர வாள்வெட்டுச் சம்பவங்கள் வீடு உடைத்துக் கொள்ளைச் சம்பவங்கள் என பல குற்றச் செயல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 நன்றி வீரகேசரி
முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்க நடவடிக்கை
By General
2012-10-09

புனர்வாழ்வு பெற்று தொழில் இல்லாது வறுமைக்கோட்டின் கீழ் வாழும் முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையை புனர்வாழ்வு நலன்புரி மீளாய்வுக்குழு மேற்கொண்டுள்ளது.

இது சம்பந்தமான விபரங்களை பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக கிராம அலுவலர்கள் மூலம் சேகரிப்பதற்;ககான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த கால யுத்தம் நிறைவு பெற்ற நிலையில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று தற்போது அதில் ஒரு பகுதியினர் விடுதலை செய்யப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் பெரும் பகுதியினர் தொழிலின்றி மிகவும் கஷ்டமான நிலையில் காணப்படுவதுடன் மறுபுறத்தே ஒரு பகுதியினர் கைகள் கால்களை இழந்தும் மற்றும் உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையிலும் தொழில் செய்ய முடியாதவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.

இதனால் இவர்கள் வாழ்க்கையைக்கொண்டு நடத்துவதில் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றார்கள்.

இதனைக் கருத்தில் கொண்டு விசேடமாக சமுர்த்தி உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு புனர்வாழ்வு நலன்புரி மீளாய்வுக்குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பி;டத்தக்கதாகும்.

யாழ். மாவட்டத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.இவாகளில் ஒரு பகுதியினர் தற்போது தமது இடங்களை விட்டு வேலை தேடி வேறு இடங்களுக்குச் சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.  நன்றி வீரகேசரி  கடைசிவரை போராடவேண்டும் ௭ன பிரபாகரன் தீர்மானித்தமை வரலாற்றுத்தவறு: ௭ரிக்சொல்ஹெய்ம்

By General
2012-10-09

போரின் இறுதி முடிவு ௭ன்னவாக இருக்கப்போகிறது ௭ன்பதை அனைவரும் உணர்ந்த நிலையிலும் போரை ஒழுங்கு படு த் தப்பட்ட முறையில் முடிக்காமல் கடை சிவரை போராடவேண்டும் ௭ன்று பிரபாக ரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் அமை ப் பின் தலைமை முடிவெடுத்தது மிகப் பெரிய வரலாற்று தவறு ௭ன்றே நான் நினை க்கிறேன்.

அதேசமயம் இதை காரண மாகக் காட்டி இலங்கை அரசு நடத்திய குறி வைத்த தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது ௭ன்று நோர்வேயின் முன்னாள் அமை ச்சரும் இலங்கையின் சமாதான செயற் பாடுகளின் ஏற்பாட்டாளராக செயற் பட்டவருமான ௭ரிக் சொல்ஹெய்ம் பி. பி. சி. யின் தமிழோசைக்கு தெரிவித்துள் ள ார்.

அவர் இது தொடர்பில் பி.பி. சி. தமி ழோ சையிடம் மேலும் தெரிவித்து ள்ளத ாவ து, விடுதலைப்புலிகள் அமைப்பு தொ டர்பாக இந்திய அரசில் கொஞ்சம் கூட அனுதாபம் இருக்கவில்லை. ராஜீவ் காந்தி கொலை உட்பட பல்வேறு காரணங்கள் இத ற்கு பின் னணியில் இருக்கின்றன.

ஆனால் அதே சமயம் இறுதிகட்டத்தில் ஆயி ரக்கண க்கா னவர்கள் கொல்லப்படக்கூடாது ௭ன் பது குறித்து அங் கே கரிசனை காண ப்பட்டது. இல ங்கை பிரச்சினையில் நான் ஈடுபட்டிருந்த 10 ஆண்டுகாலங்களில் இந் தியாவுக்கு தெரி விக்காமல் நான் ௭ந்த திட் டத்தையும் முன்னெடுத்ததில்லை. இந்த திட் டத்தை இந்தியா ஏற்றிருக்கும் ௭ன்ப திலும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசும் இருந்திருக்கும் ௭ன்பதிலும் ௭னக்கு ௭ந்தவித சந்தேகமும் இல்லை.

2009 ஆம் ஆண்டில் நடந்த இந்த விட யங்கள் கொழும்பில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அது தொடர்பான மற்ற ராஜீய தகவல் பரிமா ற்றங்கள் அனைத்தும் விகிலீக்ஸில் வெளி யாகியிருக்கின்றன. அவற்றில் இரு க்கும் தகவல்களை நுணுகிப் பார்த்தால் இந்தக் கூற்றுக்கான ஆதாரங்கள் அதில் இருக்கின்றன.போரின் இறுதி முடிவு ௭ன்னவாக இருக்கப்போகிறது ௭ன்பதை அனைவரும் உணர்ந்த நிலையிலும் போ ரை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் முடி க்காமல் கடைசிவரை போராட வே ண் டும் ௭ன்று பிரபாகரன் உள்ளிட்ட விடு தலை ப்புலிகள் அமைப்பின் தலைமை முடி வெடுத்தது மிகப்பெரிய வரலாற்று தவறு ௭ன்றே நான் நினைக்கிறேன்.
 நன்றி வீரகேசரி  கொழும்பில் சட்டத்தரணிகள் சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்
By General
2012-10-08


நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன மீதான தாக்குதலைக் கண்டித்து கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு முன்பாக சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தாக்குதலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் சம்பவத்துடன் தொடர்புடையோரை கைது செய்யுமாறு வலியுறுத்தினர்.
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்) நன்றி வீரகேசரி


 ஏனைய துறைகளைப் போல் நீதித்துறையையும் அடக்கியாள அரசு முயற்சிக்கின்றது: சட்டத்தரணி ரத்தினவேல்

By S.Raguthees
2012-10-08
 
ஏனைய துறைகளைப் போல் நீதித்துறையையும் தன்னகப்படுத்தி அடக்கியாள அரசு முயற்சிக்கின்றது என ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கே. எல். ரத்தினவேல் தெரிவித்தார்.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன தாக்கப்பட்டதைக் கண்டித்து இன்றைய தினம் புதுக்கடை நீதிமன்றில் பணியாற்றும் சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சிரேஷ்ட சட்டத்தரணி ரத்தினவேல் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைக் காலமாக அரசு ஒவ்வொரு துறைகளையும் தனது அதிகாரக் கரத்தால் தன்னகப்படுத்த முயல்கின்றது. இதன் வெளிப்பாடே நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தாக்கப்பட்ட சம்பவமாகும். ஆனால் இதுபோன்ற செயல்களுக்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். நாட்டின் ஜனநாயகத்தை சாகடிக்க அரசு முயல்கிறது. இதை சட்டத்தரணிகள் மாத்திரமன்றி அனைத்துத் தரப்பினர்களும் எதிர்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.     நன்றி வீரகேசரிவடக்கின் 252 கி.மீ. தண்டவாளத்தை இந்தியா புனரமைக்கிறது


இலங்கையில் தமிழர் பகுதியில், மதவாச்சி - யாழ்ப்பாணம், காங்கேசன்துறை இடையே 252.5 கி.மீ. தொலைவில் ரயில் பாதை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இதுவே இலங்கையின் மிக நீளமான ரயில் பாதையாக திகழ்ந்தது. போரினால் இந்த ரயில் பாதையை முழுவதும் அழிவடைந்து விட்டது.

இப்போது தமிழர் பகுதிகளில் புனரமைப்பு பணிகள் இந்திய நிதியுதவியுடன் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், 252 கி.மீ. நீள ரயில் பாதையை மீண்டும் புனரமைக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த புனரமைப்பு திட்டத்துக்காக இந்தியா 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4 ஆயிரம் கோடி) செலவு செய்கிறது. ஏற்கனவே செய்துகொண்ட உடன்படிக்கையின் படி கடனாக இந்த தொகை வழங்கப்படுகிறது.

இந்திய அரசு நிறுவனமான `இர்கான்´, இந்த ரயில் பாதையை புனரமைக்கும் பணியில் ஈடுபட உள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த பணிகள் முடிவடையும் என தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக இலங்கையில் `இர்கான்´ செயல்பாடுகளை கவனிக்கிற அதன் பொதுமேலாளர் எஸ்.எல்.குப்தா கூறும்போது, "252 நீள ரயில் பாதை திட்டம், 4 கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக மதவாச்சி - மதுசாலை வரையிலான பணிகள் அடுத்த ஆண்டு பெப்ரவரியில் முடியும். அதைத்தொடர்ந்து மதுசாலை-தலைமன்னார் பணிகள், ஓமந்தை - பால்லாய் பணிகள் அடுத்த செப்டம்பரில் நிறைவு அடையும். இறுதிக்கட்டமாக பால்லாய் - காங்கேசன்துறை பணிகள் அடுத்த டிசம்பரில் முடியும் என்றார்.

(நக்கீரன்)
நன்றி yarl.com

No comments: