2012-10-08 |
புகலிடம் கோரி
அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தவர்களை பப்புவா நியூகினியின் மானூஸ்
தீவுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய
குடிவரவு, குடியகல்வுத்துறை அமைச்சர் கிறிஸ் பொவன் தெரிவித்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களை மற்றைய தீவுகளுக்கு அனுப்பவது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் கிறிஸ் பொவன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பப்புவா நியூகினிக்கு அனுப்பப்படுபவர்களைத் தங்க வைப்பதற்கான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாவும், ஒரு வாரத்துக்குள் முதல் தொகுதியினர் அங்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment