அமெரிக்காவுடனான இராணுவ உறவு குறித்து அவுஸ்திரேலியாவிடம் சீனா அதிருப்தி


16/05/2012

சீனா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சரிடம் ஆஸி - அமெரிக்க இராணுவ உறவு குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஆஸி. வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற பொப் கர் முதல் முறையாக சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போது அவர் சீன வெளியுறவு அமைச்சர் யஸ் ஜெய்ச்சி மற்றும் துணை ஜனாதிபதி லி கெக்கியங் ஆகியோரை சந்தித்து இருநாட்டு வர்த்தக உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தக உறவு நாடான சீனாவுக்கு தற்போது அவுஸ்திரேலிய உற்பத்திகளில் கால்பங்கினை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தமாகியுள்ளது.

எனினும் அவுஸ்திரேலிய - அமெரிக்க இராணுவ செயற்பாடு குறித்து சீன உயர் அதிகாரிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அவுஸ்திரேலிய- அமெரிக்க பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்த சீன தலைவர்கள் அழைப்பு விடுத்ததாகவும் அமெரிக்க உறவு குறித்து அவர்கள் அதிருப்தி வெளியிட்டதாகவும் கர் சிட்னி மோர்னிங் ஹெரல்ட் பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய - அமெரிக்காவுக்கு இடையில் கடந்த நவம்பரில் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்படிக்கைக்கு அமைய அவுஸ்திரேலியாவில் அமெரிக்கப் படையை அதிகரிக்க இணக்கம் காணப்பட்டது. இது பிராந்திய நாடான சீனாவுக்கு அச்சுறுத்தலாக அமையும் என ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

nantri thinakaran

No comments: