வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு 34 வெல்லும் சொல்

.
அப்பா: ஞானா.......வழக்கமாய் நீ அல்லாட்டில் சுந்தரிதான் என்னைக் கேள்வி கேக்கிறது. இன்டைக்கு நான் உன்னை ஒரு கேள்வி கேக்கப் போறன். நீ கட்டாயம் பதில் சொல்லித்தான் ஆகவேணும்.

ஞானா: என்ன கேள்வி அப்பா......கேளுங்கோ பாப்பம்.

அப்பா: அதாவது வந்து ஞானா, எனக்குத் திருக்குறளிலை உள்ள விருப்பத்தினாலை, என்ரை மகளும் படிக்கட்டும் எண்டு ஒரு திருக்குறள் புத்தகத்தை வாங்கியந்து தந்தன். நீ இப்ப திருக்குறளை நல்ல நாட்டமாய்ப் படிக்கிறாய். இதாலை உனக்கு என்ன பிரையோசனம் எண்டு நினைக்கிறாய்?

ஞானா: அப்பா திருக்குறளைப் படிக்கத் தொடங்கின போது இதாலை என்ன பிரயோசனம் எண்டுதான் நினைச்சனான். ஆனால் படிக்கப் படிக்கத்தான் அப்பா தமிழ் மொழியின்ரை அடி அத்திவாரம் மௌ;ள மௌ;ள எனக்குப் புரியுது.


சுந்தரி: தகப்பனும் மகளும் அடி அத்திவாரத்தைக் கண்டு பிடிச்சிட்டியள். இனி அகழ்வாராய்ச்சி வெற்றிதான்.

ஞானா: அம்மா வெற்றி தோல்வி பாக்கிறதுக்கு அகழ்வாராய்ச்சி செய்யிறேல்லை. உண்மையைக் கண்டுபிடிச்சு, பழமையின் காலத்தையும் வளர்ச்சியையும் அத்தாட்சிப்படுத்திறதுதான் அகழ்வாராய்ச்சி.

அப்பா: பிள்ளை ஞானா, அம்மா என்ன மொகைஞ்சதாரோ, ஹரப்பாவுக்குப் போகப் போறாவே அப்பிடித்தான் போய்ப்பாத்தாலும், அங்கை கண்டுபிடிச்ச எழுத்துகள் திராவிட எழுத்துகள் அல்லாட்டில் பழைய தமிழ் எழுத்துகள் என்டு உலகம் இன்னும் ஒப்புக் கொள்ளேல்லையே.

ஞானா: அப்பா, உலம் வந்து ஒருநாளும் தனக்கு இலாபம் இல்லாததை ஒத்துக் கொள்ளாது. இப்ப உலக நாடுகளைப் பாருங்கோவன். தங்கதங்க நாட்டுக்கு எந்தக் கொள்கை நன்மை தருமோ அந்தக் கொள்கைக்குத்தான் கொடிப்பிடிக்கும். பொது நன்மை எண்டு கருதிச் செய்யிற காரியங்கள் மெத்தக் குறைவுதானே.

சுந்தரி: சரியாய்ச் சொன்னாய் ஞானா. தமிழைத் து}க்கிப் படிக்கிறதாலை உலகத்துக்கு என்ன நன்மை வரப்போகுது.

அப்பா: சுந்தரி…உலகம் தமிழைத் து}க்கிப்பிடிக்க முந்தித் தமிழர் தமிழைத் து}க்கிப் பிடிக்கவேணும். தமிழின்ரை மேன்மையை, தமிழின்ரை இனிமையை, தமிழின்ரை தொன்மையை எத்தினை தமிழர் ஆராயினம் படிக்கினம் அதின்ரை சுவையை அனுபவிக்கினம்.

ஞானா: அப்பா உதைத்தான் தான் சொல்ல வந்தனான். இப்ப பாருங்கோ நான் திருக்குறளைப் படிக்கப் படிக்கத்தான் தமிழ் எவ்வளவு ஓரு ஆழமான மொழி எண்;டது தெரிய வருகுது. தமிழ் மொழி இவ்வளவு காலமும் அழியாமல் இருக்கிறதுக்கு என்னப்பா காரணம்.?

அப்பா: ஞானா தமிழ் மொழி அழியாமல் இருக்கிறதுக்கு அதிலை உள்ள இலக்கண இலக்கியங்கள் எண்டுதான் சொல்ல வேணும். தமிழிலை இருந்து எத்தினையோ மொழியள் தனித் தனி மொழியளாகி விட்டாலும் தமிழ் உருக்குலையாமல் இருக்கிறது இந்த இலக்கண இலக்கியங்களாலைதான். சுந்தரி நீர் என்ன நினைக்கிறீர்.

சந்தரி: தமிழ் எங்கை அப்பா உருக்குலையாமல் இருக்குது. சமஸ்கிருதம் வந்து முந்தி உருக்குலைச்சுது, இப்ப ஆங்கிலம் வந்து உருக்குலைக்குது. இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தமிழ் நின்டு பிடிக்குமோ அ10ர் அறவார்.

ஞானா: எந்த மொழியும் வந்து தமிழை உருக்குலைக்கேலாது அம்மா தமிழர் மட்டும் விழிப்புணர்வோடை இருந்தால் போதும்.

அப்பா: சரியாய்ச் சொன்னாய் ஞானா மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் அதுக்கு வழி வகுத்திருக்கிறார். எந்த மொழிலை இருந்தும் சொற்கள் தமிழுக்கு வரலாம். ஆனால் அவை தமிழ் மயமாக்கப்பட வேணும். சிலகாலத்துக்கு முந்தி அந்த தமிழ் மயமாகிறது சிறப்பாய் நடந்திருக்கு ஆனால் தற்காலத்திலை தான் சிலர் பிற மொழியை அப்பிடியே தமிழிலை உபயோகிக்கினம்.

சுந்தரி: அப்பா உந்தத் தமிழாக்கத்துக்கு ஒரு உதாரணம் சொல்லுங்கோ பாப்பம்.

அப்பா: சுந்தரி இப்ப பாரும் computer எண்ட சொல்லு ஆங்கிலச் சொல்லு. அதைக்கொமபியூட்டர் எண்டு தமிழிலை சொல்லலாம் எழுதலாம். ஆனால் தமிழாக்கம் செய்து உபயோகிக்கிறார்கள். கணனி, எவ்வளவு அழகான சொல். அழகுமட்டும் இல்லை கருத்தாழமும் இருக்க. இந்தக் computer வந்து கணக்கு முறையிலைதான் இயங்குது. அப்பிடிப் பாக்கேக்கை கணனி எண்ட சொல்லு எவ்வளவு பொருத்தமாய் இருக்கு.

ஞானா: அருமையாய் சொன்னியள் அப்பா. உதைக் கேக்கை எனக்கு ஒரு திருக்குறள் ஞாபகம் வருகுது.

சொல்லுக சொல்லை பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

இப்ப பாருங்கோ அப்பா computer எண்ட ஆங்கிலச் சொல்லுக்கு கணனி எண்ட தமிழ்ச் சொல்லை வெல்ல வேறை சொல் எடுக்க முடியுமோ? முடியாதுதானே.

அப்பா: ஞானா நீ கெட்டிக்காரிதான். உந்தக் குறள் சொல் வன்மை எண்ட அதிகாரத்திலை பேச்சுத் திறனுக்காகச் சொல்லப்பட்டது. ஆனால் இந்தச் சந்தர்ப்பத்திலை, தமிழ் சொல்லாக்கத்தைப் பற்றிப் பேசேக்கை வெகு பொருத்தமாய் இருக்கு.

சுந்தரி: இப்ப பார் ஞானா உப்பிடி எத்தினையோ தமிழாக்கம் செய்த சொற்கள் இருக்கு. உதாரணத்துக்கு Button எண்ட ஆங்கில் சொல்லை எடுத்துக்கொண்டால் பொத்தான் எண்டு உருமாற்றப்பட்டிருக்கு. Bottle எண்ட சொல்லு போத்தல் எண்டு மாறியிருக்கு அதை விட்டிட்டு பட்டன், பாட்டில் எண்டு சொல்லிறதிலை ஒரு நயமும் இல்லை நன்மையும் இல்லை.

அப்பா: ஆனால் ஒண்டு சுந்தரி, உந்தத் தமிழாக்கம் செய்யேக்கை, முன்னமே தமிழிலை இருக்கிற பாவனை இல்லாத சொற்களைகவனிச்சு அந்தச் சொற்களைப் பாவிக்க வேணும். அதுக்குப் பிறகுதான் தமிழாக்கத்துக்குப் போக வேணும்.

ஞான: உண்மைதான் அப்பா. ஏக்கணவே இருக்கிற சொற்களைப் பாவிக்க வேணும், அது மாத்திரம் இல்லை புதிசாய் தமிழாக்கம் செய்த சொற்களை உபயோகிக்கவும் வேணும். எல்லாம் நான் முந்திச் சொன்னதுபோலை தமிழருடைய கைகளிலைதான் இருக்கு. (telephone மணி அடிக்கிறது)

சுந்தரி: telephone மணி அடிக்குதப்பா.

அப்பா: பாத்தீரே சுந்தரி. அதுக்குள்ளை மறந்துபோனீர். தொலைபேசி எண்ட சொல்லு எங்கை போட்டிது?

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லும்சொல் இன்மை அறிந்து.

தொலைபேசி எண்ட செல்லை வேறை ஒரு தமிழாக்கச் சொல்லு வெல்லேலாது சுந்தரி.

(இசை)

No comments: