மௌனம் கலைகிறது 11 - நடராஜா குருபரன்


.

கடத்தலும் - கடத்தலின் பின்னணிகளும் - மௌனம் கலைகிறது 11 - நடராஜா குருபரன்

கடத்தலும்  - கடத்தலின் பின்னணிகளும் - மௌனம் கலைகிறது 11 - நடராஜா குருபரன்
அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒருவரென்பதற்காக ஊடகதர்மம் வளைந்து கொடுக்க வேண்டுமென்று அன்றைக்கேநினைத்த ஒருவர் இன்றைக்கு ஊடக அமைச்சராக இருப்பது இலங்கையினதும் எங்களினதும் துரதிஸ்டம்.ஆனால் பல்வேறு தரப்பினருக்கும் களங்களை வழங்குவதன் மூலமே மக்கள் உண்மைகளையும் யாதார்த்தத்தையும் உணர்ந்துகொள்ள முடியுமென்று நம்புகிறவனாக  அன்றைக்கே நானிருந்தேன்
எனது முந்தைய தொடரில் என்னையும் இலங்கை அரசேகடத்தியது எனத் தெரிவித்திருந்தேன்இலங்கை அரசாங்கத்தின் குறிப்பாகப் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கிவரும் பல்வேறு புலனாய்வுக் குழுக்களில் ஒன்றே என்னைத் துணை ஆயுதக்குழு ஒன்றின்உதவியுடன் ஓகஸ்ட் 2008 இல் என்னைக் கடத்திச் சென்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் பதவிக்கு வந்தபின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து யுத்தம்  ஆரம்பித்தது.  யுத்தம் ஆரம்பித்த சில மாதங்களுக்குள்கொழும்பில் கடத்தப்பட்ட முதலாவது ஊடகவியலாளனாக நான் இருந்தேன்.


2005ன் பிற்பகுதியில் சந்திரிக்கா குமாரதுங்க ஆட்சியில் சிவராம் கொல்லப்பட்டார். அவரின் பின் கொல்லப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது நபராக நான் இருந்தேன்என்பதை நினைக்கும் போது கடத்தப்பட்ட அந்தக்கணங்களைமீட்கும் போது இதயம் உறைந்து போகிறதுஅந்தக் கணங்கள் எவ்வளவு கொடுமையானவை என்பதனை அனுபவித்தவர்களால் மட்டுமே உணரமுடியும்.இலங்கையில் கடந்த நாற்பது வருடங்களாக இத்தகையமனித்தன்மைக்கு விரோதமான செயல்கள் சர்வசாதாரணமாக அரசாலும் போராளிக்குழுக்களாலும்நிகழ்த்தப்பட்டே வருகின்றனஅதிஸ்டவசமாக நானும்இன்னும் சிலரும் முதலைகளின் வாயிலிருந்துமீண்டிருக்கிறோம்அந்தக்கணங்களை நினைவுகூருகிறோம்.ஆனால் துரதிருஸ்ட வசமாக அந்தக்கணங்களைநீனைவுகூரப் பாக்கியமில்லாமல் மனிதர்கள் ஆயிரக்கணக்கில்மடிந்தும் போயிருக்கிறார்கள்.
கிந்த சகோதரர்களின் ஆட்சியில் ஊடகத்துறையில் முதலாவது பலிக்கடாவாக நான் தெரிவு செய்யப்பட்டதற்கான காரணங்களைத்தேட வேண்டுமாயின் சூரியன் செய்திப் பிரிவினது அர்பணிப்புடன் கூடிய ஊடக வரலாற்றைச் சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.
இலங்கையின் இலத்திரனியல் ஊடக வரலாற்றில் அதுவும் மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் மக்களின் பங்களிப்புடன் கூடிய மக்களுக்கான ஒரு ஊடகமாகச் சூரியன் செய்திகள் தன்னை நிலை நிறுத்திக்  கொண்டிருந்தது.
2000ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி சூரியனில் நான் இணைந்து கொண்டேன். ஏற்கனவே முன்னர் எனது தொடரில் குறிப்பிட்டது போன்று நான் இணைந்து ஒரு சில நாட்களில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் தலைவர் குமார்  பொன்னம்பலம் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை சில நிமிட இடைவெளியில் வானொலியில் அறிவித்திருந்தோம். இந்தத் தகவல் எனது தனிப்பட்டதொடர்பொன்றினூடாகவே எனக்குக் கிடைக்க அதனைஉடனடியாகச் செய்தியாக  அறிவித்திருந்தோம்.விரைவானதும் நம்பகமானதுமான செய்தி அளிக்கைக்கு அதுஒரு உதாரணமாக அமைந்தது. மேலும் ஒரு ஊடகவியலாளனுக்கு இருக்க வேண்டிய தனிப்பட்ட வலையமைப்பை நான் கொண்டிருந்ததையும் சூரியன் நிர்வாகம் உணர்ந்துகொண்டது. சூரியன் ஆரம்பிக்கப்பட்டுஒன்றரை வருடங்களே ஆகியிருந்தபோதும் அது விரைவாகமக்களை அணுகிக்கொண்டிருந்ததுமக்களின் பங்களிப்புக்கள் ஊக்குவிக்கப்பட்டு சூரியன் மக்கள் வானொலியாக  வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. நான் இணைவதற்கு முன்னரேயேசூரியனின் பிரதம செய்தி ஆசிரியர்மற்றும் செய்தி ஆசிரியர்கள்சூரியனின் செய்தி முகாமையாளர் அறிவிப்பாளர்கள் எல்லோரும் தமது தொழிலை வயிற்றுப்பிழைப்புக்கானது என எண்ணாமல் ஊதியம் பெறும் தொழில் என்பதற்கு அப்பால் உணர்வுள்ளவர்களாக தொழிற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தகையதொரு உணர்வுள்ள துடிப்புள்ள செயற்பாட்டாளர்களோடு இணைந்துகொண்டபோதுசூரியனில் எனது பங்களிப்பும் ஆழமாகியது
சூரியனில் நான் இணைவதற்கு முதற் காரணியாக இருந்த றமணன் சூரியன் ஊடக வாழ்வு குறித்த தனது அனுபவப் பதிவில் பின்வருமாறு கூறுவார்குரு அண்ணாவின் கடந்த கால போராட்ட வாழ்வு மற்றும் சரிநிகர்காரணமாக அவர் கொண்டிருந்த  ஊடகத் தொடர்புகள் என்பன காரணமாக தமிழ் ஊடகத்துறையில் வரலாறு தெரிந்த ஒரு சில ஊடகவியலாளர்களில் ஒருவராக குரு அண்ணா இனம் காணப்பட்டார் 
சூரியனில் குறுங்கால ஒப்பந்த அடிப்படையில் இணைந்த நான் குறுகிய காலப் பகுதியில் நிரந்தரமாக்கப்பட்டதுடன் எனது செயற்பாடுகள் காரணமாக  சூரியன் செய்திப்பிரிவின் பிரதம ஆசிரியராகவும் தரமுயர்த்தப்பட்டேன். 
நான் இணைந்து கொண்ட 2000 ஆண்டில் தொடங்கி 2002ல் சமாதானப்பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் காலம் வரையிலான பகுதி மிகவும் கடினமான காலப்பகுதியாகும்.அக்காலத்தில் சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரணதுங்க ஆட்சிசெய்ய அனுருத்த ரத்வத்தை பாதுகாப்பு அமைச்சராகவிருந்தார்.  இந்த 2 வருட காலப்பகுதி கடுமையான யுத்தம் நிலவிய காலப்பகுதியாகும்.னையிறவு முகாம் நிர்மூலமாக்கப்பட்டதுகட்டுநாயக்கா வான்படைத் தளம் தாக்கப்பட்டது உள்ளிட்ட மிக முக்கியமான தாக்குதல்கள் நிகழ்ந்த காலம் அது. இந்தக் காலப்பகுதியில் இலங்கையில் கடுமையான செய்தித் தணிக்கையும் நடைமுறையில் இருந்தது.

செய்தித் தணிக்கை நடைமுறையில் இருந்த போதும் கூட அவற்றையும் மீறி நாசூக்காகச் செய்திகளை மக்களிடம் கொண்டு சென்றோம். கட்டுநாயக்கா தாக்குதலின் போது எமது அறிவிப்பாளர் ஒருவர் சிங்களச் செய்தியாளர்களுடன் சென்று துணிவுடன் நேரடியாகத் தகவல்களைப் பெற்றுவானொலிக்குத் தந்துகொண்டிருந்தார். ஆனையிறவு புலிகள் வசம் வீழ்ந்த போது தணிக்கையையும் மீறி ஆனையிறவின் வரலாற்றைக் கூறியதன் ஊடாக அந்தச் செய்தியைமக்களுக்கு விளங்க வைத்தோம். பிந்துனுவௌ புனர்வாழ்வு முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த செய்தியையும் விசே நிகழ்ச்சியாகச் செய்தோம். அப்போது மலையகத்தில் எழுந்த வன்முறைகளுக்குச் சூரியன் அளித்தசெய்திகளே காரம் எனக் ஹற்றனில் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் அமரர் சந்திரசேகரனின் பல போராட்டங்களுக்கும்மலையகத்தில் நடந்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கும் சூரியன் செய்திகள் வழியமைத்துக் கொடுத்ததாகச் குற்றம் சாட்டப்பட்து. இதனை டுத்து அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்காவின் உத்தரவின் பேரில் அன்றய ஊடகத்துறை அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா என்னையும் அப்போது தமிழ் சிங்கள செய்திகள் அனைத்தினதும் மேலாளராகஇருந்த சந்தன திலகரத்வையும் அழைத்து நீண்ட நேரம் உரையாடி இருந்தார். உலக வர்த்தக மையத்தில் இருந்த ஊடக அமைச்சில் நடந்த உரையாடலில் சூரியனின் செய்திகளே மலையகத்தின் எழுச்சிக்கும் அரசாங்கத்திற்கு எதிரான வன்முறைகளுக்கு காரணம் எனத் தமக்குப் பல முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் ஜனாதிபதி சந்திரிக்கா உடனடியாக உங்களுடன் பேசும்படி கூறியதாகவும் யாப்பாஅப்பொழுது தெரிவித்திருந்தார். அத்துடன் வன்முறைகளைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசாங்கத்திற்கு சூரியன் செய்திகள் உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
சூரியனின் பிரதான செய்திகள்மணித்தியாலச் செய்திகள்,உடனடிச் செய்திகள் மட்டுமன்றி ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30ற்கு நடைபெற்ற சூரியப்பார்வைகள் நிகழ்ச்சி, 2004களில் ஆரம்பிக்கப்பட்ட சனிக் கிழமைகளில் இடம்பெற்ற விழுதுகள் நிகழ்ச்சி என யாவுமே மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டவையாக விளங்கியிருந்தன.
இது பற்றி பேராசிரியர் கா. சிவத்தம்பி 'செய்தியின் அரசியலும் அரசியற் செய்திகளும்என்ற தனது குறிப்பொன்றில் கூறும் போதுஇலங்கையின் பண்பலை ஒலிபரப்பு தவிர்க்க முடியாதபடி இன்றியமையாத முக்கியத்துவம் பெற்றுவிட்ட சூழலில் இந்தப் பண்பலை ஒலிபரப்பின் பிரதான தள கவர்ச்சிகளுக்கு (ஜனரஞ்சகப் பாடல்கள் - தமிழில் இது சினிமாப் பாடல்தான் (சினிமாப் பாடல் பண்பாடு) அப்பாலே போய் இந்த ஒலிபரப்புகளின் பாடல் அம்சத்தை முக்கியத்துவப் படுத்தாத அரசியல் விடயங்கள் பற்றிச் சொல்லப்படுவதாக இன்று சூரியன் பண்பலை ஒலிபரப்பு'தமிழ் நேயர்களின்முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் எவ்வித கணக்கீட்டிற்கும் அவசியம் இல்லை.
சூரியனில் வரும் நாளந்த செய்திகள்அரசியல் விமர்சனங்கள் ஆகியன சினிமா பாடல் பண்பாட்டிற்குள் நிற்க விரும்பாதவர்களுக்கு கூட அவர்களது ஒழுங்கான கேட்புக்கு ( டுளைவநசniபெ) உரித்தாகி விட்டன. இவ்வாறு தொடர்ந்து செல்லும் பேராசிரியர் இப்படிக் கூறுகிறார் இனக்குழும அடையாளம் மேலிருந்து திணிக்கப்படம் இலங்கையில் தமிழ் நேயர்கள் தங்களுக்கு முக்கியமான விடயங்கள் பற்றி தரவுகள்,தகவல்கள்விளக்கங்கள் பற்றி அறிய விரும்புவது இயல்பெ. சூரியன் செய்திகள் அந்தத் தேவையை பூர்த்தி செய்கின்றன. இலங்கையின் தமிழ் நிலைப்பட்டதமிழ்ப் பிரதேச நிலைப்பட்ட செய்திகளை தெரிவிப்பதில் இவர்கள் ஆர்வம் காட்டுவது இவர்களது கேட்டுணர் ஈர்ப்பை வளர்த்து உறுதிப்படுத்தி உள்ளது.
இதற்கு மேலேபோய் தமிழ் இருப்பு பற்றிய பிரச்சனைகளை எடுத்துக் கூறுவதும் விவாதிப்பதும் முக்கிய நிகழ்ச்சிகளாகி உள்ளன. ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணியில் இருந்து 10மணி வரை ஒலிபரப்பாகும்சூரியப் பார்வையில் ஒரு பார்வைச் செழுமையும் உன்னிப்பும் உண்டு.சனிக்கிழமை காலையில் விழுதுகள் நிகழச்சியில் ஒரு படி மேல் சென்று சில காத்திரமான அரசியல் விவாதிப்புக்களை செம்மையாக நடத்துகின்றது.
பண்பலை நுகர்வோர் ஒலிபரப்பின் ஊடே அரசியல் நுகர்வை மிகுந்த சாதுரியத்துடன் கொண்டுவந்துள்ள சூரியன் செய்தியாளர்களுக்கும் ஒலிபரப்பாளர்களுக்கும் எனது நன்றிகள்.” எனக் கூறினார்.
2004ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமிஅனர்ந்தங்கள் குறித்துக் கூட இலங்கையின் அனைத்து ஊடகங்களுக்கும் முன்னதாகக் காலையில் சூரியனேஅறிவித்தது
எனது ஒன்பதாவது  தொடரில் குறிப்பிட்டது போன்று இலங்கையில் ஏதாவதொன்று நிகழ்வதற்கு முன்பு அதுபற்றிச் சூரியனுக்கு அறிவித்து விடுவார்கள் எனஇராணுவப்படைத்தரப்பு கோபம் கொள்ளுமளவுக்கு சூரியன்செய்திகளின் விரைவுத்தன்மை இருந்தது.
இதுமட்டுமல்ல இலங்கையின் இலத்திரனியல் ஊடக வரலாற்றில் தமிழ்ச் செய்திப்பிரிவொன்று அதனை இயக்கியநிறுவனத்தின் சிங்கள ஆங்கில மொழிமூல செய்திப் பிரிவுகளின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் ஒரு முழுமையான செய்திப்பிரிவாக இயங்கியது சூரியனிலேயே ஆகும். தனக்கான சுதந்திரத்தை தன்னகத்தே கொண்டிருந்தசெய்திப்பிரிவாக சூரியனின் தமிழ்ச் செய்திப் பிரிவே விளங்கியது. அதன் முழு அதிகாரமும் கொண்டசெய்திமுகாமையாளராக நான் கடமையாற்றினேன். ஏனைய மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படாத தமிழிலேயே செய்திகளை உருவாக்குகின்ற செய்திப்பிரிவாக நாங்கள்இயங்கினோம்இந்த குறிப்பான நிலைமைக்கு (இன்று பல்வேறு நெருக்குதல்களால் இந்த முழு நிறுவனமும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளபோதும்சூரியன்நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளரும்தற்போதைய நிறுவனத் தலைவருமான றேனேர்சில்வாஅவர்களது  தனிப்பட்ட துணிவே காரணம் என்பதை நன்றியோடு கூற விரும்புகிறேன்.
எமக்கு வழங்கிய சுயமாக இயங்கும் அதிகாரத்துக்கு எதிராகநிறுவனத்துக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும்கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதும் தமிழ்ப் பிரிவு தமிழ் நேயர்களுக்கு எது தேவைப்படுகிறதோ அதனை வழங்கட்டும் ஏனைய மொழிகளின் திணிப்பு வேண்டாம் எனஎமது நிறுவனத்தலைவர் உறுதியாகத்தெரிவித்துவிட்டிருந்தார். மிக நெருக்கடியான காலத்தில்அவர் காட்டிய துணிவும் எடுத்த முடிவுமே சூரியன் செய்திப்பிரிவு அக்காலத்தின் கண்ணாடியாக விளங்கக் காரணமாகியிருந்தது. 
ஆனால் இந்த நிலைப்பாடுகாரணமாக சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரணதுங்க ட்சியில் தொடங்கிஎன்னைக் கடத்தும் வரையிலும் பின்னர் 2007ல் மகிந்த சோதரர்கள் இந்த நிறுவனத்தை மூடும் வரையிலும் இந்தநிறுவனத்திற்குத் தொல்லைகள் தொடர்ந்தே சென்றன.
இவ்விடத்தில் எனது மௌனம் கலைகிறது தொடர் 10 இனை வாசித்த ஒரு வாசகர் எனக்கு எழுதிய கடிதத்தையும் பகிரவிரும்புகிறேன். சூரியன் வானொலியும் அதில் என் பங்களிப்பும் அன்று அதன் வாசகர்களிடையே என்னவிதமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதற்கு இது ஒரு உரைகல்.
அன்பின் குரு அண்ணாவிற்க்கு அன்பும் பாராட்டுதலும் கலந்த எனது இனிய வணக்கம்!
உங்களின் 'மௌனம் கலைகிறது-10' தொடரை படித்தவுடன் இதனை உங்களுக்கு எழுதுகிறேன். சரியான சந்தர்ப்பத்தில்பொருத்தமான நேரத்தில் உங்கள் மௌனத்தை நீங்கள் கலைத்திருப்பதானது ஜனநாயகத்தை விரும்புகின்றதனிமனித உரிமையையும் பாதுகாப்பையும் பாதுகாக்க நினைக்கின்ற என்னைப்போன்ற ஆயிரமாயிரம் பேருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை.
உங்கள் கடத்தல் இடம்பெற்றபோது நான் யாழ்பல்கலையில் மாணவன்ஒவ்வொரு வார இறுதியிலும் உங்கள் நிகழ்ச்சியை கேட்டுவிட்டுத்தான் அடுத்தவேலை... அப்படி ஒருநாள் காலையில் சூரியனோடு இணைந்திருக்கையில்தான் லோசன் மிகவும் பதட்டத்துடன் உங்கள் கடத்தல் பற்றிய செய்தியை சொல்லிவிட்டு கலையகத்திலிருந்து உடனடியாக செல்கின்றார்..... அந்த நிமிடத்திலிருந்தே என்னைப்போன்று ஊடகத்துறையை ஆத்மார்த்தமாக நேசிக்கின்ற ஆயிரமாயிரம் பேருக்கும்நாட்டின் அரசியல் களநிலவரங்களை சரியாக புரிந்துகொண்ட லட்சக்கணக்கான சாதாரண பொதுமக்களுக்கும் நன்றாகவே தெரியும் இது மஹிந்த கொம்பனியின் வேலைதான் என்று. அக்காலகட்டத்தில் நாட்டின் அடிமட்ட மக்களோடு இணைந்திருந்தவன் என்ற ரீதியில் நானிதைச் சொல்கிறேன். 
ஊடகத்துறையால் தமக்கு கிடைதிருக்கும் மக்கள் செல்வாக்கையும்பிரபல்யத்தையும் வைத்துக்கொண்டு பிழைப்பு நடாத்துகின்ற ஒரு புது நாகரீகம் தமிழ்நாட்டைப்போன்று நமது நாட்டிலும் வளர்ந்துவருகின்றது என்பதை ஒரு கவலைக்குரிய விடயமாகவே நான் பார்க்கிறேன். அப்படிப்பட்ட நிலையில் உங்களை போன்ற ஊடகத்தை உயிரிலும் மேலாக நேசிக்கின்றவர்கள் மகிந்த கொம்பனி போன்றவர்களின் முகத்தை மட்டுமல்லாது எமது ஊடகத்துறையில் இருக்கின்ற புல்லுருவிகளினதும் போலியான முகங்களையும் கிழித்தெறியவேண்டும். அப்படியான ஒரு சூழலில் நீங்கள் அப்படி நடந்துகொண்டதும்இப்போதய சூழலில் நீங்கள் உங்கள் மௌனத்தை கலைத்திருப்பதானதும் பாராட்டுக்குரியதே. இதுவும் ஒரு வாக்குமூலமாக சர்வதேசத்தால் பார்க்கப்படும் என்பதில் ஐயமில்லை.
உங்கள் பணி தொடரட்டும்.....
நன்றி
இப்படிக்கு,
வி....
பி.குறிப்பு:- நான் இதனை நேற்றுமுந்தினமே எழுதிவிட்டேன். ஆனால் என்னால் இதனை உடனடியாக உங்கள் தளத்தில் பதிவுசெய்யமுடியவில்லை. காரணம் நான் .... அதனால்தான் இதனை தனிப்பட்டரீதியில் உங்களுக்கு எழுதுகிறேன். இந்த நிலை மாறவேண்டும் அண்ணா! உங்களால் முடிந்தால் இதனையோ அல்லது இதன் சாரம்சத்தையோ உங்கள் தளத்தில் பதிவுசெய்யுங்கள்....
இந்த நிலையில் 2005ஆம் ஆண்டு கடைசியில் ஒருநாள் எனது நண்பர் ஒருவர் தன்னை உடனடியாகத் தொடர்பு கொள் வேண்டும் என இன்னுமொரு நண்பர் ஒருவரூடாகத்தகவல் அனுப்பி இருந்தார். (சமூகத்தில் பிரபலமான இவர் அநாட்டில் இருப்பதால் இங்கு பெரைக் குறிப்பிடவில்லை.)நான் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினேன். விபரமாக விடயங்களைக் கூறித்தொலைபேசியில் உரையாட முடியாதென அவர்கூறியமையால் விடையத்தின் கனதியை உணர்ந்து கொண்டுஎனது நண்பன் சிவகுமாரையும் அழைத்து அவனுடன் மோட்டார்வண்டியில் சுற்றுவழிகளால் அவரது வீட்டிக்குநேரடியாகவே சென்றோம்
25 பெயர்களைக்கொண்ட கொலைப்பட்டியல் ஒன்றைஇலங்கையின் அரச புலனாய்வுப் பிரிவு தயாரித்துள்ளதாகத் தகவல்  ஒன்று அவருக்கு வந்ததாகவும்  அதில் னதுபெயரே முதலாவதாக உள்ளதாக அறிவதாக அவர்கலவரமுடன் தெரிவித்தார். அது உண்மையாபொய்யாவென்பதை என்பதைத் தனக்கு உறுதிப்படுத்தமுடியவில்லை என்றாலும் மிகக் கவனமாக இருங்கள் எனஅவர் கூறினார். இந்தத்தகவலையடுத்து ஒருசில நாட்களிலேயே நான் தமிழகம் சென்று 10 நாட்கள் அங்குதங்கியிருந்தேன்...
பின்னர் நான் கட்த்தப்பட்ட போது நிகழ்ந்த விசாரணையின்போது நீ ஏன் அண்மையில் தமிழகம் சென்று வந்தாய் என அரச புலனாய்வாளர்கள் என்னைக் கேட்டபோது நான் இந்தியா செல்லாமல் இருந்திருந்தால் அப்போதே கடத்தப்பட்டிருப்பேன் என்பதை உணர்ந்தேன். என் ஆயுளுக்கு ஒரு நீடிப்பைத்தந்த அந்த நண்பரை நான் நன்றியுடன் இங்கு நினைவுகூருகிறேன்.
2006ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் இருந்து புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நிகழ்ந்த சமாதானப்பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து யுத்தம் ஆரம்பமானது. இந்தகாலத்திலும் சூரியனின் செய்தியிடல் விரைவானதாகவும் நம்பகமானதாகவும் இருந்தது.
திருகோணமலையில் ஆரம்பித்த யுத்தம் குறித்தும்அதன் போது முஸ்லீம்கள் மூதூரில் இருந்து வெளியேறவேண்டி ஏற்பட்டது குறித்தும்பிரான்ஸ் தொண்டர் நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டமை குறித்தும் சூரியன் பல அம்பலப் படுத்தல்களை மேற்கொண்டிருந்தது. 
மூதூரில் இடம்பெற்ற கடுமையான மோதலில் பிரான்ஸ் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் ஒரே இடத்தில் கொல்லப்பட்டுச் சடலமாகக் கிடப்பதை  எமது செய்தியாளர் அந்தக் கட்டடத்தின் கூரையில் இருந்து அவதானித்து தனதுகையடக்கத் தொலைபேசியூடாக எமது நேரடி வானொலிஒலிபரப்புக்கு வழங்கினார் என்பது பலருக்குக் தெரியாது.  எமது செய்தியாளர் தனது உயிரையும் துச்சமென மதித்து அச்செய்தியை வழங்கிய பின்னரே ஏனைய அனைத்து ஊடகங்களும் அதனை அறிந்து கொண்டன. 
இந்தக் காலப்பகுதியில் இலங்கை வந்து திருகோணமலை சென்ற சர்வதேசச் செய்தி நிறுவனம் ஒன்றின் ஊடகவியலாளர் விழுதுகள் நிகழ்ச்சியை கேட்டுவிட்டு அந்த நிகழ்ச்சியை மிக அருமையாக செய்திருந்தீர்கள் எனப் பாராட்டியிருந்தார்.
யுத்தம் ஆரம்பிப்பதற்கு முதல் ஆனால் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முறுகல் நிலை மெதுவாக வெளித் தெரிய ஆரம்பித்த போது  திருகோணமலையில் சம்பூர் பகுதிக்கான உணவு விநியோகத்தில் அரசாங்கம்கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தபோது அப்போதைய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் இப்போதைய ஊடகத் துறை அமைச்சருமான ஹெகலிய றம்புக்வெலவிடம் உலக வர்த்தக மையத்தில் ஒரு செவ்வியை எடுத்திருந்தேன்.
அதன் பின்னர் அவர் கூறிய கருத்துகள் குறித்து விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் எழிலனுடனும் ஒரு செவ்வியை எடுத்திருந்தேன். பின்னர் இவற்றை ஒலிபரப்பினேன். 
இவை ஒலிபரப்பாகிய சில நிமிடங்களில் எனது கையடக்கத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஹெகலிய றம்புக்வெல நான் ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர். எழிலன் விடுதலைப் புலிகளின் திருமலை அரசியற்துறைப் பொறுப்பாளர் எப்படி எனது செவ்விக்குப் பின் நான்கூறியவைகள்  பொய் எனக்கூறும்  எழிலனின் செவ்வியை நீ ஒலிபரப்புவாய் எனக் கேட்டு இருந்தார்.
ஒருபக்கத்தின் செய்திகளை மட்டும் ஒலிபரப்பும் பக்கசார்பான பத்திரிகையாளனாக இருப்பதில் உள்ள உடன்பாடின்மை காரணமாகவே புலிகள் பக்கத்து அபிப்பிராயங்களையும் பதிவுசெய்து ஒலிபரப்பியிருந்தேன். இந்த வகையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தீவிர புலியெதிப்புவாதிகளின் கருத்துக்களுக்கும் எமது வானோலியில் திறந்த களம் வளங்கப்பட்டிருந்தது.  அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒருவரென்பதற்காக ஊடகதர்மம் வளைந்து போகவேண்டுமென் நினைத்தவர் ஒருவர் இன்றைக்கு ஊடக அமைச்சராக இருப்பது இலங்கையினதும் எங்களினதும் துரதிஸ்டம். ஆனால் பல்வேறு தரப்பினருக்கும் களங்களை வழங்குவதன் மூலமே மக்கள் உண்மைகளையும் யாதார்தத்தையும் உணர்ந்துகொள்ள முடியுமென்று நம்புகிறவனாக அன்றைக்கே நானிருந்தேன்.
ஆயினும்  ஊடக தர்மம் குறித்து  ஹெகலிய றம்புக்வெலஅவர்களுக்கு பாடமெடுப்பது பலன் தராது என்பதனால் சட்டரீதியாகப் பொருந்தக்கூடிய பதில் ஒன்றை அவருக்குத் தெரிவித்தேன்:
“ புலிகள் மீது உத்தியோகபூர்வமாகத் தடையை நீங்கள்இன்னும் விதிக்கவில்லை. சமாதானப் பேச்சுக்கள்உத்தியோக பூர்வமாக இன்னும் முறியவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுடனான தொலைபேசிகள்துண்டிக்கப்படவில்லை எல்லாவற்றிற்கும் மேலாகப்புலிகளுடன் ஊடகங்கள் தொடர்பு கொள்ளக் கூடாது என இன்னும் அரசாங்கம் அறிவிக்கவில்லை. இப்போதும் சமாதான கால நடைமுறைகளே தொடர்கின்ன எனவேதான் அவர்களிடம் செவ்வியைப்பெற்று ஓலிபரப்பினேன் . என்றேன்.
ஆனால் ஹெகலிய றம்புக்வெல அவர்கள் எனது பதிலைஏற்காது தனது செவ்வியின் பின் எழிலனது செவ்வியை ஒலிபரப்பியதன் மூலம் தன்னை அவமானப்படுத்தி விட்டதாகக் கடுமையான தொனியிற் கூறிக் கோபம் கொண்டு தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டார்.
பின்னர் ஊடக நிறுவனங்களின் தலைவர்களை அரளிமாளிகையில் மகிந்த ராஜபக்ச சந்திக்க ஒழுங்கு செய்யப்பட்டிருந்தபோது அங்கு பிரசன்னமாகியிருந்தஹெகலிய றம்புக்வெல எழிலனின் பேட்டியை சூரியன் ஒலிபரப்பிய சம்பவத்தை ஒரு குற்றச்சாட்டாக எனது நிறுவனத் தலைவரிடம் முன்வைத்திருந்ததை எனது கடத்தலின் பின் வெளிவந்த சண்டே லீடர் பத்திரிகையில் லசந்த விக்கிரமதுங்க அவர்கள் வெளிப்படுத்தியிருந்தார். 
ஹெகலிய றம்புக்வெல அவர்களுடனான தொலைபேசி உரையாடல் நிகழ்ந்து சில நாட்களின் பின் ஒருநாள் உலக வர்த்தக மையத்தின் 35ஆவது மாடியில் அமைந்துள்ள எமது நிறுவனத்திற்கு வந்த ஒருவர் நடராஜா குருபரனைச் சந்திக்கவேண்டும் எனவும் தான் லையன்ஸ்கிப்பில்(lionsclup) இருந்து வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். அலுவலக வரவேற்பாளர் என்னைத் தொலைபேசியில் அழைத்து தகவலைத்தெரிவித்தார். நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது படையினருக்குரிய முடிவெட்டுடன் படையினர்அணியும் சப்பாத்தும் அணிந்த  “லயன்ஸ்கிளப் உறுப்பினர்எனக்காகக் காத்திருந்தார்.
சிங்களத்திலேயே அவர் உரையாடலை ஆரம்பித்தார்.
 “ கொழும்பில் உள்ள லயன்ஸ் கிளப்பில் இருந்து வந்திருக்கிறேன். நாம் திருகோணமலையில் உள்ள வறிய மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம். குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம்.அதற்கு உங்களுடைய உதவி வேண்டும்” என்றார்.
என்ன உதவியெனக் கேட்டபோது அந்தப் பகுதியில் இருந்து தொடர்பொன்று எடுத்து தாருங்கள் எனக் கேட்டார். நான் சொன்னேன் தனிப்பட்ட வகையில்எனக்கு அந்தப்பகுதியில் எவருடனும் தொடர்பில்லை. நீங்கள் லயன்ஸ் கிளப்பைச் சேர்ந்தவர் என்கிறீர்கள் எனெவே திருகோணமலையில் உள்ள லயன்ஸ் கிளப்புடன் தொடர்பு கொண்டீர்கள் என்றால்விடயம் இலகுவாகிவிடும். அவர்கள் சகல உதவிகளையும் செய்வார்கள். எனக் கூறினேன். 
உண்மையிலும் அவர் என்னைச்சரியாக அடையாளம் காண்பதற்கும் திருகோணமலையில் உள்ள புலிகளுடன் எனக்கு தொடர்பு இருக்கிறதா எனத்துருவுதற்கும் குறிப்பாக எழிலனுக்கும் எனக்கும் உள்ள உறவு என்ன என்பதைக் கணக்கிடுவதற்குமே புலனாய்வாளராகிய அந்த லயன்ஸ்கிளப் உறுப்பினர் அன்றைக்கு வந்திருந்தார்.

No comments: