புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை

 _

புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குவதற்காக குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து வெளிநாடு சென்ற பலர் இலங்கைப் பிரஜாவுரிமையை இழந்துள்ளனர். இவர்கள் மீண்டும் இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தத் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றுக்கொண்ட புலம்பெயர் இலங்கையருக்கு மீண்டும் இலங்கைப் பிரஜாவுரிமையை இலகுவாக பெற்றுக்கொள்ள இது வசதியாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்

No comments: