இலங்கைச் செய்திகள்

.
கச்சத் தீவை மீட்கும்வரை ஓய மாட்டேன் -  முதல்வர் ஜெயலலிதா

மீதிக் கடனைப் பெறுவதா இல்லையா கொழும்பு தீர்மானிக்க வேண்டிய விடயம் சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது

தண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளுக்கு விடுதலை


விடுதலைப்புலிகளுக்கு பொருள்கள் கடத்திய வழக்கில் ஆஜராகாததால் விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் சென்னையில் கைது
கச்சத் தீவை மீட்கும்வரை ஓய மாட்டேன் -  முதல்வர் ஜெயலலிதா
சென்னை, பிப்.3: கச்சத் தீவை மீட்கும்வரை ஓய மாட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  உறுப்பினர் ஆறுமுகம் (வால்பாறை) வெள்ளிக்கிழமை பேசியது: ""தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் கச்சத் தீவை மீட்க முதல்வர் தலைமையில் அனைவரையும் திரட்ட வேண்டும். கச்சத் தீவை மீட்க மத்திய அரசு தடையாக இருந்தால் மக்கள் மத்தியில் அதை அம்பலப்படுத்த வேண்டும்'' என்றார். அதற்கு முதல்வர் அளித்த பதில்: ""இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்குவதைப் பற்றி உறுப்பினர் இங்கே குறிப்பிட்டார். இலங்கைக் கடற்படையினரால் எவ்வித இன்னலுக்கும் ஆளாகாமல், தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி இடங்களில் தொழிலை மேற்கொள்ளும் வகையில் அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். அதற்கான நிரந்தரத் தீர்வு, தாரைவார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்டெடுப்பதுதான். இதற்காக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற முறையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தேன். இந்த வழக்குக்கு மேலும் வலுவூட்டும் வகையில், ஆவணங்களைத் தன்னிடம் கொண்டுள்ள தமிழக அரசின் வருவாய்த் துறையும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதார உரிமையைக் கட்டிக்காக்க, கச்சத் தீவை மீட்கும்வரை நான் ஓயமாட்டேன் என தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார் முதல்வர் ஜெயலலிதா.


மீதிக் கடனைப் பெறுவதா இல்லையா கொழும்பு தீர்மானிக்க வேண்டிய விடயம் சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது


இலங்கை நாணயத்தின் 3 சதவீத மதிப்பிறக்கத்தை சிறந்த ஆரம்பமென்றும் எனினும் நாணயமாற்று விகிதத்தில் இலங்கை மத்திய வங்கி மேலும் நெகிழ்வுத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நாணய நிதியம்இ இலங்கைக்கான கடனுதவியின் இறுதி இரு தவணைகளுக்கான 800 மில்லியன் அமெரிக்கா டொலர்களைப் பெற்றுக் கொள்வதா அல்லது இல்லையா என்பதை இலங்கை அரசாங்கமே முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

கலாநிதி பிரையன் எய்ட்கின் தலைமையில் இலங்கை வந்திருந்த சர்வதேச நாணய நிதிய தூதுக்குழுவினர்  பொருளாதார வளர்ச்சி மற்றும் கொள்கை தொடர்பாகக் கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி வரை கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர். அரச மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடனும் சிவில் மற்றும் வர்த்தக சமூகத்தினருடனும் இந்த கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இவற்றின் இறுதியில் இலங்கை மத்திய வங்கியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலாநிதி பிரையன் எய்ட்கின் விளக்கமளிக்கையில்;

"கடந்த செப்டெம்பர் மாதத்தில் பொருளாதாரம் உறுதியாக வளர்ச்சி கண்டுள்ளது. முதலீடுகளினதும் நுகர்வோரினதும் அளவுகள்இ தொடர்ச்சியான அதிகரிப்பைக் காட்டுகின்றன' என்று கூறினார்.

எனினும் வங்கிக் கடன் வழங்கல் அதிகரிப்பின் விளைவாக உள்நாட்டு கேள்வியில் எழுந்த பெரும் அதிகரிப்பின் காரணமாக எதிர்பார்க்கப்பட்டதை விட இறக்குமதியில் அதிகரிப்பு ஏற்பட்டதாக சர்வதேச நாணய நிதிய தூதுக்குழுவின் மதிப்பீடுகளின் இறுதியில் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இறக்குமதி செலவினத்தின் அதிகரிப்பு காரணமாக நடைமுறைக் கணக்கின் பற்றாக்குறை 2011 ஆம் ஆண்டில் சடுதியான அதிகரிப்பைக் காட்டியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"2011 ஆம் ஆண்டின் 2 ஆவது அரையாண்டில் அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமானளவு வீழ்ச்சி கண்டது. 2011 ஆம் ஆண்டின் 2 ஆவது அரையாண்டில் உருவான வெளிநாட்டுத் துறை சமநிலையின்மையின் போது அரசாங்கத்தினால் கையாளப்பட்ட உபாயங்கள் மற்றும் தேவையற்ற அழுத்தங்கள் இன்றி பொருளாதாரத்தைத் தொடர்ச்சியாக இயல்பு நிலையில் வைத்துக்கொள்வதில் உறுதி செய்து கொள்ளுதல் ஆகியவற்றுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி இந்த கலந்துரையாடல்களில் பிரதான கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போதுஇ நிதி மற்றும் நாணய மாற்று விகித கொள்கை நிலைப்பாட்டில் அண்மைக்காலத்தில் செய்யப்பட்ட சீராக்கங்கள்இ அதேபோல் 2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.2 சதவீதமாக குறைக்கப்பட்டமை மற்றும் நட்டத்தில் இயங்கும் பிரதான அரச கூட்டுத்தாபனங்கள் சிலவற்றின் நிதி நிலைமையை சாதகமான நிலைமைக்குக் கொண்டு வந்தமை தொடர்பாக அரசாங்கம் காட்டும் அர்ப்பணிப்பு குறித்து திருப்திப்பட முடியும்‘ என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் 2011 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் கடன் வளர்ச்சி வீதம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததாக எய்ட்கின் தெரிவித்தார்.

"கடன் வளர்ச்சியில் வேகக் குறைவும் வர்த்தக பற்றாக்குறையில் வீழ்ச்சியையும் பார்க்க நாம் நம்பியிருந்தோம். எனினும் அது நடக்கவில்லை'  என்று அவர் குறிப்பிட்டார். 

அத்துடன்இ இலங்கை நாணயத்தின் 3 சதவீத மதிப்பிறக்கமானது சரியான வழியில் மேற்கொள்ளப்பட்ட சிறந்த ஆரம்பம் என்று குறிப்பிட்ட பிரையன் ய்ட்கின் எனினும் நாணய மாற்று விகிதத்தில் நிலைமைக்கு ஏற்ப மத்திய வங்கி மேலும் நெகிழ்வுத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேநேரம்இ சர்வதேச நாணய நிதியத்திடம் எஞ்சியிருக்கும் கடன் தவணைகளை பெற வேண்டிய அவசியம் எழவில்லை என்று அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரையன் எய்ட்கின்;

"நாம் எமது மதிப்பீடுகள் நிறைவடைந்ததும் கடன் தவணையை வழங்குவது பற்றி முடிவு செய்வோம். இன்னும் 2 தவணைகள் எஞ்சியிருக்கின்றன. வழங்குவது என்றும் நாம் முடிவு செய்தால் அவை கிடைக்கக் கூடியனவாகவே இருக்கும். எனினும் அதை பெற்றுக்கொள்வதா அல்லது இல்லையா என்பதை இலங்கை அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும்'என்று கூறினார்.தண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளுக்கு விடுதலை
நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தண்டப்பணம் செலுத்த முடியாது சிறைத் தண்டணை அனுபவித்து வரும் கைதிகள் இன்றைய தினம் விடுதலை செய்யப்படுகின்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு இவர்களை விடுதலை செய்வதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பி.டபிள்யூ.கொடிப்பிலி தெரிவித்தார். எனினும் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட 27 குற்றச் செயல்களை புரிந்ததன் நிமித்தம் தண்டனை பெறும் சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்த எந்தவித அறிவுறுத்தல்களும் இதுவரை தனக்கு கிடைக்கப் பெறவில்லை எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளுக்கு பொருள்கள் கடத்திய வழக்கில் ஆஜராகாததால் விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் சென்னையில் கைது
விடுதலைப்புலிகளுக்கு பொருள்கள் கடத்திய வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த 2007-ம் ஆண்டு சென்னை விமான நிலையம் அருகே, விடுதலைப் புலிகளுக்கு படகு உள்ளிட்ட தளவாடச்சாமான்கள் கடத்தியதாக 2 பேரை கிï பிரிவு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்களுக்கு வன்னியரசு என்பவர் தளவாடச்சாமான்கள் அளித்ததாக கூறினார்கள். அதனைத் தொடர்ந்து, வன்னியரசுவை போலீசார் கைது செய்தனர். பின்னர், ஜாமீனில் அவர் வெளியே வந்தார். 2009-ம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வன்னியரசு விசாரணைக்கு அழைக்கப்பட்டார். ஆனால், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.அதன் பின்னர், 2010-ம் ஆண்டு ஜாமீனில் வெளிவர முடியாதபடி பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த நேரத்தில் வன்னியரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்து வந்தார். போலீசார் அவரை கைது செய்யவில்லை. இந்த நிலையில், கடந்த மாதம் வன்னியரசு மீது புதிதாக பிரிவாரண்டு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று அமைந்தகரையில் வைத்து, கிï பிரிவு போலீசார் வன்னியரசுவை கைது செய்தனர். பின்னர், சைதாப்பேட்டை 23-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வன்னியரசு ஆஜர்படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

No comments: