தங்கநிலவு - மேரி ஆன் - கவிதை

.
மார்கழி மாத முன் பனிக் காலம் 
கொட்டும் பனிப்பாளம் 
வெடவெடுக்கும் 
விடியற்கால சாமம்

மாட்டைக்குடிலில் 
மரியாள் மடியில் 
இடையர்கள்  நடுவில் 
மா மன்னவர் மழலை வடிவில்
வரிசையாய் 
வானவர் மேய்ப்பர் மூவரசர் 
வந்தவர் பணிந்தனர்
வாய் விட்டு வியந்தனர் 
வைக்கோல் பட்டறையில் 
வைர அட்டிகையா  
குப்பை மேட்டில்
குத்து விளக்கா
தரையிலா தவழ வேண்டும் 
தங்க நிலவு
ஓ!  தன்னை தாழ்த்துகிறவன் 

உயர்த்தப்படுவான் போலும்.

No comments: